Monday, November 30, 2015

சரித்திரம் படைத்த‍ சரித்திரநாயகன் அப்துல் கலாம் சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை


சரித்திரநாயகன் ‘அப்துல் கலாம்’ சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை

சரித்திர நாயகன் ‘அப்துல் கலாம்’ சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை
பல்துறைகளிலும் சாதனைபடைத்து, இளைஞர்களையும் மாணவர்களை யும் உற்சாக மூட்டி இந்தியா வல்ல‍ரசாக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு சரித்திரம் படைத்த‍ நமது
சரித்திர நாயகன் அப்துல்கலாம் தனது வாழ் நாளில் சில சர்ச்சைகளையும் விமர்சனங்க ளையும் சந்தித்து ள்ளார். அவைகள் பற்றிய ஓரலசல்
1998ஆம் ஆண்டு போக்ரான்-IIவின் நம்பகமா ன மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச்சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர்கே சந்தானம் வெப்ப அணுஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்றசோதனையென் றும் கலாமின் அறிக்கை தவறானது யென்றும் விமர்சித்தார். எனினும் இக்கூற்றை கலாமும், போக்ரான்-IIவின் முக்கிய கூட்டாளியான ஆர் சிதம்பரமும் மறுத்தனர்.
அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு “அதிகாரம்” இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள்கூறினர். ஹோமிசேத்னா என்ற இரசாயனப் பொறியா ளர், அணுஅறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றி லும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் ” அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்” என்றும் சேத்னா அவரதுகடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென் றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்குமுன், 1980முதல்திட்ட இயக்குந ராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்க ளூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
2008இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டு பிடிப்புகள்பற்றிய அவரின் சொந்தப்பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றி ருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற் கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டி ருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுஅமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையி ன் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது.
கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டு பிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப்பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்ப வரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தி த்தாளில் (THE DAILY STAR) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் “மொத்தத் தோல்வி” என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண் டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.
உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவுதந்து தன் நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்திசார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்புபற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...