Wednesday, February 29, 2012

ஏளனத்தை புறக்கணி! ஏறிடு வெற்றி ஏணியில்!

உலகப் புகழ்பெற்ற கதாசிரியர், சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் இவர் இளவயதில் தனது கதை பிரசுரமாகாதா? என்று ஏங்கித் தவித்ததும் உண்டு.

சிறுவயதில் இவர் ஏராளமான கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாது.

அதனால் சார்லஸ் டிக்கன்ஸை கண்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர்.
famours writer

'பிரசுரமாகாத சிறுகதைகளை எழுதிப் புகழ் பெற்றவர்' என்று பலர் அவரைப் பார்க்கும்போது ஏளனமாகப் பேசினர்.

அந்த ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.ஏளனத்தை தவிர்க்கும் பொருட்டு எழுதிய கதைகளை நள்ளிரவில் தபால் பெட்டியில் சேர்ப்பார்.


Charless-Dickence

அவர் எழுதிய கதைகள் திரும்பி வந்துகொண்டே இருந்தனவேயன்றி ஒன்று கூட பிரசுரமாகவில்லை.

ஒரு நாள் டிக்கன்ஸ் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பத்திரிகையில் அவரது கதை பிரசுரமாகிவிட்டது.

அந்த மகிழ்ச்சி காரணமாக சார்லஸ் டிக்கன்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு இரவெல்லாம் உறங்காமல் தெருக்களைச்சுற்றிக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் முதலில் எழுதிய எட்டுக் கதைகளுக்கு அன்பளிப்பாக எந்தச் சிறுதொகையும் வரில்லை.

அவர் பெயரும் புகழும் அடைந்தபிறகு அதே கதைகளுக்கு, பத்திரிக்கை ஆசிரியர்களும்(authors), பதிப்பகங்களும்(Publications) அவரது வார்த்தை ஒன்று மூன்று பவுண்டு சன்மானம் கொடுத்து வாங்கிப் பிரசுரிக்கப் போட்டி போட்டனர். (இதைத்தான் வசதி வந்த பிறகு உறவுகளும்,நட்புகளும் தானே தேடிவரும் என்பதோ?)

இவ்வாறு தனது எழுத்துலக வாழ்வில் ஆரம்பத்தில் பல இழிநிலைகளை, தாழ்வுகளையேப் பாரத்த டிக்கன்ஸ் தொடர்ந்து எழுதியமையாலும், முயற்சியை கைவிடாமல் இருந்ததாலும், எதிர்காலத்தில் பெரும் புகழ்,செல்வம் அடைந்தார்.

கேலி செய்த அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட , சிறந்ததொரு திறமை அவரவருக்குள்ளே இருக்கிறது.

அதைத் தொடர்ந்து முயற்சி செய்து வெளிக்கொணர்ந்தால் இவரைப் போல நாமும் உலகப் புகழ் அடையலாம் என்பதே இப்பதிவின் வழியாக சொல்லிக்கொள்வது.

உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் எனில், கற்பனைத் திறம் மிகவும் செறிந்து கிடக்கிறது எனில், அதை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வாருங்கள்.. !! ஏற்ற இறக்கங்கள், வாக்கியப் பிழைகள்(sentence error), வார்த்தைப் பிழைகள்(words error) என எதையும் முதலில் கண்டுகொள்ள வேண்டாம்.

எழுதிய பிறகு மீண்டும் மீண்டும் அதை நீங்கள் வாசிக்கத்தொடங்குங்கள்.. அப்போது நீங்கள் எழுதியது அபத்தமாக இருக்கிறதா? நன்றாக இருக்கிறதா? என்று ஒரு வாசகராக உங்கள் எழுத்துக்களை நீங்களே படித்து, சிந்தித்து தரமேற்றலாம். எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரலாம். கருத்துச் செறிவிருக்கிறதா? என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.

சொல்ல வந்த கருத்துகள் உங்கள் எழுத்தில் இருக்கிறதா? என்பதை மீண்டும் ஒரு முறை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். எழுத்துகளின் இறுதி வடிவம் வந்த பிறகு பிறருக்கு, நண்பருக்கு, அருகில் இருப்பவர்களுக்கு படிக்கக்கொடுக்கலாம்.

அவரது கருத்துகளை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டு கேலி செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவ்வாறானவர்களிடம் மீண்டும் உங்கள் படைப்புகளை கொடுக்காமல் உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் என இருப்பவர்களிடம் மட்டுமே உங்கள் படைப்புகளை படிக்கக்கொடுங்கள். பிறகு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்.


எழுத்தில் மட்டுமல்ல.. உங்களுக்குப் பிடித்த துறைகள் எதுவாயினும் அதில் சிறந்தவர்களாக பரிமளிப்பீர்கள்..கவலையைவிடுங்கள்..!!

நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெற்றிப்பெற்றவர்கள் உலகத்தில் பலர்.. அவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்க முடியாது? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...