Wednesday, February 29, 2012

ஒரு வங்கிக் காசாளரும்,வாடிக்கையாளரும்!

ஒரு வங்கியின் கிளை.

உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து மணித்துளிகளே பாக்கி உள்ளன.

தனது கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் காசாளர்,தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார், சாப்பிடப்போவதற்காக.

அன்று காலை அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை.ஒரு சின்ன விஷயத்தில் தொடங்கி வெடித்து விட்டது.

மனைவியிடம் கோபித்துக்கொண்டு,”உன் சோத்தை நீயே கொட்டிக்கோ” என்று இரைந்து விட்டு,அலுவலகம்  வந்து விட்டார்.

நேரமாகி விட்ட படியால் எங்கும் சாப்பிடவுமில்லை.

காலையிலிருந்து மூன்று  (காபி)குளம்பி  குடித்து வயிறே குழம்பிப் போயிருந்தது.

இப்போது உணவகம் சென்று ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

(இங்கு ஷாட்டைக் கட் செய்கிறோம்----அடுத்த ஷாட்--)

அந்தக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர்.அன்றாட உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலாளர்.

ஒரு தவணை உண்டியலுக்குப்( usance bill) பணம் கட்ட இன்று கடைசி நாள்.

இன்று கட்டவில்லை என்றால் அவரது முகவாண்மை ரத்தாகி விடும்.
பெரிய இழப்பாகி விடும்.

காலை முதல் அலைந்து திரிந்து தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்.
இப்போது வங்கியில் பணம் செலுத்த வேண்டும்.

(ஷாட் கட்-அடுத்த ஷாட்!)

அவர் வங்கியில் நுழையும்போது உணவு இடை வேளைக்கு 5 மணித் துளிகளே பாக்கி!

காசாளரின் கூண்டை அடைந்து பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.10,20 50 100 என எல்லா விதமான நோட்டுக்களும் இருக்கின்றன.

காசாளர் கோபமாகச் சொல்கிறார்”.மூடும் நேரம்.பில்லுக்கெல்லாம் சின்ன நோட்டெல்லாம் வாங்க முடியாது.500,1000 இருந்தால் கொடுங்கள்.வாங்கிக் கொள்கிறேன்.”அவருக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது.

வாடிக்கையாளர் காலை முதல் மிகச் சிரமப்பட்டுப் பணத்தைச் சேர்த்திருக்கிறார் .இன்று கட்டா விட்டால் வியாபாரமே போய்விடும் எனும் நிலை.

“அதெப்படி  சின்ன நோட்டு வாங்க மாட்டேன்னு நீங்க சொல்ல முடியும்.நான் நேரம் முடியுமுன் வந்து விட்டேன்.நீங்க வாங்கித்தான் ஆகணும்” னச் சொல்கிறார்.

காசாளர்  சொல்கிறார்” நான் சொன்னாச் சொன்னதுதான்.வாங்க முடியாது”
வார்த்தை தடிக்கிறது.

காசாளர்  முகப்பை மூடிவிட்டு உணவுக்குப் புறப்படுகிறார்.

வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார்.

முடிவு எப்படியிருக்கும்?

இதைத் தவிர்த்திருக்க முடியாதா?

முடியும். எப்படி?

காசாளர்;”சார்.சாப்பிடும் நேரம் வந்து விட்டது.இதை வாங்கினால் எண்ணி முடிக்க நேரமாகும்.கொஞ்சம் காத்திருங்கள்.நான் சாப்பிட்டு விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்.  நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையென்றால் வாருங்களேன் இருவரும் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.”
(அல்லது)

வாடிக்கையாளர்: காசாளரை நெருங்கியதும்”சாரி,சார் பணம் சேகரிக்க நேரமாகி விட்டது.கடைசி நாள்.நீங்கள் சோர்ந்திருக்கிறீர்கள் .நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். இல்லையெனில் இருவரும் சேர்ந்து வெளியில் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்”

முடியாதா?

முடியும்.
நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்.


முடியாதது என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை - எல்லாமே..., நாம் நடந்து கொள்ளும் விதம், புரிதல், விட்டு கொடுத்தல்........... இது எல்லாம் இப்ப இல்லையோன்னு தோணுதுங்க அணுகுமுறையும்,
எடுத்துச் சொல்லும் விதமும் வெற்றிதேடித்தரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...