Sunday, September 6, 2020

அறிவுசார் பூங்கா கட்டட பணி: ஜெ., நினைவிடத்தில் தீவிரம்.

 ஜெயலலிதா நினைவிடத்தில், அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டும் பணிகள்,இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.\

வாழ்க்கை வரலாறு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது.இதன்மேல், கான்கிரீட் போடும் பணி எஞ்சியுள்ளது. பீனிக்ஸ் பறவை கட்டடத்தின் இரண்டு புறங்களிலும், மூன்று சிறிய அடுக்குகளில் புதிய வடிவில், கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

ஒரு கட்டடத்தில், ஜெ., அருங்காட்சியகம் அமையவுள்ளது.இதில், அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், வீடியோ தொகுப்புகள் இடம் பெற உள்ளன.வளர்ச்சி திட்டங்கள்மற்றொரு கட்டடத்தில் அறிவுசார் பூங்கா அமையவுள்ளது. இங்கு, ஜெ., அரசு செயல்படுத்திய இலவச சைக்கிள் திட்டம், லேப்டாப்திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம் பெற உள்ளன.

தற்போது, இந்த கட்டடத்தின் தரை மட்டுமின்றி, சுவர்கள் முழுதும், கிரானைட் கற்கள் பதிக்கப்படுகின்றன. இதற்காக, ராஜஸ்தானில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். இப்பணிகளை இந்த வார இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அறிவுசார் பூங்கா கட்டட பணி: ஜெ., நினைவிடத்தில் தீவிரம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...