உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? – உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில அற்புதத் தகவல்கள்
உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? – உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத அறிவியல் தரும்
சில அற்புதத் தகவல்கள்
30 வயதைத் தொட்டவரா நீங்கள்? உங்களை பற்றிய சில அறிவியல் தகவல்கள்
30 வயது காலக்கட்டம் என்பது மனிதவாழ்வின் சிறந்தகாலமா க கருதப்படுகின்றது. 20களில் அனுபவித்த பொருளாதார பிரச்சனை, 40 மற்றும் 50 களில் அனுபவிக்கப்போகும் பொறுப்புகள் ஆகியவற் றை ஒப்பிடுகையில் 30 களில் வாழ்க்கை நிம்மதி யானது என்றுதான் சொல் ல வேன்டும். இதிலும் குறி ப்பாக, 35 வயதே மிக சிற ந்த வயதாகவும், உண்மை யான மகிழ்ச்சி 33 வயதி லிருதான் ஆரம்பிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. 30களில் உள்ளவர்களுக்கான சில அறிவியல் தகவல் களை இங்குப் பார்ப்போம்.
30களில் ஒருமனிதன் தன் மாற்றத்திற்காக முடிவெ டுக்கிறான்
வேலைமாற்றம், இடமாற் றம், வாழ்க்கை துணை யை தேர்ந்தெடுத்தல் போ ன்ற பல முக்கிய முடிவுக ளை ஒரு மனிதன் தன் 30களில் தான் எடுக்கிறான் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம், 20 களின் தன் வாழ்க்கை பாதையை சரி வர படித்து விட்ட இவர்கள், தங்களின் மாற்றத்திற்காகவும் மன திருப்திக்கா கவும் பல முடிவுகளை அப்பொழுது தான் எடுக்க ஆரம்பிக்கின்றனர் என லாம். அதுமட்டுமின்றி, தங்கள் வாழ் க்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண் டும் எனும் துடிப்பு 30 வயது தொடக்க த்தில் மிகுதியாக காணப்படும் எனக் கூறப்படுகிறது.
30களில் காம உணர்வு மிகுதியாக இருக்கின்றது
30களில் ஒரு மனிதனின், குறிப்பாகப் பெண்களின் காம உணர்ச்சி மிகுதியாக க்காணப்படும் என ஆய்வுக ள் கூறுகின்றன. முக்கிய மாக 31 வது வயதில் பெண் கள் உடலுறவில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். இதனால், அவர்கள் உடல் ரீதியாக, 20களைக் காட்டிலும் அதிக கவர்ச்சியுடன் இருப்பதாகவும் உணர்கின்றனர்.
30களில் வேலை மற்றும் பொருளா தார வெற்றியின் உச்சியில் இருப்பீர் கள்
20 வயதில் பெரும்பாலும் படிப்பில் கவனம் செலுத்தவும் மற்றும் முதல் வேலையில் அமரவும் போராட்டம் நடத்தியிருப்பீர்கள். வேலையில் சே ர்ந்தவுடன் உங்கள் உழைப்பை போட்டு, படிப் படியாக முன்னேறி, ஒரு நல்ல பதவியை அடந்திருப்பீர்கள். 30 வயதை தொடு ம்போது, உங்கள் போராட்டங்கள் ஒருவழியாக ஓய்து, பொருளா தார வளர்ச்சியை அனுபவிக் க ஆரம்பிப்பீர்கள். அதுமட்டு மின்றி, 30களில், 40 மற்றும் 50களைக்காட்டிலும் பொறுப் புகள் குறைவாக இருக்கும். இக்காரணங்களினால் உங்க ள் வாழ்க்கையை மகிழ்ச்சி யாக வாழ்வீர்கள்.
30களில் உங்கள் தனித்தன்மைகளில் அதிக மாற்றங் கள் வருவதில்லை
30 வயதுக்கு பிறகு, ஒரு மனிதனின் பழக்க வழக்கங்க ள் அவனிடம் அட்டை போல் ஒட்டி கொள்ளும் என சொல்லப்படுகிறது. நமது குணங்கள் குழந்தை பருவத் தில் உருவாக ஆரம்பித்து, 20களில் அனுபவம் மூலமா க மாற்றங்கள் அடைந் து, 30 வயது தொடக்கத் தில் முழுமையடைகிற து. இதனால், 30 வயதுக் கு பிறகு, நம் குணங்கள் பக்குவ நிலையை அ டைந்து, மாற்றங்கள் ஏ ற்படும் சாத்தியங்களை க் குறைக்கின்றது. மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது மற் ற காலக்கட்டங்களை காட்டிலும் மிக குறைந்த அள வே நிகழ்கின்றது.
30களில் உங்களுக்கும் மனச் சோர்வு ஏற்படும்
மனிதனின் ஒவ்வொரு காலக் கட்டமும் சோதனைகள் நிறை ந்தது. அதே போல், உங்கள் வேலையோ அல்லது திரும ண வாழ்க்கையோ நீங்கள் விரும்பியதுபோல் அமையாவிடில் அது உங்களை ம னச்சோர்வுக்கு ஆளாக்கி விடும். இருப்பினும், உங்கள் வயதின் பக்குவத்தினால் உங்கள் பிரச்சனைகளில் முடங்கி கிடக்காம ல், அதற்கான தீர்வை சீக்கிரமே அடை ந்து விட்டு, வாழ்க்கையின் முன்னேற் றத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
30களில் உண்மையான மகிழ்ச்சி ஆரம்பமாகிறது
30 வயதின் ஆரம்பங்களில் ஏற்படும் சோதனைகளை தீர்த்தப்பின், வாழ்க்கை இன்பமய மாய் மாறி விடுகிறது. பெரும்பாலு ம், 33 வயதில் 70 விழுக்காட்டினர்வேலை மற்றும் வாழ்க் கையின் சமநிலையான வாழ்க்கையை வாழ்ந்து, 38 வயதுகளில் மன நிறைவாக வாழ்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்ற ன. அது மட்டுமின்றி, அவர்கள் வாழ்க்கை யை பற்றிய தெளிவான, முன்னோக்கு பார் வையும் கொண்டுள்ளனர் எனக் கூறப்படு கிறது.
No comments:
Post a Comment