உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழர்கள் இல்லாத நாடே இருக்காது என்றே கூறலாம். இந்தியாவை தவிர,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா போன்ற நாடுகளில் அதிகளவு தமிழர்கள் வசிக்கிறார்கள்.
இதில் சிங்கப்பூரில் 9.2 சதவீத(4.67 லட்சம்) இந்தியர்கள் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள் தான். மலேசியாவில் 7.1 சதவீத இந்தியர்கள் உள்ளனர், அதாவது 20 லட்சம் பேர்.
சிங்கப்பூரில் இதுவரை 6 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். அதில் 6 வது அதிபர் தான் திரு S.R. நாதன் எனப்படும் செல்லப்பன் ராம நாதன். இதற்கு முன்பும் ஒரு இந்தியர் (மலையாளி), சிங்கப்பூரின் 3 வது அதிபராக பதவியில் இருந்துள்ளார். அவர் திரு தேவன் நாயர்.
1924 சூலை 3 ஆம் தேதி திரு செல்லப்பனுக்கும் அபிராமிக்கும் மகனாக பிறந்தார். வேலை நிமித்தமாக நாதனின் குடும்பம் மலேசியாவில் உள்ள ஜோகூர்-க்கு இடம் பெயர்ந்தார்கள். அப்போது சிங்கப்பூரும் மலேசியாவுடன் தான் இருந்தது. அங்கு நாதனின் தந்தைக்கு ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை. 1930 களில் ரப்பர் தோட்டம் பெரும் சரிவைக்கண்டது. குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டதால் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தன்னை தானே மாய்த்துக்கொண்டார் நாதனின் தந்தை.
அவரது 8 வயதில் அவரின் தாயார் குடும்பத்துடன் மீண்டும் சிங்கப்பூருக்கே இடம்பெயர்ந்தார். பின்பு சிங்கப்பூரின் Anglo- Chinese பள்ளியில் தொடக்கப்பள்ளி மற்றும் நடு நிலை பள்ளியை முடித்து, பிறகு விக்டோரியா பள்ளியில் மேல் நிலைப்பள்ளியை கற்றுக்கொண்டிருந்தார். மேல் நிலை கல்வி படிக்கும்போதே ஒரு ஜப்பான் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். அப்போது தான் இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் தான் வங்காளப் பெண்ணான ஊர்மிளாவிடம் காதல்வயப்பட்டார். பிறகு அவருக்கு 34 வயதாக இருக்கும்போது தான் ஊர்மிளா(29)வை திருமணம் செய்துக்கொண்டார்.
தனக்கு 28 வயதாக இருக்கும் போது படிப்பை தொடர்ந்த திரு. நாதன்,
1954 ல் மலாயா பல்கலைக்கழகத்தில் Diploma in social science with Distinction உடன் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.
1955 ல் சிங்கப்பூர் Civil Service ல் Social worker ஆக வேலைக்கு சேர்ந்தார்.
1956- 1962 வரை கப்பலில் பணிசெய்பவர்களுக்கான நலவாரிய அதிகாரியாக பணியாற்றினார்.
1962- 1965 வரை மனிதவள அமைச்சக ஆராய்ச்சி பிரிவில் முதலில் உதவி இயக்குனராகவும், பின்பு பதவி உயர்வுபெற்று இயக்குனராகவும் பணிபுரிந்தார். பின்பு இதன் அறங்காவளராகவும் 1988 வரை தொடர்ந்தார்.
1966 - 1971 வரை வெளியுரவு துறை அமைச்சகத்தில் உதவி செயலாளராகவும், பின்பு பதவி உயர்வுபெற்று துணை செயலாளராகவும் பணியாற்றினார்.
1971 ல் உள்துறை அமைச்சில் நிரந்தர செயலாளர் ( பொறுப்பு) ல் பணியாற்றினார். பின்பு அதே வருடம் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார்.
1971- 1979 வரை பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை இயக்குனராகவும், மற்றும்
பாதுகாப்பு துறை நிரந்தர செயலாளராகவும் பணியாற்றினார்.
1973 ல் கூடுத்ல் பொறுப்பாக MITSUBISHI SINGAPORE HEAVY INDUSTRIES (PTE) LTD -ல் தலைவராகவும் பணியாற்றினார்.
1974 ல் ஜப்பானின் சிவப்பு ரானுவம் பொதுமக்களை பணய கைதியாக பிடித்து வைத்திருந்தபோது, தன்னை பணய கைதியாக வைத்துக்கொண்டு பொதுமக்களை விடுவிக்க செய்தார்.
1979 -1982 வரை வெளியுறவுதுறையின் முதல் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1980 -1988 வரை கூடுதலான பொறுப்பாக சிங்கப்பூர் எண்ணெய் நிறுவன இயக்குனராக பணிபுரிந்தார்.
1982 -1988 வரை STRAIT TIMES பத்திரிக்கையின் செயல் தலைவராக பணியாற்றினார்.
1988-1900 வரை மலேசியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
1990 -1996 வரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதரக அதிகாரியாக பணிபுரிந்தார்.
1996 - 1999 ஆகஸ்ட் வரை பாதுகாப்பு மற்றும் யுத்த தந்திர நிறுவன உயர் தூதரக அதிகாரியாக பணியாற்றினார்.
1999 ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரு நாதன் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி சிங்கப்பூரின் 6 வது அதிபராக திரு நாதன் பதவியேற்றுக்கொண்டார்.
2005 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக திரு நாதன் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்றாவது முறையாக தான் போட்டியிட விரும்பவில்லை என கூறும் 87 வயது இளைஞர், சிங்கப்பூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆவார். அதே போல திரு நாதனுக்கும் குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். திரு நாதன் தம்பதியினருக்கு ஜோதிகா என்ற மகளும், ஆசித் என்ற மகனும் உள்ளனர்.

No comments:
Post a Comment