ஓபாமா பராக்! பராக்!
2015 பிப்ரவரி மாத நம் உரத்தசிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்!
ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! என்று மகா கவி ஆனந்தமாய்க் கூத்தாடியது போன்று அடடா வந்துவிட்டார் அமெரிக்க
அதிபர் என்று பெருமையும் பூரிப் பும் கண்டிருக்கிறது நமது தேசம்.
இந்திய வரலாற்றிலேயே குடியரசு தினத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்பும் தன் பதவிக் காலத்தில் குறுகிய இடைவெளியில் ஒரு தேசத்திற்கு இரண்டு முறை பயணம் செய்தவர் என்ற பெருமையும் பெற்றிருகுகிறார் அமெரிக்க அதிபர் முபாரக் ஓபாமா!
இந்த பயணம், நாங்கள் இந்தி யாவின் பக்கம் என்று சீனாவுக் கு எச்சரிக்கையும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதர வுக்கு மிரட்டலையும், இந்தியாவிலுள்ள தொழிலதிப ர்களுக்கு புத்துணர்வையும், அமெரிக்காவில் பணிபுரி யும் இந்திய ஊழியர்களுக்கு நம் பிக்கையையும் ஏற்படுத்தியி ருக்கிறது என்பதில் சந்தேக மில்லை.
யாருக்கு நுழைவு மறுக்கப்பட்டதோ . . . அவரே அன் பொழுக ஆரத்தழுவி அமெரிக்க அதிபரை வரவேற்றது காலத்தின் கட்டாயந்தானே! இந்த பெருமைகளுக்கு இந்திய தேசம் கொடுத்திருக்கும் விலை அதிகம். ஆம்! அவரது பயணத் தையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட பாதுகாப்பு செலவுகள் பல இலட்சம் கோடிகளை தாண்டி யிருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தியாவுக்கு இது தேவைதானா என் று பலரையும் புருவத்தை உயர்ந்த வைத்திருக்கிறது.
அமெரிக்க அதிபரின் இந்த அவசர பயணத்தால் யாரு க்கு லாபம் என்று அறைக்குள் உட்கார்ந்து யோசித்தா ல் மண்டை காய்ந்துவிடும். தன் வியா பாரம் இந்தியா விற்குள் விஸ்த்தரிக்க வேண்டும், அணு ஆயுத பேரம் படியவேண்டும். விலை யில்லா இந்திய இளைஞர்களின்தொழில்நுட்ப உழை ப்பைப் பயன்படுத்திக் கொள் ள வேண்டும் என்கிற அமெரி க்காவின் எண்ணம் ஈடேறி யிருக்கிறது.
அதே சமயம் இந்தியாவின் பொருளாதாரத் தேவை பூர்த் தியாக வேண்டும். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தி யர்களின் பணி பாதுகாப்பு சம்பள உயர்வு குடும்பத்தி னருக்கு வேலைவாய்ப்பு விசா சலுகைகள் போன்றன உறுதி செய்யப்பட்டிருக்கிறதா என்ப து இன்னும் சரியாகத் தெரிய வில்லை. பல்வேறு திட்டங்க ளுக்கு அமெரிக்கா தரப்போகு ம் நிதிஆதாரமும் வரையறுக்கப்பட வில்லை. பயங்கர வாதத் தடுப்பு குறித்தும் முடிவுகள் எட்டப்பட வில்லை.
இதற்கிடையில் இந்தி யாவில் தயாரிப்போம் என்ற கோஷத்தை ஒரு புறம் எழுப்பிக்கொண்டு லண்டனில் தயாரான 10லட்ச ரூபாய் மதிப்புள் ள ஆடையை அணிந்து கொள்கை வேறு நடை முறை வேறு என்ற சர்ச் சையை துவக்கி வைத்திருக்கிறார் நமது பிரதமர்.
இதைவிட மதச்சார்பற்ற சகிப் புத் தன்மைதான் இந்தி யாவை பலமுள்ளதாக்கும் என்று ஒபா மா போகிற போக்கில் ஊதி விட்டு சென்றதை இங்குள்ள எதிர் கட்சிகள் அரசியலாக்கி குளிர்காய்ந்து வருகின்றன•
சுருக்கமாக சொன்னால்.. அமெரிக்க அதிபரின் இந்திய விஜயமும், நமது அரசின் அணு குமுறையும் ஆளு ஷோக்கு ஆனா பேக்கு (அழகு ஆனா கொஞ்சம் லூசு) என்று கிராமங் களில் சொல்வார்களே அது போல் தான் அமைந்திருக்கிறது.
.
.
|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\
No comments:
Post a Comment