தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் சில ஆண்டுகளாக மக்களின் ஏகோபித்த ஆதரவோடும்,அபிமானத்தோடும்,மாபெரும் வெற்றியை சுவைத்து அனைவராலும் பாராட்டப் பெற்றது விஜய் தொலைகாட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்றால் மிகையாகாது.வயது வித்யாசம்,கிராமம் நகரம் என்ற எந்த பாராபட்சமும் இன்றி அனைவராலும் ரசிக்கப்பட்டு வெற்றியின் உச்சத்தை தொட்ட நிகழ்ச்சி அது. ஜூனியராக இருக்கட்டும்,சீனியராக இருக்கட்டும் அதில் பாட்டு பாடும் பிள்ளைகளை தம் வீட்டு பிள்ளைகளாகவே எண்ணி மகிழ்ந்து தமிழ்நாடே கொண்டாடிய நிகழ்ச்சி அது..அந்த நிகழ்ச்சி ஆக்கமும்,தரமும் அதற்கு காரணம்.
அப்பப்போ சில சர்ச்சைகள் எழுந்தாலும் அது பெரிதாக எண்ணுகிற அளவுக்கு ஆளாகாமல் அந்த நிகழ்ச்சியின் தரம் அதனை நீர்த்துப் போக செய்யும்.அந்த அளவுக்கு மக்களின் மனதை தொட்டு சிகரத்தில் வைத்து பார்க்கப்படும் நிகழ்ச்சி அது.
நான் பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாதவன்.அவ்வபோது நிகழ்ச்சி பார்க்க எண்ணினால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்பதுண்டு.அதிலும் ஜூனியர் சூப்பர் சிங்கர் என்னோட சாய்ஸ்.சின்னக் குழந்தைகளின் மழலைக் குரலில் நான் மயங்கிப்போவதுண்டு.சின்னக் குரல்களின் சிலிர்ப்பில் இந்த உலகத்தை மறந்து வேறோர் உலகத்தில் லயிப்பதுண்டு.குழந்தைகள் குறைபாடாக பாடினால் கூட அந்த மழலைக் குரலின் மயக்கம் நம்மை விட்டு மங்குவதில்லை.
நேற்று ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பைனல் நடந்தேறுவதாக அறிவிக்கப் பட்ட பொழுதில் ஒரு செய்தி முகநூலுக்கு வந்து சேர்ந்தது.கீழ்காணும் புகைப்படத்தையும் அது சொல்லும் செய்தியைப் பாருங்கள்.
நானும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போது சற்று சந்தேகம் கொண்டேன்.ஜூனியர் என்கிறார்கள் பெரிய பிள்ளைகள் சிலவும் பாடுகின்றனவே என்று.ஒருவேளை வயதுக்கு மீறிய வளர்ச்சியாய் இருக்கலாம் என்றெண்ணி விட்டுவிட்டேன்.ஆனால் மேற்கண்ட அந்த செய்தி என்னை அதிர்ச்சியடைய செய்தது.
மேற்கண்ட பெண்ணுக்கு உண்மையில் 15 வயதா என்பதும் தெரியவில்லை,விஜய் தொலைக்காட்சி அறிவிப்பை வெளியிடும் போது 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள்தான் பங்குகொள்ள முடியும் என்று அறிவித்திருந்தார்களா தெரியவில்லை.
ஒருவேளை அப்படியோர் அறிவிப்பை வெளியிட்டு விட்டு எதிர்மறையாக நடந்திருப்பின் அது பெரிய தவறு.ஏமாற்று வேலை.மக்களின் நம்பகத்தன்மைக்கு விஜய் வைக்கிற வேட்டு.
பெற்றோர்களும் குற்றத்தை சேர்ந்து செய்கிறார்கள் ,எல்லோருக்கும் தாம் வெல்ல வேண்டும் தம் பிள்ளைகள் வெல்ல வேண்டும் என்கிற ஆசை இருக்கும்தான்.அதற்காக பத்தாவது படிக்கிற பிள்ளையை கொண்டு போய் முதல் மதிப்பெண் வேண்டுமென்பதற்காக முதல் வகுப்பில் தேர்வெழுத வைக்கலாமா? அந்த நிலைதான் மேற்கண்ட செய்தியும்.பெரிய குழந்தையை கொண்டு வந்து ஜூனியர் நிகழ்ச்சியில் சேர்த்து நேற்று நடந்த பைனலில் இரண்டாம் இடம் என்கிற வெற்றிக்கனியையும் பறிக்க வைத்து விட்டார்கள்..நல்லவேளை முதலிடம் இல்லை. இதனால் தோற்றுப்பான உண்மையான ஜூனியர் குழந்தைகளின் மனநிலை என்னாகும்.உண்மையில் வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டியவர்கள் அந்த வயதுக்கு உட்பட்டவர்கள் எவ்வளவு ஏமாற்றமாக உணர்ந்திருப்பார்கள்.எண்ணிப்பாருங்கள் வெகுஜன ஊடக வியாபாரிகளே..ஏமாற்று வேலை செய்யும் பெற்றோர்களே..

முதலிடம் பெற்று வெற்றியை சுவைத்த உண்மை ஜூனியர் ஆஜீத்............
No comments:
Post a Comment