காளானை உணவாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
காளானை உணவாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .
காளான், மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்ட தாகவும் இருப்பதோடு மிகுந்த
மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக்
காக்கும் அற்புத உணவு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதனை பச்சையாக சாப்பிடாமல், இதில் ஏதேனும் உணவாக சமைத்து சாப்பிடலாம்

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டி டைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்த த்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதன் காரணமாக எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து
வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன்செய்கிற து. இவ்வாறு உடலில் அதிகம்தேவையில்லா மல்சேரும் கொழுப்பு கட்டுப்படுவதால் இரத்த ம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்பட உதவுகிறது. அதனால் தான் இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment