மணல் குவாரி கொள்ளை விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் திண்டுக்கல்லில் வைத்து திட்டம் தீட்டி ஒரு ED அதிகாரியை மாட்ட வைத்து மிகப்பெரிய தவறைச் செய்திருக்கிறது விடியல் அரசு -
இதற்குக் கதை, திரைக்கதை, வசனம் யார் அமைத்துக்கொடுத்திருப்பார்கள் என்று தெரியாது ஆனாலும், மிகப்பெரிய தத்திதான் இந்தத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்திருப்பான் -
இவர் இன்று மிகப்பெரிய இக்கட்டில் இருக்கிறார், ED எந்த நிமிடமும் இவரைக் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது பல ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்க வாய்ப்பிருக்கிறது, இவர் மாட்டினால் மணல் மாஃபியாவின் பெரும் கும்பலே மாட்ட வாய்ப்பிருக்கிறது எனும் பொழுதுதான் வழக்கமான ஒரு சுமாரான டைரக்டரை வைத்து ஒரு படம் எடுத்து தேவையில்லாமல் ED-யை அதாவது மத்திய அரசைச் சுரண்டியிருக்கிறது -
முதலில் அந்த டாக்டர் சுரேஷ்பாபு யாரென்றால் அக்மார்க் தி.மு.கக்காரர், இவர்மீது என்ன வழக்கு எதற்காக லஞ்சம் கொடுத்தார் ஏற்கனவே 20 லட்சம் கொடுத்துவிட்டு, பிறகு திடீரென ஞானனோதயம் வந்து எதற்காக இந்த அதிகாரியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தார் என்பதற்கெல்லாம் ஒரே பதில் -
இது மிகத் திறமையாக எடுக்கப்பட்ட ஒரு சுமாரான திரைப்படம், அட்டர் ப்ளாஃப் ஆவது உறுதி -
அந்த அதிகாரி உண்மையாகவே லஞ்சம் வாங்கியிருந்திருந்தாலும் கூட இந்த விவகாரத்தில் அடுத்த நடக்கவிருக்கும் CBI விசாரணையில் தப்பிப்பதற்குப் போதுமான வாய்ப்புகள் இருக்கின்றன ( இருக்கின்றனவா?, கொடுக்கப்பட்டதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி) -
பொதுவாக லஞ்ச ஒழிப்புத்துறையைப் பொருத்தவரை, இரசாயணம் தடவிய நோட்டுக்களைக் கொடுத்து ஒருவரை கையும் களவுமாகப் பிடிக்கத்திட்டமிட்டால சம்பந்தப்பட்ட இடத்திலேயே மட்டும்தான் பிடிப்பார்கள் அதுதான் வழக்கிற்கு வலுச்சேர்க்கும், இதுநாள் வரை நடந்தது இதுதான் -
ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கில் அங்கிட் திவாரி அந்த டாக்டர் சுரேஷ்பாபுவை சந்திந்தித்துப் பேசிய அந்த ஹோட்டலிலேயே கைது செய்திருந்தால் அது வலுவான சாட்சியங்களுடன் கூடிய கைதாக இருந்திருக்கும், CCTV - Footage களுடன் எளிதாக நிருபிக்கவும் முடியும், மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கமான ஸ்டைலும் அதுதான் -
எனும் பொழுது எதற்காக, அவரது காரின் டிக்கியில் பணத்தை வைத்து அவரை அங்கிருந்து கிளம்ப அனுமதித்து பிறகு சேஸிங் செய்து கைது செய்யவேண்டும் -
இவர் கேட்டபடியே, யாரோ ஒருவர் காரின் டிக்கியில் பணம் வைக்கும் CCTV ஆதாரங்களைக் காண்பித்தால் கூட, நாளை நீதிமன்றத்தில் இவர் தனக்குத் தெரியாது யாரோ என்னை மாட்டிவிடச் செய்த சதி என்று தப்பிவிடத்தான் வாய்ப்புகள் அதிகம் -
ஆக, சரியாக எழுதப்படாத திரைக்கதையில் யார், யார் நடிகர்கள் என்று தெரியவில்லை -
ஆனால், இதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும், ஒட்டுமொத்த ED - யும் தவறானது, தங்களது அமைச்சர்கள் மீது போடப்பட்டதெல்லாம் உள்நோக்கம் கொண்ட வழக்குகள், அமைச்சர்கள் அப்பாவிகள் என்று பொதுமக்களை நம்ப வைக்க விடியல் அரசு செய்த வழக்கமான டிராமாவாக இது இருந்தாலும் கூட விளைவுகள் மோசமாக இருக்கும் -
இனி ED உக்கிரத்துடன் களமிறங்கும் அடுத்தடுத்து பல செந்தில்பாலாஜிக்களுக்குத் தொடர்ந்து அடைப்பெடுக்கப்படும், விசாரணைக்கு அழைக்கும் ஒவ்வொருத்தரையும் இனி கைது செய்தே விசாரணை நடக்கும் -
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்டீர்களே த்தாலின் -
No comments:
Post a Comment