சர்க்கரை நோயாளிகளுக்கு… தேன் ஒரு மாமருந்து! – அதிசயமான ஆச்சரியத் தகவல்
சர்க்கரை நோயாளிகளுக்கு… தேன் ஒரு மாமருந்து! – அதிசயமான ஆச்சரியத் தகவல்
சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருந்த இருசெய்திக ள் மருத்துவ உலகை வியப்படைய
வைத்
தன. ‘உப்பு அதிகம் எடுத்துக்கொண்டால், அது நேரடியாக இதயத்தைத் தாக்க வாய்ப்புண்டு..’ என்ற ‘அலாரம்’ செய்தி ஒன்று.. ‘சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களில் தேனைத்தடவினால், காயங்கள் வெகுவிரைவில் குணமாகும்’ என்ற சந்தோஷ செய்தி மற்றது..

‘
‘ஏறத்தாழ ஐந்தாயிரம் வருஷம் பழமையான எகிப்திய பிரமிடு களில் கூட, இறந்த உடலைப் பாதுகாப்பதற்குத் தேனைப் பயன் படுத்தி உள்ளார்கள் என்கிறது வரலாறு. பொதுவாகவே தேனுக்கு, காயங்க ளை குணப்படுத்தும் ஆற்றலும், உடற்பகுதி களைப் பாதுகாக்கும் சக்தியும் உண்டு. அதில் அமிலத் தன்மையும், ஜவ்வுத்தன்மையும் இருப்பதால் வெளிக் காற்றில் இருக்கிற கிருமிகள் காயங்களில் புகாமல் பார்த்துக் கொள்ளும்.

அவர்களின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வலு குறைந்திருப்பதால், ஆன்டிசெப்டிக் மருந்து கள் அவர்களுடைய உடலில் முழுமையாக செயல் படுவதில்லை.. அதாவது காயம்பட்ட பகுதியில் உள்ள நுண்திசுக் களை இவற்றால் இணைக்க முடிவது இல்லை.

‘‘காய்கறிகள், அரிசி, தண்ணீர் என்று எல்லாவற்றிலுமே நம் உடலுக்குத்
தேவையான அளவு உப்பு இருக்கிறது. அவற்றி ல், தனியாக உப்புப் போட்டு சமைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அதையும் மீறி நாம் உப்பைப் பயன்படுத்துவதற்குக் காரணம் நம்முடைய பழக்கம்தான். பிறந்த குழந்தைக்கு த் தாய்ப்பால் கொடுப்பது முடிந்து திட உணவு தர ஆரம்பிக்கும்போதே உணவுகளை உப்பில்லாமல் கொடுத்துப்பழக்குங்க ள்.
‘உப்பைக் குறைத்தால் உடலைக் காக்கலாம்’
என்பதை சித்த மருத்துவம் உறுதிப்படுத்த, அதே செய்தியை சென்னையைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணரான டாக்டர் சிவகடாட்சத்திடம் கொண்டு சென்றோம்.

‘‘இதயத்தின் முதல் எதிரியே உப்புதான்!’’ என்று எடுத்த எடுப்பிலேயே அந்தக் கருத்தை ஆமோதித்தார்.
‘‘இந்தியாவில் இதய நோயாளிகளில் 50% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மூலமாகத்தான் இதய நோயே வருகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது உப்புதான். உயர்
ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை பாதிக்கிறது. இதனால், ஹார்ட் அட்டாக் வரக் கூடிய வாய்ப்பு அதிகம். இது மட்டும்தான் இதுவரை தெரிந்த செய்தி.

சமீபத்தில் வெளியான ஆய்வில்தான் உப்பு நேர டியாகவும் இதயத்தைத் தாக்க வாய்ப்புண்டு என் று கண்டுபிடித்திருக்கி
றார்கள். உப்பில் உள்ள சோடியம், ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை பாதிக்க வும், இதயத்தின் செல்களை கடினமாக்கவும் வாய்ப்பு ண்டு என்று அந்த ஆய்வு சொல்கிறது.

எப்படியானாலும் அதிக உப்பு தீமையானதுதான். நமது உடலுக்குத் தேவையான அளவு உப்பை மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தத் தீங்கிலிருந்து தப்பிக்கலாம். இதய நோய் உள்ளவர்கள்
என்றால், தினமும் ஐந்து கிராமும், சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் மூன்று கிராமும், நார்மலானவர்கள் ஐந்து முதல் எட்டு கிராம் வரையும் உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்தால் ஆயுட் காலம் அதிக மாகும் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை’’ என்றார் தெளிவாக!
தேன் பற்றி மகளிர் மற்றும் பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டோம்.

”தேனில் பி காம்ப்ளெக்ஸ், C, ஈ, பயோடின் போன்ற வைட்டமின் சத்துக்களும் குரோமியம், மேங்கனீஸ், மெக்னீசியம்,வெனாலியம், துத்தநாகம், பொட்டாஷிய ம் உள்ளிட்ட பல தாது உப்புக்களும் இயற்கையிலேயே இருக்கின்றன.
”தேனில் பி காம்ப்ளெக்ஸ், C, ஈ, பயோடின் போன்ற வைட்டமின் சத்துக்களும் குரோமியம், மேங்கனீஸ், மெக்னீசியம்,வெனாலியம், துத்தநாகம், பொட்டாஷிய ம் உள்ளிட்ட பல தாது உப்புக்களும் இயற்கையிலேயே இருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இன்சுலின் குறை பாடு இருப்பதால் தான் காயம் சீக்கிரத்தில் ஆறுவதில் லை. தேனில் உள்ள வெனாலியம் தாதுப்பொருளுக்கு இந்த இன்சுலினின் தேவையைக் குறைக்கிற குணம் உண்டு. இதனால், தேனைத் தடவும்
போது அந்த இடத்தில் குறைவான இன்சுலினைக் கொ ண்டே காயம் ஆறத் துவங்குகிறது. பொதுவாகவே நீரிழிவு நோயாளிகளின் உடலில் காயம் குணமாவதற் குத் தேவையான துத்தநாகத்தின் குறைபாடு இருக்கும். தேனில் இந்த துத்தநாகம் உண்டு. அடுத்ததாக, தேனில்
உள்ள பொட்டாசியம், நீரிழிவு நோயா ளிகளின் உடலில் கொஞ்சமே கொஞ்சம் சுரக்கிற இன்சு லினைக் கூட மிக அதிக அளவில் வேலை செய்ய வைக் கிறது. இந்தக் காரணத்தாலும் காயம் சீக்கிரத்தில் ஆறுகிறது. எனவே, தேனுக்கு காயங்களை ஆற்றும் தன் மை உண்டு என்பது உண்மைதான்” என்றார் டாக்டர் தமிழிசை.
No comments:
Post a Comment