Friday, August 7, 2020

அரண்மனை அரசியல்.

#குகசெல்வம்

இவர் ஒரு காலத்து ஜேப்பியாரின் சீடர். அந்த காலத்து ரவுடி என்று சொல்லலாம். பின் திமுக வுக்கு வந்து ஸ்டாலின் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார். இவருக்கு ஜாதி ஓட்டுகள் உண்டா என்று தெரியவில்லை. இவரின் அடையாளம் திமுக தான். மற்றப்படி இவர் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை. சொன்னதை செய்து வந்திருப்பார் போலிருக்கு !

தென் சென்னை மாவட்ட செயலாளர் பதவி கேட்டு 15 வருடமாக காத்திருந்தார். இப்போது ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகும கிடைக்காத துக்கத்தில் வெளியேறுகிறார்.

இவர் வெளியேறியதால் திமுக கலகலத்தெல்லாம் போகாது. ஆனால் திமுக வில் எல்லாம் சரியாக இருப்பது போன்ற தோற்றத்தை உடைக்க உதவும்.
திமுக வில் கடுமையான பலப் பரீட்சை சண்டை நடக்கிறது. அரண்மனை அரசியல்.

ஒரு வயதான ராஜா இறந்தவுடன் அரண்மனையில் நிச்சயம் யாருக்கு அதிக செல்வாக்கு என்று சண்டை தொடங்குவது சகஜம். முறையாக இளவரசர் பதவி ஏற்றாலும் பழைய அல்லக்கைகள் மெல்ல பின்னுக்கு தள்ளப்படும். இந்த திமுக விலோ இப்போது புதிதாக ஒரு பேரனும் நுழைந்து அவரது ஜாலராக்களை உள்ளே கொண்டு வருகிறார். (இங்கு இளவரசே 70 வயது)

இந்த அரண்மனை சண்டை ஒரு வழியாக சில பல தலைகள் உருண்ட பின் நிற்கும்.

எனவே மக்களே இந்த கு.க. செல்வம் விஷயம் ஒரு "தேநீர் கோப்பையில் விளைந்த புயலே" !!
இவருக்கு பின்னாடி பெரிய அளவில் ஆட்கள் வெளியேற வாய்ப்பு மிக குறைவு.

இந்த நபருக்கு இதுநாள் வரை அரசியலில் இருந்ததற்கு இன்று கிடைத்த விளம்பரம் தான் அதிக பட்சம். His 15 minutes Popularity is over.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்.. இவரும் இவரது தலைவரை போலவே துண்டு சீட்டு குடுத்து படிக்க சொன்னாலும் தடுமாறுகிறார். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாம். காலக் கொடுமை.

இந்த கூட்டமே தற்குறி கூட்டம் போலிருக்கு.

போங்க .. போங்க.. பஞ்சாயத்து முடிஞ்சது...

Image may contain: 2 people, people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...