Tuesday, February 28, 2012

உதயகுமார் தடுமாற தொடங்குகிறார், “ஜேர்மன்காரர் உளவாளி அல்ல”

கூடங்குளம் போராட்டத்தில் ஒரு திருப்பமாக ஜேர்மன் பிரஜை Sonnteg Reiner Hermann நாடுகடத்தப்பட்ட பின், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார்.
நாகர்கோவிலில் நடைபெற்றது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. (ஜேர்மன்காரரும் நாகர்கோவிலில் உள்ள சிறிய லாட்ஜ் ஒன்றில் வைத்துதான் கைது செய்யப்பட்டார்)
“கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றுதான் முதலில் தெரிவித்தார் உதயகுமார்.
ஆனால் தொடர்ந்து அவரே தனது வாயால் ஜேர்மன்காரருக்கும் தமக்கும் உள்ள தொடர்பு பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டார். “அவருடன் எனக்கு கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் உண்டு. நாகர்கோவிலில் அவர் தங்கியிருக்கும் போது, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பேன். நான் நடத்தும் பள்ளிக்கு, அவரை அழைத்துச் சென்றதாக நினைவு இருக்கிறது“ என்றார் உதயகுமார்.

எந்தத் தொடர்பும் இல்லாதவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு, 4 ஆண்டு கால பழக்கம் இருந்திருக்கிறது!

கைது செய்யப்பட்ட ஜேர்மன்காரர் விசாரணையின்போது தாம் இந்தியாவில் என்ன செய்தோம் என்பதை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே நாடுகடத்தப்பட்டார். அவரது விசாரணையின்போது, ஜேர்மன் தூதரக ஆட்களும் இருந்துள்ளனர். அனைத்துத் தரப்பும் ஒப்புக்கொண்டு, நாடுகடத்தல் நடைபெற்றது.
இது ஒரு சாதாரண டூரிஸ்ட் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட விவகாரமல்ல. இதனால் ராஜதந்திர ரீதியான அழுத்தங்கள் புதுடில்லிக்கு ஏற்படப் போகின்றன. அப்படியிருந்தும் ரிஸ்க் எடுத்து, நாடுகடத்தலை நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு.
உதயகுமார் மேலும் கூறுகையில், “Sonnteg Reiner Hermann ஜெர்மனியில் கணினி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கும் எந்த உளவு நிறுவனத்துக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ தொடர்பு கிடையாது. அவருக்கும், நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

சபாஷ். இவருக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. ஆனால், அவர் உளவுத்துறையின் ஆள் அல்ல என்பது, இவருக்கு தெரியுமாம்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...