Sunday, March 4, 2012

தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் என்பது மறந்துவிட்டதோ என்னவோ?

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கொண்டுவர உள்ள இலங்கை போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாக இந்தியா கூறியுள்ளது! இதை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கனேவே கோரிக்கை விடுத்திருந்தார். (ஒருவேளை ஜி-க்கு தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் என்பது மறந்துவிட்டதோ என்னவோ? அல்லது தமிழ்நாட்டில் இருப்போர் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?)
  ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி,  இந்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி வாசித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது என்றும், அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவது பயன் தரத்தக்க பேச்சுவார்த்தைக்கும் இணக்கமான அணுகுமுறைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் அதற்கு பதிலாக உலக அளவில் மனித உரிமை சூழல் குறித்து வரும் அக்டோபரில் ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் நடைபெறவுள்ள பொதுவான விவாதத்தில் இலங்கையைப் பற்றியும் விவாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதை இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளது! இது இலங்கை போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை எதிர்க்க போவதற்கான முதல் அறிகுறி!



  விவாதிப்பதற்கு மட்டும்தான் ஐ.நா என்றால் அப்பறம் எதுக்குடா ஐ.நா?  நீங்களே உட்கார்ந்து விவாதித்துவிட்டு ராஜபக்சே ஒரு தெய்வம் என்று சொல்லிவிடுங்களேன்!

  பள்ளிக்குச் சென்ற உம்முடைய குழந்தைகளின் மீது குண்டுமழை பொழிந்து அவர்களின் ரத்த சதையைக் காணும்போது சொல்வாயா உட்கார்ந்து விவாதிக்கலாம் என்று?  உங்க வீட்டில் இருக்கிற ஒவ்வொருவரையும் பதினைந்து பேர் சேர்ந்து நிர்வாணப்படுத்தி, கற்பழித்து,  சராமாரியாகச் சுட்டுக் கொன்றபின் சொல்லுவாயா?  உட்கார்ந்து விவாதிக்கலாம் என்று?



  விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்ததும் இந்தியாதான், அவர்களை அழிக்க அமைதிப்படையை அனுப்பியதும் இந்தியாதான், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுத்து, ராடார் கொடுத்து, ஆயுதம் கொடுத்ததும் இந்தியாதான்! 2009ஆம் ஆண்டில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை எதிர்த்து இலங்கையைக் காப்பாற்றியதும் இந்தியாதான்! இப்போதும் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பதும் இந்தியாதான்!



  இவர்கள் தேவைப்படும்போதெல்லாம் உபயோகித்துக் கொள்ளவும், கொல்லவும் தமிழர்கள் இவர்களின் கொத்தடிமைகளா??? தமிழர்களாகிய நாம் இப்படி இவர்கள் ஒவ்வொருமுறை துரோகம் செய்யும்போதும் ஒருமுறையேனும் போராட்டம் நடத்தியதுண்டா? (என்னையும் சேர்த்துதான்!)



  தமிழ் இனத்தைப் போல வெட்கம் கெட்ட, சொரணையற்றவர்களை இதுவரை நான் கண்டதே இல்லை. தினம்தினம் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படும்போது உறங்கிக் கொண்டிருந்த, இருக்கும் இந்தியக் கடற்படை - ஒரு மலையாளி கொல்லப்பட்டவுடன் வீரத்துடன் சென்று அந்த இத்தாலியர்களை பிடித்தது ஏன்? கேரளா மாநிலம் கொடுக்கும் நிற்பந்தம்தான் காரணம்!



  இன்னும் வெட்கமே இல்லாமல் அடுத்த தேர்தலில் என்ன இலவசம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளிலும், உங்களிடமிருந்து சுரண்டப்பட்ட உங்களின் ரத்தமும் உடனிருக்கிறது!
  தமிழர்கள் கொத்துக் கொத்தாய் மடியும்போதும், கையின்றி காலின்றி
 சித்திரவதையை அனுபவித்த போதும், 
இன்றும் கடிதங்களையே எழுதிக் கொண்டிருக்கும் எல்லா தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஒரு கேள்வி - உங்கள் கடிதங்களை படித்து ஒருமுறையேனும் பதில் வந்துள்ளதா? அல்லது கடித்தத்தையும் நீங்கள் தமிழில் எழுதுவதால் மத்தியில் உள்ளவர்களுக்குப் புரிவதில்லையா?



  இந்தியன் என்பதில் வெட்கப்படுகிறேன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...