Monday, March 12, 2012

சங்கரன்கோயில் கருத்துகணிப்பு முடிவுகள்‏


சங்கரன்கோயில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பொதுவாக ஆளும் கட்சிக்கு வெற்றி என்பது தான் இடைத்தேர்தல் தாரகமந்திரம். ஆனால் இம்முறை மதிமுகவின் எழுர்ச்சி ஆளும் கட்சியான அதிமுகவையும், எதிர்க்கட்சியான திமுகவையும் ஆட்டம் கான வைத்துள்ளது. தேர்தல் வேலைகளில் கொஞ்சம் சுணக்கம் காட்டினாலும் வெற்றி/இரண்டாம இடம் பறிபோகிவிடும் என்ற கலக்கத்தில் உள்ளன இருபெரும் கட்சிகளும்.

தேர்தலில் நேரடியான மூன்றுமுனை போட்டி நிலவுகிறது. கூத்தில் ஒரு கோமாளியாக விசயகாந்த் கட்சியும் நான்காவதாக களத்தில் உள்ளது. கூட்டி கழிக்காமலேயே அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு நேர்கோட்டில் உள்ளது. இரண்டாம் இடத்திற்கு தான் போட்டா போட்டி. 

அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பம் இல்லை என்றாலும் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் மனநிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் உள்ளனர். ஆளும் கட்சி தோல்வி அடைந்தால் தொகுதி வளர்ச்சி பணிகளில் ஓரங்கட்டப்படும் என்ற அச்சம் உள்ளது. இலவசங்கள் பணம் எடுபடுவதில்லை. கட்சிகளும் அதில் ஆர்வம் செலுத்தவில்லை. எனவே திருமங்கலம் சூத்திரம் இங்கு இல்லை எனலாம். 

சொந்த ஊர் கலிங்கப்பட்டி, மாவட்டத்தின் தலையாய பிரச்சனை கூடங்குளம் ஆகியவற்றால் மதிமுகவுக்கு வாக்கு எண்ணிக்கை கூடுகிறது. திமுகவை பொருத்தவரை சொல்லிக்கொள்ளும் படியான பிரச்சாரம் இல்லை.  

தற்போதைய மக்கள் மனஓட்டப்படி பதிவாகும் வாக்குகளில் வெற்றிவாய்ப்பு கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ............ 37%
மதிமுக ............ 33%
திமுக .............. 29%
தேமுதிக .........  01%


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...