பொங்கலுக்கு வந்த நண்பன் திரைப்படம் நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள், விமர்சனமும் படித்து இருப்பீர்கள். இது விமர்சனம் அல்ல.
தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப விசயங்களை மிக அற்புதமாக கையாளும் சங்கர் செய்த சில தொழில் நுட்ப தவறுகளை சொல்வது மட்டுமே இந்தப் பதிவு.
1. படத்தில் ஒரு காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் கரும்பலகையில் தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அதில்தான் ஆரம்பிக்கிறது எல்லா பிரச்சினையும்
இதில் உள்ள தேதி 3/6/98. சரி இதற்கு மேல் விஷயத்துக்கு வருவோம்.
பொறியியல் என்பதால் நான்கு ஆண்டு காலம் படிப்பின் கால அளவு.
2. படத்தில் இலியானா பயன்படுத்தும், இரு சக்கர வாகனம் "ஸ்கூட்டி பெப் பிளஸ்" (Scooty Pep+ ) இது 2005 ஆம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்பட்டது.(நான்கு ஆண்டு என்றால் 2002 தானே?)
3. அடுத்து அனுயாவுக்கு பிரசவம் பார்க்கும் போது youtube ஆனது பயன்படுத்தப்படும்(Vacuum Cup Tutorial). youtube ஆனது 2005 இல் இருந்துதான் இயங்குகிறது.
4. அடுத்து படத்தின் காஸ்டியூம். விஜய், இலியானா உடைகள், விஜய் பயன்படுத்தும் bag ஆகியவை அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை. (கீழே உள்ளது Superdry)
5.படத்தில் பயன்படுத்தப்படும் 1100 அலைபேசி(சில இடங்களில் மட்டும் ) ஆனது 2003 இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
வேறு ஒரு இயக்குனர் என்றால் இவை போகிற போக்கில் மறந்து இருக்கலாம். ஆனால் சங்கர் எனும் போது தான் எனக்கு இது கவனிக்க தோன்றியது.
இவை அனைத்துக்கும் மிக மிக மிக முக்கிய காரணம் முதல் பாயிண்ட், ஆண்டை குறிப்பிட்டது. 3 Idiots படத்தில் இது இருக்காது.
இன்னொரு விஷயம் சேத்தன் பகத் பெயரையே படத்தில் காணோம். அவர்தானே இந்தக் கதையின் பிரம்மா? சங்கரை விட, ராஜ்குமார் ஹிரானியை (ஹிந்தி இயக்குனர்) அவர்தானே பெரிய ஆள்.

No comments:
Post a Comment