தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா? பாதுகாப்பானதா?
தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது ஆபத்தா? பாதுகாப்பானதா?
திருவள்ளூரில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றின் பாதுகாப்புப் பெட்டகத்திலிரு


தங்க நகை… வங்கிகளில் அடமானம் வைத்தால் ஆபத்தா?
வங்கிகளில் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் உள்ளன என்பது பற்றி சங்கரன்கோவிலி ல் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் கோபாலகிருஷ்ணன் விளக்கமா க எடுத்துச் சொன்னார்.
பாதுகாப்பு அம்சங்கள்

‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்புப் பெட்டக அறையானது ரிசர்வ் வங்கி வரைய றுத்துள்ள அளவுகளில் பலம்வாய்ந்த கான்கிரீட்டால் கட்டப்பட்டி ருக்கும். கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படும் கம்பிகளின் தடிமன், எண்ணிக்கை, கான்கிரீட்டின் தடிமன், தரைப்பகுதியின் அளவுகள் என ஒவ்வொன்றும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த அறையானது பலமான இரும்புக்கதவினால் பூட்டப்பட்டிரு க்கும். அந்த இரும்புக் கதவானது துளையிடக்கூட முடியாத அள விற்கு சக்திவாய்ந்ததாக இருக்கும். அக்கதவில் இரண்டு சாவித் துளைகள் இருக்கு ம். தற்போதுவந்துள்ள மாடல்களில் நான்கு சாவித்துளைகள் உள்ளன. அதேபோல அந்த அறையினுள் இருக்கும் பொருள் வைக்கும் பீரோ
விற்கும் நான்கு சாவித் து ளைகள் இருக்கும். இரும்புக் கதவிற்கு அடுத்து கிரில் கதவு ஒன்றும் இணைந்தே இருக்கும். அந்த கிரில் கதவிற்கு ஒரு சாவி இருக்கும். இந்த சாவித் துளைக ளுக்கான சாவிகள், வங்கிப் பொறுப்பில் இருக்கும் இருவரின் கைவசம் இருக்கும்.

பாதுகாப்புப் பெட்டகச் சாவிகள் எப்போதும் இருவர் பொறுப்பில் இருக்கும். கிராமப்
புற சிறிய வங்கிக்கிளைகளில், வங்கி மேலாளரும், அவரு க்கு அடுத்த நிலையிலி ருப்ப வரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். பெரிய வங்கிகளில் பொறுப்பாள ர்கள் மாறக்கூடும். இரண்டு செட்டுகளாக சாவிகள் பிரிக் கப்பட்டு, இருவரும் அவற்றைக் கையாள்வார்கள். ஒருவ ரின் சாவியை இன்னொருவர் கையாள அனுமதி கிடையாது. அதேபோல,
அந்தப் பொறுப்பாளர்களில் ஒருவர் விடுமுறை எனில், அச்சாவிக்கா ன பொறுப்பு அடுத்த நிலையில் இருப்பவருக்குக் கொடுக்கப்ப டும். சாவிகள் யாரிடம் இருக்கின்றன என்ற விவரங்கள் கீ மூவ்மென்ட் ரெஜிஸ்டரில் (Key Movement Register) பதிவு செய்ய ப்பட்டிருக்கும். சாவிகளின் பொறுப்பாளர்கள் இருவரும் அதி ல் கையெழுத்திட்டிருப்பார்கள்.
சாவிக்கு உரியவர் விடுப்பு காரணமாக மாறினால், அந்தச் சாவி கைமாற்றப்பட்ட
தேதி, நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டு இருவரும் கையெ ழுத்திடுவார்கள். கீ மூவ்மென்ட் ரெஜிஸ்டர், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வாளரால் சரிபார்க் கப்படும்.

ஸ்ட்ராங் ரூமில் ஒவ்வொருமுறை நகை வைக்கப்படும் போது ம், எடுக்கப்படும் போதும் ஒரே நேரத்தில் இருவரும் இணைந் தேதான் செயல்பட வேண்டும். இந்த சாவிகளின் டூப்ளிகேட் சாவி வேறொரு வங்கி
க்கிளையின் பொறுப்பில் இருக்கும். ஏதேனும் ஒரு சாவி தொலைந்து போனால் உடனடியாக மாற்றுச்சாவியானது அடுத்த வங்கிக் கிளையிலிருந்து எடுத்து வரப்படும். அடுத்த ஒரேநாளில் புதிதாக சாவிப்பெட்டியே மாற்றப்படும். எனவே , நகைகளின் பாதுகாப்பு விஷயத்தில் வங்கி அதிகாரிகள் மிக மிகக் கவனமாக இருப்பார்கள்.

அதேபோல, அடைமானம் வைக்கப்பட்ட நகைகள் திருடு போனால் உடனே காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டிருந்தால் அப்படிசெய்வதற்கு வங்கி ஊழியர்க ளின் ஒத்துழைப்பு அவசியமென்பதால், வங்கி ஊழியர்கள்தான் முதலில் தீவிரமாக விசாரிக்கப்படுவார்கள். அந்த விசாரணையி ன் அடிப்படையில்தான் குற்றவாளிகள் குறித்த முடிவுக்கு வருவா ர்கள். தற்போது திருவள்ளூரில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தி லும் இந்தமாதிரி விசாரித்ததால் கொள்ளையர்கள் சிக்கியிருக்கிறார்கள். எனவே, வங்கிகளில் அடமானமாகவோ அல்லது பாதுகாப்பாக
வைக்கும் தங்க நகை களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது ’’ என்று முடித்தார்.
வெவ்வேறு செயல்முறைகள்
வங்கிகளில் ரகசியமாக வைத்திருக்கும் பெட்டகத்தை எப்படிக் கையாள்கிறார்கள்,
அதற்கான வழிமுறைகள் என்னவென்று கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு) ஆர்.செல்வமணியிடம் கேட்டோம்.
பாதுகாப்புக்காக லாக்கரில் வைக்கப்படும் நகைகள் அடமானம் வைக்கப்படும் நகைகள் என இரண்டுமே ஒரே ஸ்ட்ராங் ரூமினு ள் வைக்கப்பட்டாலும், இரண்டிற்கும் வெவ்வேறு விதமான பாதுகாப்பு செயல்மு
றைகள் உள்ளன. பாதுகாப்புக்காக வைக்கப்படும் நகைகளுக்கான லாக்கர் சாவிகளில் ஒன்று வங்கியிலும், இன்னொன்று வாடிக்கை யாளர் வசமும் இருக்கும். வாடிக்கையாளருக்கான லாக்கரில், நகை களைத்தான் வைக்க வேண்டுமென்று அவசியமில்லை. பணத்தை யோ, டாக்குமென்டுகளையோ கூட வைக்கலாம். அல்லது எதையுமே வைக்காமல் காலியாகவும் வைக்கலாம்.
வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது குறிப்பிட்ட தொகை இன்ஷூரன்ஸுக்காக வசூலிக்கப்படும். ஆனால், பாதுகாப்புக்காக தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கும்போது அதற்கு இன்ஷூரன்ஸ் கிடையாது. ஏனெனில், பெட்டகத்தினுள் வைக்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் வங்கிக்கு தெரியாது.
அதனால் அதற்கு இன்ஷூரன்ஸ் அளிக்க முடியாது. ஆனால், அடமான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டாலோ, இயற்கை சீற்ற த்தால் அழிந்தாலோ இன்ஷூரன்ஸ் மூலம் 95%வரை இழப்பீடு கிடைக்கும். அந்த நகையின் நிகர எடைக்கு ஈடான தொகையை ப் பணமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

தேவைக்கேற்ப வாங்குங்கள்


நம் நாட்டிலுள்ள வங்கிகளின் எண்ணிக்கையோடு வங்கி திருட்டு களை ஒப்பிட்டால் திருவள்ளூரில் நடந்த சம்பவத்தை பார்த்து நாம் பெரிதாக
ப் பய ன்படத் தேவையில்லை. ஒவ்வொரு அசம்பாவிதத்துக்குப் பிறகும் வங்கிகளின் பாதுகாப்பு மேலும் மேலும் பலப்படுத்தப்பட்டே வரு கிறது” என்றார்.

வங்கிகளில் அடமானம் வைக்கப்படும் நகைகளைப் பாதுகாப்பதில் வங்கிகள் இரட்டிப்புக் கவனத்துடன் செயல்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை!

வருடத்திற்கு ஒருமுறையோ, 18 மாதத்திற்கு ஒருமுறையோ வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகமுறை சரியாக செயல்படுத்தப்படுகிறதா, அட மானம் வைக்கப்பட்ட நகைகள் சரியாக இருக்கின்றனவா என்றெல்லாம் ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வின்போது, ஸ்ட்ராங் ரூம் திறப்பதற்கு முன்பாக ஆய்வாளர் வந்துவிடுவார். அவர் முன்னிலையில் தான் கதவு திறக்கப்படும். அவர் உள்ளே சென்று, பதிவேட்டில் உள்ளபடி நகைகள் அனைத்தும் உள்ளனவா என்று சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார். அதே போல், மேலாளர் ஒருவர் பணிமாறுதலாகி வந்து புதிதாக பொறுப்பேற்கு ம்போதும் இந்த ஸ்ட்ராங் ரூமில் உள்ளபொருள்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். சாவிகளில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் அது சரிசெய்யப்படும்.

No comments:
Post a Comment