உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது என்றால் கேட்டால் எல்லாரும் கூறும் ஒரே வார்த்தை " இந்தியா " என்பது தான் . மாத்திரமல்ல ஆயிரக்கணக்கான ஜாதிகளும் , பல்வேறு மதப்பிரிவினரும் வாழ்ந்தாலும் " வேற்றுமையில் ஒற்றுமை " என்ற கோஷம் தான் இந்தியாவை வானுயரம் உயர்த்துகிறது என்றால் அது மிகையாகாது . ஆனாலும் இந்த ஜாதிகளும் , மதங்களும் ஏன் தான் இந்தியாவில் உள்ளனவோ என்று நினைக்க தோன்றுகிற கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் .
ஜாதிகள் உருவான கதை : " ஜாதிகள் இல்லையடி பாப்பா " என்ற பாடல் அடிகளை அறியாதோர் யாரும் இருக்க முடியாது . ஆனால் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இந்த ஜாதி பிரிவினைகள் என்றால் அது உண்மை தான் . அவரவர் செய்த தொழில் வைத்து தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டதே ஒழிய , பிறப்பாலும் இறப்பாலும் யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை , தாழ்ந்தவரும் இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது இப்பொழுது . ஜாதிகளுக்காக கட்சிகள் உருவாக தொடங்கியிருப்பது ஒரு மாபெரும் அபாயத்தின் அறிகுறி என்பதை தவீர நான் சொல்லுவதற்கு வேறொன்றும் இல்லை . ஜாதி தலைவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக அப்பாவி ஜனங்களை உபயோகித்து கொள்ளுகிறார்கள் . நான் சொல்லுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் ... கொஞ்சம் யோசித்து பாருங்கள் ...! ஜாதி கலவரங்கள் வந்தால் பலியாவது தலைவர்கள் இல்லை . அப்பாவிகள் மாத்திரமே ..... சாகும் உயிர்களுக்கு மாலையும் , கொஞ்சம் போஸ்டர்களும் தான் மிஞ்சும் ... வேறென்ன கிடைக்கும் ..... எதற்கு எடுத்தாலும் ஜாதி பெயரை உபயோகிக்கும் தலைவர்கள் புறக்கணிக்கப் படவேண்டும் .
மத்திய அரசு கீழ் ஜாதி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற மாயாவதி அவர்களின் குற்றசாட்டு ஒரு உதாரணம்
சமயங்கள் எதற்க்காக : சமயம் என்ற சொல் " பக்குவப்படுத்தல் " என்ற பொருள் படுவதாக நான் பள்ளியில் படைத்த பாடத்தை நினைவு கூறுகிறேன் . ஆனால் இன்றைக்கு நடக்கும் சில காரியங்கள் மக்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்ப்படுத்தும் அபாயம் உடையவையாக இருக்கிறது . உதாரனத்திற்க்கு : கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த போராட்டங்கள் . திரு . உதயகுமார் அவர்கள் பேசும் பொழுது , " சிறுபான்மை சமுதாயத்திற்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை " என்று பேசினார் . இவர் அணுமின் நிலையத்தை குறித்த அச்சத்தில் பேசுகிறாரா அல்லது கலவரத்தை உண்டாக்க பேசுகிறாரா என்பதை அரசு உணரவில்லை என்றாலும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்
ஜாதி பெயர்களையும் , சமயங்களின் பெயர்களையும் பயன்படுத்தி கலகம் உண்டாக்கும் யாராய் இருந்தாலும் அவர்களின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயக இந்தியாவின் கண்ணியம் தொடர்ந்து பாதுகாக்கப் படவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ...
No comments:
Post a Comment