Wednesday, March 21, 2012

திருமங்கலம் ஃபார்முலாவும்...சங்கரன்கோவிலும்...

சங்கரன் கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

சாதாரணமாக பார்த்தால்..இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆளும் கட்சிதான் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்புகளை அதிகம் உடையது.தவிர்த்து பணமும் இது போன்ற தேர்தல்களில் இறைத்துவிடப்படுகிறது கட்சிகளால்.

சமீபகாலமாக..இது போல பணத்தால் வெல்லப்படுவதை 'திருமங்கலம் ஃபார்முலா' என்கிறார்கள்.

இச்சமயத்தில் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...பணம் கொடுக்கப்படும் வழக்கத்தை ஆரம்பித்ததே..இந்த இரு திராவிடக் கட்சிகள்தான்..இவர்கள் ஒருவரை ஒருவர்..வெல்லும்போது...பணத்தால் வென்றார்கள் என ஒரு கட்சி மற்ற கட்சியின் மீது புகார் சொல்வது..வேடிக்கையானது..பழகிப்போன ஒன்று.
சங்கரன்கோவிலைப் பொறுத்தவரை..அதிமுக பற்றி அனைத்து கட்சிகளும்..'அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாம் இட்டிருந்தனர்..ஆடு, மாடு,மிக்ஸி,கிரைண்டர்,பணம் ஆகியவை கொடுக்கப்பட்டன' என்றுள்ளன.(திமுக மத்திய அமைச்சர்களும் அங்குதான் இருந்தனர்..முக்கியமாக பட்ஜெட் அன்று பழனிமாணிக்கம் இங்குதான் இருந்தார்)
இவற்றில் உண்மை இருக்கலாம்..ஆனால் எவ்வளவு பேருக்கு இப்படிக் கொடுக்கப் பட்டிருக்கும்..ஓரளவு வெல்வதற்கு தேவையான அளவு என்றால்..அதிமுக வின் வெற்றி அபரீதமாக உள்ளதே..பெற்ற வாக்குகள் 94977 வாக்கு வித்தியாசம் 68757..இது எப்படி..

இதற்கான காரணம் என நான் நினைப்பது...
மக்களுக்கு திமுக மீதான கோபம் இன்னமும் போகவில்லை (வேட்பாளர் டிபாசிட் இழந்துள்ளார்)
காங்கிரஸுடன் திமுக கூட்டு உள்ளவரை திமுக வை மக்கள் புறக்கணிப்பர்.
அதிமுக வை மக்கள் நம்புகின்றனர்..இவர்களுக்கு அவர்கள் மேல் என்பது போலத்தான் நம்பப்படுகிறது.

ஆளும் கட்சிக்கு ஓட்டளிக்க வில்லையெனில் நம் தொகுதி கவனிக்கப்படாது என்ற பயம்...இவற்றில் ஒன்றுதான்.

Saturday, March 17, 2012


சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிகிறது.
• தேர்தல் களத்தில் மொத்தம் 13 வேட்பாளர்கள் உள்ளனர். தொகுதிக்குள் செல்வாக்கு அடிப்படையில், பிரதான கட்சி வேட்பாளர்களாக போட்டியில் இருப்பவர்கள், முத்துச்செல்வி (அ.தி.மு.க.) ஜவகர் சூரியகுமார் (தி.மு.க.), சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க), முத்துக்குமார் (தே.மு.தி.க.) ஆகிய நால்வரும்தான்.
• இவர்களுடன், முருகன் (பா.ஜ.க.), நாகேஸ்வரராவ் (சமாஜ்வாடி), கணேசன் (ஜனநாயக கட்சி) மற்றும் 6 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
• தமிழக அரசியலில் முக்கிய நான்கு தலைவர்களும் (முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்) நேரடியாக தொகுதிக்குள் பிரசாரம் செய்தனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்தத் தொகுதியும் இதுதான்.
• அ.தி.மு.க.-வுக்கு பிரசாரம் செய்வதற்காக 32 அமைச்சர்கள் தொகுதிக்குள் இறக்கிவிடப்பட்டனர்.
• கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிந்தது.
• வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, தேரடிவீதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி, பிரசாரத்தை நிறைவு செய்தார். தி.மு.க.வுக்காக சங்கரன்கோவில் பஜாரில் மத்திய அமைச்சர் நெப்போலியன் பிரசாரத்தை முடித்தார். ம.தி.மு.க. வேட்பாளருக்காக கோவில் வாசல் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ தேர்தல் பிரசாரத்தை முடித்தார். தே.மு.தி.க.-வுக்காக வடக்கு ரத வீதியில் விஜயகாந்த் பிரசாரத்தை முடித்தார்.
• இன்றைய தேர்தலில் 206,087 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகிய இரு ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம். மாலை 5 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு (நின்றால்) டோக்கன் வழங்கப்படும்.
• வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன. ஒரு சாவடிக்கு தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர் நிலை 1, 2, 3 என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 242 சாவடிகளிலுமாக 1,062 பேர்  பணியில் ஈடுபடுகின்றனர்.
• காலை 7 மணிக்கு அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்று டெஸ்ட் செய்யப்படும். அதற்காக ட்ரயல்  வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்த டெஸ்டிங் நடைபெறும்.
• மாதிரி வாக்குப் பதிவில், ஒவ்வொரு முகவரும் 8 ஓட்டுகள் போட வேண்டும். 13 வேட்பாளர்களின் முகவர்களும் ஓட்டு போட்ட பின்னர், கூட்டுத்தொகை 104 வருகிறதா என சோதிக்கப்படும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ரீசெட் பண்ணப்பட்டு, அனைத்து வாசிப்புகளும் பூச்சியத்துக்கு கொண்டு வரப்பட்டு, 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.
• அனைத்து சாவடிகளும் ஆன்லைனில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகம், டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ள 25 சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
• இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். 21ம் தேதி புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
• நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

ஜாதிகளும் , மதங்களும் எதற்காக

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எது என்றால் கேட்டால் எல்லாரும் கூறும் ஒரே வார்த்தை " இந்தியா " என்பது தான் .  மாத்திரமல்ல ஆயிரக்கணக்கான ஜாதிகளும் , பல்வேறு மதப்பிரிவினரும் வாழ்ந்தாலும் " வேற்றுமையில் ஒற்றுமை " என்ற கோஷம் தான் இந்தியாவை வானுயரம் உயர்த்துகிறது என்றால் அது மிகையாகாது .   ஆனாலும் இந்த ஜாதிகளும் , மதங்களும் ஏன் தான் இந்தியாவில் உள்ளனவோ என்று நினைக்க தோன்றுகிற கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் . 


ஜாதிகள் உருவான கதை :  "  ஜாதிகள் இல்லையடி பாப்பா "  என்ற பாடல் அடிகளை அறியாதோர் யாரும் இருக்க முடியாது .   ஆனால் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் இந்த ஜாதி பிரிவினைகள் என்றால் அது உண்மை தான் .   அவரவர் செய்த தொழில் வைத்து தான் ஜாதிகள் பிரிக்கப்பட்டதே ஒழிய , பிறப்பாலும் இறப்பாலும் யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை , தாழ்ந்தவரும் இல்லை என்பது தான் உண்மை.

  

ஆனால் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது இப்பொழுது .   ஜாதிகளுக்காக கட்சிகள் உருவாக தொடங்கியிருப்பது ஒரு மாபெரும் அபாயத்தின் அறிகுறி என்பதை தவீர நான் சொல்லுவதற்கு வேறொன்றும் இல்லை .   ஜாதி தலைவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக அப்பாவி ஜனங்களை உபயோகித்து கொள்ளுகிறார்கள் .  நான் சொல்லுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் ... கொஞ்சம் யோசித்து பாருங்கள் ...!  ஜாதி கலவரங்கள் வந்தால் பலியாவது தலைவர்கள் இல்லை .  அப்பாவிகள் மாத்திரமே .....  சாகும் உயிர்களுக்கு  மாலையும்  , கொஞ்சம் போஸ்டர்களும் தான் மிஞ்சும் ... வேறென்ன கிடைக்கும் ..... எதற்கு எடுத்தாலும் ஜாதி பெயரை உபயோகிக்கும் தலைவர்கள் புறக்கணிக்கப் படவேண்டும் .

மத்திய அரசு கீழ் ஜாதி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற மாயாவதி அவர்களின் குற்றசாட்டு ஒரு உதாரணம் 


சமயங்கள் எதற்க்காக :   சமயம் என்ற சொல் " பக்குவப்படுத்தல் " என்ற பொருள் படுவதாக நான் பள்ளியில் படைத்த பாடத்தை நினைவு கூறுகிறேன் .  ஆனால் இன்றைக்கு நடக்கும் சில காரியங்கள் மக்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்ப்படுத்தும் அபாயம் உடையவையாக இருக்கிறது .  உதாரனத்திற்க்கு  :  கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த போராட்டங்கள் .   திரு .  உதயகுமார் அவர்கள் பேசும் பொழுது  , " சிறுபான்மை சமுதாயத்திற்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை " என்று பேசினார்இவர் அணுமின் நிலையத்தை குறித்த அச்சத்தில் பேசுகிறாரா அல்லது கலவரத்தை உண்டாக்க பேசுகிறாரா என்பதை அரசு உணரவில்லை என்றாலும் மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்


ஜாதி பெயர்களையும் ,  சமயங்களின் பெயர்களையும் பயன்படுத்தி கலகம் உண்டாக்கும் யாராய் இருந்தாலும் அவர்களின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும் என்பதும் ஜனநாயக இந்தியாவின் கண்ணியம் தொடர்ந்து பாதுகாக்கப் படவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை ...

அணுமின்சாரம் தேவையா ..?

மின்சாரம் ஏன் தேவை :   ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும்.   தனிமனித வருமானம் வேலைவாய்ப்பின் மூலம் பெறப்படுகிறது.   வேலைவாய்ப்புகள் அநேக தொழிற்சாலைகள் மூலமாக பெறப்படுகிறது.   ஆனால் தொழிற்சாலைகள் பெருகவேண்டுமானால் அதற்கு மூலப் பொருளாக மின்சாரம் தேவைப்படுகிறது.

மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது .  
1 .  அனல் மின் நிலையங்கள்
2 .  நீர் மின்நிலையங்கள்
3 . காற்றாலைகள் .
4 . சூரிய ஒளி மின் ஆலைகள்
5 .  அணுமின் நிலையங்கள் .


இப்படி இத்தனை வழிகள் இருக்கும் போது அணுமின்சாரம் தற்பொழுது நாட்டிற்கு தேவையா என்பது தான் அநேகம் பேரின் வாதம்.   குழப்பம் என்று கூட சொல்லலாம் .   அதனால் இந்த வழிகளை பற்றி கொஞ்சம் எழுத வேண்டியது அவசியம் என கண்ட படியால் இந்த பதிவை எழுத் துணிந்தேன் .    நண்பர்கள் உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை எழுதுவதால் நம் கருத்துகள் மேம்படும். 



1 .  அனல் மின் நிலையங்கள் :   நமது நாட்டின் அனல் மின் நிலையங்கள் தேசிய அனல் மின் நிர்வாகத்தால் அருவக்கப்பட்டு வருகின்றன.    ஜூன் 30 ,  2011  ன் படி 1 ,15 , 649 . 48  MWe  மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது .  இது கிட்டத்தட்ட தேசிய மின் தேவையில் 66  சதவீதமாகும்.

2011 - 2012 -  வருடத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி தேவை 696  மில்லியன் டன் .  ஆனால் உள்நாட்டில் இருந்து 554 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   மீதி 114  மில்லியன் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பது தான் உண்மை .
 
இதனால் இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் தேவையான அளவு மின்னுற்பத்தி செய்யமுடியவில்லை எனபது தான் திண்ணம்.   இந்த பதிவு எழுதப்படும் போது அனல் மின் நிலையங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு தான் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று நிலக்கரித்துறை அமைச்சரின் கூற்றை நினைத்து பார்க்கிறேன்.

இந்நிலையில் 2040  வருடத்திற்குள் இந்தியாவின் மொத்த நிலக்கரியும் தீர்ந்துவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது .   தகவலுக்கு http://www.business-standard.com/india/storypage.php?autono=333749 

பெருகி வரும் மின் தேவைகள் ஒரு பக்கம் இருக்க , எப்படி வருங்காலத்தில் அனல் மின் நிலையங்கள் எதிர்பார்த்த மின்சாரத்தை கொடுக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வி தான்.    5 . 78 % சதவீத  CO2  ( மொத்த உலகத்தின் )   இந்தியாவில் இருந்து  வெளியிடப்படுகிறது .      ( தகவலுக்கு :  http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_carbon_dioxide_emissions  )   அதனால்  சுற்று  சூழலுக்கு  கேடு    விளைவிக்கும் நச்சு புகையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயத்திலும் நாம் உள்ளோம் என்பது மறுக்க இயலாது.


2 . நீர் மின் நிலையங்கள் :   இன்யாவில் தற்பொழுது நீர் மின் நிலையங்களின் உருவாக்கு திறன் கிட்டத்தட்ட 30,920   Mwe .   நீர் மின்சாரங்கள் இருக்கும் இடங்களை கீழே பார்க்கலாம்




ஆனால் இந்த நீர்மின் நிலையங்களிலும் பெரும்பாலானவற்றில் மின்சாரம் சரிவர தயாரிக்க முடியவில்லை என்பது தான் உண்மை .  ஏன் என்றால் இவையும் இயற்கையை சார்ந்து ( மழையை ) இருக்கிறது.   உலகின் அதிக மலை பொழியும் பிரதேசம் என்று கருதப்படும் சிரபுஞ்சியில் கடந்த 5  வருடங்களாக மழை இல்லை என்றால் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா ..  தற்பொழுது 26  சதவீத மின்சாரம் நீர் மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது.



3 .  காற்றாலைகள் :   இது ஒரு தூய்மையான் மின் சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.     31  மார்ச் 2011  கணக்கின் படி இந்தியாவின் மொத்த காற்றாலைகளின் உற்பத்தி திறன் 14550  Mwe .  அதிலும் தமிழ்நாடு அதிகபட்சமாக 6007  Mwe  உற்பத்தி திறனை கொண்டுள்ளது .  இன்னும் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு கொண்டே இருக்கின்றன.
( நன்றி : http://en.wikipedia.org/wiki/Wind_power_in_India ))
ஆனால் ஏன் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு வருகிறது   மே ,  ஜூன் ,  ஜூலை ,  ஆகஸ்ட் , செப்டம்பர்  மாதங்களில் மாத்திரம்  WIND TURBINE சுழற்றுவதற்கு தேவையான காற்று வேகம் உள்ளது .  அதாவது  11 KM /H ல் இருந்து 19 KM / H  வரை உள்ளது .  மற்று தருணங்களில் மிகவும் குறைவாக காற்று வீசுவதால் தேவையான் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை .  ( தகவலுக்கு :  http://rangareddy.nic.in/profile-pdfs/91.pdf  ) .    இதற்க்கு அரசை குறை சொல்லுவதிலும் எந்த லாபமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.



4 .  சூரிய ஒளி மின் ஆலைகள் :    சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அனைத்து நாடுகளும் யோசிக்க தான் செய்கிறது .  ஏன் எனில் ,  இதில் தயாரிக்கப்படும் மின்சாரம் பசுமையானது .   இதற்க்கு எந்த மூலப் பொருளும் தேவை இல்லை.   மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தேவையான மின் கம்பங்கள் இல்லாத போது அந்த வீடுகளுக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் அற்புதமானது.

ஆனால் சில பிரதிகூலங்களும் உள்ளன.   இதனை நிறுவுவதற்கு ஆகும் செலவு அதிகம்.   உலகின் மாசு காரணமாகவும் சூரியன் இல்லாத தருணங்களிலும் மின்சார உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.   தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிற அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை.   இந்தியாயவின் பெரிய சோலார் மின் உற்பத்தி 40 Mwe  ( Adani Bitta Solar Plant,குஜராத் ) என்பது ஆச்சரியம் தானே.  


5 .  அணு மின் நிலையங்கள் :   இப்பொழுது தான் இந்தியா இந்த துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது என்று நாம் நினைக்க கூடாது.  இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய அணுசக்தி தந்தை என்று அழைக்கப்படுகிற ஹோமி பாபா அவர்களின் கனவுகளோடு அணு சக்தி திட்டங்கள் 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 20  அணு மின் நிலையங்கள் மூலம் 4780  Mwe மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் அணுமின்சாரத்தின் அளவு வெறும் 3  சதவீதம் என்பது தான் அநேகரின் கேள்விக்கு காரணம்.  ஏன் இந்த அணு மின்சாரம் நமக்கு தேவை.?   இது ஒரு நியாயமான கேள்வி என்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை.   மேற்குறிப்பட்ட எல்லா மின்சார வழிகளும் நிரந்தரமான ஒரு மின்சாரத்தை வகை செய்யாத போது அணு மின் நிலையங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் , எல்லா காலங்களிலும் மின்சாரத்தை கொடுக்கும் என்ற நிலை நாம் அதை தேட செய்கிறது.  

உலகின் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் எல்லாம் அணு மின்சாரத்தை பெரும் அளவில் பயன்படுத்துகிறது என்பது தான் உண்மை .   அமெரிக்காவில்    104  அணு உலைகள் மூலம் 101119 Mwe  மின்சாரமும் ,  பிரான்ஸ் 63473  Mwe  மின்சாரமும் ,  ஜப்பான் 48900  Mwe  மின்சாரமும் அணுமின் நிலையங்களில் இருந்து பெறுகின்றன.   அப்படியெனில் நாம்  மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று தான் அர்த்தம்.




இந்தியா தன்னுடைய அணுமின்சார தேவையை 2050 ஆவது வருடத்தில் மொத்த மின்தேவையில் 50  சதவீதமாக உயர்த்த திட்டம் கொண்டுள்ளது .   அதற்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாமா என்பது ஏன் பதிவுலக நண்பர்கள் பலரின் கேள்வி.   நான் மறுபடியும் உங்களுக்கு சொல்லுகிறேன் " முதாலவது பாதுகாப்பு ,  பிறகு உற்பத்தி "    என்ற கொள்கையை தான் இந்திய அணு சக்தி துறை பின்பற்று வருகிறது.  அதனால் தான் கடந்த 50  வருடங்களாக அணு மின் திட்டங்களை நிறைவேன்றி வருகிறோம் என்ற அணு சக்தி ஆணையத்தின் கூற்றை நாம் புறம் தள்ள முடியவில்லை. 


அணு மின் நிலையங்களில் இருந்து சுற்று சூழலை தடுக்கும் எந்த நச்சு புகையும் வெளியிடப்படாது என்பது கூடுத தகவல் .   பசுமையின் திட்டமாகிய அணு மின் திட்டங்களை குறித்த அச்சங்கள் விளக்கப்பட வேண்டும் என்பது இந்த பதிவனின் நோக்கம் கூட.   24  மணி நேரமும் ,  எந்த காலத்திலும் மின்சாரத்தை கொடுக்கும் அணு மின் நிலையங்களை நாம் ஏன் வரவேற்க கூடாது ?

இலங்கைக்கு ஆதரவான மத்திய அரசின் முடிவு! ஜெயலலிதா கடும் சீற்றம்! சிவ்சங்கர் மேனனை சந்திக்க மறுப்பு!

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு தமிழ்நாட்டில் ஏகோபித்த குரலில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், சிவ்சங்கர் மேனனை சந்திக்க ஜெயலலிதா மறுத்திருப்பது மத்திய காங்கிரஸ் அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதாவை சந்திப்பதற்குச் சிவ்சங்கர் மேனன் இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் கேட்டார். அவர் அவசரமாக சென்னை வருவதற்கும் ஏற்பாடானது. ஆனால், மத்திய அரசின் அமைச்சர்களுடனோ, உயர்மட்ட அதிகாரிகளுடனோ நேரடிப்பேச்சு நடத்துவதை முதல்வர் விரும்பவில்லை என்று தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்தும், அது தொடர்பான தமிழக மக்களின் உணர்வுகள் பற்றியும் விளக்கி முதல்வர் ஜெயலலிதா இரண்டு கடிதங்களை பிரதமர் மன்மோகனுக்கு அனுப்பினார். அந்த இரண்டு கடிதங்களுக்கும் உரிய பதில் அனுப்பப்படவில்லை. அவற்றை கிஞ்சித்தும் மத்திய அரசு கவனிக்கவில்லை.
இந்த நிலையில், அதிகாரிகளைச் சந்திப்பது அர்த்தமற்ற செயல். இதனால்தான் சிவ்சங்கர் மேனனின் கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தமிழக முதலமைச்சரின் இந்த நிராகரிப்பால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, மூத்த அமைச்சர் ஒருவரை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக ஆராய்ந்ததாக அறியமுடிகின்றது.

பாவ மன்னிப்பு கோரவும், பரிகாரம் செய்யவும் – கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …

பாவ மன்னிப்பு கோரவும்,
பரிகாரம் செய்யவும் -
கலைஞருக்கு கடைசி வாய்ப்பு …


கலைஞர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் -
பிரதமருக்கு விசேஷ கடிதம் அனுப்பியும்,
டி.ஆர்.பாலு மூலமாக தூது அனுப்பியும்,
இன்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின்
பேச்சின் மூலமாகவும் -

ஐ.நா.சபையின் ஜெனீவா  மனித உரிமைகள்
மாநாட்டில் -

இலங்கைக்கு ஆதரவான நிலை எதையும்
இந்தியா மேற்கொள்ளக்கூடாது என்றும்,

இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் -

இது குறித்து மத்திய அரசு தன் நிலையை
வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும்.

வாய்மூடி மௌனியாக இருந்த
பிரதமர் மன்மோகன் சிங்கும் இறுதியாகத்  
திருவாய் மலர்ந்தருளி விட்டார்.

இலங்கைக்கு விரோதமாக எந்த
நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்றும்,
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா
ஆதரிக்காது என்றும்,
கடிதம் எழுதி விளக்கி விட்டார்.

இந்த நிலையில் – கலைஞர் செய்யக்கூடியது
ஒன்றே ஒன்று தான்.

40,000 தமிழர்களை மே 2009ல் துடிதுடிக்க
அழித்த சக்திகளுக்குத் துணை போன பாவத்திற்கு
மனமார வருந்தி மன்னிப்புக் கேட்கும் விதமாகவும்,
ஒரு பாவப் பரிகாரமாகவும், பிராயச்சித்தமாகவும்  –

மத்திய அரசுக்கு வெளிப்படையாக தன் நிலையை
அறிவிக்க வேண்டும். தன் கோரிக்கையை மத்திய
அரசு ஏற்க முடியாது என்கிற பட்சத்தில்,

கொலைபாதக இலங்கை அரசுக்கு இந்தியா
துணை போகத்தான் செய்யும் என்கிற பட்சத்தில் -

தான் அந்தப் பாவத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாது
என்றும்,  திமுக – மத்திய அரசுக்கு ஆதரவைத்
தொடர இயலாது என்றும் தைரியமாக
அறிவிக்க வேண்டும்.

ஒரு மம்தா பானர்ஜியால் சாதிக்க முடிந்ததை,
கலைஞரால் செய்ய முடியாதா என்ன ?

சரித்திரத்தில் – தன் இடம் என்ன என்பதை
இறுதியாக தீர்மானம் செய்யக்கூடிய இன்னொரு
வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.

இதையும் செய்யவில்லை என்றால் – பாவமன்னிப்பு
கோரவும், பரிகாரம் தேடவும் கலைஞருக்கு
கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பையும்
தவற விடுகின்றார் என்றே பொருள்.

Monday, March 12, 2012

பிரச்சினை யாருக்கு இல்லை?

மருத்துவர் ராமன் வேகமாக மருத்துவ மனைக்குள் நுழைந்தார். ஒரு அவசர அறுவை சிகிச்சைக்காகத் தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அவர் விரைந்து மருத்துவ மனை வந்திருந்தார்.அறுவைச்  கிகிச்சைக்கான உடை அணிந்து,அந்த அறையை நோக்கிப் போனார். 

அறையின் வெளியே சிகிச்சைக்குக் காத்திருக்கும் சிறுவனின் தந்தை கவலையுடன் மருத்துவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். மருத்தவரைக் கண்டதும் அவர் இரைந்தார்ஏன் இவ்வளவு தாமதம்?என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.உங்களுக்கெல்லாம் பொறுப்புணர்ச்சியே கிடையாதா?”

ராமன் சொன்னார். “நான் வெளியில் இருந்தேன்.எனக்கு அழைப்பு வந்தவுடன் வந்து விட்டேன்.இப்போது கொஞ்சம் அமைதியடையுங்கள்.நான் என் வேலையைச் செய்யப் போகிறேன்

அமைதி?.உள்ளே இருப்பது உங்கள் பையனாயிருந்தால் நீங்கள் அமைதியா யிருப்பீர்களா?உங்கள் பையன் இறந்தால் என்ன செய்வீர்கள்அத் தந்தை கோபமாக் கேட்டார்.

புனரபி ஜனனம்,புனரபி மரணம்பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவன.அதில் நாம் செய்ய எதுவுமில்லை.நான் என் கடமையைச்  செய்கிறேன்.நீங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்மருத்துவர் சொன்னார்

பெரியவர் முணுமுணுத்தார்தனக்குச் சம்பந்தமில்லாதபோது அறிவுரை கூறுவது மிக எளிது. ”

மூன்று மணி நேரம் கழித்து மருத்துவர் வெளியே வந்தார்.”கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.உங்கள் பையன் பிழைத்து விட்டான்.ஏதாவது கேட்க வேண்டு மெனில் செவிலியைக் கேட்டுக் கொள்ளுங்கள்” ன்று சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திருக்காமல் வேகமாகச் சென்று விட்டார்.

தொடர்ந்து வந்த செவிலியைப் பார்த்து அத்தந்தை கேட்டார்.”என்ன இவர் இவ்வளவு திமிர் பிடித்தவராக இருக்கிறார்?என் பையனைப் பற்றி ஏதாவது கேட்க எண்ணினால் ஒரு மணித்துளி கூட நிற்காமல் ஓடிவிட்டாரே?”

அந்தச் செவிலி கண்களில் நீர் வழியச் சொன்னாள்”நேற்று ஒரு விபத்தில் அவர் மகன் இறந்து விட்டான்.இறுதிச் சடங்குகள் இன்று செய்து கொண்டிருந்த போது இங்கிருந்து உங்கள் பையனின் அறுவை சிகிச்சை பற்றிச் சொல்லவும் உடனே வந்து விட்டார்.இப்போது போய்த்தான் அவர் சடங்குகளை முடிக்க வேண்டும்”

வாழ்க்கையில் நாம் இப்படித்தான் நமக்குமே மட்டுமே பிரச்சினைகள் இருப்பது போல் நினைத்து மற்றவர்களின் பிரச்சினைகளை உணராமல் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.

கருணாநிதியின் பித்தலாட்ட குடும்பம் – பிராமணர் சங்கம் தாக்கு

பிராமணர்கள் மீது தி.மு.க. தலைவர் கருணாநிதி வன்முறையைத் தூண்டி விடுவதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
துரோகிகள் தற்கால அரசியலுக்கு ஒவ்வாத நிலைப்பாடாக, 1912ம் ஆண்டு திராவிட இயக்கக் கூட்டத்தில், டாக்டர் நடேசன் மற்றும் டி.எம்.நாயர் கூறிய கருத்துக்கு, மெருகு பூசி சினிமா பாணியில் புதிதாகக் கதை அளக்கிறார் தி.மு.க., தலைவர் கருணாநிதி.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது, 1912ல் நடைபெற்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – தமிழ்நாடு என்று அப்போது இல்லாமல், சென்னை மாகாணம் ராஜதானி என்று அழைக்கப்பட்டு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என்று பிரிக்கப்படாமல் இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தின் தலைவர்கள் என்று கூறப்பட்ட டி.எம்.நாயர் (மலையாளம் பேசுபவர்) சர்.பி.டி.தியாகராஜன் (தெலுங்கு பேசுபவர்) டாக்டர் நடேசன் போன்றவர்கள் நீதிக் கட்சியின் சார்பில் வெள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள்; நமது சுதந்திர போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள். சுதந்திர நாளை, துக்க நாளாகக் கொண்டாடியவர்கள்.
கலாமும் பிராமண ஆசிரியரும்
கடந்த, 1960 வரை பல ஆயிரக்கணக்கான பிராமண தமிழ் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சிறப்பாக பணியாற்றியதை யாரும் மறந்திருக்கமுடியாது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், தான் ராமேஸ்வரத்தில் படித்தபோது, உதவி செய்த ஆசிரியரான சுப்பிரமணிய அய்யரை தன் பதவியேற்புக்கு டில்லிக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்தார் .
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய நிலைமைக்கு ஒவ்வாத பிராமண எதிர்ப்புக் கொள்கையை, தனக்கு சிக்கல், தோல்வி வரும்போதெல்லாம் ஒரு ஆயுதமாக எடுப்பதில் கருணாநிதி வல்லவர்.
கருணாநிதி குடும்பமும் பிராமணர்களும்
பிராமணர்களின் அறிவுரைப்படி, ஆலோசனை உதவியுடன் தனது கட்சியையும், குடும்ப வியாபாரத்தையும் வளர்த்தவர் தான் இந்த தலைவர்.
தயாளுவில் ஆரம்பித்து, ஸ்டாலின் மனைவி மற்றும் குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு பிரசவம் பார்த்தது பிராமணரான டாக்டர் பி.ராமமூர்த்தியும், அவரது மனைவியுமான டாக்டர் இந்திரா ராமமூர்த்தியும் தான். பல ஆண்டுகளாக இவருக்கு ஆடிட்டராக இருப்பது ஜெகதீசன் அன்ட் கம்பெனி. தற்போது எங்கு போனாலும் உடன் வந்து மருத்துவம் செய்வது பிராமணரான டாக்டர் கோபால் தான்.
திமுக ஆட்சிகளில் பிராமணர்கள்
கடந்த, 1996ல், 2006ல் ஆட்சி செய்தபோது ஆலோசனை வழங்கியது, டாக்டர் எம்.எஸ்.குகன் ஐ.ஏ.எஸ்., 2006- 2011 வரை தலைமைச் செயலராகவும், கோப்புகளில் தனியாகக் கையெழுத்து இடும் அளவுக்கு அதிகாரம் படைத்தவராக எஸ்.ஸ்ரீபதி ஐ.ஏ.எஸ்., உள்துறைச் செயலராக (ஹோம் செகரட்டரி) மாலதி ஐ.ஏ.எஸ்., மேடைகளில், விழாக்களில் தன்னைப் பற்றி புகழ்பாட கவிஞர் வாலி, குடும்ப பிசினஸ் பார்ட்னராக இந்தியா சிமென்ட்ஸ்
சீனிவாசன், தனக்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்க தேசிகாச்சாரி என்று இவரது தேவைகளுக்கான பிராமணர் பட்டியல் தொடரும். தனக்குத் தேவை என்றால் இவர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லாதவர்கள்.
கருணாநிதியுடையது பித்தலாட்ட குடும்பம்
தன் வீட்டுக் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சென்னை டி.ஏ.வி., பள்ளியில் இந்தி படிக்கலாம்; மற்றவர்கள் தமிழ் தான் படிக்க வேண்டும். தமிழ் சுதந்திரப் போராட்ட தியாகி கோட்டாவில் தனது பேரன் (மு.க.அழகிரி மகன்) அண்ணா பல்கலைக்கழகத்தில், பி.இ., படிக்கலாம். தன் வீட்டு குழந்தைகளுக்கு ஸ்டாலின், தயாநிதி, கலாநிதி, சூர்யா, ஆதித்யா போன்ற சம்ஸ்கிருத பெயர்கள். தனது ‘டிவி’க்களுக்கு சூரியா, ஆதித்யா, தேஜா, உதயா, ஜெமினி, சன் நெட்வொர்க் என்று வேற்று மொழிப் பெயர்கள். எத்தனை வருடங்களுக்குத்தான் இந்தப் பெரிய பித்தலாட்டம், ஏமாற்று வேலை?
எந்த பிராமணனும் ஊரை அடித்து உலையில் போடவில்லை. அரசாங்கப் பணத்தை, மக்களது வரிப் பணத்தை, கொள்ளையடித்து கோடீஸ்வரன் ஆனதில்லை. டெலிகாம் ஊழல், சேது சமுத்திரத் திட்ட ஊழல், வீராணம் ஊழல் என்றெல்லாம் விஞ்ஞான முறையில் பொதுச் சொத்தை கொள்ளையடித்து, இந்தியாவிலேயே ஒரு பெரிய கோடீஸ்வர குடும்பம் என்று பெயர் பெறவில்லை!
கடந்த 1967க்கு பிறகு, தமிழகத்தில் ஆட்சி செய்த , அமைச்சர்கள் பலர் இப்போது குறைந்தபட்சம், 100-200 கோடி ரூபாய்க்கு அதிபதி. இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துக் கல்லூரி, சினிமா தயாரிப்பு என்றெல்லாம் பல துறைகளில் பெரிய முதலாளிகள். இதெல்லாம் எப்படி வந்தது? கருணாநியின் மகள் டில்லி திகார் சிறையில் எட்டு மாதம் கம்பி எண்ணியது எதற்காக?
தனது குடும்பத்தில் நடக்கும் வாரிசு பிரச்னையை, கட்சியின் தோல்வியை திசை திருப்பவே, இந்த பிராமணர் எதிர்ப்பு நாடகம். ஆனால், நமது அரசியல் சாசனப்படி எந்த ஜாதியையும், பழித்துச் சொல்ல, இழிவுபடுத்த சட்டத்தில் இடமில்லை.
வன்முறையைத் தூண்டுகிறார் கருணாநிதி
எல்லா மக்களுடன் அமைதியாக, நட்பாக வாழும் பிராணமர்கள் மீது வன்முறையைத் தூண்டும்படி, அச்சுறுத்தும் படியாக பேசும், தி.மு.க., தலைவர்கள் கருணாநிதி மீதும், அன்பழகன் மீதும் மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

புதிய குடியரசுத் தலைவர் யார்?: தடுமாறும் காங்கிரஸ்- கலாமுக்கு மீண்டும் வாய்ப்பு

 மீண்டும் வாய்ப்பு?
Abdul Kalam
 நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும் குழப்பத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
பிரதீபா பாட்டீல்
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அன்சாரி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்த கையுடன் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 16-ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் தேர்தலில் போட்டியிருக்குமானால், 19-ந்தேதி வாக்குப் பதிவு நடத்தப்படும்.

19ம் தேதி பதிவாகும் வாக்குகள் 21ம்தேதி எண்ணப்படும். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.

இந்த இரு தேர்தல்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி குரோஷியும் ஓய்வு பெறுகிறார்.

பிரதீபா பாட்டீல், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 2012, ஜூலை 25-ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

புதிய குடியரசுத் தலைவர்

தற்போதைய நிலைமைகளின்படி மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு யாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்துவது என்பதில் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்குக் காரணம் எந்தக் கூட்டணி கட்சியும் காங்கிரசை உறுதியாக ஆதரிக்காததுதான். பல்வேறு முக்கிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், காஙகிரஸுடன் முறுக்கிக் கொள்கிறது.

தி.மு.கவும் அவ்வப்போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கூட ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கூட்டுக் கட்சிகளில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மீண்டும் கலாம்?

இந்த நிலையில் எந்த வம்புமே வேண்டாம்... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்கக் கூடிய, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளும் ஆதரிக்கக் கூடியவரான அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கிவிட்டால் என்ன என்ற விவாதமும் காங்கிரஸ் கட்சியில் எழத் தொடங்கியிருக்கிறது.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளையடுத்து களைகட்டக் காத்திருக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல் என்றால் மிகையில்லை.

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்.கண்ணதாசன் கூறும் உண்மைகள்

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்என்று கேட்டார்.

சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமேஎன்று.

என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்என்றார்.

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் சோஅவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

என்ன?”  என்றார்.  “தெரியாதுஎன்றேன்.

எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்என்றார்.

இருக்காதேஎன்றேன்.

இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்ததுஎன்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யாஎன்றேன்.

என்ன நினைக்கிறாய்?” என்றார்.

கொஞ்சம் கலகம் இருக்குமேஎன்றேன்.

பார்த்துக் கொள்ளலாம்என்றார் அவர். என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் பென்ஷன்கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமேஎன்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லைஎன்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவேவனவாசத்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லைஎன்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவிஇந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

 

 Be happy and make others happy !!!!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...