Monday, November 30, 2015

உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?

உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?

உங்க‌ நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களைக் கொண்டு உங்க‌ உடல்நலத்தை அறிவது எப்ப‍டி?
உடலில் எலும்புகள் இல்லாத உறுப்புகளில் நாக்கும் ஒன்று. உணவை உண்பது, உணவை மெல்வது, உணவை
விழுங்குவது, பானங்களை அருந்துவது போன்ற முக்கியமான உணவுச் செரிமான இயக்கத்துக்கு உதவுவது நாக்கின் முக்கியப் பணிகள். இவை தவிர, நாம் பேசுவதற்குத் தேவையான ஒலி வடிவத்தைத் தருவதற்கு நாக்கின் அசைவுகள் முக்கியம்.
இயல்பான நாக்கு சிவப்பும் ஊதாவும் கலந்த நிறத்தி ல் இருக்கும். ‘ மியூக்கஸ்’ எனும் வெளி உறையால் மூடப்பட்டிருக்கும். நாக்கின்மேற்பரப்பில் ஆயிரக்கணக்கான அரும்புகள் அமைந்துள்ளன. நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுவதும் நாக்குதான். அதற்கு உதவும் வகையில் நாக்கில் ‘சுவையுணர்வு ஏற்பிகள்’ ஏராளமாக உள்ளன. இவை இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான் கு அடிப்படைச் சுவைகளை நமக்கு உணர்த்துகின் றன. நாக்கின் நுனி, இனிப்புச் சுவையை உணர்த் தும். உப்புச் சுவையை நாக்கின் மேற்புறம் அறியு ம். நாக்கின் பின்புறத்தில் கசப்பு தெரியும். புளிப்பு ச் சுவையை நாக்கின் பக்கவாட்டுப் பகுதிகள் உணர்த்தும்.
நாக்கைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறினால் பாக்டீரியா,வைரஸ், ‘கான்டிடா ஆல்பிகன்ஸ்’ எனும் பூஞ்சை போன்ற தொற்றுக் கிருமிகள் நாக்கைப் பாதிக்கும். அப் போது நாக்கில் புண்கள் வரும். இரும்புச்சத்து, வைட்டமின் சத்து உட்பட்ட பல ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ளவர்க ளுக்கு நாக்கில் அடிக்கடி புண்கள் வரும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து ள்ளவர்களுக்கும், வெற்றிலை பாக்கு, பான் மசாலா, புகையிலை போடுப வர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோருக்கும் நாக்கி ல் புண் வரும் வாய்ப்பு அதிகம். பற்கள் கூர்மை யாக இருந்தால் அவை நாக்கைக் குத்திப் புண்ணாக்கிவிடும்.
ஸ்டீராய்டு, ‘ஆன்டிபயாடிக்’ போன்ற சில மருந் துகளை அளவுக்கு அதிக மாக எடுத்துக் கொள் ளும்போதும், சில மருந்துகளின் ஒவ்வாமை காரண மாகவும் நாக்கில் புண் ஏற்படுவதுண்டு. தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு உண்டாகிற மன அழுத்தம், தூக்கமின்மைகூட நாக்கில் புண் உண்டாக வழி அமைக்கும். பற்களில் ‘கிளிப்’ போட்டிருப்ப வர்களுக்கும் செயற்கைப் பல்செட் சரியாகப் பொருந்தாதவர்களுக்கும் நாக்கில் புண் ஏற் படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. இப்போது குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருகிற து. கட்டுப்படுத்தத் தவறினால் நாக்கில் புண் வரும்.

இதனிடையே நம் நாக்கில் ஏற்படும் வண்ண மாற்றங்களை வைத்து நம் உடல்நலத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளலாமாம்!
சிவப்பான நாக்கு
வெற்றிலைப் போடாமலேயே சிலருக்கு நாக்கு மிக அதிகமாக சிவந்து காணப்படும். இது வைட்ட மின் பி12 மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு இரு ப்பதற்கான அறிகுறியாகும். இதனால் காரமான அல்லது சூடான உணவுகள் சாப்பிடும் போது வலி ஏற்படும். பெரும்பாலும் சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு நாக்கு இப்படி மிக சிவப்பாக இருக்கும். மருத்துவரிடம் ஆலோசித்து அதற்கேற்ப உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம்.
கரு நாக்கு
கரு நாக்கு (கருமை அல்லது ப்ரௌன்நிற படிவ ம் நாக்கில் படர்ந்திருக்கும்) உடையவர்கள் சரியாக அவர்களது வாய் மற்றும் பற்களை பரா மரிப்பது இல்லை என்று அர்த்தமாம். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். நீங்க ள் சாப்பிடும் உணவின் ருசி மாறுபட்டு உணர்வீர்கள். நல்ல டென்டல் மரு த்துவரிடம் பரிசோதனை செய்து  கொள்வது அவசியம். அதிகமாக புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு இவ்வாறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வெள்ளை நாக்கு 

நாக்கில் வெள்ளை நிறத்தில் சீஸ் போன்று படிவம் படர்ந்திருந்தால் வாயில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிரு க்கிறது என்று அர்த்தம். இந்த வாய் ஈஸ்ட் தொற்று ஏற்படுவது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமைக் குறைகிறது என்பதற்கான அறிகுறி. இதனால் ஆன்டி-பயாட்டிக் உணவுகள் அதிகம் உட்கொள்ள வேண்டிய து அவசியம்.
நாக்கில் சுருக்கங்கள்
வயது அதிகமானாலோ அல்லது பூஞ்சைத் தொற்று ( Fungal) ஏற்பட்டாலோ இவ்வாறு  நாக்கில் சுருக்கம் அல் லது வெட்டு ஏற்பட்டது போல இருக்கும். ஆன்டி-ஃபங்கள் (Anti-Fungal) மருந்துகள் எடுத்துக் கொள்வது தான் இந்த பிரச்சனைக்கானத் தீர்வு.
கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம்
சிலருக்கு கீழ் நாக்கில் வெள்ளைப் படிவம் ஏற்பட்டிருக்கும். இதை லியூக் கோப்லாக்கிய (leukoplakia) என்று கூறுகின்றனர். சரியான செல் வளர்ச்சி இல்லாத போது இது தோன்றுகி றது. அதிகமாய் புகைப்பவர்களுக்கு இந்த கீழ் நாக்கு வெள்ளைப் படிவம் ஏற்படுகிறது. இது காலப் போக்கில் புற்றுநோயாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதா க மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிவப்பு சிதைக் காயம்

நாக்கில் சிவப்பாக சிதைக் காயம் ஒரு சில வாரங் களுக்கு மேல் தொடர் ந்து இருப்பதுபோல இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சிகச்சை மேற்கொள்ளு ங்கள். இது நாக்குப் புற்றுநோயாக இருக்க வாய்ப்பிரு க்கிறது. காரமான உணவுகள் சாப்பிட்டால் ஓரிரு வாரம் இதுப் போன்ற சிவந்த சிதைக்காயம் ஏற்படுவது சகஜம் தான்.
நாக்கு எரிச்சல்
உங்கள் நாக்கு எரிச்சலுக்கு நீங்கள் உபயோகப் படுத்தும் பற்பசைக் (Tooth Paste) கூடக் காரண மாக இருக்கலாம். மற்றும் பெண்களுக்கு மாத விடாய் நிற்கும் காலம் நெருங்கும்போது இது போன்ற நாக்கு எரிச்சல் ஏற்படும்.
=>

சரித்திரம் படைத்த‍ சரித்திரநாயகன் அப்துல் கலாம் சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை


சரித்திரநாயகன் ‘அப்துல் கலாம்’ சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை

சரித்திர நாயகன் ‘அப்துல் கலாம்’ சந்தித்த சர்ச்சைகளும் விமர்சனங்களும்! – ஒரு பார்வை
பல்துறைகளிலும் சாதனைபடைத்து, இளைஞர்களையும் மாணவர்களை யும் உற்சாக மூட்டி இந்தியா வல்ல‍ரசாக வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு சரித்திரம் படைத்த‍ நமது
சரித்திர நாயகன் அப்துல்கலாம் தனது வாழ் நாளில் சில சர்ச்சைகளையும் விமர்சனங்க ளையும் சந்தித்து ள்ளார். அவைகள் பற்றிய ஓரலசல்
1998ஆம் ஆண்டு போக்ரான்-IIவின் நம்பகமா ன மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச்சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர்கே சந்தானம் வெப்ப அணுஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்றசோதனையென் றும் கலாமின் அறிக்கை தவறானது யென்றும் விமர்சித்தார். எனினும் இக்கூற்றை கலாமும், போக்ரான்-IIவின் முக்கிய கூட்டாளியான ஆர் சிதம்பரமும் மறுத்தனர்.
அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு “அதிகாரம்” இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள்கூறினர். ஹோமிசேத்னா என்ற இரசாயனப் பொறியா ளர், அணுஅறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றி லும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் ” அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்” என்றும் சேத்னா அவரதுகடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென் றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்குமுன், 1980முதல்திட்ட இயக்குந ராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்க ளூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
2008இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டு பிடிப்புகள்பற்றிய அவரின் சொந்தப்பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றி ருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற் கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டி ருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுஅமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையி ன் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது.
கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டு பிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப்பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்ப வரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தி த்தாளில் (THE DAILY STAR) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் “மொத்தத் தோல்வி” என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண் டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.
உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவுதந்து தன் நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்திசார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்புபற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!

ஆலயத்தின் கருவறையில் ஓர் அதிசய நிகழ்வு! – விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தை!
சோழர்கள், கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியதற்கு நமது பிரகதீஸ்வரர் கோயில் ஒருசிறந்த உதாரணம். அந்த கோயிலைப் பற்றி எண்ண‍ற்ற‍
அதிசயங்களும், ஆச்ச‍ரியங்களும் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், அக்கோயிலில் உள்ள‍ கருவறையில் நடக்கும் ஓர் அதிசய நிகழ்வு விஞ்ஞானிகளுக்கே விளங்காத விந்தையாக இருந்து வருகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில்உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதன் கர்பபகிரகம் சந்திர காந்த கல்லாலானது. இது தட்ப வெட்பநிலைக்கேற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். அதாவது வெ ளியே வெப்பமாக இருக்கும்போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும்குளிராக இருந்தால் கர்ப்ப கிரகத்தி ன் உள் பகுதி வெப்பமாக மாறிவிடும். இது எப்ப‍டி சாத்தியம் என விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ந்துள்ள‍னர். ஆனாலும் இதற்கா ன சரியான விளக்கத்தை ஒருவராலும் சொல்ல‍ முடியவில்லை என்று கூறப்ப டுகிறது. இன்றளவும் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள‍ப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Sunday, November 29, 2015

முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . .

முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . .

முன்தினம் 12 பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தினமும் சாப்பிட்டால் . . .
முன்தினம் இரவிவே 12 பாதாம் பருப்புகளை குடி தண்ணீ­ரில் போட்டு ஊறபோட வேண்டும். பின் மறுநாள் காலையில் எடுத்து,
அதன் தோலை முற்றிலுமாக நீக்கிய பிறகு அவற்றை நன்றாக அரைத்து சாப்பிடவேண்டும். இப்ப‍டியே ஒருநாள்கூட  தவறாம ல் சாப்பிட்டு வந்தால் . . . அவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கும் நரம்புகளும் பலப்படும்.
.

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .

2 நாளைக்கு 1 முறை வீதம் புதினாவை சமையலில் சேர்த்து உண்டு வந்தால் . . .
புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினா சேர்த்து சமைத்த‍ உணவை 2 நாளைக்கு 1 முறையாவது
சாப்பிட்டு வந்தால் எற்படும் பயன்கள் எண்ண‍ற்ற‍வை அவற்றில் சிலஇங்கே பார்ப்போம்.
அதீத உடல் எடையினைக் குறைக்க உதவுகின்றது.
எப்பேற்பட்ட‍ அஜீரணக் கோளாறுகளையும் சரிசெய்து கடின உணவு வகைகளை எளிதில் ஜீரணம் எளிதில்செய்கின்றது.
ஜீரணம் எளிதில் ஆகிவிடுவதால் வயிற்றின் மந்த தன்மை போய்விடும். அதன்பின் பசியினை தூண்டி விடுகின்றது
உடலில் ஓடும் இரத்தத்தில் இருக்கு ம் கழிவுகளை நீக்கி, சுத்தம் செய்து உடலினை ஆரோக் கியத்துடன் இருக்க செய்கின்றது.
வாய்ப்புண் உட்பட சில காரணங்களால் ஏற்படும் வாய் துர்நாற்ற‍த்தினை அறவே போக்கி, வாய் மணக்க‍ வைக்கிறது.
=> 


புருவ முடி திருத்துதல் (THREADING) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்! – அதிர்ச்சித் தகவல்

புருவ முடி திருத்துதல் (THREADING) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்! – அதிர்ச்சித் தகவல்

புருவ முடி திருத்துதல் (THREADING) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்! – அதிர்ச்சித் தகவல்
புருவ முடி திருத்துதல்(த்ரெட்டிங்)(THREADING)
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்
கெடுத்துக் கொள்ளுகிறார்கள். எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும்கேடுகள் பற்றி என்னதான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்து விடுகிறது, என்றுகூறி ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.பெண்ணைப் பேதை எனச் சொன்னதற்காக, தன்னுயிரை தானே அழிக்கும் அளவு இவ்வளவு பேதமையாகவா இருப்பது????
இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித் துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!
புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார் கள் என்பதுபற்றி விளக்கஇருக்கிறேன். புருவமுடிகள்என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் போது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியு ள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்தவர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின்காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந் திரக் காலம்,  அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண் ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண் ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள  வர்மங்களில்,   பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர் மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின் றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந் தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.
இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிரா ணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில  மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலை க்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.
மேலும் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதா னம். இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக்கலாச்சாரத்தி ற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .

Saturday, November 28, 2015

மலையாளிகளின் துரோகங்கள்‏




இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான  கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத  நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
 

கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா,  சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.
 
கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.துல்லியமான middile cinema  உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், , பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
 
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு  நெருக்கமே.

 20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால்  அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.
 
பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.    
 
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம்  போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
 
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.
 
தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை),  ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம்  படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
 
எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.
 
இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.
 
அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.
 
இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.

பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.
ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர  பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.

அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட   திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.
 
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.
 
சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.
 
”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’  நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.
 
இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட  செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.
 
நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1.   நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்

2.   நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986

3.   யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987

4.  இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983

5.   சித்ரம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989

6.  நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990

7.   முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு -  மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987

8.   வந்தனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991

9.  மிதுனம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

10. விஷ்ணு – மம்முட்டி -       - 1993

11.  கிலுக்கம் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992

12. பிங்காமி - மோகன்லால் – சிபிமலயில் – 1997

13. மழவில் காவடி – ஜெயராம் – 1990

14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990

15. ஐட்டம் –மோகன்லால் - 1985

16. மணிசித்ரதாழ் - மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994

17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008

18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006

19. தாழ்வாரம் – பரதன் – 1987

20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005

21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000

22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998

23. சேக்ஸ்பியர் M.A  இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008

24. பிளாக் – மம்முட்டி – 2004

25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006

26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004

27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005

28. பளிங்கு - மம்முட்டி – பிளஸ்ஸி – 2006

29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007

30. பிரம்மரம் - மோகன்லால் – பிளஸ்ஸி – 2009

31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003

32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999

33. நரன் – மோகன்லால் – 2005

34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002

35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001

36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி - சத்யன் அந்திக்காடு – 2005

37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005

38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002

39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003

40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000

41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி - 1998

42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000

43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999

44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006

45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001

46.ஏகேஜி – 2007

47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998

48. பகல் பூரம் – முகேஷ் – 2000

49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992

50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு - 2003


இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர  பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராமச்ந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள  எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.

 நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.சேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.  நாம்?. நாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .
கோடைகாலம், குளிர்காலம் ஆகிய இரண்டு சீதோஷ்ண காலங்களிலும் மனிதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவு, உடை,
தூசு,புகை, புகைபிடித்தல், தொழிற் சாலைக்கழி வுகள் ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமையால் உண்டாவதுதான் இந்த ஆஸ்துமா. மேலும் ஒவ்வாமையும் பரம்பரை பரம்பரையாகவும் சிலர் இந்த ஆஸ்துமா பாதிப்புக்கு உள்ளாவதுண்டு. இவை தவிர கவலை, பதற்றம், மனஅழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளாலும் ஆஸ்துமா ஏற்படும் நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற் சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.
த்தகைய ஆஸ்துமாவிலிருந்து பாதிக்க‍ப்பட்ட‍வர் களை விடுவிக்க‍க் கூடிய அருமருந்து ஒன்றை நமது முன்னோர்கள் நமக்கு சொல்லியுள்ள‍னர்.


ஆம்! ஆஸ்துமாவினால் அவதியுறும்போது பலாப் பழத்தின் வேரை சுத்த‍மான நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பின் அதை ஒருகுவளை குடித்தால் சிறிது நேரத்தில் ஆஸ்துமாவானது கட்டுப்பட்டு, விரைவில் சுகம் காண் பார்கள் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு… தேன் ஒரு மாமருந்து! – அதிசயமான‌ ஆச்ச‍ரியத் தகவல்

சர்க்கரை நோயாளிகளுக்கு… தேன் ஒரு மாமருந்து! – அதிசயமான‌ ஆச்ச‍ரியத் தகவல்

சர்க்கரை நோயாளிகளுக்கு… தேன் ஒரு மாமருந்து! – அதிசயமான‌ ஆச்ச‍ரியத் தகவல்
 சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருந்த இருசெய்திக ள் மருத்துவ உலகை வியப்படைய
வைத்தன. ‘உப்பு அதிகம் எடுத்துக்கொண்டால், அது நேரடியாக இதயத்தைத் தாக்க வாய்ப்புண்டு..’ என்ற ‘அலாரம்’ செய்தி ஒன்று.. ‘சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களில் தேனைத்தடவினால், காயங்கள் வெகுவிரைவில் குணமாகும்’ என்ற சந்தோஷ செய்தி மற்றது..
தேனுக்குப் பல்வேறு மருத்துவகுணங்கள் உண்டு என்றாலு ம், ‘அது சர்க்கரை நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து’ என்பது புதிதாக இருக்கவே, வியப்போடு தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் Dr.தெய்வநாயகத்தை சந்தித்தோம்.
‘ஏறத்தாழ ஐந்தாயிரம் வருஷம் பழமையான எகிப்திய பிரமிடு களில் கூட, இறந்த உடலைப் பாதுகாப்பதற்குத் தேனைப் பயன் படுத்தி உள்ளார்கள் என்கிறது வரலாறு. பொதுவாகவே தேனுக்கு, காயங்க ளை குணப்படுத்தும் ஆற்றலும், உடற்பகுதி களைப் பாதுகாக்கும் சக்தியும் உண்டு. அதில் அமிலத் தன்மையும், ஜவ்வுத்தன்மையும் இருப்பதால் வெளிக் காற்றில் இருக்கிற கிருமிகள் காயங்களில் புகாமல் பார்த்துக் கொள்ளும்.
சர்க்கரை வியாதிக்காரர்களின் உடலில் இருக்கிற ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், அவர்களின் ரத்தத்தில் காயங்க ளிலிருந்து பாதுகாப்பைத் தருகிற வெள்ளை அணுக்களின் வலு குறைந்திருக்கும். இதனால்தான் அவர்களுக்கு காயம் ஆறாததுடன், நோய்த்தொற்றும் மிக சீக்கிரமே ஏற்படும்.
அவர்களின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் வலு குறைந்திருப்பதால், ஆன்டிசெப்டிக் மருந்து கள் அவர்களுடைய உடலில் முழுமையாக செயல் படுவதில்லை.. அதாவது காயம்பட்ட பகுதியில் உள்ள நுண்திசுக் களை இவற்றால் இணைக்க முடிவது இல்லை.
ஆனால், தேன், காயமடைந்த பகுதியில் உள்ள நுண்நார் செல்களைத் தூண்டி, நுண்திசுக்களை இணைக்கிறது. எனவே, சர்க்கரைநோயாளிகளின் காயங்களுக்கு மட்டு மல்ல.. எல்லாக் காயங்களுக்குமே, தேன் ஒரு அற்புத மருந்துதான்!’’ என்ற டாக்டர், கடைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட தேனில் இந்த குணங்கள் எதுவும் இல்லை என்பதையும் அழுத்தமாகச் சொன்னார்.
‘‘தேனைப் பதப்படுத்தும்போது, அது சூடாக்கப்படு வதால், அதில்உள்ள வைட்டமின்களும்இயற்கை அமிலங்களும் சிதைந்து விடுகின்றன. இய ற்கை யாகக் கிடைக்கிற மலைத்தேனும் கொம்புத் தேனும்தான் முழு மையான மருத்துவ குணம் வாய்ந்தவை’’ என்றவரிடம் உப்பு பயன்படுத்துவ து பற்றிய முதல் செய்தியை நினைவுபடுத்தினோம்.
‘‘காய்கறிகள், அரிசி, தண்ணீர் என்று எல்லாவற்றிலுமே நம் உடலுக்குத் தேவையான அளவு உப்பு இருக்கிறது. அவற்றி ல், தனியாக உப்புப் போட்டு சமைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அதையும் மீறி நாம் உப்பைப் பயன்படுத்துவதற்குக் காரணம் நம்முடைய பழக்கம்தான். பிறந்த குழந்தைக்கு த் தாய்ப்பால் கொடுப்பது முடிந்து திட உணவு தர ஆரம்பிக்கும்போதே உணவுகளை உப்பில்லாமல் கொடுத்துப்பழக்குங்க ள்.
உப்பைக்குறைப்பதால் இதயநோயை மட்டுமல் ல.. நுரையீரலில் சளி கட்டுவது, மலச் சிக்கல், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகளையும் நிச்ச யமாகத் தவிர்க்கலாம்!’’ என்று பளிச்சென சொல்லி முடித்தார் டாக்டர்.
‘உப்பைக் குறைத்தால் உடலைக் காக்கலாம்’என்பதை சித்த மருத்துவம் உறுதிப்படுத்த, அதே செய்தியை சென்னையைச் சேர்ந்த பிரபல இதய நோய் நிபுணரான டாக்டர் சிவகடாட்சத்திடம் கொண்டு சென்றோம்.
‘‘இதயத்தின் முதல் எதிரியே உப்புதான்!’’ என்று எடுத்த எடுப்பிலேயே அந்தக் கருத்தை ஆமோதித்தார்.
‘‘இந்தியாவில் இதய நோயாளிகளில் 50% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் மூலமாகத்தான் இதய நோயே வருகிறது. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது உப்புதான். உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை பாதிக்கிறது. இதனால், ஹார்ட் அட்டாக் வரக் கூடிய வாய்ப்பு அதிகம். இது மட்டும்தான் இதுவரை தெரிந்த செய்தி.
சமீபத்தில் வெளியான ஆய்வில்தான் உப்பு நேர டியாகவும் இதயத்தைத் தாக்க வாய்ப்புண்டு என் று கண்டுபிடித்திருக்கி றார்கள். உப்பில் உள்ள சோடியம், ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை பாதிக்க வும், இதயத்தின் செல்களை கடினமாக்கவும் வாய்ப்பு ண்டு என்று அந்த ஆய்வு சொல்கிறது.
எப்படியானாலும் அதிக உப்பு தீமையானதுதான். நமது உடலுக்குத் தேவையான அளவு உப்பை மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் இந்தத் தீங்கிலிருந்து தப்பிக்கலாம். இதய நோய் உள்ளவர்கள் என்றால், தினமும் ஐந்து கிராமும், சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் மூன்று கிராமும், நார்மலானவர்கள் ஐந்து முதல் எட்டு கிராம் வரையும் உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்தால் ஆயுட் காலம் அதிக மாகும் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை’’ என்றார் தெளிவாக!
தேன் பற்றி மகளிர் மற்றும் பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டோம்.

”தேனில் பி காம்ப்ளெக்ஸ், C, ஈ, பயோடின் போன்ற வைட்டமின் சத்துக்களும் குரோமியம், மேங்கனீஸ், மெக்னீசியம்,வெனாலியம், துத்தநாகம், பொட்டாஷிய ம் உள்ளிட்ட பல தாது உப்புக்களும் இயற்கையிலேயே இருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இன்சுலின் குறை பாடு இருப்பதால் தான் காயம் சீக்கிரத்தில் ஆறுவதில் லை. தேனில் உள்ள வெனாலியம் தாதுப்பொருளுக்கு இந்த இன்சுலினின் தேவையைக் குறைக்கிற குணம் உண்டு. இதனால், தேனைத் தடவும் போது அந்த இடத்தில் குறைவான இன்சுலினைக் கொ ண்டே காயம் ஆறத் துவங்குகிறது. பொதுவாகவே நீரிழிவு நோயாளிகளின் உடலில் காயம் குணமாவதற் குத் தேவையான துத்தநாகத்தின் குறைபாடு இருக்கும். தேனில் இந்த துத்தநாகம் உண்டு. அடுத்ததாக, தேனில் உள்ள பொட்டாசியம், நீரிழிவு நோயா ளிகளின் உடலில் கொஞ்சமே கொஞ்சம் சுரக்கிற  இன்சு லினைக் கூட மிக அதிக அளவில் வேலை செய்ய வைக் கிறது. இந்தக் காரணத்தாலும் காயம் சீக்கிரத்தில் ஆறுகிறது. எனவே, தேனுக்கு காயங்களை ஆற்றும் தன் மை உண்டு என்பது உண்மைதான்” என்றார் டாக்டர் தமிழிசை.
    

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...