Tuesday, September 29, 2020

ஆன்மீகச் சான்றோர்.

 இன்று நாம் பார்க்கப் போவது திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாயகர்களில் ஒருவரான அதிபத்த நாயனார் எண் 1

மீனவ சமுதாயத்தை சேர்ந்த அந்த சிவபக்தர் செய்து வந்த இறை பணி அளப்பரியது பொதுவாக நாம் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது என்றால் எவ்வாறு செலுத்துவோம் ஒரு சிறு தொகையை அல்லது நமக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறு பங்கை யோ காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொண்டு செலுத்துவோம்
ஆனால் உண்மையான சிவனடியார்கள் சற்று வேறுபட்டவர்கள் அவர்கள் தன்னலம் கருதாத அப்படிப்பட்ட ஒரு சிவபக்தர் தான் அதிபத்த நாயனார் ஆதலால்தான் சிவபெருமானே நேரடியாக வந்து அவரை ஆட்கொண்டார்
நாகப்பட்டினம் பகுதியில் சேர்ந்த குப்பத்தில் வசிக்கக்கூடிய மீனவரான அதிபத்த நாயனார் தினமும் மீன் பிடிக்கச் செல்வார் தனக்கு கிடைக்கும் மீன்களில் மிகப் பெரிய மீனை தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறி அவருக்கு அர்ப்பணிப்பதாக எண்ணிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுவார்
இதை தினம் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார் மீனவ சமுதாயத்தின் ம‌க்க‌ள் இடையே இவருடைய செய்கை கேலிக்குரியதாக பார்க்கப்பட்டது
யாராவது இவ்வாறு செய்வார்களா கிடைக்கும் மீன்களில் பெரிய மீனை மீண்டும் கடலில் விட்டு விடுகிறான என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் என்று கூறிவந்தனர் இவ்வாறு பல ஆண்டுகளாக அவரு‌க்கு இருந்த வறுமை நிலையிலும் இதை அவர் செய்து வந்தார்
இதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருடன் ஒரு திருவிளையாடலை மேற்கொள்ள எண்ணினார்
ஒரு நாள் முழுக்க எவ்வளவோ முயற்சித்தும் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை பொழுது சாயும் நேரம் வந்துவிட்டது கடைசி நேரத்தில் ஒரே ஒரு பெரிய மீன் மட்டும் சிக்கியது ஆனாலும் தினம் ஒரு பெரிய மீனை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த அதிபத்த நாயனார் அந்த ஒரு மீனையும் காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு கரைக்கு திரும்பினார்
அவரது குடும்பத்தினர் மிகவும் வருந்தினர் அவரது செய்கைக்காக அந்த ம‌க்க‌ள் அவரை கேலி பேசினார்கள் இருந்தாலும் அவர் அதை பெரிதுபடுத்தவில்லை
இரண்டாம் நாள் கடலுக்குச் சென்ற அவருக்கு அதே நிலை தொடர்ந்தது
ஒரு மீன் கூட பிடிக்க முடியவில்லை நாளின் இறுதியில் ஒரே ஒரு மீன்தான் சிக்கியது அதையும் வழக்கம்போல் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது குடும்பத்தில் மிகவும் வறுமை உண்ண உணவு கூட கிடைக்காமல் மொத்த குடும்பமும் தவித்து வந்தனர் இருந்தும் தளர்ச்சி அடையாமல் அவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்
அன்றைய நாள் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது வழக்கம்போல நாளெல்லாம் எந்த மீனும் கிடைக்காத நிலையில் நாளின் இறுதியில் அவரது வகையில் ஒரு மீன் சிக்கியது அதுவும் சாதாரண மீன் அல்ல தங்கத்தை போல மின்னும் வைரங்கள் பதித்த மிகவும் அரிதான ஒரு மீன்
அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினர் நண்பா உனக்கு இன்று முதல் அதிர்ஷ்டம் வந்துவிட்டது இந்த ஒரு மீனை வைத்து உன் வாழ்வில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் போக்கிவிடலாம் உன் குடும்பமும் மிகவும் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று கூறி மகிழ்ந்தனர்
ஆனால் அதிபத்த நாயனார் சிரித்துக்கொண்டே நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் ஆனால் இன்று கிடைத்திருப்பது இந்த ஒரு மீன் தான் இது இறைவனுக்கு ஆனது எனக்கானது அல்ல என்று கூறி இறைவனை வேண்டி கடலுக்குள் மீண்டும் விட்டுவிட்டார்
விட்ட மறுகணம் ஆகாயத்தில் ஜோதி வடிவமாய் சிவன் காட்சியளித்தார் உனது தொண்டுக்கு மகிழ்ந்தேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டார்
பரவசப்பட்டு போன அந்த நாயனார் எனக்கு எதுவும் தேவையில்லை ஐயனே உமது அருள் மட்டும் இருந்தால் போதும் என்று கூறினார் அவரது பக்திக்கு மெச்சிய ஈஸ்வரன் உன் வாழ்நாள் முழுக்க செல்வ செழிப்புடன் வாழ்ந்து உனது காலம் முடிந்ததும் என்னை வந்து அடைவாய் என்று வரம் கூறி மறைந்தார்
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது.
அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.
இ‌ந்த தலைமுறை பிள்ளைகளுக்கு நாயன்மார்கள் பற்றிய கதைகளை கூறி இறை நம்பிக்கையை வளர்க்க என்னால இயன்ற ஒரு முயற்சி
உங்களுடைய மேலான கருத்துகளை எதிர் பார்கிறேன்
நன்றி.
Image may contain: one or more people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...