Tuesday, May 12, 2015

மறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப்படி?

மறைத்துவைக்கப்பட்டிருக்கும் (உளவு)கேமராக்களை கண்டறிவது எப்படி?
கேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என் றாகி விட்டது. அந்தளவிற்கு
மொபைல்ஃபோன் போல கேமரா மோகமும் இன்றைய தலைமுறையினரை ஆட்டிப்படைக் கின்றது. இந்த கேமராக்களில் பல வகை உள்ளன. அவை பயனாளிக ளைப் பொறுத்து வேறுபடுகின்றது. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சமயத் தில் அதன் பயன்பாடு அனைவரை யும் கவர்ந்ததோடு, அதன் தேவையு ம் அதிகரித்த‌து. ஆனால், தற்போது இருக்கும் விஞ்ஞா ன உலகில் கேமரா பல முன்னேற்றங்கள் அடைந்து ள்ளது. முதன் முதல் கண்டு பிடிக்கப்பட்ட கேமரா பெரிய அளவில் இருந்தது. தற்போது கடுகளவு வரை கேமராக்களி ன் அளவு குறைந்துவிட்டது.
இவற்றை முதலில் புலனாய்வுத் துறையினர், தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை உளவு பார்க்க கண்டுபிடித்தன ர். ஆனால், அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரி க்கின்றது. பொது இடங்கள், ஜவுளிக் கடைகள் போன்ற இட ங்களில் உடைமாற்றும் அறைக ளிலோ, இல்லை கழிப்பிடங்க ளிலோ இம்மாதிரியான கேமரா க்களை பதுக்கி வைத்து தகாத செயல்களில் ஈடுபடுகி ன்றனர்.
அதனைத் தடுக்க மறைத்து வைக்கப்ப ட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று நாம் இங்கு கா ணலாம் – இம்மாதிரியான சில கேமராக்கள் செய ல்படும்போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும், அத னால் கூர்ந்து கவனித்தால் அவற்றை எளிதாகக் கண்டுபிடி த்து விடலாம்.
நீங்கள்இருக்கும் அறையில்உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விள க்குகள் இருக்கும், இதன்மூலம் கேமராக்களை கண்டு பிடிக்கலாம்.
மேலும், இருட்டாக இருக்கும் அறையில் டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண் னாடிகளில் பார்க்கவும். பின்ஹோ ல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அத னால் டைர்ச் லைட் கொண்டு தேடும்போது எங்காவது வெளிச்ச ம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கின்றது உஷார்.
Radio Frequency(RF) சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற் சி செய்யலாம். உங்கள் அருகில் இருக்கும் கேமராக்க ளை இது காட்டி கொடுத்து விடு ம். மறைத்து வைக்கப்பட்டிருக் கும் கேமராக்களை கண்டறிய உங்க செல்போனையும் பயன்ப டுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், அப் போது விநோதமான சப்தம் உங்களுக் கு கேட்டால் அங்கு கேமரா இருக்கின் றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...