புதிய வருடத்தில் அட்மிசன் ஆரம்பித்துவிடும். மீண்டும் மீண்டும் பெற்றோர்களுக்கு நாம் விடுக்கும் ஒரு அன்பான எச்சரிக்கை.
கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதி களாக பிடித்து வைத்துக் கொண்டு கட்டணத்தை வசூலிப்பதும், ‘சொன்ன’ கட்டணத்தை கட்டாத பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூகத் தொண்டாக‘ உள்ளது. இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய குற்றங்கள் வழக்காக பதிவாகி விடாமல் பள்ளிகள் பார்த்துக் கொள்கின்றன.
தமிழக அரசின் கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணத்தை மீறி, பள்ளி நிர்வாகம் சொல்லும் கட்டணத்தைக் கட்ட மறுத்து பெற்றோர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினால், அதிகாரிகள் அங்கு வருவதும், பெற்றோர்-நிர்வாகத்தோடு பேசுவதும் அவ்வப்போது நடக்கும் நாடகமாகவே உள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் ஏராள மான பள்ளிகள் முன்பு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியும், புகார் செய்தும் ஒரு பள்ளி மீது கூட அதிகாரிகளோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் இருப் பதே இதற்கு சான்று.
பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படு வது, அதிகாரிகளின் மெத்தனம், குழந் தைகளை மன ரீதியாக வதைப்பது என நீளும் தனியார் பள்ளிகளின் அராஜகத்தை அரசு நிர்வாகம், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக ஞாயிறன்று (பிப்.27) சென்னையில் பொது விசாரணை நடைபெற்றது. இந்த பொது விசாரணையில், தமிழகத்தில் உள்ள பிரபலமான 19 பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் பங்கேற்றுப் பேசினர்.
“நாங்க சொல்ற கட்டணத்தைதான் கட்டணும், கண்ட நாய்கள் சொல்ற கட்டணத்தையெல்லாம் நாங்க வாங்க முடியாது. இஷ்டம் இருந்தா உங்க புள்ளைங்கள படிக்க வைங்க. இல்லாட்டி கூட்டிட்டு போங்க.” என்று சென்னை அய னாவரம் கல்கி நாராயணா பள்ளி நிர்வா கம் கூறுவதாக ஒரு பெற்றோர் கூறினர்.
சென்னை, கொளத்தூரில் உள்ள டேனியல் தாமஸ் பள்ளியில் பயிலும் எனது மகனுக்கு அரசு நிர்ணயித்த ஆயி ரத்து 450 ரூபாய் கட்டணத்திற்கும் அதிக மாக 9ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். இது போதாது இன்னும் சில ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். அதனை செலுத்த மறுத்ததால், எனது மகனுக்கு கணக்கு புத் தகத்தில், ஒரு பாடத்தில் ஒரு கணக்கை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தையை அடிக்கிறார்கள். ரேங்க் அட்டை கொடுக்க மறுக்கிறார்கள். தேர்வு எழுத கூடுதல் பேப்பர் தர மறுக்கிறார்கள். ஏற்கெனவே கட்டிய பணத்திற்கு அளித்த ரசீதில் தேதியே இல்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
ஈரோடு இந்து பள்ளியில் எல்கே ஜிக்கு 3ஆயிரத்து 800 ரூபாயும், பன்னி ரெண்டாம் வகுப்புக்கு 9ஆயிரம் ரூபாயும் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் எல்கேஜிக்கு 11ஆயிரம் ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு 40ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். பெற்றோர் களை தனித்தனியாக அழைத்து மிரட்டி கட்டணத்தை பிடுங்குகின்றனர். சொன்ன கட்டணத்தை கட்டாத 3ம் வகுப்பு குழந்தையை எல்கேஜிக்கு மாற்றுகின்றனர்.

1 மற்றும் 6 வகுப்புக்கு சமச்சீர் கல்வி அமலாகியுள்ளது. அடுத்தாண்டுதான் பிற வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வி அமலாக உள்ளது. ஆனால், சில பள்ளிகளில் சொன்ன கட்டணத்தை செலுத்தியுள்ள மாணவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்தை போதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று ஒரு மாண வரின் தந்தை குற்றம் சாட்டினார்.
ஈரோடு செங்குந்தர் பள்ளி நிர்வாகம் பற்றி கூறுகையில், ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது; வேறுசில வகைகளிலும் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றனர். நம்மால் முடியாதது எதுவுமில்லை. பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள். ஒன்று சேர்ந்து திரும்பி பாருங்கள். ரவுடிகள் காணாமல் பொய் விடுவார்கள்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெசிமோசஸ் பள்ளி கூடுதல் கட்ட ணத்தை வகுப்பாசிரியர்களின் பெயர் களில் காசோலையாக வாங்கி வரும்படி குழந்தைகளை நிர்பந்தப்படுத்துகின்ற னர். இப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கட்டணமாக 11ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனா லும் 25ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். மேலும், 7ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அதனை செலுத்த மறுத்துவிட்டோம். இதனை, ஈடுசெய்ய, கடந்தாண்டு நிலுவை என்று கூறி வீட்டிற்கு கடிதம் அனுப்பி யுள்ளனர் என்று ஒருவர் கூறினார்.
சென்னையில் பிரபலமாக அறியப்பட்ட சைதாப்பேட்டை ஆல்பா பள்ளி யில் 5 மடங்கு புத்தக கட்டணம் வசூலிக் கிறார்கள். தற்போது மாணவர்களே தேர்வுக்கு பேப்பர் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். சொன்ன கட்டணத்தை கட்டாதவர்களை காலை வழிபாட்டில் தனியாக நிற்க வைக்கின்றனர் என்கிறார் ஒரு மாணவரின் தாய்.
குழந்தைகளை முட்டி போட வைப்பது, வகுப்பில் பின் வரிசையில் அமர வைப் பது, அடிப்பது போன்ற சம்பவங்களையும் பெற்றோர்கள் விசாரணையில் கூறினர்.
விசாரணையில் நீதிபதியாக பங்கேற்ற வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரதசாத், ஒவ் வொரு பள்ளி மீதும் பெற்றோர்கள் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதை விட, தமிழக அரசு அதனை செய்ய நிர் பந்தியுங்கள். அப்போதுதான் பிரச்ச னைக்கு தீர்வு வரும் என்றார்.
கல்வியாளர் வசந்திதேவி அவர்கள் சென்னையில் பேசிய ஒரு பதிவு

கோவிந்த ராஜன் குழுவின் விளைவாக நடுத்தர வர்க்கம் இன்றைக்கு தெருவில் வந்து போராடுகிறது. பெற்றோர்களின் போராட்டங்கள் மூலம் அரசின் சட்டம் உயிரோடு உள்ளது. பெற்றோர்கள் போராடாமல் இருந்தால் அந்த சட்டம் வெற்று காகிதமாகவே இருந்திருக்கும். பல ஆண்டுகளாக
அராஜகம் புரிந்து வந்த அதிகார மையம் பெற் றோர்களின் போராட்டத்தால் ஆட்டம் கண் டுள்ளது. போராட்டம் தீவிரமாகும் போது அதிகார மையம் தகர்ந்துவிடும் என்றார். கல்வி உரிமைச்சட்டம் அரசு தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்தும். குழந்தைகளை பாகுபடுத்துவது, சித்ரவதை செய்வது, மனரீதியாக துன்புறத்துவது, டிசி கொடுப்பேன் என மிரட்டுவது போன்றவை குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யுங்கள், தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் செய்யுங்கள். தற்போது விசாரணையில் வந்த அம்சங்களை தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழகத்தில் பொது விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்ப தாக காவல் துறையினர் நமக்கு ஆதரவு தருகிறார்கள். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் 2கோடி பேர் உள்ளனர். பெற்றோர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தொகுத்து ஆளும் கட்சிக்கு கொடுத்து அதனை நிறைவேற்றினால்தான் வாக்க ளிப்போம் என்று நிர்பந்தியுங்கள். பிற கட்சிகளிடமும் கொடுத்து, வாக்குறுதி அளித்தால்தான் ஓட்டு போடுவோம் என்று நிர்பந்தியுங்கள்.
நம் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள என்பது மிகப்பெரிய கவலைதான். அதேபோல் நம் பிள்ளிகள் பொதி சுமக்கும் பிராணியாக வாழாமல், நம் பிள்ளைகள் மனநிலையையும் பாருங்கள். காசு புடுங்கும் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்றால், இந்த நாட்டில் 70 % மக்கள் படிக்க முடியாது. அங்கு சேர்க்காமல் வேறு ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment