Saturday, March 17, 2012


சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது.
• தேர்தல் களத்தில் மொத்தம் 13 வேட்பாளர்கள் உள்ளனர். தொகுதிக்குள் செல்வாக்கு அடிப்படையில், பிரதான கட்சி வேட்பாளர்களாக போட்டியில் இருப்பவர்கள், முத்துச்செல்வி (அ.தி.மு.க.) ஜவகர் சூரியகுமார் (தி.மு.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க), முத்துக்குமார் (தே.மு.தி.க.) ஆகிய நால்வரும்தான்.
• இவர்களுடன், முருகன் (பா.ஜ.க.), நாகேஸ்வரராவ் (சமாஜ்வாடி), கணேசன் (ஜனநாயக கட்சி) மற்றும் 6 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
• தமிழக அரசியலில் முக்கிய நான்கு தலைவர்களும் (முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்) நேரடியாக தொகுதிக்குள் பிரசாரம் செய்தனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்தத் தொகுதியும் இதுதான்.
• அ.தி.மு.க.-வுக்கு பிரசாரம் செய்வதற்காக 32 அமைச்சர்கள் தொகுதிக்குள் இறக்கிவிடப்பட்டனர்.
• கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்தது.
• வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, தேரடிவீதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி, பிரசாரத்தை நிறைவு செய்தார். தி.மு.க.வுக்காக சங்கரன்கோவில் பஜாரில் மத்திய அமைச்சர் நெப்போலியன் பிரசாரத்தை முடித்தார். ம.தி.மு.க. வேட்பாளருக்காக கோவில் வாசல் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ தேர்தல் பிரசாரத்தை முடித்தார். தே.மு.தி.க.-வுக்காக வடக்கு ரத வீதியில் விஜயகாந்த் பிரசாரத்தை முடித்தார்.
• இன்றைய தேர்தலில் 206,087 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகிய இரு ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம். மாலை 5 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு (நின்றால்) டோக்கன் வழங்கப்படும்.
• வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. ஒரு சாவடிக்கு தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர் நிலை 1, 2, 3 என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 242 சாவடிகளிலுமாக 1,062 பேர்  பணியில் ஈடுபடுகின்றனர்.
• காலை 7 மணிக்கு அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்று டெஸ்ட் செய்யப்படும். அதற்காக ட்ரயல்  வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்த டெஸ்டிங் நடைபெறும்.
• மாதிரி வாக்குப் பதிவில், ஒவ்வொரு முகவரும் 8 ஓட்டுகள் போட வேண்டும். 13 வேட்பாளர்களின் முகவர்களும் ஓட்டு போட்ட பின்னர், கூட்டுத்தொகை 104 வருகிறதா என சோதிக்கப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ரீசெட் பண்ணப்பட்டு, அனைத்து வாசிப்புகளும் பூச்சியத்துக்கு கொண்டு வரப்பட்டு, 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.
• அனைத்து சாவடிகளும் ஆன்லைனில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகம், டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ள 25 சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
• இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். 21ம் தேதி புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
• நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...