Monday, February 28, 2011

கலைஞர் டிவி. - ராசா சிறை - தயாளு எப்போது...?

கலைஞர் டிவி. - ராசா சிறை - தயாளு எப்போது...?


ஸ்பெக்ட்ரம்…. 2ஜியில் ஊழலே நடைபெற வில்லை என்று திமுக தொடர்ச்சியாக நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவிலிந்து திமுகவுக்கு தாவிய செல்வகணபதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஸ்பெக்ட்ரம் என்பது கண்ணுக்கே தெரியாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளில் எப்படி ஊழல் செய்ய முடியும் என்று பேசினார்.
 ஸ்பெக்ட்ரம் எப்படி கண்ணுக்குத் தெரியாமல் எல்லா இடங்களிலும் பரவி விரவிக் கிடக்கிறதோ, அதே போல ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணமும் பரவி, விரவிக் கிடக்கிறதுஇந்த ஸ்பெக்ட்ரம் பணம் எப்படி, வோல்டாஸ் கட்டிடம், க்ரீன் ஹவுஸ் ப்ரமொட்டர்ஸ், என்று பல்வேறு பரிமாணங்களை எடுத்திருக்கிறதோ, அதே போல, ஒரு புதிய பரிமாணம் வெளி வந்திருக்கிறது.
 இத்தனை நாட்கள் ஊடகங்களில் வந்த செய்திகளை வைத்தும், கனிமொழியையும், ராசாவையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அழகிரிதையா தக்காஎன்று குதித்ததை வைத்தும், ஏதோ கருணாநிதியின் மூன்றாவது குடும்பத்திற்கு மட்டும் தான் இந்த ஊழலில் தொடர்பு இருப்பது போலவும்,   கருணாநிதியின் இரண்டாவது குடும்பமான கோபாலபுரம் கோமான்களுக்கு இதில் தொடர்பே இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்டு வந்தது.‘அது எப்படி சார் மூத்தவர் விட்டு விடுவார் ?. ‘   மூன்றாவது குடும்பத்துக்கு ஒரே பெண் பிள்ளை. அவரே இத்தனை கோடிகளை அபேஸ் செய்துள்ள போது, அரை டஜன் பிள்ளைகளை வைத்திருக்கும் மூத்தவர் விட்டு விடுவாரா   என்ன ?
சீக்கிரம் வெட்டு தயாளு.... கலைஞர் டிவில மானாட மயிலாட பாக்கணும்.  இன்னைக்கு நமீதா வர்றாங்க விட்டு விடமாட்டார் இல்லையா… ? ஆம் தோழர்களேமூத்தவரும், தன் பங்குக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு பெரும் தொகையை ஆட்டையைப் போட்டுள்ளார். கலைஞர்  டிவி. இந்த தொலைக்காட்சி, மாறன் சகோதரர்களுக்கும், அஞ்சா நெஞ்சனுக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து, உருவானது.   அஞ்சா நெஞ்சனின் நேரடி மேற்பார்வையில் இது உருவானதால், உருவான நாள் முதலாகவே வலுவாக வளர்ந்தது கலைஞர் டிவி.
 கலைஞர் டிவியில், வேறு பங்குதாரர்களை சேர்த்தால், நாளை பங்கு பிரிப்பதில் பிரச்சினை நேரும் என்பதற்காக குடும்பத்தை மட்டுமே பங்குதாரர்களாக உருவாக்கினார் கருணாநிதி. தயாளுவுக்கு, 60 சதவிகிதம் பங்குகள், கனிமொழிக்கு 20 சதவிகிதம் பங்குகள், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் ஷ்ரத் குமாருக்கு 20 சதவிகித பங்குகள். மாறனோடு மோதியாயிற்று. புதிய டிவி சேனல் தொடங்க வேண்டும்.   முதலீடு வேண்டுமல்லவா ?   சவுக்கு வாசகர்கள் உடனே, அவர்களிடம் இல்லாத பணமாஎன்று கேட்பீர்கள். அவர்களிடம் பணம் இருக்கிறது.   ஆனால், அதற்காக அவர்கள் காசிலேயே தொழில் தொடங்க அவர்கள் முட்டாளா என்ன ?தொழில் தொடங்குகிறார்கள் என்றவுடன் 214 கோடி ரூபாய் முதலீடு வருகிறது. இந்த 214 கோடி ரூபாய் முதலீட்டைச் செய்வது, மும்பையைச் சேர்ந்த டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் வளர்ச்சி, அண்ணாமலை ரஜினி படத்தைப் போலவே அசுர வளர்ச்சி.
 இந்த டி.பி.ரியாலிட்டி என்ற நிறுவனமே, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பெரிய அரசியல்வாதி ஒருவரின் பினாமி நிறுவனம் என்று தகவல்கள் கூறுகின்றன இந்த டி.பி.ரியாலிட்டி நிறுவனமும், துபாயைச் சேர்ந்த எடிசாலாட் நிறுவனமும் சேர்ந்து, ஸ்வான் டெலிகாம் என்ற ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை தொடங்குகின்றன.
 இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அனில் அம்பானிக்குச் சொந்தமானது. பிறகு, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை ஷாஹீத் பல்வா, வினோத் கோயங்கா என்ற டி.பி.ரியாலிட்டியின் முதலாளிகள் வாங்ககின்றனர்.இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் தான், 214 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது.இந்த முதலீடும் சாதாரணமாக செய்யப்படவில்லை. இதிலும் பெரிய தகிடுதண்டா இருக்கிறது.
 டி.பி.ரியாலிட்டிக்குச் சொந்தமான இரண்டு நிறுவனங்கள் சினியுக் பிலிம்ஸ் மற்றும் குஸேகான் ரியாலிட்டி. இந்த இரண்டு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை டி.பி.ரியாலிட்டி நிறுவனம் வைத்திருக்கிறது.   குஸேகான் ரியாலிட்டி, 2009-2010ம் ஆண்டில் 206 கோடி ரூபாய்களை சினியுக் பிலிம்ஸில் முதலீடு செய்கிறது.
 இந்த சினியுக் நிறுவனம் தான், கலைஞர் டிவிக்கு முதலீடு செய்ய 214 கோடி ரூபாய் தருகிறது.நீங்கள் புதிதாக டிவி ஆரம்பிக்கப் போகிறேன், எனக்கு முதலீடு தாருங்கள் என்று ஏதாவது ஒரு நிறுவனத்திடம் கேட்டால் கிடைக்குமா ?ஆனால் கலைஞர் டிவிக்கு மட்டும் கேட்ட உடனேயே முதலீடு கிடைத்தது.ஒரு தொலைக்காட்சி எப்படி நடக்கும், என்ன என்ற விபரங்கள் தெரியாமலேயே, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாயை முதலீடு செய்கிறதென்றால், அது ஸ்பெக்ட்ரமுக்கான கைமாறு அல்லாமல் வேறு என்ன ?
 இந்த ஊழல் வெளி வந்ததன் மூலம், .ராசாவுக்காக கருணாநிதி எதற்காக இத்தனை வக்காலத்து வாங்குகிறார் என்பது புரிகிறதா ?
மாவலி மன்னன் பட்ட கஷ்டத்தையும், .ராசா பட்ட கஷ்டத்தையும் விளக்கமாக எடுத்துச் சொன்ன கருணாநிதி, நேற்று பேசியது, கைது செய்யப் பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி என முடிவு செய்ய முடியாது என்பது.கைது செய்யப் பட்டதாலேயே ஒருவர் குற்றவாளி என ஆக முடியாது என்றால், தயாளு கைது செய்யப் பட்டாலும், இதே போல மவுனச் சாமியாராக இருந்து தீர்மானம் இயற்றுவாரா கருணாநிதி ?
தன்னுடைய கையெழுத்தை தானே இல்லை என்றார் என்று பல கூட்டங்களில் பேசிய கருணாநிதி, டி.பி.ரியாலிட்டியிடம் வாங்கிய கடனுக்கு போட்ட ஒப்பந்தத்தில் உள்ள கையெழுத்து தன்னடையது தான் என்று ஒப்புக் கொள்ளச் சொல்வாரா
வெளிப்படையான விசாரணைக்கு திமுக எப்போதுமே தயார் என்னும் கருணாநிதி, தன்னடைய மனைவியை தானாகவே முன்வந்து சிபிஐ விசாரணைக்கு அனுப்பத் தயாரா ?
 டான்சி நிலத்தை வாங்கியதற்காக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று ஜெயலலிதாவைப் பற்றிக் கூறிய கருணாநிதி, உச்ச நீதிமன்றம் தயாளுவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதற்கு முன்பே, சிபிஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்வாரா ?
 வழக்கக்கு ஒழுங்காகச் செல்லாமல், இழுத்தடித்து தாமதிப்பதால்வாய்தா ராணிஎன்று ஜெயலலிதாவை அழைக்கும் கருணாநிதி, அவ்வாறு தயாளுவை யாரும் அழைக்கும் முன் தானாக சிபிஐ முன்பு ஆஜராகச் சொல்வாரா ?
 ஏழைகளுக்கு செல்போன் கொடுத்தற்காகத் தான் .ராசா இன்று சிறை சென்றுள்ளார் என்று பேசியுள்ளாரே, இது போல் ஏழைகளுக்கு செல்போன் கொடுத்ததற்காகத் தானே, தயாளுவுக்கு 200 கோடி கொடுக்கப் பட்டுள்ளது. தயாளவையும் சிறைக்கு அனுப்ப கருணாநிதி தயாரா ?
 ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் இழப்பு இல்லை லாபம் தான் என்று பேசினாரே கருணாநிதி…. அந்த லாபம் இந்த 200 கோடி ரூபாய் தானே….
 .ராசா சிறை சென்று விட்டார். தயாளமான தயாளு எப்போது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...