
நீங்கள் வடிகட்டிய முட்டாளா? – கசப்பான உண்மை
நீங்கள் வடிகட்டிய முட்டாளா? ( Are You Fool? ) – கசப்பான உண்மை
கோபப்படாதீர்கள். நீங்கள் மட்டுமல்ல நாங்களும் தான் இன்னும் சொல்லப்

உப்பு ( Salt ), கரி ( Charcoal )யில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுக ப்படுத்தினான் . இப்போது உங்கள் toothpaste இல் உப்பு இருக்கா? கரி இருக்கா? என்று கேட்கிறான்.



Corporate company-களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்
கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாக த்தான் இருப்போம். நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம், அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடுபோட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம், வளர்த்த
தெல் லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்து விட் டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட, திருவிழா வச் சோம், திருவிழா பேரைச்சொல்லி உறவை அழைச் சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளென பேசி முடிச்சோம். பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம். இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது. நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.

கைபேசிக்கு வந்த பதிவு

No comments:
Post a Comment