Wednesday, April 29, 2015

A/C அறையில் இருப்ப‍வரா? – A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்

A/C அறையில் இருப்ப‍வரா? – A/C-ஆல் ஏற்படும்விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்

A/C அறையில் இருப்ப‍வரா? – A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் –எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்
‘ராத்திரி முழுக்க‌ ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும்
புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்!
ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத் தின் தேவையில் அலுவலகங்கள் குளிர் சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக் கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதா ன் பிரச்னையே ஆரம்பம். தொடர்ந்து ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில் அமர்ந்து வேலை செய்வதால் உடலியல் சார்ந்த பல பிரச்னைகளும் நோய்க ளும் ஏற்படுவதாக சமீ பத்திய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஏசியால் ஏற்படும் வி ளைவுகள் குறித்தும், அதை எவ்வாறு தவிர்ப்பது எனவும் மருத்துவ நிபுணர்களிடம் உரையாடினோம்…
டாக்டர் கே.ராஜ்குமார்
(சுவாச நோய்கள் சிறப்புமருத்துவர்)
‘‘இன்று குளிர்சாதன வசதி என்பது மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. ஏசியில்வரும் காற்றானது இயற்கையானது கிடை யாது. இயற்கையான காற்றில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து, அதைப் பயன்படுத்திக் குளிர் காற்றாக கொடுக்கிறது. இன்னொரு புறம் அறையில் உள்ள வெப்பமான காற் றை வெளியேற்றுகிறது. இதற்கு ‘குளோ ரோஃப்ளுரோ கார்பன்’ மூலப் பொருளாகப் பயன்படுகிறது. இது வெளியேற்றும் உஷ்ண க் காற்றால்தான் புவி வெப்பமடைதல் அதிகமாகி ஓசோன் ஓட்டையை அதிகப்படுத்துகிறது.
ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னை (அலர்ஜி) உள்ளவர்களுக்கு ஏசி காற்று பல பிரச்னைகளை ஏற்படுத்தும். கூருணர்ச்சி (Hyper Reactive) அதிகமாக உள்ளவர்களுக்கு உடலில் சொறி, அரிப்பு, மூக்கில் சளிஒழுகுதல், காதில் அரிப்பு, கண் எரிச்ச ல் போன்றவை ஏற்படக்கூடும். அலர்ஜி உள்ளவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பதே நல்லது. குறைந்தது 3 மாத ங்களுக்கு ஒரு முறை ஏசியிலுள்ள தூசி மற்றும் அழுக்குகளை முறையா கச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லை யெனில், அவற்றில் லிஜினல்லா நிமோபிலியா என்ற பாக்டீரியா வளரும். இது ஏசியில் மட்டும் வளரக்கூடிய பாக்டீரியா. சுவாசப் பாதையில் இவ்வகை பாக்டீரியா பரவினால் கடுமையான நிமோனியாவை உருவாக்கும்.
சில வீடுகளில் விண்டோ ஏசியில் பின்பக்கம் புறாக்கள் வசிக்க ஆரம் பிக்கும். புறாக்களின் கழிவுகள் அதில் சேர்ந்துவிடும். இதில் பூஞ்சைகள் வளரும். கிரிப்டோகாக்கஸ் எனப்படு ம் பூஞ்சையானது மனித மூளையைத் தாக்கக் கூடியது. இந்தப் பூஞ்சையானது சுவாசப் பாதையையும் மூளையையும் தாக்கி ‘க்ரிப்டோகாக்கல் மெனிஞ் சைட்டி ஸ்’ எனும் ஆபத்தான நோயை உருவாக்க க் கூடியது.
எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்க ளுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். இந்த வைட்டமின், கருவுறு தலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். இதற்காகத்தான் நம் முன்னோர் அதிகாலையில் சூரிய வணக் கம் செய்து வந்தனர். காலை 6 மணியில் இருந்து 7:30 மணி வரை உள்ள கதிரவனின் கதிர்க ளில், மனித உடலுக்கு அவசியமான வைட்டமின் டி கிடை க்கும். இந்த நேரத்தில் உடலில் சூரியனின் ஒளி படுமாறு நிற்பது அவசியம்.
ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட் கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்க டைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்ப து ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஏசியின் குளிர்ந்த காற்று சுவாசப் பாதையை ரணமாக்கி விடும். கூருணர்ச்சி அதிகமுள்ளவர்கள் ஏசியை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.
சிலர் (விண்டோ) ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பார்கள். குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று முக நரம் பை பாதிப்படையச் செய்து ‘பெல்ஸ் பேல்சி’ (Bell’s palsy) என்னும்முகவாதத்தை உருவாக்கும். காலையில் எழு ந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் வாய் ஒரு பக்கம் கோணிக் காணப்படும். ஏசியின் மிக அருகில் தூங்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.
வீட்டின் அருகே மரம், செடி, கொடிகளை வளர் த்து, காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சூரிய ஒளி உடலில் படும்படி சில உடற்பயிற்சிகளை செய்ய வேண் டும். மூச்சுப் பயிற்சிக ளை முறைப்படி தினமும் செய்வது உங்களது வாழ்நாளைக் கூட்டும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாம்.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியா ல்ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த லாம். ஏசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏசி பகுதியில் வேலை பார்க்கும் நிர்பந்தம் உள்ளவர்க ள், காதுகளில் ஏர் பிளக் அல்லது பஞ்சை வைத் து சமாளிக்கலாம். முடிந்த வரை முகத்தை ஏசிக்கு அருகில் வைக்காமல் தள்ளி அமர்ந்துகொள்ள வேண்டும்…”
‘‘ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் சருமமானது எண்ணெய் பசை சுரப்பதை நிறுத்திவிடுகிறது. எண்ணெய் பசை திரவங்களும் வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன்இருக்கும். இல்லாவிட்டால் சருமம் உல ர்ந்து, வறண்டு விடும். ‘ப்ரீமெச்சூர்டு ஏஜிங்’ எனப்படும் வயதுக்குமுந்தைய மூப்புத் தோற் றம் ஏற்படும்.
ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலி ன் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்க ள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்து பவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவ லகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.
சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இவர்களுக்கு கண்களில் வலி, எரிச்சல் இருக்கும். ‘ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்’ (Artificial tears) எனப்படும் செயற்கை கண்ணீர் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையு டன் அதைப் பயன்படுத்தி, கண்கள் உலர் வதை சரிசெய்து கொள்ளலாம். சருமம் உலர்வதை தரமான மாய்ச்சுரைஸிங் க்ரீ ம் பயன்படுத்துவதன்மூலம் தடுக்கலாம். ஹைய லுரானிக் ஆசிட் (Hyaluronic acid) எனும் முகத்தில் சுரக்கும் திரவமே முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந் த ஆசிட் அடங்கிய மாய்ச்சுரைஸிங் க்ரீம் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி முகச்சுருக்கங் களைத் தவிர்க்கலாம்.
psoriasis
ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந் தால் நோய் இன்னும் தீவிர மாகும். இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத சுகாதாரமான காற்றும் நமது சருமத்துக்கு அவசியம் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால், தேவைக்கு ஏற்பவே ஏசியை பயன் படுத்திக் கொள்ளவேண்டும். ஏசியை அதிக நேரம் பய ன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.”ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடை ய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்க ங்கள் ஏற்படும்…
டாக்டர் எல்.ஆர்த்தி
(சருமநல நிபுணர்)

மருத்துவப் பண்புகள் நிறைந்த 22 பழ வகைகள்

1. வாழைப்பழம் :-
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள்தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறை பாட் டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப் பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டா கும். எந்த வயதினராக இருந்தாலும், கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களு க்கு தினரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொ ஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பலஆண்டுகளா கியும் கர்பமே தரிக்கவில்லை என்று மனம்  வருந்தி கொண்டி ருக்கும் தம்பதியர்கள் செவ்வா ழை பழத்தை தொடர்ந்து சாப் பிட்டால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவி ல் பெருகி கருத்தரிக்க வாய்ப் பாகும்.ரஸ்தாளி வாழைப்பழத் தினை தண்ணீர்விட்டுகரைத்து மூன்றுவேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடு ம். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன்மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்டமின்-ஏ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ உயிர் சத்திற்கு தொற்றுகிருமிகளை அழிக்கும். சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
2. செவ்வாழைப்பழம் :-
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதி யை குணமாக்கும்
3. பச்சை வாழைப்பழம் ;-
குளிர்ச்சியை கொடுக்கும்
4. ரஸ்தாளி வாழைப்பழம் ;-
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
5. பேயன் வாழைப்பழம் :-
வெப்பத்தைக் குறைக்கும்
6. கற்பூர வாழைப்பழம் ;-
கண்ணிற்குக் குளிர்ச்சி
7. நேந்திர வாழைப்பழம் ;-
இரும்பு சத்தினை உடலுக்கு கொடு க்க
8. மஞ்சள் வழைப்பழம் ;-
மலச்சிக்கலைப் போக்கும்.
9. ஆப்பிள் பழம் :-
வயிற்றுப் போக்கு, குன்மம், சீத பேதி, சிறுநீரகக் கோளாறு கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
10. நாவல் பழம் :-
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்து வை கட்டும்.
11. திரட்சை :-
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்க ளைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கர ண்டி 2 வேளை கொடுத்தால் இக்குறை பாடுகள் நீங்கும்.
12. செர்ரி திராட்சை ;-
ர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
13. திராட்சைப் பழம் –  
எல்லா வகையான திராட்சையிலும் பொது வாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவி ல் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக் காமல் வயிறு மந்த நிலையில் காணப்படு பவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அத னுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்த மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளு க்கு திராட்சை சாறு ஒரு வரப்பிர சாதமாகும். மாத விலக்கு தள்ளி ப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறை பாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளர் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றி ல் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடை வெளியில் மாதவிலக் கு வெளியா கும். திராட்சை சாற் றினை தொட ர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களி ல் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலு ம் புண்ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண் டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின் று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறு க்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக  மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்றுவிடும். தலைவ லி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்த நாட்கள் குடி த்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தி னை இரண்டாக பிளந்து ஒருபாதியை கொ ட்டிய  இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டு ம்.  இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய் த் துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்று விடும். எலுமிச்ச ம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு க ள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வரா து.
14. மாம்பழம் :-
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்ப ழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்து ள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கி டைப்பதாக உள்ளது. உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தியும்அளிக்கிறது.
15. கொய்யாப்பழம் :-
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறு கின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படு த்தும். சி உயிர் சத்து அதிகளவில் நிறைந்துள் ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் … சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தைய உறு தியையும் அளிக்கின்றது. மலச் சிக்கல் இருப் பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய் யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி விஷ கிரு மிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்தி ற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணு ம் விஷக்கிருமிகள் ரத்தத்தில்கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.
16. பப்பாளி :-
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அழ‌ற்சி போன்றவைகளுக்குசிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவு ம் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பா ளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிரு க்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப் பழம் உண்டு வந்தால் மாத விடாய் குறை பாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தி னை உண்ட எவ்வகை நோய்க்கும் ஆளா க நேரிடாது. எந்த வகையான தொற்று நோய்பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷ க் கிருமிகளை ஒரு வகை சத்து இருப்ப தால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின்ரத்தத்தில்நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
17. அன்னாசி :-
அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தரு வதாகவும் இருப்பதோடு பல வியாதிக ளை குணப்படு த்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்த மில்லாமல்  இருப்பவர்களுக்கு அன்னாசி ப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத் த அன்னாசி பழத்தை சிறுசிறு துண்டு செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர் த்தி வற்றல்களாக செய்து வைத்து கொ ண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்குமுன் ஒருடம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச்செல்லும்போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட் டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளா றுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். 

18. விளாம்பழம் :-
விளாம்பழம் பல வியாதிகளை குணப் படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமி ன்…ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங் கல் காலையில்மஞ்சளாக வாந்தி எடுத் தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக  வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை பழம் குணப்படுத்து ம். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கு ம் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. என வே எந்நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டு. ஆற்றலும் விளா ம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
19. மாதுளம் பழம் :-
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப் படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழ த்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந் து மூன்று நாட்களுக்கு மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நலக்குறைபாட்டிற்கும் மாதுள ம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மி யில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எரும கலந்து மூன்று நாள் காலையில் தொ டர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீத பேதி உடன் நிற்கும்.
20. ஆரஞ்சுப்பழம் :-
ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாக வும், வைட்டமின்-சி-யும், பி-யும், பி-2 ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச் சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறி யவர்களுக்கு இதுவொரு சிறந்த இய ற்கை டானிக்  ஆகும். இரவில் தூக்கமி ல்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆர ஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தே னை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல்சதை வீக்கம், சொத் தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப் பளித்து வி உடன் நிவாரணம் பெறலாம்.
21. பேரீச்சம்பழம் :-
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரச்சம் பழத்தி னையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகு ம். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப் பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறு களும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
22. எலுமிச்சம்பழம் ;-
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியா க பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப் பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்ற உடனே களைப்பை போ க்கும். நெஞ்சினில் கபம் கட்டி இரும லால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலு மிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையா க தொடர்ந்து 3 நாட்க ள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

கெட்டியான, கல்லு இட்லியைக்கூட‌ பூ இட்லியாக மாற்றும்‏

கெட்டியான, கல்லு இட்லியைக்கூட‌ பூ இட்லியாக மாற்றும் எளிய சமையலறை மாஜிக்

கெட்டியான, கல்லு இட்லியைக்கூட‌ பூ இட்லியாக மாற்றும் எளிய சமையலறை மாஜிக்
நீராவியில் சமைக்கும் இந்த இட்லி, உடலுக்கு மிகவும் ஏற்ற‍து. நல்ல‍தும் கூட, மேலும் இந்த இட்லியை
உட்கொள்ளும் சிறு குழந்தைகளுக்கு, சீக்கிரமாக நன்கு ஜீரணம் ஆகிவிடும். நீங்கள் சுடும் இட்லியை உங்கள் சாப் பிடும் குழந்தைக்கோ அல்ல‍து உங்கள் துணை க்கோ கொடுக்கும் போது என்ன‍து இவ்வ‍ளவு கெட்டியாக கல்லு கணக்கா இருக்கிறதே! என்று சொல்கிறார்களா? அட கவலையை விடுங்க, 

அந்த கெட்டியான கல்லு கணக்கா இருக்கிற அந்த இட்லிகளை எடுத்து அதனுடன்  நாலு பச்சை அப்பளங் களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு அதை அப்ப‍டியே மாவில் கலந்து மீண்டும் ஒருமுறை இட்லியை வார்த்துப்பாருங்கள். இட்லி பூமாதிரி இருக்கும்

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?
கிரீன் டீ – சரியான தயாரிப்பு முறை
=> பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.
=>கிரீன் டீ இலைகளை நீருடன்
சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்து வது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயா ளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றை ச்சேர்க்காமல் குடிக்க வேண் டும்.
கிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்? *
=> தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.

=> கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவ து போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.

கிரீன் டீ யார்யார் சாப்பிடலாம் ?
=> மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோ ய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்,பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.
கிரீன் டீ யார்யார் சாப்பிடக்கூடாது?

=> அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

8 மிளகுகளை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று, அதன் சாற்றை விழுங்கினால் . . .!

8 மிளகுகளை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று, அதன் சாற்றை விழுங்கினால் . . .!

8 மிளகுகளை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று, அதன் சாற்றை விழுங்கினால் . . .!
ந‌மது உடலுக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொண்டால் என்றென்றும் ஆரோக்கியமே! அதே நேரத்தில்
நமது உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை உட்கொண் டால் அதனால் ஏற்படும் அலர்ஜி எனும் காணாக்கடியினால் உடலில் அரிப்பும், தடிப்பும் வரும்.
இந்த பாதிப்பிலிருந்து முற்றிலுமாக வெளிவர நீங்கள் செய்ய‍வேண்டியதெல்லாம், ஒரு நாளைக்கு 3 வேளை களுக்கு சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில்போட்டு நன்றாக‌ மென்று விழுங்கி வந் தால் அலர்ஜியால் ஏற்பட்ட‍ அரிப்பும் தடிப்பும் மறைந் து சுகம் பெறுவீர்கள்.

நோய்களின் நெருங்கிய‌ நண்பன் _____’ஊறுகாய்’ ! —— அதிர வைக்கும் உண்மைத் தகவல்

நோய்களின் நெருங்கிய‌ நண்பன் ‘ஊறுகாய்‘!- அதிர வைக்கும் உண்மைத் தகவல்

நோய்களின் நெருங்கிய‌ நண்பன் ‘ஊறுகாய்‘!- அதிர வைக்கும் உண்மைத் தகவல்
ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்
ஊறுகாயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல்வேறு
பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பலருக்கும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பி டுவது என்பது கடின மான விடயமாக இருக்கும். அனைவராலும் ருசித்து சாப்பிடப்படும் இந்த ஊறுகாய் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
Normal Pressure
இரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்தி ருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரக குறைபாடு
ஊறுகாயை அதிகம் சேர்த்துக்கொள்வதனால், சிறு நீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
புற்றுநோய்
ஊறுகாயின் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக் க கூடியவை.
புற்றுநோயால் இறந்தவர்களில் 90%க்கும் மேலானவர்கள் தொடர்ச்சியாக அதிகம் ஊறு காய் சாப்பிட்டு வந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
வயிற்றுப்புண்
அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்க விளைவாக வயிற்று புண் ஏற்படும். இந்த வயிற்று புண் நாளடைவில் புற்று நோயாக மாற வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குமட்டல்
அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்றஉணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்குஊறுகாய் தான் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்து ஊறுகாயும்சாப்பி டும் போது குமட்டல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தம்
ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தொற்று நோய்
ஊறுகாய் அதிகம்சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
செரிமான பிரச்சனை
ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் அளவிற்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் – அரிய தகவல்

வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் – அரிய தகவல்

வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் – அரிய தகவல்
வாஸ்து என்பதன் அடிப்படை தத்துவமே பூமிபூஜை ஆகும் அதாவது ஒரு கட்டிடமொன்று
கட்டப்படும்முன் நிலத்தை வாஸ்த்துப்படி ஆரா ய்ந்து, படுக்கையறை, சமையலறை, குளியல றை, வாசல், போன்றவற்றை சரியான திசையி ல் அமைத்து, வீடு கட்டி குடியேறிய பிறகு அங்கு செல்வமும் மகிழ்ச்சி ஆனந்த தாண்டவமாட இந்த வாஸ்து பேருதவி புரிகிறது. அந்த வாஸ்து பற்றிய விவரங்கள், அனைத்தும் பண்டைய‌ சாஸ்திர நூல்கள் கூறியுள்ளன•
வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள்.
பிருஹத் சம்ஹிதை 
மயமதம், 
மானசாரம்,
தென்னிந்தியாவில் ச‌மஸ்கிருதத்தில் எழுதப்பட்ட‍ 32 சிற்ப நூல்கள் காணப்படுகின்றன•
1) விசுவதர்மம்
2) விசுவேசம்
3) விசுவசாரம்
4) விருத்தம்
5) மிகுதாவட்டம்
6) நளம்
7) மனுமான்
8) பானு
9) கற்பாரியம்
10)சிருஷ்டம்
11) மானசாரம்
12) வித்தியாபதி
13) பாராசரியம்
14) ஆரிடகம்
15) சயித்தியகம்
16) மானபோதம்
17) மயிந்திரமால்
18) வஜ்ரம்
19) ஸௌம்யம்
20) விசுவகாசிபம்
21) கலந்திரம்
22) விசாலம்
23) சித்திரம்
24) காபிலம்
25) காலயூபம்
26) நாமசம்
27) சாத்விகம்
28) விசுவபோதம்
29) ஆதிசாரம்
30) மயமான போதம்
31) மய(ன்)மதம்
32) மயநீதி
இந்த 32 நூல்களில் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மய(ன்)மதம் ஆகிய இரண்டு நூல்களே காணப்படுகி ன்றன•

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...