Tuesday, September 29, 2020

இதயம் தொட்ட தீர்ப்பு...

 இரண்டு மைனர் குழந்தைகளை விட்டுவிட்டு தாய் இறந்து விடுகிறார்...

ஆறு மாதங்களில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்..
குழந்தைகள் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்கின்றனர்..
தாத்தா குழந்தைகளின் பராமரிப்பு
செலவுக்காக தந்தையிடம் பணம் கேட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்....
நீதிமன்றம் பையனை அப்பாவின் பாதுகாப்பில் இருக்கவும், பெண் குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் இருக்கவும் பராமரிப்பு தொகையாக மாதம் பத்தாயிரம் வழங்கவும் தந்தைக்கு உத்தரவிடுகிறது....
பராமரிப்பு தொகை கொடுக்க விரும்பாத தந்தை மகளின் கஸ்டடி கேட்டு உயர்நீதி மன்றத்தை நாடுகிறார்...
தந்தையின் சட்ட உரிமை மேலானதா...
பெண்குழந்தையின் பாதுகாப்பான
எதிர்காலம் உயர்வானதா...?
நீதிபதியின் மனத்திரையில் ஒரு பட்டிமன்றம் ஓடுகிறது...
இந்நிலையில் தந்தையின் சார்பில்
ஒரு போட்டோ தாக்கல் செய்யப்படுகிறது.....
அதில் தனது வீட்டில் புதிய மனைவியுடனும் அவரது பெண் குழந்தையுடனும் இந்த குழந்தை சந்தோசமாக இருப்பதாக வாதிடப்படுகிறது...
போட்டோவை உற்று நோக்குகிறார் நீதிபதி அவர்கள்...
அதில் இரண்டாவது மனைவியின் குழந்தையின் கழுத்தில் தங்க ஆபரணங்களும் இந்த குழந்தையின் கழுத்தில் சாதாரண பாசிமணியும் அணிந்திருப்பதை பார்க்கிறார்...
புரட்சி கவிஞன் பாரதியின் கனவுகள் நீதிபதியின் தீர்ப்பாக மலர்கிறது....
சமூகத்தில் இப்படிப்பட்ட பாகுபாட்டுடன் வளர்க்கப்படும் குழந்தையின் மனதில் தேவையற்ற குழப்பங்கள் மேலோங்கும்...
பெண் குழந்தையின் எதிர்கால நலனை பிரதானமாக வைத்து
ஆணித்தனமாக தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதுகிறார்....
குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் வளரட்டும்...
மாதம் ரூபாய் பத்தாயிரம் குழந்தையின் பராமரிப்புக்காக தந்தை வழங்க வேண்டும்..
சமூக சிந்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இப்படிப்பட்ட நீதிபதிகளை நமது சென்னை உயர்நீதிமன்றம் பெற்றிருப்பது நாம் செய்த புண்ணியம்..
சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி நிஷாபானு தான் அந்த தீர்ப்புக்கு சொந்தக்காரர்..
வணங்குகிறோம்.. 🙏
உங்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...