Thursday, August 6, 2020

நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

 செல்வாதிபதி '#குபேரனே #வறுமையில்_வாடிய_போது_மீண்டும்_பணக்காரனாக_செய்த_பரிகாரம்_என்னன்னு_நீங்களும்_தெரிஞ்சிக்கனுமா?

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும் பொழுது அந்த குபேரனுக்கு கூட ஒரு முறை வறுமை ஏற்பட்டது என்று சொன்னால் அதிர்ச்சியாக தானே இருக்கும்? அவருக்கு ஏன் இந்த நிலைமை? குபேரனுக்கு எப்படி வறுமை ஏற்பட்டது? அதற்காக அவர் என்ன செய்தார்? மீண்டும் அவருக்கு எப்படி பணக்காரன் ஆகும் வாய்ப்பு கிட்டியது? இது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ஸ்ரீமன் நாராயணருக்கே திருமண உதவி செய்ய குபேரன் கடன் கொடுத்ததாக புராண குறிப்புகள் உள்ளன. திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவிலில் இருக்கும் உண்டியலுக்கு குபேர காணிக்கை என்பது தான் பெயர். கலியுகம் முடியும் வரை அதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை குபேரனுக்கு வட்டியாக மகாவிஷ்ணு செலுத்தப்படுவது என்பது நிபந்தனை. இதில் அதர்ம வழியில் சம்பாதிப்பவர்கள் பணமெல்லாம் வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதித்து காணிக்கை செலுத்துபவர்களின் பணமெல்லாம் அசலின் ஒரு பகுதியாகவும் ஏழுமலையான் நம்மிடம் வசூலிக்கிறார். இவ்வாறு இருக்கும் பொழுது அந்த குபேரனுக்கு எப்படி வறுமை ஏற்பட்டு இருக்கும்? என்கிற கதையை பார்ப்போம்.

ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் நாடு, நகரங்களை எல்லாம் பெரும்பாலானோர் இழந்து நிற்கதியாய் நின்றனர். அவர்களில் ஒருவர் குபேரன். போரின் பொழுது இழந்த தன்னுடைய நாடு, நகரமெல்லாம் திரும்ப கிடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் குபேரர்.

அந்த சமயத்தில் தீவிர சிவபக்தரான குபேரர் சிவபெருமானிடம் சென்று ஆலோசனை கேட்டார். அதற்கு சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீர் உமது வீட்டில் நெல்லி மரங்களை வளர்த்து வருவாயாக’ என்று கூறினாராம். சிவபெருமான் வாக்கை வேதவாக்காக எண்ணிய குபேரனும் அப்படியே வளர்த்து வந்தாராம்.

நெல்லி மரங்கள் அனைத்தும் நெடு நெடுவென வளர்ந்து பூக்கள் பூத்து, காய்க்க துவங்கியது. பின்னர் காய்கள் அனைத்தும் கனிகளாக மாறி நெல்லி மரங்கள் செழித்து பசுமையாக வளர்ந்து நின்றன. இந்த நெல்லி மரங்கள் எந்த அளவிற்கு பசுமையாக வளர்ந்து வந்ததோ அதே போல குபேரன் இழந்த நாடு நகரம் எல்லாம் இழந்தது இழந்த படியே திரும்பவும் அவருக்கு கிடைத்ததாம். இதனால் மனம் மகிழ்ந்த குபேரன் சிவபெருமானிடம் ஓடிச்சென்று தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்கு முனைந்தார்.

ஈசனே நீங்கள் கூறியபடி நான் வளர்த்த நெல்லி மரங்கள் வளர வளர என்னுடைய செல்வ வளமும் விரைவாக வளர்ந்து வந்தது. அது எப்படி சாத்தியமானது இறைவா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று கேட்டாராம். அதற்கு பதிலளித்த சிவபெருமான் கூறியது இது தான்.

நெல்லி மரம் என்பது மகாலட்சுமியின் சொரூபம். நீ தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது நெல்லிமரங்களை அல்ல, லக்ஷ்மி தேவிகளை தான் என்றாராம். எந்த அளவிற்கு லக்ஷ்மி தேவிகள் வளர்ந்து உன் வீட்டில் நெல்லி மரங்களாக கனிகளை கொடுத்து பெருகி நின்றதோ அதே போல் உன்னுடைய செல்வ வளமும் பெருகியது. மகாலட்சுமி இருக்கும் இடத்தில் வறுமைக்கு இடம் இல்லை அல்லவா? அதனால் தான் இந்த பரிகாரத்தை உனக்கு உபதேசித்தேன் என்றாராம்.

எனவே நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுவது உண்மையே. செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் குபேரனுக்கு வறுமை ஏற்பட்ட பொழுது சிவபெருமான் பரிகாரமாக செய்ய சொன்னது நெல்லி மரங்களை வளர்த்தால் தான். அது குபேரனுக்கு மட்டும் அல்ல. மனிதர்களாகிய நமக்கும் கூறப்பட்ட எளிய பரிகாரம் தான். ஒவ்வொரு வீட்டிலும் நெல்லி மரம் வளர்ப்பது மகா லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது ஆரோக்கியம் சார்ந்த விஷயம். நெல்லி மரத்தை வளர்த்தால் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் கிடைக்கும். செல்வதற்கு செல்வமும் பெருகும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...