Sunday, September 6, 2020

இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.

 தோழரே.... பசி வயித்த கிள்ளுது, கையில பத்து பைசா இல்ல, சாப்பிட எதாச்சும் வாங்கி கொடுங்களேன்.

எங்கட்டயும் காசு சுத்தமா இல்லை தோழரே..

எதாவது ஐடியா பண்ணுங்க தோழரே...

சரி வாங்க இந்த ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம்.

தோழரே... இது ரொம்ப காஸ்ட்லியான ஹோட்டல், காபியே முப்பது ரூபாய்.. காசும் இல்லைங்கறீங்க என்ன பண்ண போறீங்க?

முதல்ல சாப்பிடுங்க தோழரே..

சினிமாவுல வர்ற மாதிரி, பாதியிலேயே எந்திரிச்சு போயிட மாட்டீங்கள்ள..

தோழரே.. நம்ம பழக்கம் வழக்கம் அப்படியா... முதல்ல பசியாற நல்லா சாப்பிடுங்க தோழரே..

ஹப்பா.. நல்லா சாப்பிட்டாச்சு தோழரே.. இப்பதான் பசியே அடங்குச்சு, அய்யய்யோ சர்வர் பில் கொண்டு வர்றான்

பயப்படாதீங்க.. இப்ப பாருங்க,
யாரை பாத்துடா ஹிந்தி தெரியுமானு கேட்ட, தமிழன்னா இளக்காரமா? கூப்பிடுறா, உன் முதலாளிய...

தம்பி தம்பி.. என்ன பிரச்சினை

சார்.. எங்ககிட்ட ஹிந்தியில பேசுனது மட்டுமல்லாம, ஹிந்தி தெரியாதானு எகத்தாளமா கேட்கிறான் சார்.. உங்க கடைக்கு வர்றவங்க கிட்ட இப்படிதான் நடந்துக்குவீங்களா, இதை சும்மா விடமாட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்தில, கடை முன்னாடி போராட்டம் நடக்க போகுது.
தோழரே.. நம்ம ஆளுகளை எல்லாரையும் போன் பண்ணி வரச்சொல்லுங்க..

தம்பி... இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம். மரியாதைக்கு தின்னதுக்கு காசை கொடுத்துட்டு போங்க..

யாரை, யாரைப்பார்த்து காசு கேட்கற.. தமிழனை பார்த்து ஹிந்தி தெரியுமானா கேட்டுட்டு திமிராவா பேசற.. இன்னைக்கு உன் கடையை, அக்குவேறா ஆணிவேற பிரிச்சு மேயப்போறோம் பாரு..

டேய்... அந்த சர்வர் பையன் வாய் பேச முடியாத ஊமை..
மரியாதைக்கு உள்ள போயி மாவு ஆட்டுங்கடா,
மாஸ்டர் இவனுக மாவு ஆட்டி முடிச்சதும், இருக்கற பாத்திரங்கள பூராம் கழுவ வையுங்க...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...