Friday, December 1, 2023

மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கானவர்களா ?

 கடந்த சில மாதங்களாக திருச்சி தில்லை நகர் பத்தாவது கிராஸ் பகுதியில் உள்ள 80 அடி ரோட்டில் வாரம் தோறும் புதன்கிழமை மாலை நேர சந்தை நடைபெற்று வந்தது. விவசாயிகள், வியாபாரிகள் இந்த பகுதியில் மாலையில் வந்து காய்கறி கடைகளைப் போட்டு வியாபாரம் செய்துவிட்டு இரவு போகும் போது அந்த இடத்தையும் சுத்தம் செய்து விட்டு போவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். இதனால் காந்தி மார்க்கெட் உழவர் சந்தை பகுதிகளுக்கு வாகனங்களில் போய்வரும் அலைச்சல், நேரம் மிச்சமாகி, தில்லை நகர் பகுதி மக்கள் வாரம் முழுவதும் தேவைப்படும் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளையும் வாங்கிப் பயன் பெற்று வந்தனர்.

நேற்று 13.09.2023, புதன்கிழமை மாலை, கடை போட வந்தவர்களிடம் ரோட்டின் குறுக்கே ஒரு கயிற்றைக் கட்டி அதில் ஒரு பிளக்ஸ் ஐயும் தொங்க விட்டு காவல்துறையினரும் அங்கே வந்து வியாபாரிகள் கடை போடக்கூடாது என்று தடுத்தார்கள். இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'இது மேயர், மாநகராட்சி ஆணையர் உத்தரவு' என்று பதில் சொன்னார்கள்.
அந்தப் பகுதியில் குடியிருக்கும் பாஜக ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் பாஜகவினர் கூடி, வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இறுதியில் 'இன்றைக்கு காய்கறிகளை கொண்டு வந்த வியாபாரிகளை விற்பனை செய்ய விடுங்கள்' என்ற அவரது கோரிக்கை வென்று, வியாபாரிகள் கடை போட்டு வியாபாரம் செய்து விட்டு போனார்கள்.
மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் பதுங்கிக் கொண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க, பாஜகவினர் வந்து மக்களுக்காக வாதாடி பேசுகிறார்கள்.
மக்களுக்காக பேச வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் அடுத்த தேர்தலின் போது மக்களை சந்திக்க வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...