Monday, March 12, 2012

ஒளவையின் பதிலடி

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர், ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாக, அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார், "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்று. இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல்: எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக் கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது. தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது. எமன் ஏவும் பரி என்பது 'எருமை'. பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'. மூதேவியின் வாகனம் கழுதை. முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'. குலராமன் தூதுவன் 'குரங்கு'. ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.
எந்தப் பிழையை நாம் எங்கே கண்டாலும் அதை நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்..
நாம் ஒருவருக்கு அறிவுரை கூறுவதற்கு, அந்த அறிவுரைக்கு ஏற்றார்போல் நாம் நடந்து கொண்டால் மட்டுமே, நாம் அறிவுரை கூற தகுதியானவர்கள்..


பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும் தான்"..

   - விவேகானந்தர்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...