Saturday, December 2, 2023

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

 போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்!

இப்படி கொடுமையான விஷவாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த ஈ, எலி, பன்றி, பறவை, கொசுக் காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? அதற்கும் பதில் சொல்லியிருக்கிறது அதர்வணம். சுற்றுப்புறக் காற்றில் உள்ள நோய்க் கிருமிகளையும், அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு ‘அக்னிஹோத்ரம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
காற்றில் ஒரு ஊசி மருந்து�*************************
“நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அதுபோல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொளள முடியும்.
உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்த அக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.
அக்னி (தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்�**********************************
பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. (பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)
தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை
தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது. யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம் (Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.
என்ன நடக்கிறது?�****************
இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க அக்னிஹோத்ரத்தை செய்து வரலாம்.
அக்னி ஹோத்ரத்தின் நன்மைகள்�*********************************
🔥 ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.
🔥அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.
🔥முன்தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
🔥விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
🔥பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.
🔥நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.
🔥பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியை அடைகிறார்கள்.
🔥பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.

ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”

 கேட்டவர் இளையராஜா- 

கேட்டது பாலு மகேந்திராவிடம்..!


அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”


பாலு மகேந்திரா புரிந்து கொண்டார்.


இளையராஜா - பாலு மகேந்திரா.

இருவரும் இணைந்த  முதல் படம் மூடுபனி.

ஆனால் அது இளையராஜாவுக்கு 100 வது படம்.


அந்தப் படத்திற்கான பின்னணி இசை ஆலோசனையின்போது, இன்னின்ன இடங்களில் இசை,  இப்படி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என சின்ன சின்ன ஆலோசனைகளை இளையராஜாவிடம் பகிர்ந்திருக்கிறார் பாலு மகேந்திரா.

அது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.

வளர்ந்து வரும் தனது  படைப்பாற்றலை பாலுமகேந்திரா கட்டுப்படுத்துகிறாரோ என ஐயம் மூடுபனியாக எழுகிறது இளையராஜாவுக்கு !

 

அதனால்தான் இளையராஜா, பாலுமகேந்திராவிடம் கேட்டிருக்கிறார் இப்படி : “ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”


பாலுமகேந்திரா நிதானமாக ஆரம்பித்திருக்கிறார் : 

Raja, Let me answer your question this way..!”


சொல்லுங்கள்.”


தொடர்கிறார் பாலுமகேந்திரா:

ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து, அதாவது 'நதிமூலம்' என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.              

 

ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. 


இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள, அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. 


இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது.

 

அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.


இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.


இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.


இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள   நிலப்படுகைதானே, நிலத்தின் அமைப்புதானே தீர்மானிக்கிறது !”


பாலுமகேந்திரா சொல்ல சொல்ல, சுகமான சங்கீதம் கேட்கும் நிலையில் சொக்கிப் போய் அமைதியாக அமர்ந்திருக்கிறார் இளையராஜா.

      

இன்னும் சொல்கிறார் பாலுமகேந்திரா : 


இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். 

ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம்தான், அந்தப் படத்தின் திரைக்கதைதான் script-தான்         தீர்மானிக்கிறது. 

இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு...

மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதைதான். அதன் script-தான்.”


பாலுமகேந்திரா சொல்லி முடிக்க இளையராஜாவின் மூடி இருந்த கண்களில் மூடு பனியாய் ஈரம் துளிர்க்க, நல்லதொரு சங்கீதம் கேட்ட ரசிகன் போல தன்னையறியாமல் எழுந்து நின்று 

கை தட்டுகிறார் இளையராஜா.


எனக்கு ஞாபகம் இருக்கிறது.

“மூடுபனி” வெளிவந்த அந்த வேளைகளில், படத்தின் டைட்டிலில் “இளையராஜா” என்ற பெயர் வரும்போது, எத்தனையோ ரசிகர்கள்  எழுந்து நின்று கை தட்டினார்கள்.


இப்போதுதான் தெரிகிறது,

அந்தக் கை தட்டலில் பாலுமகேந்திராவுக்கும் பாராட்டும் அளவுக்கு பங்கு இருக்கிறது என்று..!


ஆனால் முழுவதும் வெளியில் 

தெரியாத “மூடுபனி”யாக...!

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு.. முதல்வர் நேற்று AC வேனில் ஆய்வு..

 இதோ ஒரு சிறு மலரும் நினைவு

1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.
ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள்.
ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார்.
முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா (கவனிக்கவும்..... அன்று அறிஞர் அண்ணா எதிர் கட்சி) திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார்.
கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.”
மாணிக்கங்களையும்!!!!!!!
முத்துக்களையும்!!!!!!!
தூக்கி எறிந்துவிட்டு.........
குப்பைகளையும்?????????
சாக்கடைகளையும்???????
ஆட்சி செய்ய சொன்னால் இப்படித்தான் இருக்கும்........?????
காமராஜர் ஒரு சகாப்தம்”🙏🙏🙏

*லட்சுமண ஐயர்*

 லட்சுமண ஐயரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் 2011ல் மறைந்தார். அவர் மறைவுக்கு 20 பேர் வந்திருந்தனர்.

380 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அனாதை போல் இறந்தது அதிர்ச்சி அளிக்கலாம். கொஞ்சம் அதிர்ச்சியைப் பாக்கி வையுங்கள்.
அப்பா ஶ்ரீனிவாச ஐயர் கோபிச்செட்டிப் பாளையத்தின் சட்டமன்ற உறுப்பினர். மகனும் கோபிச் செட்டிப் பாளைய மன்றத் தலைவராகப் பணியாற்றியவர் தான். இருந்தாலும் வெறும் 20 பேர் தான் அவர் மரணத்துக்கு வந்தார்கள் என்றால் அது தான் தமிழ் நாடு. #திராவிடமாடல் என்பது அதுதான்.
லட்சுமண ஐயர், அவர்தம் மனைவி என்று குடும்பமாக சிறையில் இருந்த நேரம் உண்டு. இப்போது போல் ஊழல் வழக்கெல்லாம் இல்லை. விடுதலைப் போராட்டத்துக்காகச் சிறை சென்றார். மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம். கோவை, பவானி, அலிப்பூர், பெல்லாரி என்று சிறை.
1931ல் காந்தியடிகள் சொன்னபடி,தன் வீட்டில் ஹரிஜனங்களைச் சேர்ந்த்தார் லட்சுமண ஐயர். ஜாதிப் பிரஷ்டம் செய்தார்கள்.
ராஜாஜி சொன்னதற்காக நரிக்குரவர் இனச் சிறுவன் ஒருவனைச் சேர்த்துக்கொண்டு ஒரு மாணவர் விடுதி துவங்கினார். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி அது.
1944ல் வார்தா செல்கிறார் லட்சுமண ஐயர். 'நீ பிராமணனா?' என்று கேட்கிறார் காந்தி. 'விடுதலைப் போருக்குப் பலர் இருக்கிறார்கள். நீ உன் ஊருக்குப் போய் ஹரிஜன சேவை செய்' என்று ஆணை இடுகிறார். காந்தியடிகள் சொல்படி லட்சுமண ஐயர் கோபியில் ஹரிஜனங்களுக்கான குடியிருப்புகள் கட்டுகிறார்.
1952, 56 ஆண்டுகளில் கோபி குடிநீர் திட்டம் கொண்டுவருகிறார்.
1986ல் கோபி நகரமன்றத் தலைவராகிறார் ஐயர். மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவதைத் தடை செய்ய வழிவகுக்கிறார். உலர் கழிவறைகள் இல்லாமல், நீர் உள்ள கழிவறைளைக் கட்ட உதவுகிறார்.
கோபியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஐயர் தானகாமக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்டவை.
2011ல் ஐயர் மறைந்தார். அவர் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்படவில்லை.
ஐயர் மறைந்த அன்று ஒரு தலித் பெண் மட்டும் பெரும் குரலுடன் ஒப்பாரி வைக்கிறாள். ஐயர் உதவியில் பட்டதாரியான பெண் அவள் என்று கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் தன் நூலில் எழுதுகிறார்.
ஐயர் மறைந்த அன்று மாவட்ட கலெக்டர் அந்த ஊர் வழியாகச் செல்கிறார். ஆனால் அஞ்சலி செலுத்த நேரமில்லை. தேசத்திற்காக உழைக்க வேண்டாமா சார் ?
ஒரு மந்திரி வரவில்லை. ஒரு எம்.எல்.ஏ.வரவில்லை. ஒரு கவுன்சிலர் வரவில்லை.
ஆங்.. மறந்துவிட்டேனே. கோட்டாட்சியர் வந்தார். அஞ்சலி செலுத்த அல்ல. தியாகி மறைவு என்றால் ரூ 2000 கொடுக்குமாம் அரசு. அதைக் கொடுக்க வந்தார். அவரது குடும்பத்தினர் அதையும் ஹரிஜன சேவைக்கு வழங்கிவிட்டனர்.
380 ஏக்கருக்குச் சொந்தக்காரரான ஐயரின் மகன்களுக்கு என்று விட்டுச்சென்றது அவர் வாழ்ந்த அவரது வீடு மட்டுமே.
அடடா மறந்துவிட்டேனே. ஐயர் இறந்த போதுதான் யாரும் வரவில்லை. ஆனால் அவர் இருந்த போது, ராஜாஜி, ராமசாமி நாயக்கர், காமராஜர் போன்றவர்கள் அவர் வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்கள். நண்பரின் வீட்டிற்கு வராமல் இருப்பார்களா என்ன ?
சரிதான் போங்கள். இதையும் மறந்துவிட்டேன். ஐயரின் கண்களையும் தானமாகக் கொடுத்துவிட்டாராம், ஊரையே தானமாகக் கொடுத்த வள்ளல் லட்சுமண ஐயர்.
இவரைப் பற்றி எந்த வரலாற்று நூலிலும் தேட வேண்டாம். இருக்காது. அதுதான் #திராவிடமாடல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இது பெரியாறு மண்ணுடா...

செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?

 இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொண்ணுற்று ஆறு ஊர்கள் (இப்போ 76 ஊர்கள் )உருவாகியிருக்கலாம் . ஊர் அமைக்கும் போதே பள்ளமான பகுதிகளை தேர்ந்து எடுத்து அங்கிருந்து மண் வெட்டி வீடுகளை முதல் தள உயரத்துக்கு தரையை உயரத்திற்கு அமைத்து இருக்கிறார்கள் 7/9 படிக்கட்டு இல்லாத நுழைவாயிலே கிடையாது . எல்லா வீட்டிலும் முத்தம் (முற்றம்) வழியாக மழை நீர் ஓடி உள் வடிகால் வழியாக வெளியே வந்து ஊரில் உள்ள பள்ளமான பகுதிக்கு (ஊர் அமைந்த பிறகு ஊருணியாய் மாற்றி இருக்கிறார்கள்.) ஓடிவிடும் எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீர் கம்மாய்க்கோ ஊருணிக்கோ போய்விடும் ஊருணி நீர் மக்களுக்கு குடி நீர் .....கம்மாய் நீர் வயலுக்கு பாய்ச்ச பயன் பட்டு உள்ளது இணை கோடுகளாக தெருக்கள் தென் வடக்காகவும் கிழக்கு மேற்காகவும் சாலைகள் அமைந்துள்ளன

முற்றத்தில் விழும் மழை நீரை பிடிக்க நெல்லவிக்கும் காசனி அண்டாகளை வேட்டியை வைத்து அண்டா வாயை கட்டி தண்ணீர் பிடித்து ஆறுமாத குடிநீராக பயன் படுத்தியுள்ளனர் . முற்றத்தில்தான் ஊறுகாய் வத்தல் உப்புக்கண்டம் இவைகளை மொற்மேன் ஜாடிகளில் வெள்ளை துணியால் வாயை கட்டி வெய்யிலில் காயவைத்துள்ளனர் .மழை நீர் சேகரிப்பு திட்டம் , சோலார் சக்தி பயன் படுத்துதல் நீராய் வீணாக்காது பயன் படுத்துதல் போன்றவை அப்போதே கிராம மக்களிடம் இருந்துள்ளது .
வெய்யில் காலத்தில் நீண்டஉள்வீட்டு நடைபாதை தரும் காற்று வாங்கி அமர்ந்து இருப்பார்கள் மழை காலத்தில் இரட்டை அறையில் உள்வீட்டீல் கதகதப்பாய் உள்ள அறையில் படுப்பர் (மின் சக்தி இல்லா காலம் ) தானியங்கள் மிகுதியாய் விளையும் போது வாங்கி சேமித்து காயவைத்து பயன் படுத்த வீட்டில் மிகுதியான அறைகள் பயன் படுத்த பெற்றுள்ளன ஒரு வீடு கட்ட மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளன .ஒரு திருமணம் நடத்த ஏழு நாட்கள் கொண்டாடியுள்ளனர் அதற்கு தகுந்தாற்போல் வீடுகள் கட்டியுள்ளனர் திரைகடல் ஓடி திரவியம் தேடியதால் உலகில் உள்ள அரும்பொருள்கள் சேகரிக்க பட்டுள்ளன . சேமிப்பு சிக்கனம் மரபணுவாய் போனதால் அவைகள் தலைமுறையாய் தலைமுறையாய் கொடுக்கபெற்றும் பாதுகாக்க பெற்றும் வந்துள்ளன
உங்கள் கொள்கை பிடிப்பு போற்றத்தக்கது .
May be an image of 1 person and text
All reaction

*பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்*

 

🍇🍇🍇🍇🍇🍇🍇
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
_எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்து கொள்ளாதீர்கள்._
*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது'* என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.
*உற்சாகமாக இருங்கள்*
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், *இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது* என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
*பவர்ஃபுல்லாக உணருங்கள்*
உடல் வலிமை,
பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி
*மனவலிமை மிக முக்கியம்.*
உங்களைவிட இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர்களை மிஞ்சுவதே லட்சியம்‌என்றால் *நீங்களே வேறலெவல்!*

வெள்ளையரிடமிருந்து கொள்ளையர்கள் கையில்...

 அந்நிய படையெடுப்புகள் அடித்த கொள்ளை,

ஆங்கில பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல்கள் - இப்போது வேறு வடிவம் பெற்றிருக்கிறது...
மாநிலத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் இருந்தாலும், மாநிலத்தின் லஞ்ச ஒழிப்புத்துறை விழிப்பாக செயல்பட்டாலும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என எந்த துறைகள் கண்கொத்தி பாம்பாக கவனித்துக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி பொது சொத்துக்களை சுரண்டி சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர் அரசியல்வாதிகள்.
அத்தி பூத்தார் போல இதிலிருந்து வேறுபட்டு நிற்கும் நம் சம காலத்தவரை நீங்களே யார் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். (இப்படிப்பட்ட பதிவுகளுக்கு அவர்கள் மனம் வருத்தப்பட்டால் அவர்களிடம் வெளிப்படையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்)
ஏதோ ஒரு கட்சிதான் இப்படி என்றில்லை. ஆட்சிக்கு வருபவர்கள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது முப்பது வருட அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
இதோ, 'குவாரிகளுக்கு டெண்டர் விடுகிறோம்' என்கிற பெயரில் பெரம்பலூரில் நடந்த அட்டூழியம் தொடர்பான குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான எனது கவர் ஸ்டோரி.
வேறு எங்காவது பிரச்சனை என்றால் மாவட்ட கலெக்டரிடம் போய் முறையிடலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே புகுந்து அட்ராசிட்டி செய்தால் எங்கே போய் சொல்வது ?...
கட்டுரைகளை புத்தக வடிவில் படிக்க முடியவில்லை என்று கேட்ட எனது வெளிநாடு வாழ் நண்பர்களுக்காக இந்த பக்கங்கள் இங்கே பகிரப்படுகின்றன...

ஆங்கிலேயர் களின் ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணர் .

 மிண்டோ மார்லி கமிஷனின் சிபாரிசு படி இந்தியாவுக்கு உள்ளாட்சி அதிகாரம் கொடுத்த பின் முதல் சென்னை மாகாண மேல் சபை கூட்டம் 1919ல் சென்னை கோட்டையில் நடந்தது

அப்பொழுது நரசிம்ம ஐயர் எனும் பிராமண உறுப்பினர் தமிழில் பேச தொடங்கினார், அப்பொழுது கவர்ணர் பெட்லாண்ட் இடைமறித்து ஆங்கிலத்திலத்தில் பேச சொன்னார்
இது எங்கள் தமிழகம் , தமிழில்தான் பேசுவோம் என மகா உறுதியாக தொடர்ந்து பேசினார் நரசிம்ம ஐயர், ஆம் ஆங்கிலேயர் களின் ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணர்
1957ல் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக பேச தொடங்கினார் ஈ.வி.கே சம்பத், சம்பத் மிகப்பெரும் பேச்சாளர் ஆங்கிலமும் தமிழும் அவருக்கு அழகாய் வரும், டெல்லியில் அவர் ஆங்கிலத்தில் பேச, சபாநாயகராக இருந்த அனந்த சயனம் அய்யங்கார் எனும் தமிழர் "நீங்கள் தமிழரல்லவா? தமிழில் பேசுங்கள்" என சொல்லி உற்சாகப்படுத்தினார்
ஆம் டெல்லியிலும் தமிழில் முழங்க வேண்டும் என உற்சாகப்படுத்தியவன் ஒரு பிராமணன்
இந்த நரசிம்ம ஐயர், அனந்த சயனம் அய்யங்கார் பற்றி தமிழனுக்கு தெரியுமா என்றால் தெரியாது. இங்கு எல்லாம் அப்படித்தான், பூராவும் திராவிட புரட்டு, அப்பட்டமான வரலாற்று மோசடி.
இப்படி ஏராளமான தமிழ் வளர்த்த பிராமணர்கள் இருந்தனர் அவர்களுக்கு முன்னோடி இந்த சாமிநாதய்யர்
உ.வே. சாமிநாதய்யர் எனும் தமிழ்தாத்தா.
தமிழகத்தில் அச்சுக்கலையினை கொண்டு வந்து பேப்பரில் அச்சிட்டவன் சீசன் பால்கு எனும் ஜெர்மானியன் அவன் தரங்கம்பாடியில் அதை செய்தான்
காகித அச்சில் அவன் பைபிளை தமிழ்படுத்தி கொடுத்தான், தொடர்ந்து கிறிஸ்தவ விவகாரங்கள் வந்து கொண்டே இருந்தன, தமிழுக்கும் சைவத்துக்கும் எதிரான கருத்துக்களை தாங்கிய விஷயங்கள் வந்து கொண்டே இருந்தன‌
உண்மையான தமிழன் வரலாறும் சைவமும் பக்தியும் ஓலை சுவடியில் தூங்கி கொண்டிருந்தன, அதை அச்சில் ஏற்றுவார் இலர், ஏற்ற முயன்றாலும் வெள்ளை அரசும் அவர்களின் ரகசிய ஏஜென்டுகளும் விடுவதாக இல்லை
அதை உ.வே. சாமிநாதய்யர் உணர்ந்தார், இனி ஓலைசுவடியில் இருக்கும் தமிழனின் சைவ இலக்கியமும் நூல்களும் அச்சுக்கு வராவிட்டால் தீர்ந்தது விஷயம்
ஆம் அந்த அளவு விஷ கருத்துக்கள் பரப்பப்பட்டன திருகுறள் இஷ்டபடி வைக்கப்பட்டது, இன்னும் பல வரலாறுகளும் பாடல்களும் திருத்தபட்டன‌... திருடப்பட்டன.
அந்த இக்கட்டான நிலையில்தான் தன் போராட்ட , தியாகமான வாழ்வினை தொடங்கினார் சாமிநாதய்யர்
இந்த ஈரோட்டு ரோமசாமி, நீதிகட்சி , அண்ணாதுரை எல்லாம் பொங்கி கொண்டிருந்தபொழுது , தமிழை வாழவைப்போம், பிராமணனை ஒழிப்போம், பிராமணன் தமிழின விரோதி துரோகி என சொல்லி கொண்டிருந்த பொழுது மிக பொறுப்பாக தன் தமிழ் கடமையினை செய்து கொண்டிருந்தார் சாமிநாதய்யர்
பிராமணன் ஒழிக, தமிழ் வாழ்க என சொல்லி கொண்டிருந்த கோஷ்டி தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி...
மண்தோன்றாக் காலத்தில்...
என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணரை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.
பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.
ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ..ஹி .. பிராமணன் வேறு பார்ப்பானியம் வேறு என சென்றுவிடுவார்கள்.
தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பலர் உண்டு
பின்னாளில் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள். சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் சைவத்தை அழிக்க தமிழை வளர்த்தார்கள், தமிழ் அதிலும் வளர்ந்திருந்தது
அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.
தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.
பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?
தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌.
ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்களையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த இந்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.
அவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.
அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில் மடங்களில் தமிழ் வித்வான் வீடுகளில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும் விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.
500 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000க்கும் மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.
தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.
வள்ளுவன், கம்பன்,அவ்வை, சங்கால புலவர்கள் என எல்லோரையும் ஏட்டில் அவர்தான் காட்டினார்
இந்த‌ ஐம்பெரும் காவியம் சிறுங்காவியம் சங்கநூல்கள் பத்துபாட்டு எட்டுதொகை பதினென்கீழ் கணக்கு , பதினென்மேல் கணக்கு என எல்லா நூல்களும் அவராலேதான் அச்சுக்கு வந்தன‌
காலம் மிக சரியான நேரத்தில் கொடுத்த தமிழ் கொடை அவர்.
இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.
ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.
சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.
அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.
அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.
எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.
மிக சரியான காலத்தில் வந்து கிறிஸ்தவ திராவிட கும்பல் தமிழ் ஓலைசுவடிகளை கைபற்றி பல விஷயங்களை மறைக்கும் முன், அவற்றின் உண்மை பொருளை மறைத்து தமிழனுக்கு மதமில்லை, சைவ மதம் என எதுவுமில்லை என மிக பெரும் புரட்டை ஏற்படுத்திய காலத்தில் சரியாக வந்தார் பழம் சங்க இலக்கியம் முதல் எல்லாவற்றையும் ஓலைசுவடியில் இருந்து மீட்டு நம் கைகளுக்கு தந்துவிட்டு சென்றுவிட்டார்
இல்லையேல் மிகபெரும் குழப்பமும் சிக்கலும் இங்கு வந்திருக்கும், தமிழனின் சைவ அடையாளம் மறைக்கபட்டு மாபெரும் அடையாளம் மறைக்கபட்டு அவன் மொட்டை அடிக்கபட்டிருப்பான்.
சாமியாதய்யர் தன் நெடும் போராட்டத்தை நடத்தியபொழுது ஒவ்வொரு ஓலையாய் மீட்டு அச்சில் ஏற்றிய பொழுது சைவ சித்தாந்த கழகம், ஆதீனம், மடங்கள், ஆலயங்கள் அவருக்கு உதவின‌
இந்த நீதிகட்சி, திராவிட கழகமெல்லாம் அய்யரை ஒரு மனிதனாகவே நோக்கவில்லை, தமிழை தேடுகின்றாரே, தமிழர் அடையாளத்தை அச்சில் ஏற்றுகின்றாரே என கொஞ்சமும் உதவவில்லை
தமிழை வாழவைப்போம் என சொல்லிகொண்டே தமிழை உண்மையில் வாழவைத்த அந்த பெருமகானை சாதியால் ஒதுக்கி, மதத்தால் விரட்டி அடித்தார்கள்
இதுதான் அவர்கள் தமிழுக்கு உழைத்த லட்சணம்,
காலத்தால் வந்த அந்த பிராமண கிழவன், தமிழை காத்து தமிழ் அடையாளத்தை காத்து தந்த தெய்வம், இன்றும் என்றும் அவரை நினைவில் கொள்ளுவோம்...

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...