*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!
*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!
மறுக்கமுடியாத சில உண்மைகள் !!!
மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!
தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;
தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!
OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !
ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’
ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.
அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.
ஆணாதிக்கச் சமூகம் !
நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?
முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.
இப்போது மழை நாட்கள் மட்டுமே !
ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !
நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !
யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !
நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.
‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !
ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!
"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!
காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !
இந்த வாட்ஸ்அப் பதிவுக்குச் சொந்தக்காரர் எங்கிருந்தாலும் வாழ்க!
மிக சிறந்த தொகுப்பு. நன்றி