Monday, February 2, 2015

கை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளும், சட்ட விதிகளும்


தேவயானி கோபர்கடே
தேவயானி கோபர்கடே என்ப வரை நுழைவாணை மோசடி, தனது வீட்டு பணிப் பெண்ணா ன சங்கீதா ரிச்சர்ட் என்பவரை அமெரிக்காவுக்குள் நுழைய வைக்க பொய்க் கூற்றுக்கள் கூறியது போன்ற வை தொடர் பாக குற்றம் சாட்ட ப்பட்டு 2013 டிசம்பர் 12 அன்று அமெரிக்க காவல் அதிகாரிகளி னால் கைது செய்யப்பட்டதுடன், கை விலங்கு போ ட்டு அழைத்துச் செல்லப்பட் டார் என்ற நிகழ்வானது நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்குள்ளா னது. கை விலங்கு போடப்பட்டத ன் காரணமாக, இரு நாடுக ளுக்கு இடையேயான உறவில் சிக்கல் வரும் அள விற்குப்போனது. ஆனால், இங்கே நம் சமூகத்தில், அதேபோல கை விலங் கு போடுதல் நிகழ்வான து, காவல் துறை அதி காரிகளால் அனுதின மும் எளிய மக்களுக்கு எதிராக எவ்வித எதிர்ப்புமின்றி நிகழ்த்தப்பட்டு வருகிறது.
கை விலங்கை பயன்படுத்துதல் தொடர்பாக நீதிம ன்றத் தீர்ப்புகளும், சட்டவிதிகளும் தெளிவாக சில நிபந்தனைகளை விதித்துள் ளன. கடந்த 1980ம் ஆண்டில் , இந்திய உச்சநீதிமன்றம், பிரேம் சங்கர் சுக்லா எதிர் டில்லி நிர்வாகம் எனும் வழ க்கில், “கை விலங்கிடுவது நியாயமற்ற, கடுமையான, மனிதத் தன்மையற்ற செயல்”என்றும், “ஒருகைதியை தப்பிக்கவிடாமல்பார்த்துக்கொள்ள வேறு வழியே இல்லை எனும் சூழலில் மட்டும் கை விலங்கிடலாமே தவிர, மற்ற நேரங்களில் கை விலங்கை பயன்படுத்தக்கூடாது” என்றும் கூறியது . 1988ம் ஆண்டில், ஏல்டமேஷ் ரெய்ன் எதிர் இந்திய அரசு எனும் வழக்கில், எந்தெந்த சூழல்களில் கை விலங்கு போடலாம் என்பது குறித்து, வழிகாட்டுதல்களை யும், விதிமுறைகளையும் ஏற் படுத்துமாறு நடு வணரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட து. 1995ம் ஆண்டு, சிட்டிசன்ஸ் ஃபார் டெமாக்ரசி எனும் வழக் கில், விசாரணை மற்றும் தண் டனை கைதிகளுக்கு, கை வில ங்கு போடுவதும், காலில் சங்கிலி போடுவதும் அ னுமதிக்கத்தல்ல என்றும், அதனை மீறும் அதிகாரி கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பிட்டது.
கை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பாக, தமிழக காவல் நிலை ஆணைகள் 491 ஆனது, நீதிமன்றஅனுமதி இல்லாமல் கை வி லங்கு போடக்கூடாது என் றும், அப்படிபோடும்போது அதற்கான காரணத்தை காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும் என்றும், நியாயமான முன்னெச்சரிக் கை இன்றி, விசாரணை கைதிகளுக்கு, கைவிலங்கு போடக் கூடாது; இயன் றவையிலும், கைதிகள் தப்பித்து போதலிருந்து தடுக்க போதிய அளவு பலமுள்ள காவல்படையை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
இப்படியாக, குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் அனுமதியின்றி விசாரணை க்கு அழைத்துச்செல்லப்படு ம் கைதிகள் உள்ளிட்ட எவருக்கும் கைவிலங் கோ, கால்களில் சங்கிலியோ போடக்கூடாது என் று இந் திய உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குக ளில் உத்த ரவிட்டுள்ளது. இதனைப் பின்பற்றி பல்வேறு உயர்நீதிமன்றங்களும் காவல் துறையினருக்கு இதே உத்தர வை பிறப்பித்துள்ளன. நாடு முழுவ துமுள்ள மனித உரி மை அமைப்புகளின் தொடர்ந் த பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே, நீதிமன்றங்கள் இந்த உத்தரவைப் பிறப்பி த்தன; தொடர்ந்து பிறப் பித்தும் வருகின்றன.
ஆனால், பல்வேறு தீர்ப்புகளுக்குப் பிறகும், கைதிக ள் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் செய லானது மாறவில்லை. அது சிந்துபாத் கதையைப் போல நெடுந்தொடர்கதை யாக முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிற து. தமிழகத்தில் பெரும்பா லான காவல்துறையினர், கை விலங்கு தொடர்பான நீதிமன்றங்களின் உத்தரவு களை மதிப்பதில் லை. தங்கள் விருப்பப்படி நடந்து கொள்கின்றனர். இதனை தமிழகத்தின் பல குற்ற வியல் நீதிமன்றங்களில் இன்றளவும் மிக சாதார ணமாக நாம் காண லாம்.
சிறைக் கைதிகளை விசார ணைக்காக நீதிமன்றத்திற் கு அழைத்து வரும்போது, பேருந்துகளிலோ அல்லது காவல் வாகனங்களிலோ கைதிகள் கொண்டு செல்ல ப்படும்போது, கைவிலங்கால் இரண்டிரண்டு கைதி களாக பிணைக்கப்பட்டு, மறுமுனை அந்த வாகன த்தின் ஜன்னல் கம்பிகளுடன் இணைத்து கட்டப் பட்டு அழைத்து வருவதை நாம் சாதாரணமாக காணலாம்.
தேனி மாவட்டம், கே.கே. பட்டி யை சேர்ந்த சிவனாண்டி என் பவர், தனது மகன் மனோகரன் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை சிறை யில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும், விசார ணைக்காக உத்தமபாளையம் நீதி மன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் செல் லும் போது, அவருக்கு கை விலங்கு அணிவிக்கின் றனர்; இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட கைவிலங்கை கழற்ற அனுமதிப்பதில்லை; எனவே, அவ ருக்கு கை விலங்கு அணிவிக்க கூடாது என உத்தரவிடக் கோரி தாக் கல் செய்த மனுவில், நீதிமன்ற அனு மதியின்றி அவருக்கு கை விலங்கு போடக்கூடாது என காவல் துறையி னருக்கு கடந்த 2010 ஆகஸ்ட் 8 அன் று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவி ட்டது.
2006ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சங்க ரன்கோயிலைச் சேர்ந்த குமார் என்பவரை, விசார ணை என்ற பெயரில் கை விலங்கும் காலில் செயி னும் வைத்து கட்டி வைத்த முருகானந்தம் மற்றும் இரண்டு காவல்துறை அதி காரிகளுக்கு அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிற ப்பித்த உத்தரவினை 2010ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
26.4.2011 அன்று தனது கணவர் முத்துப்பாண்டியை மதுரை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழை த்துச் சென்றபோது, அவருக்கு கை விலங் கு போட் டு அழைத்துச் சென்ற காவல்துறை யினர் மீது நீதி மன்ற அவமதிப்பிற்காக நட வடிக்கை எடுக்கக் கோரியும் அதற்கு இழப்பீடு கோ ரியும் மதுரை உயர் நீதி மன்றத்தில் நிர்மலா என்ப வர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தொடர் புடைய காவல்துறையினர், பாதிக்கப்பட்ட நபருக் கு, தலா ரூபாய்.10,000/- கொடுக்க நீதிமன்றம் 29.07.2013ல் உத்தரவிட்டது.
டிட்டர் ரமேஷ் என்பவர் கொலை வழக்கில், குற்ற ஞ்சாட்டப்பட்டுள்ள “போ லீஸ்’ பக்ருதீன், ஃபன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மூவருக்கும் கை விலங்கு போட்டும், கால் களில் சங்கிலி கட்டியும் சேல ம் நீதிமன்றத்துக்கு கடந்த 2014 ஜுன் மாதம் 14 ம் நாள் அழைத்து வர ப்பட்டனர். நீதிமன்றத்திற்கு வெளியே, அவர்கள் மூவருக்கும் கட்டப்பட்டிருந்த கை விலங்கையும், சங்கிலியையும் காவல் துறை யினர் அகற்ற முயன் றபோது, ஃபன்னா இஸ் மாயில் தனக்கு அணிவி க்கப்பட்ட விலங்கை அகற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேலூர் சிறையில் இருந் து வெளியே வந்தபோதே தனக்கு கைவிலங்கு போடவேண்டாம் என்று நான் கூறினேன். இருப்பி னும், கட்டாயப்படுத்தி அணிவித்து, வழியில் இயற் கை உபாதையைக் கழிக்கக் கூட என்னை அனுமதி க்காமல் அழைத்து வந்து கொடுமைப்படுத்தினீர். இப்போது நீதிபதி கண்ட னம் தெரிவிப்பார் என்ப தால் எனக்கு அணிவிக்க ப்பட்டு ள்ள கை விலங்கு, கால் சங்கிலியை அகற்ற ச் சொல்வதில் நியாயம் இல்லை என்று அவர் எதிர்ப்பு தெரிவித்ததாக பத்தி ரிகைகளில் செய்திகள் வெளி யாயின.
கடந்த 2014 அக்டோபர் 15ம் நாள், தருமபுரி மாவட் டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவ ரை, வழக்கு விசாரணைக்காக பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்கள். அப் போது, தனது கை விலங் கை அவிழ்த்து விடுமாறு பாதுகாப்பு காவலர்களிட ம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது மறுக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக காவலரைத் தாக்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆகவே, சட்டமும், தீர்ப்புக ளும் இங்கே சரியாக மதிக் கப்படுவதில்லை என்பதை மேலே கண்ட நிகழ்வுகளின் மூலமாக தெரிந்து கொள்ள லாம். சுமார் முப்பது ஆண்டு களுக்கு முன்பாகவே, உறுதி செய் யப்பட்ட, கை விலங்கு போடுதல் எனும் மனிதத் தன்மையற்ற செ யலுக்கு முழுமையாக முற்றுப் புள்ளி வைக்க வே ண்டியது அவசியம். தொடர்புடைய அதிகாரிகளுக் கு, தண்டனையை முழுமையாக அமல்படுத்துவத ன் மூலமாக மட்டுமே அது சாத்தி யப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...