Tuesday, November 29, 2011

முல்லை பெரியாறு அணையின் உண்மை நிலை

நண்பர்களே முல்லைப் பெரியாறு பிரச்சினையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்துள்ளது தமிழக அரசின் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.
முல்லைப்பெரியாறு- பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் இணைய தளத்திலும்  காணக் கிடைக்கிறது. படித்தவர்-பாமரர், தமிழர் – மலையாளி என்ற பேதமின்றி, யோசிக்கத் தெரிந்த அத்தனைப் பேரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்தப் படம் அமைந்துள்ளது.


இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை.  42 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வெளிவந்திருக்கிறது.

 கீழே உள்ள படத்தினை பாருங்கள்
 

The Mullai Periyar DAM Problem



இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்
.
அனைத்து இணையதளங்களும் தங்களின் தலையாய கடமையாக இந்தப் படத்தை வெளியிட வேண்டும்.  என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது

யார் இப்போது முட்டாள்? - சிறுவர் கதைகள், இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.


அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா ஒரு நாள் ஒரு குறுகலான ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

அதே பாதையின் மறு முனையில் இருந்து ஒரு முரட்டு ஆள் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது யார் என்று அறிந்த அந்த முரடன் வேண்டுமென்றே வழியை மறைத்துக் கொண்டு வழி விடாமல் நின்றான்.

வழியை விடுங்கள் என்று பெர்னாட்ஷா அமைதியாக கேட்டார்.

அந்த முரடனோ முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லை என்று கூறி வழியை மறைத்துக் கொண்டான்.

பெர்னாட்ஷா சிரித்துக்கொண்டே எனது பழக்கம் வேறு விதமானது, ' நான் முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பேன்' என்று கூறிவிட்டு பாதையில் ஒரு புறமாக விலகி நின்றார்.

மிகவும் சாதுர்யமாக அவமானப்படுத்தப்பட்ட அந்த முரடன் பெர்னாட்ஷாவை முறைத்துக்கொண்டு அவரைக் கடந்து சென்றான்.

இது எப்படி இருக்கு?
 

இந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.

கூடங்குளம் பற்றி மறுபடியும் ஏதாவது சொல்றாரோ?


  • அத்தியாவசிய தேவையான நல்ல அரிசியின் விலை கிலோ ரூ. 30 லிருந்து ரூ. 40 ரூபாய்.                                                                                                ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது ...!!
  • ரேசன் கடையில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்...!!
  • வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.        ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம் ...!!
  • ஒரு Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து      சேர்வதில்லை ...!!

இதுவும் ஒரு கேவலமான உண்மை 
  • ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை ...!!
  • அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன ...!!
  • குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது ...!!
  • மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ...!!
  • கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை... அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
  • குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம் ...!!!!

எனக்கு இந்த கேவலமான உண்மைகளை மெயில் அனுப்பி படிக்க (சிந்திக்க) வைத்த பிரகாஷ்க்கு நன்றிகள். 

Monday, November 28, 2011

உள்ளாட்சித் தேர்தல் - ஒரு பார்வை..!

ஜெயலலிதா எதை எதிர்பார்த்தாரோ அது கிடைத்துவிட்டது..! கருணாநிதி எதை எதிர்பார்க்கவில்லையோ அதுவும் கிடைத்துவிட்டது. விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன் போன்றோரின் செல்வாக்கு என்ன என்பதையும் அவர்களுக்கு உணர்த்தியாகிவிட்டது. வைகோவுக்கு அவரது பெயருக்குள்ள செல்வாக்கு இருப்பது மட்டுமே மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஜெயிக்க வைக்கக் கூடிய அளவுக்கான தொண்டர்களை இன்னமும் அவர்கள் பெறவில்லை என்பது சொல்லப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு மாற்று ஆள் தேடிக்கிட்டிருக்கோம் என்ற சிக்னலை கொடுத்தாகிவிட்டது.. ஆனால் தமிழகத்து மக்களுக்குத்தான் என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை..!

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே முறைகேடாக நடத்தப்பட்ட ஒரு தேர்தல் என்று நான் கருதுகிறேன்.. டி.என்.சேஷன் காலத்தில் மயிலாப்பூர் இடைத்தேர்தலில் நடத்திய அத்தனை அட்டூழியங்களையும் வொயிட் அண்ட் வொயிட் டிரெஸ் போட்டு கச்சிதமாக அரிவாள், கத்திகளை கையில் எடுக்காமல், வன்முறையை கொஞ்சமும் சிந்தவிடாமல், கணிணியைப் பயன்படுத்தியே அனைத்துக் கட்சிகளின் கழுத்தையும் அறுத்துவிட்டார் ஜெயலலிதா.

இப்படித்தான் தேர்தலை நடத்தி, இப்படித்தான் ஜெயித்தாக வேண்டும் என்று ஜெயலலிதா ஏற்கெனவே நினைத்திருந்ததால் அதற்கேற்ற தலையாட்டி பொம்மையாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சோ.அய்யரை அந்தப் பதவியில் உட்கார வைத்ததே இந்த முறைகேட்டின் முதல் காட்சி.

எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஜெயல்லிதாவுக்கும், சோ.அய்யருக்கும் மட்டுமே தெரியும் என்ற அளவுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டு, தான் மட்டும் கனகச்சிதமாக பெண்களுக்குரிய தொகுதிகளில் பெண்களையே தேடிப் பிடித்து அறிவித்துவிட்டு அதன் பின்பே தேர்தல் கமிஷனின் அறிவிப்பை வெளியிடச் செய்த ராஜதந்திரம், கோவிலில் கன்னம் வைத்து திருடுவதற்குச் சமமானது..!

தேர்தல் தேதி அறிவித்த பின்பும், கூட்டணி உண்டா இல்லையா என்பதையே தன்னை நம்பி வந்த கட்சிகளிடம் தெரிவிக்காமல் நாட்களைக் கடத்தி அவர்களை அலைபாய வைத்து கடைசியில் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கையது, வாயது பொத்திக் கொண்டு செல்லுங்கள் என்று சர்வாதிகாரமாகச் சொல்லி அவர்களை நட்டாற்றில்விட்டது நம்பிக்கை துரோகம். இதுதான் அரசியல் ராஜதந்திரம் எனில், இதற்கான பலனும் நிச்சயமாக ஜெயலலிதாவுக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்றேனும் ஒரு நாள் கிடைக்கத்தான் போகிறது..!

தி.மு.க.வின் அமைச்சர்கள் பலர் மீதும் வழக்குகள் பாய்ந்தவண்ணம் இருந்தன. இருக்கின்றன. இதில் பலரும் தவறுகள் செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த்தில் தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் தி.மு.க. ஆட்சியில் இவர்கள் சொல்பேச்சு கேட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களின் புகார்களை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது இந்தக் கைதுகளைக்கூட தனது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தத்தான் என்பது தெளிவாகவே தெரிகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மகன் கைப்புள்ள ஸ்டாலினும் தி.மு.க. ஏன் ஆட்சியை இழந்தது என்பதை புரிந்து வைத்திருந்தும் அது தெரியாததுபோல் நடிக்கிறார்கள். திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் நேருவையே நிறுத்தியது படுமுட்டாள்தனம். தி.மு.க. என்ற கட்சி மீதுள்ள கோபத்தைவிட நேரு மீதுதான் திருச்சி மாவட்ட மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத இவர்களது கட்சித் தலைமையை என்னவென்றுதான் சொல்வது..?

நேரு மற்றும் அவரது உறவினர்களின் ஆதிக்கம் அரசு அதிகாரத்தில் எத்தனை தூரம் மலிந்து போய் இருந்தது என்பது திருச்சி மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாக உள்ளது. இத்தனை நடந்தும் மீண்டும் நேருதான் எமது வேட்பாளர் என்று தி.மு.க. தலைமை அறிவித்ததற்கு கிடைத்த செருப்படிதான் சென்ற தேர்தல் வித்தியாசத்தைவிட 1 மடங்கு வித்தியாசத்தை கூட்டி பொதுமக்கள் அளித்தது..! நேருவைவிட வேறு யாரையாவது நிறுத்தியிருந்தால்கூட வெற்றி வித்தியாசம், இந்த அளவுக்கு போயிருக்காது என்றே நான் நம்புகிறேன்..!  

உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவின் திருவிளையாடல்களை முன்னரே ஊகித்துவிட்ட கருணாநிதி, தானும் அவசரம் அவசரமாக வேட்பாளர்களை நிறுத்தி வைத்து களத்தில் குதித்துவிட்டார். ஆனால் எதைக் காரணமாக வைத்து மக்களிடம் ஓட்டு வாங்குவது என்பதில்தான் தவறிவிட்டார். சந்திக்கு சந்திக்கு, ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஊதித் தள்ளிய ஸ்பெக்ட்ரம் ஊழலையும், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் அட்டூழியத்தையும் கருணாநிதியாலும், ஸ்டாலினாலும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியவில்லை. நடப்பவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன இவை அனைத்திலும் சேர்த்து மொத்தம் 1,32,467 பதவியிடங்கள் உள்ளன. இதில், 19,646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

அ.தி.மு.க., 9,864 பதவிகளை கைப்பற்றியுள்ளது.  சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியுள்ளது. 

10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில், 580 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது. 124 நகராட்சிகளில் 89 நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது 1,680 நகராட்சி வார்டுகளையும், 285 பேரூராட்சிகளையும், 2,849 பேரூராட்சி வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 574 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3,797 பதவிகளையும் அதிமுக பிடித்துள்ளது. அதிமுக மொத்தமாக 30.02 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது. நகர்ப்புறத்தில் 39.24 சதவீத வாக்குகளையும், கிராமப்புறங்களில் 38.69 சதவீத வாக்குகளையும் அக்கட்சி பெற்றுள்ளது.

அதிமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தில் ஜெயல்லிதா செய்த குளறுபடி மட்டுமே அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு அவர் மீது அதிருப்தி ஏற்பட்ட ஒரே காரணம். அந்த ஒரு காரணத்தை அப்போதே மக்கள் மறந்துவிட்டார்கள் போலும். மேலும், தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது... இந்தம்மா ஆட்சிக்கு வந்தால்தான் இதுவெல்லாம் நடக்கும்போலிருக்கு என்ற நம்பிக்கையை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த வெற்றிகள் ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கிறது. 

இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தான் சிறைக்குள் போகவிருக்கும் நெருக்கடியான காலக்கட்டத்தில் கட்சிக்குக் கிடைத்திருக்கும் இந்த ஜாக்பாட்டை ஜெயலலிதா எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை..

தி.மு.க. உள்ளாட்சி அமைப்புகளில் 4059 பதவிகளை கைப்பற்றியுள்ளது. 23 நகராட்சித் தலைவர் பதவியையும் 121 பேரூராட்சித் தலைவர் பதவியையும் திமுக கைப்பற்றியுள்ளது. 10 மாநகராட்சி வார்டுகளில் 129 கவுன்சிலர் பதவிகளையும், நகராட்சி வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1,820 பதவிகளையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 27 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 976 பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுகவுக்கு 26.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு நகர்ப்புறங்களில் 26.67 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களஇல் 25.71 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

அ.தி.மு.க.வுக்கு அடுத்த நிலையில் தி.மு.க. என்றாலும் 10 மாநகராட்சிகளையும் ஒருசேர பறி கொடுத்த அபல நிலையில் தி.மு.க. உள்ளது. மதுரையில் குட்டி முதல்வராக கோலோச்சிய அஞ்சாநெஞ்சன் அழகிரியின் சொந்த வீடு இருக்கும் சத்யசாய் நகரை உள்ளடக்கிய வார்டில் தி.மு.க. உறுப்பினர் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதை மதுரை மக்கள் நல்ல சகுனமாகத்தான் பார்க்கிறார்கள்.. 2-வது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் 871 ஓட்டுக்களே பெற்று 4-வது இடம் எனில், அழகிரியின் மீது அந்தப் பகுதி மக்களுக்கு இருக்கும் பாசமும், தி.மு.க. மீதான பற்றும் தெளிவாகவே புரிகிறது..! 

இது மட்டுமா.. சென்னையில் தமிழினத் தலைவர் குடியிருக்கும் கோபாலபுரம் பகுதியின் 111-வது வார்டையும் முதன்முறையாக அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.. தான் குடியிருக்கும் பகுதியிலேயே செல்வாக்கை இழந்துவிட்டார் தாத்தா. கூடவே தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கும் தேனாம்பேட்டை 117-வது வார்டிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. 

இப்படி அ.தி.மு.க.வுக்கு மாற்றாக உள்ள தி.மு.க.வுக்கு மரண அடி கொடுத்திருக்கும் நிலையில் தி.மு.க. தற்போது தனது கட்சியையும், கட்சியினரையும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இந்தக் கேவலமான தோல்வி எதனால்.. என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் சென்சிட்டிவ்வான கல்வி விஷயத்தில் தாறுமாறாக விளையாடினார். இதனை அவர்களின் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவருமே கண்டித்தும், ஏசியும் பேசி வந்தார்கள். இந்தக் குழப்பத்தை ஒருவாறு சமாளித்திருந்தாலும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இப்போதும் பிள்ளைகளுக்காக வீட்டில் கஷ்டப்படுவது அவர்கள்தானே.. ஜெயலலிதாவுக்கு நிச்சயம் ஒரு ஷாக் கொடுப்பார்கள் என்று இந்த ஒரு விஷயத்தை வைத்து மட்டுமே கங்கணம் கட்டி அலட்சியப்படுத்தினார்கள் தி.மு.க. தலைவர்கள்.
மக்கள் இதனையொரு பொருட்டாகவே கருதவில்லை என்பது இந்த்த் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது. 

இனி தி.மு.க. செய்ய வேண்டியது அடுத்த வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊழல் மயமான கட்சி என்ற அவப் பெயரிலிருந்தும், அராஜகம், ரவுடிகள், குண்டர்களுடன் நெருங்கியத் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடமிருந்தும் கட்சியைக் காப்பாற்ற வேண்டியதும் இருக்கிறது. இதனை முறைப்படி செய்தால், அதன் பலன் அப்போது அவர்களுக்குக் கிடைக்கும். இல்லையெனில் அடுத்த பொதுத் தேர்தலில் ஒரு எம்.பி. தொகுதியில்கூட ஜெயிக்க முடியாமல் போகும் வாய்ப்புண்டு..!

தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தன்னைவிட்டால் மாற்றில்லை என்று செயல்பட்ட விஜயகாந்துக்கும் கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது. 857 பதவிகளை மட்டுமே பிடித்து சுயேச்சைகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது தே.மு.தி.க. 2 நகராட்சித் தலைவர் பதவிகள், 2 பேரூராட்சித் தலைவர் பதவிகள், மாநகராட்சிகளில் மொத்தமே 8 கவுன்சிலர் பதவிகள் இவ்வளவுதான் புரட்சிக் கலைஞருக்குக் கிடைத்துள்ளது.

ஆனால் இக்கட்சியின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட ஒரே நிலையாக உள்ளது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட இக்கட்சிக்கு 8.38 சதவீத வாக்குகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் 10.01 சதவீத வாக்குகளை தே.மு.தி.க. பெற்றது. தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலைவிட லேசான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது தேமுதிக. இருந்தாலும் வெற்றி பெற்ற இடங்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலும், தி.மு.க. மீதான கடுமையான எதிர்ப்பில் இருந்த காரணத்தினாலும்தான் தற்போது தான் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் இருப்பதை விஜயகாந்த் உணராமல் இருக்கிறார். இதற்கான பாடம் இது.! சட்டசபையில் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படவில்லை. ஜெயல்லிதா கோபித்துக் கொள்வாரே என்பதற்காக அமைதியாக இருந்த அவரை இனியும் இதுபோல் அமைதியாகவே இருந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வாக்காளர்கள். 

இனி வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது.. மிஞ்சிப் போனால் 3-வது அணியாக பல கட்சிகளை சேர்த்து வைத்து போராட வேண்டும். அப்படி போரடினாலும் ஜெயல்லிதா மக்களுக்கு வெறுப்பு வரும் அளவுக்கு ஆட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் ஓட்டுக்கள் மாறி விழுகும். அப்படியொரு சூழலுக்கு ஜெயல்லிதா தனது கட்சியைத் தள்ள மாட்டார் என்பதனால் ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அனுபவித்த பெருமை மட்டுமே விஜயகாந்துக்கு கிடைக்கும் என்றே நம்புகிறேன்..!

4-வது பெரிய கட்சியும் தமிழர் விரோதக் கட்சியுமான காங்கிரஸ் கட்சிக்கும் இத்தேர்தலில் மரண அடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் கிடைத்த பதவிகள் 740. இதில், 24 பேரூராட்சிகளும் அடங்கும். அந்தக் கட்சிக்கு ஒரு நகராட்சிகூட கிடைக்கவில்லை.  இக்கட்சிக்கு 5.71 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. 

தங்கபாலுவும், இளங்கோவனும் தங்களுக்கு இடையேயான விளையாட்டை நிறுத்திக் கொண்டு ஒரே ஜீப்பில் தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், காங்கிரஸை மக்கள் சீண்டவில்லை. இப்போது ஜெயித்திருப்பவர்களும் அவரவர் பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் சொந்த செல்வாக்கினால் ஜெயித்தவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

வாக்காளர்கள் அடுத்தபடியாக வெளுத்துக் கட்டியிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை. எங்களைப் புறக்கணித்துவிட்டு யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்றெல்லாம் அறைகூவல் விடுத்த டாக்டர் ராமதாஸின் இன்றைய நிலைமை அதோ கதிதான்..! 2 மாநகராட்சி கவுன்சிலர்கள், 60 நகராட்சி கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்துக்களில் 2 தலைவர் பதவி, 108 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினராக 3, மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக 225 என்று மொத்தமாக 400 பதவிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவிகிதம் வெறும் 3.55 மட்டுமே..!

இவருக்கு இது தேவைதான். தனது மகனது நல்வாழ்க்கைக்காகவே கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார் என்பதை தமிழகத்து மக்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலேகூட ஒரு நகரசபையைக் கூட இவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்னும்போது கட்சி மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெற இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்போதாவது ராமதாஸ் புரிந்து கொள்ளட்டும்..!

இந்தத் தேர்தலில் எனக்கு வருத்தமளித்த விஷயம் ம.தி.மு.க.வை மக்கள் புறக்கணித்திருப்பதுதான். தற்கால அரசியலுக்கு ஏற்றவகையிலான குணநலன்களை பெற்றிருக்கும் வைகோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். ஆனால் வைச்சால் குடுமி, அடித்தால் மொட்டை என்பதைப் போல வாக்காளப் பெருங்குடி மக்கள் அதிமுகவை விட்டால், தி.மு.க.வுக்கும், இவரைவிட்டால் அவருக்குமாக ஓட்டளித்து புதியவர்களை வளர்த்துவிட மறுக்கிறார்கள். தமிழகத்தின் சீரழிவுக்கு நிச்சயமாக ஒரு புறம் தமிழகத்து வாக்காளர்களும் காரணமாவார்கள்.

மதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் 11 மாநகராட்சி கவுன்சிலர்கள், 1 நகராட்சித் தலைவர், 49, நகர சபை உறுப்பினர்கள், 7 கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள், 82 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 42 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 193 பதவிகள் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.7.

ஈழப் பிரச்சினையில் கடந்த 35 ஆண்டு காலமாக வைகோ எடுத்திருக்கும் நிலையான உறுதிப்பாடு பாராட்டத்தக்க ஒன்று. அதே சமயம், தமிழகத்து விஷயத்தில் அவர் அவ்வப்போது எடுத்த சில முரண்பாடுகள்.. கட்சியினரை தக்க வைத்துக் கொள்ளாதது.. தன்னைத் தவிர நட்சத்திரங்களை கட்சியில் நிலை நிறுத்தாதது போன்ற விஷயங்களால்தான் மக்களுக்கு அவர் மீது இன்னமும் பிடிப்பு வரவில்லை என்றே நினைக்கிறேன். மக்கள் மாற வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில் வைகோவும் அதற்குத் தயார் நிலையில் தனது கட்சியினரை வைத்திருக்க வேண்டும்.. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நான் ஒரு நல்லவன் என்ற சிம்பலை மட்டும் வைத்துக் கொண்டே காலத்தை ஓட்ட முடியும்..?

இந்தத் தேர்தலில் ஆச்சரியமான ஒரு விஷயம் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கும் சில வெற்றிகள்தான். தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருக்கும் இக்கட்சி 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி பெற்ற வாக்குகள் சதவிகிதம் 1.35.

வரும்காலத்திலும் இக்கட்சி தனித்து நிற்கும் சூழலே தென்படுவதால் இதனுடைய வளர்ச்சியை மற்றக் கட்சிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சிற்சில இடங்களில் பல முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை இக்கட்சி வேட்பாளர்கள் தடுத்துள்ளார்கள். அகில இந்திய அளவிலான இக்கட்சியின் மதம சார்ந்த கொள்கைகள் மாறாதவரையில் இக்கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர வ்ழியில்லை என்றே நினைக்கிறேன்..!

தேமுதிகவின் கூட்டணிக் கட்சியாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 மாநகராட்சி கவுன்சிலர்கள், 2 நகராட்சித் தலைவர்கள், 20 நகராட்சி கவுன்சிலர்கள், 5 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 101 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 26 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று 159 பதவிகளும் கிடைத்துள்ளன. பெற்ற வாக்குகளின் சதவிகிதம் 1.02

இதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 99 பதவிகளே கிடைத்துள்ளன. 4 மாநகராட்சி கவுன்சிலர்கள், 10 நகராட்சி கவுன்சிலர்கள், 2 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 33 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், 46 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று கிடைத்திருக்கும் சிபிஐ கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 0.71.

இந்த இருவரின் வாக்கு சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்திருக்கிறது. இதுவரையிலும் அதிமுக, தி.மு.க. என்று மாறி, மாறி கூட்டணி வைத்திருந்த்தால் இவர்களது உண்மையான பலம் என்ன என்பது தெரியாமல் இருந்த்து. இப்போது, இந்தத் தேர்தலின் மூலம் தெரிந்துவிட்டது. இனி இவர்களுக்கு 3-வது அணி மட்டுமே கை கொடுக்கும். அதற்கான முயற்சிகளை செய்வதுதான் இக்கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது.

இறுதியாக திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. 1 மாநகராட்சி கவுன்சிலர், 13 நகராட்சி கவுன்சிலர்கள், 12 டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 9 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தமே 35 பதவிகள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பாரதீய ஜனதாவைவிடவும் மிகச் சொற்பமான செல்வாக்கில் இருக்கும் இக்கட்சியின் ஆரம்பக் காலத்தை நினைவில்கொண்டால் இது மாபெரும் தோல்வி..! 

தமிழகத்தில் கட்சிகளை ஆரம்பிக்கும் அனைவருமே ஆரம்பத்தில் நம்பிக்கையூட்டும்விதமாகவே செயல்படுகிறார்கள். கட்சியின் வட்டச் செயலாளர்கள் டாடா சுமோவில் வலம் வந்து, மாவட்டச் செயலாளர்கள் டயோட்டா குவாலிஸில் வரத் துவங்கியவுடன் கட்சியும் நொண்டியடிக்கத் துவங்குகிறது. இப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் ஆகிவிட்டது. 

கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் போன்றவற்றில் தனது கட்சியினரின் செயல்பாடுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் இருக்கும் திருமாவளவன் மக்களிடத்தில் அதிகம் நெருங்க முடியாத சூழலில் இருக்கிறார். அவர்களுக்கு செல்வாக்கு அதிகமுள்ள இடங்களில்கூட இந்த நிலைமைதான் என்பதனால் இனி இக்கட்சிக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவளித்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை..!

இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தினை சுயேச்சைகள் பெற்றிருப்பதே குறிப்பிடத்தக்கது. 5 நகராட்சித் தலைவர்கள், 55 மாநகராட்சி கவுன்சிலர்கள், 552 நகராட்சி கவுன்சிலர்கள், 64 பேரூராட்சித் தலைவர்கள், 1995 டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள், 655 பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் என்று மொத்தம் 3322 பதவிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுயேச்சைகள் பெற்ற மொத்த வாக்குகளின் சதவிகிதம் 9.46.

இவர்களில் அநேகம்பேர் பெரிய கட்சிகளில் சீட் கொடுக்கப்படாத்தால் தனியாக நின்றவர்கள். எனவே வெற்றி பெற்ற பின்பும் அவர்கள் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவே இருப்பார்கள். அல்லது மீண்டும் கட்சியில் சேர்ந்துவிடுவார்கள். எப்படியோ உள்ளாட்சி அமைப்புகள் என்று வரும்போது மக்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஊர்க்காரர், தெரிந்தவர், சொந்தக்காரர் என்றெல்லாம் பார்த்தே வாக்களிப்பார்கள் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

சட்டசபை தேர்தலிலேயே இமாலய வெற்றி பெற்றிருக்கும் ஜெயல்லிதா இந்த உள்ளாட்சி தேர்தலின் மூலமும் அசுர பலம் பெற்றிருக்கிறார். ஆனாலும் மிக விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளே செல்ல வேண்டியிருப்பதால், அவருக்குப் பின்னான தலைமை எப்படி கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தப் போகிறது என்று தெரியவில்லை. 

தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல் வெடிக்காதா என்று அ.தி.மு.க.வும், ஜெயலலிதாவும், சசிகலாவும் வெளியில் இல்லாத நிலையில் அதிமுகவை சீர்குலைத்துவிடலாம் என்று தி.மு.க.வும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. இரண்டில் எது நடந்தாலும் அது தமிழகத்துக்கு நல்லதே..!


உள்ளாட்சித் தேர்தல்-2011 இறுதி முடிவுகள்


கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம் (நகர் மற்றும் ஊரகப் பகுதிகள்) -கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான பதவிகள் நீங்கலாக.



மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து மாநகராட்சிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து பேரூராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



அனைத்து நகராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்


நன்றி : பல்வேறு இணையத்தளங்கள் 


 

Sunday, November 27, 2011

மருத்துவர்களும் பணம் சம்பாதிக்கும் முறைகளும்‏

மருத்துவர்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக்கொள்ள மருத்துவப் பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக தற்போது நாடெங்கும் புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ் ரே, சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை என்று மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் எழுதிக் கொடுக்கின்றனர். இதன் பின்னணியில் அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மையங்கள் மருத்துவர்களுக்கு பரிந்துரைகளின் அடிப்படையில் விகிதாசாரமாக 'கமிஷன்' அளிப்பதான விவகாரம் இருந்து வருகிறது.

இது தவிர, மருந்துக் கடைகள், பன்னாட்டு உள்நாட்டு மருந்து உற்பத்க்டி நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதற்கு பல்வேறு வகையில் 'ஊக்கத் தொகை'களை அளித்து வருவதும் தொடர்ந்த ஒரு வழக்கமாகி வருகிறது.

முன்பெல்லாம் ஒரு மருத்துவர் தங்களது ஆலோசனைத் தொகைகளைக் குறைவாகப் பெற்றால் அவரிடம் கூட்டம் அதிகரிக்கும். ஆனால் இன்று ஆலோசனைத் தொகையைக் குறைக்கும் ஒரு மருத்துவர் அதன் இழப்பை பரிசோதனை மையங்களின் கமிஷன் மூலம் ஈடுகட்டிக் கொள்கின்றனர்.

மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுகளை நம்பியே நடைபெறுகின்றது என்பது போய் மருத்துவப் பரிசோதனை மையங்களை நம்பியே மருத்துவர்களின் வருவாய் உள்ளது என்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இந்த கமிஷன் தொகைகள் மருத்துவர்களுக்கு மாதாந்திராமாக கொடுக்கப்படுவதும் உண்டு. அல்லது ஒவ்வொரு டெஸ்ட் பரிந்துரைக்கும் ஏற்ப தொகைகள் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதும் வழக்கமாகியுள்ளது.

உதாரணமாக ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார் என்றால் அருகிலிருக்கும் மருத்துவப்பரிசோதனை மையத்தில் நாம் சி.டி.ஸ்கேன் எடுத்துக் கொண்டால் அந்த மருத்துவருக்கு அதனடைப்படையில் ரூ.1000 கமிஷன்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ஒரு தொகை, யூரின், ரத்தப் பரிசோதனை மற்றும் மலப்பரிசோதனை என்று பரிசோதனைக்குத் தக்க கமிஷன் தொகையை மருத்துவர்கள் பெற்று வருகின்றனர்.

ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் அதாவது காது, மூக்கு, தொண்டை நிபுணர், சிறுநீரக நிபுணர், கிட்னி சிறப்பு மருத்துவர், நரம்பியல் நிபுணர் என்று ஒரு பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மாதமொன்றுக்கு இது போண்று டெஸ்ட்களை எழுதிக் கொடுப்பதன் மூலமே ரூ.1 லட்சம் வரை வருவாய் பெறுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் வேடிக்கை என்னவெனில் ஒரு சில மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை மையங்களிலிருந்து 'அட்வான்ஸ்' பெறுவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்களைத் தேர்வு செய்து குடும்பத்துடன் துபாய், சிங்கப்பூர், தாய்லாந்து என்று அனுப்பி வைக்கும் பழக்கமும் நீண்ட நாட்களாக இருக்கிறது.

அனைத்து பிரபல நிறுவனங்களின் பிரபல பிராண்டுகளும் இம்மாதிரி மருத்துவர்களை 'சிறப்புக் கவனிப்பு' செய்து இன்று பெரிய பிராண்டுகளாக வளர்ந்தவையே.

மொத்தத்தில் பாதிக்கப்படுவது யார்? அப்பாவி நோயாளிகள்! கல்விக்கொள்ளை, மருத்துவக் கொள்ளை ஆகியவற்றை எந்த ஒரு அரசு தடுக்கிறதோ அந்த அரசுதான் சிறந்த அரசு.

ஸ்மார்ட் வொர்க் என்றால் என்ன?‏


ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள்,
மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம்
அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும்
இருந்தார்,
மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல
தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது
சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே
கேட்டு விட்டான்!
நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக
நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடை
விடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..
சிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன்,
ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ
கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி
என்று கேட்டான்!..
நான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன்
என்று சொன்னான் நண்பன்!
மறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து
மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன்
அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,
மறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க
வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,
மறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன்
நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும்
அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக
அமர்ந்தான்,
ஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை
தீட்டி கொண்டிருந்தான்!

அரிய தகவல்கள் சில ..



1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்....
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது"

இருதய நோய் (மாரடைப்பு) – ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை‏

திரு ரவி நாக் அவர்கள்   இருதய நோய் பற்றிய ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார்.  முன் பரிசோதனை செய்வதற்காக ஒரு மென்பொருள் (software)  தயார் செய்திருக்கிறார்.  அந்த மென்பொருள் பரிசோதனை செய்யப்பட்டு மிக சிறப்பாக கனடா நாட்டில் செயல் பட்டு வருகிறது.  அந்த மென்பொருளை நமது மக்களுக்கு பயன்பாட்டிற்கு தர தயாராக இருக்கிறார்.  அவரது நல்முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
 
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது.  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும்,  மனமார்ந்த வாழ்த்துகளும்.  அவரது சேவை பெரிதும் பெருகட்டும்

வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம்  மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து,  இப்போது ஏழை பணக்காரன்,  ஜாதி, மதம், சின்னவர், பெரியவர் என பாகுபாடின்றி இனறளவில் விஸ்வரூபமாய் இருக்கும் ஹார்ட் அட்டாக் எனும் அழையா விருந்தாளி தான். ஆம் ஹார்ட் அட்டாக் 87% சதவிகித மக்களுக்கு எப்பொழுது  வரும் என தெரியவே தெரியாது. முக்கால்வாசி பேர் ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் (அறிகுறிகள்) கொஞ்சமும் தெரியாமல் சிலர் கை வலி,  சிலருக்கு வாயுத் தொல்லை எனவும்,  சில பேர் உஷ்ணத்தால் வியர்க்குது என நினைத்து ஹார்ட் அட்டாக்கில் மரணிப்பது ஒரு தினம் தோறும் நடக்கும் நிகழ்ச்சி. 13% சதவிகித மக்கள் தூக்கத்திலேயே என்ன நடக்குது என தெரியாமல் இறந்து போகின்றனர். சிலர் மட்டும் அதை சரியாக கவனித்து சரியான நேரத்தில் மருத்துவமனை செல்வதால் அந்த "கோல்டன் ஹவர்ஸ்" எனும் நேரத்திற்குள் அவர்கள் காப்பாற்றப்பட்டு செகண்ட் அட்டாக்,  மூன்றாவுது , நான்காவது அட்டாக் வரை தாங்குகின்றனர்.  ஹார்ட் அட்டாக் தவறான உணவு பழக்க வழக்கம்,  உடற்பயிற்சியின்மை,  அதிக பருமன் ஆட்களுக்கு மட்டும் தான் வரும் என கூறுவது தவறு. சிலருக்கு வம்சா வழி பிரச்சினைகள்,  சில ஷாக்கிங் செய்திகள்,  அதிக ஸ்ட்ரெஸ் எனப்படும் ஒரு நவீன பிரச்சினை மூலமாகவும் இந்த ஹார்ட் அட்டாக் வருவதுண்டு. ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக்,  பைபாஸ் சர்ஜரி,  ஆஞ்ஜியோ பிளாஸ்ட்,  ஸ்டென்ட்,  வால்வு ரீபிளேஸ்மென்ட்,  ஃபேஸ்மேக்கர் எல்லாம் ஏதோ அன்னிய சக்திகள் மாதிரி கேட்ட நாம் இதை இப்பொழுது ஒரு டிரென்டாகி போனாலும் ஒரு தடவை அட்டாக் வந்தவர்கள் மிகவும் பாதுகாப்பாகி அதன் சிந்தனையுடன் தன்னை பேணி காக்கின்றனர். இது ஒரு உலக அளவில் பேசப்படும் ஒரு விஷயம். இந்தியாவில் இந்த நோய் விழிப்புணர்வு மிகவும் மோசம். இதில் பிழைப்பவர்களை விட இறப்பவர்கள் தான் மிக அதிகம். ஆம் இந்த நோய்க்கு காரணம் நாம் இதை பற்றி முதல் அட்டாக் வரும் வரை நாம் அதை பற்றி கவலைப் படுவதில்லை.   ஆம் 25 வயதுக்கு மேல் எல்லா ஆண் பெண்ணும் கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் செய்து அதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது - LDL Bad Cholestrol - கெட்ட கொலஸ்ட்ரால்,  Triglycerides - டிரைகிளைசிரய்ட்ஸ்,  Diabates - I - II டயாபட்டீஸ் மற்றும் Blood Pressure -  ரத்த கொதிப்பு.  இது நான்கும்  தெரிந்தால் ஒரளவுக்கு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் பற்றி அதன் தாக்கம் உங்களுக்கு இருக்கிறதா என்று டாக்டரின் உதவியோடு தெரிய வரும். இதை நாம் ஏனோ செய்வதில்லை அதற்கு மாறாக ஒரு அட்டாக் வந்த பிறகு அந்த குடும்பம் படும் அவஸ்தை சொல்லி தெரிவதில்லை.

கனடா போன்ற நாடுகள் அந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கு இலவச மருத்துவம் அளிக்கிறது.  அந்த வகையில் அவர்கள் 2006 முதல் பிரவென்டிவ் மெடிசன் (Preventive Medicine)  எனும் ஒரு விஷயத்திற்கு நிறைய செலவு செய்து அதன் மூலம் வரும் நோய்களை முன்பே அதை பற்றி தெரிய வைத்து அதன் அவார்னஸ் (விழிப்புணர்வு) பற்றி நன்கு எடுத்துரைத்து மற்றும் அதற்கு எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என  கூறுவதால் வரும் முன் நோய் காக்கும் திட்டம் நன்கு பிரபலம்.  இதற்காக என்னை 2009 ஆம் ஆண்டு சி எம் ஏ எனப்படும் கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஒரு மென்பொருளை செய்ய ஆர்டர் கொடுத்தது. ஆம் இந்த சாப்ட்வேர் மிகவும் எளிமையானது. இதை வைத்து இரன்டு நிமிடத்தில் நமக்கு எப்பொழுது ஹார்ட் அட்டாக் வரும் எந்த சதவிகிதம் நம்க்கு சான்ஸ் இருக்கிறது என தெரியப்படுத்தும்.  இதை சுமார் 600 மருத்துவமனையில் டச் ஸ்கிரீன் கியாஸ்க் எனும் தொடு கணினி மூலம் மக்களே அறியும் வகையில் உருவாக்கப் பட்டது. என்னுடைய ஹெல்த்கேர் (Health Care) டிவிஷன் இந்த பொறுப்பை ஏற்று சுமார் 3  மாதத்திற்குள் செய்து சமர்ப்பித்தது. இதில் டெஸ்ட் செய்யப்பட்ட 100 பேரில் 96.7 பேருக்கு சரியான ரிஸல்ட் வந்தது தான் என்னுடைய சக்ஸஸ்.  இதை நானும் என்னுடைய டீமும் செய்ய உறுதுனையாக இருந்த இன்னொரு முக்கிய பங்கு யுனிவர்ஸிட்டி ஆஃப் நாட்டிங்காம் - University of Nottingham.   இது செய்து கொடுத்த போதே இது நம்ம ஊருக்கு கொண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.  ஆனால் இரண்டு வருட எக்ஸ்குலிஸ்வ் கான்டிராக்ட் (Exclusive Contract)  மற்றும் என் டி ஏ (NDA - Non Disclosure Agreement) காரணம் தான். இது இன்றோடு இரண்டு வருடம் முடிவதால் இன்றிலிருந்து  நான் யாருக்கும் ஷேர் செய்யலாம். இது பேஸிக் வர்ஷன் தான்.   இதன் அட்வான்ஸ் வெர்ஷன் சீக்கிரம் வெளியிடுவேன். மற்றும் இதை இலவசமாக நீங்கள் உபயோகப் படுத்த ஒரு பெர்மிஷனும் தேவை இல்லை. இதை உங்கள் கிளினிக்குகோ அல்லது மருத்துவமனைக்கோ பயன்படுத்த என்னிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.  இதன் காப்புரிமை (PATENT) என் பெயரிலும் என்னுடைய கம்பெனியான "இன்ஸைட் ஹெல்த்கேர்" - Insight Healthcare மற்றும் "இன்ஸைட் குளோபல் குருப் - அமெரிக்கா" Insight Global Group - USA, " நாம்ட் - நார்த் அமெரிக்கன் மெடிக்கல் டெக்னாலஜி" - NAMT - North American Medical Technologies - Canada க்கு சொந்தமானது. இதை வியாபார ரீதியாக பயன்ப்டுத்த மற்றும் இதன் லைசன்ஸை உங்கள் மருத்துவமனை இனையதளத்தில் யூஸ் பண்ண கண்டிப்பாக அனுமதி தேவை.

இன்றே நீங்கள்  மற்றும் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் நண்பர்கள் எல்லோரும் இதை ஃப்ரீயாக டெஸ்ட் செய்து ஹார்ட் அட்டாக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது ஒரு அறிவியல் ஆய்வு தான் இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்று வழி இல்லை. 

நீங்கள்  முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குள் 8% அல்லது அதுக்கு மேல் வந்தால் நீங்கள் உடனே உங்கள் ஃபேமிலி டாக்டர் அல்ல்து கார்டியோ ஸ்பெஸலிஸ்டிடம் உடனே செல்லுங்கள்.   அட்வான்ஸ் வெர்ஸனில் மட்டுமே எந்த வயதில் உங்களுக்கு வரும் என தெரியவரும்.

எங்கே போகிறது இந்தியநாடு? - சில்லறை வர்த்தகத்திலும் உலகமயமாக்கலா?...‏

ஏற்கனவே கோமாளிகளின் கூடாரமாய் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் புதிதாய் ஒரு அதிமேதாவித்தன முடிவை அறிவித்திருக்கிறார்கள்.

‘’சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு’’….

இதுவரை நாறிக்கொண்டிருக்கும் நடந்த ஊழல்கள் போதாதென்று அடுத்து எங்கே ஆட்டையைப் போடலாம்?... எவரிடம் நாட்டை அடகு வைத்து பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம்?... என்று ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்னவோ தெரியவில்லை.

நாட்டின் பொருளாதாரத்தை கனவிலும் நினைக்காத அளவுக்கு மேம்படுத்தலாம்… கறுப்புப்பணத்தை மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால் அதிமேதாவி நிதி அமைச்சர் ஆயிரத்தெட்டு முனகல்களை வெட்கம் இல்லாமல் முனுமுனுக்கிறார். அவ்வப்போது தான்தான் நிதியமைச்சர் என்பதை நிரூபித்துக்கொள்ள ‘’பணவீக்கம் கவலையளிக்கிறது’’… ‘’விலைவாசி உயர்வு கவலையளிக்கிறது’’… என்று மூன்றாம்தர மனிதன்போல பேட்டியளிக்கிறார். பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், சிக்கல்களை திறம்படத்தீர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்தான் நிதியமைச்சர் என்ற பதவி என்பது இவர்களுக்கெல்லாம் எப்போது புரியுமோ தெரியவில்லை?... விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் நினைத்து வெறுமனே கவலை மட்டும் பட்டுக்கொண்டிருக்க வீணே ஒரு அமைச்சரவை எதற்கு?

இது எல்லாவற்றுக்கும் மேல் நமது மேதகு பாரதப்பிரதமர்… அலுங்காமல் குலுங்காமல் பவனி வருவதோடு சரி… பொருளாதாரப்புலி என்று ஒருகாலத்தில் புகழப்பட்ட பழங்கதையோடு சரி…. பிரதமரான பின் உருப்படியாய் சாதித்தது என்று ஒரு மண்ணாங்கட்டியும் இருப்பதாய் தெரியவில்லை. விவசாயம், நீர்வளமேம்பாடு, விலைவாசி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று கவனத்தில் கொள்ளவேண்டிய எந்த விஷயங்களையும் கவனித்ததாய் தெரியவில்லை. சீனாவுக்கு எதிரான ராஜதந்திரமாய் நினைத்துக்கொண்டு சிறிலங்காவிற்கு உதவிக்கொண்டிருக்கும் முட்டாள்தனமும் புரியவில்லை. ஊழல் மேல் ஊழலாய் சந்தி சிரித்தாலும், ஊழலுக்கு எதிராய் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் எடுத்து வருவதாய் அவ்வப்போது அறிக்கை வாசிக்கும் பிரதமரை நினைத்து நாட்டு மக்களாகிய நாமெல்லாம் அழுவதா… சிரிப்பதா என்றே தெரியவில்லை!.

பயபுள்ளக நம்மள நோண்டாம விடாது போலயிருக்கே...!!!


ஏற்கனவே விலைவாசி உயர்வைப்பற்றி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே டீசலையும், பெட்ரோலையும் மாறிமாறி விலையை உயர்த்திக்கொண்டிருப்பது போதாதென்று இப்போது புதிதாய்… சில்லறை வர்த்தகத்தில் பொருளாதாரப்புரட்சி செய்ய புத்திசாலித்தன முடிவெடுத்திருக்கிறார்கள் இந்த மேதாவிக்கூட்டத்தினர்.

சரி... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் நமக்கென்ன நஷ்டம் என்று கேட்கும் மக்கள் கூட்டமும் இருக்கக்கூடும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? என்றொரு அலசல் நிச்சயம் அவசியமானதுதான்.

சில்லறை வர்த்தகம் என்றால் என்ன?...

மக்களாகிய நாம் நமது அன்றாடத் தேவைகளை நமக்கு விருப்பப்பட்ட கடைகளில் வாங்கிக்கொண்டிருக்கிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். மொத்த விற்பனையாளர்(whole sale merchant)… சில்லறை விற்பனையாளர்(Retail merchant) இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்திருக்கும். அதுதான் சில்லறை வர்த்தகம். இன்னும் எளிதாகச் சொல்லவேண்டுமானால் அண்ணாச்சிக்கடையில் அன்றாடம் நாம் மளிகைச்சாமான்களை வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். ரோட்டோரக்கடைகளில் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம்.


சரி… இப்போது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் என்ன பெரிதாய் குடி முழுகிவிடப்போகிறது என்று கேட்பவரும் இருக்கலாம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமை நாடாக்கினர் என்பதுதான் நாம் சிறுவயது முதலே நமது பாடப்புத்தகங்களில் படித்துவரும் செய்தி. அவ்வாறான பாடங்களை நமது கல்வியில் புகுத்திய அரசாங்கமே இன்று நமது நாட்டில் வியாபாரம் செய்வதற்கு வெளிநாட்டவரை அனுமதிக்கிறது. ஏற்கனவே உலகமயமாக்கல் பொருளாதாரத்தை இந்தியாவுக்குள் புகுத்திய மாமேதைகள் அதே உலகமயமாக்குதலில் நாட்டுக்கு தேவையான நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றவைகளை, நமது மக்களை நேரடியாக பாதிப்பவைகளை நாட்டுக்குள் அண்டாமல் பாதுகாத்தால் உலகமயமாக்கல் ஒரு வேளை வரமாய் அமையலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையுமே உலகமயமாக்கும் பட்சத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாய் ஒருநாளில் அதளபாதாளத்தில் வீழ நேரலாம். உலகமயமாக்குதலே கூடாது என்பதல்ல எனது கருத்து. உலகமயமாக்கலில் நமது வளர்ச்சிக்கு தேவையானவற்றை மட்டும் செயல்படுத்தலாம். உதாரணமாக உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையால் நமது இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பல தரமானப்பொருட்கள் உலகச்சந்தையில் இடம் பெறலாம். நன்மைகளும் தீமைகளும் கலந்து கிடக்கும் உலகமயமாக்குதல் கொள்கையில் நன்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து செயல்படுத்துவதுதான் உண்மையிலேயே மக்களுக்காக செயல்படும் ஒரு அரசு செய்யவேண்டிய கடமையாகும். ஆனால் அதை விடுத்து வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து தனது பெட்டியை மட்டும் நிரப்பிக்கொண்டு நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கலாம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நடக்கப்போவது என்ன?... முதலில் நமது சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்கள் நமது சுதேசி விற்பனையாளர்களை விட கூடுதல் கொள்முதல் விலையில் பொருட்களை வாங்கி குறைந்த விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். நம்மைப்பற்றி சொல்லவேண்டுமா?... மற்ற இடங்களைவிட ஒரு பொருள் ஒரு இடத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கிறதென்றால் அந்த இடத்தை மொய்த்துவிடமாட்டோமா என்ன? ஒரு கட்டத்தில் சுதேசி சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளரின்றி நஷ்டத்தை சமாளிக்க இயலாமல் கடைகளை மூடிவிட்டு நடையைக்கட்டும் நிலை உருவாகும். அதையே எதிர்பார்த்து காத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் சுதேசி விற்பனையாளர்களின் கொள்முதல் நின்ற பிறகு, தான் மட்டும்தான் என்ற நிலை வந்த பிறகு தனது கொள்முதல் விலையை அதிரடியாகக் குறைக்கும். விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தும். பாதிக்கப்படப்போவது இந்தியர்களாகிய நாம்தான்.

உதாரணத்துடன் சொல்லவேண்டுமானால் காய்கறி வியாபாரத்தை எடுத்துக்கொள்ளலாம். காய்கறி வியாபாரத்தில் சில்லறை வணிகத்தில் நுழையும் நிறுவனமானது முதலில் காய்கறியை விளைவிக்கும் விவசாயிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து மக்களாகிய நம்மிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். இதனால் அதிக விலை கிடைக்கும் காரணத்தால் விவசாயிகள் இந்த நிறுவனங்களிடமே தங்கள் விளைச்சலை கொடுக்கத்தொடங்குவார்கள். குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களாகிய நாமும் நமது உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்துவிட்டு இந்த நிறுவனங்களிடமே காய்கறி வாங்கத்துவங்குவோம்.

இதனால் நமக்கு நன்மைதானே என்று நினைக்கலாம். ஆரம்பத்தில் நன்மைதான்… ஆனால் ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளெல்லாம் நஷ்டத்தில் நொடிந்தபிறகு இந்த நிறுவனங்களை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைமை விவசாயிகளுக்கும் மக்களாகிய நமக்கும் உருவாகும். அந்தச்சூழலில் கொள்முதல் மற்றும் விற்பனை விலை இரண்டையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த நிறுவனங்களின் கால்களில் கிடக்கும். விளையும் பொருட்களை விவசாயி இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தரைமட்டமான விலைக்கு விற்றே ஆகவேண்டும். மக்களாகிய நாம் இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அநியாய விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.

இதனால்… சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதென்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்புதானேயொழிய இதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் வரும் என்பதெல்லாம் வெட்டிவிவாதங்களே!.

ஏற்கனவே நமது பிராவிடண்ட் ஃபண்டு போன்ற பணங்களை பங்குச்சந்தையிலும் வெளிநாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்யும் முட்டாள்தனத்தை யோசித்துக்கொண்டிருக்கும் நமது அரசு, நல்ல இலாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொதுவுடமை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கும் முட்டாள்தனத்தை முனைந்து கொண்டிருக்கும் நமது அரசு, சில்லறை வர்த்தகத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்து நமது உழைப்பையும், பணத்தையும் அடுத்தவன் சுரண்டிக்கொண்டு போக பட்டுக்கம்பளம் விரிக்கத்தயாராகிறது. அரசே மக்கள் நலனை அலட்சியப்படுத்தி இதை அனுமதிக்கும் பட்சத்தில், மக்களாகிய நாம்தான் இது போன்ற நிறுவனங்களின் வியாபாரச்சூழ்ச்சிக்குள் சிக்கி விடாமல் உஷாராய் இருந்தாகவேண்டுமே தவிர வெறொன்றும் வழியிருப்பதாய் தெரியவில்லை.

மற்றபடி… தமிழகத்தின் பால்விலை உயர்வு, பேருந்துகட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு பற்றியெல்லாம் நான் பதிவு எழுதாததற்கு இதெல்லாம் தேர்தலுக்கு முன்னரே நான்  கணித்து எழுதியதுதான் காரணம்.

Wednesday, November 23, 2011

ஆதார்-தேசிய அடையாள அட்டை -ஏன்? எதற்கு ?

நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள்.  இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகதான்  தேசிய அடையாள அட்டை இருக்கும்.

காரணம் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். 

நீண்ட நாள் விவாதத்தில் இருந்த இந்த விவகாரம், சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்கியது. இப்பணி இப்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து இப்பணி நடைபெறுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவோ, அடையாள அட்டை பெறவோ கட்டணம் ஏதும் கிடையாது. குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக யுடாய் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். 

அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது  விண்ணப்பத்துடன், இருப்பிடம், அடையாள சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் செல்ல வேண்டும். அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. புகைப்படம் எடுக்கப்படும். 

விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு 14 இலக்க வரிசை எண் கொண்ட ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணை கொண்டு விண்ணப்ப பரிசீலனை நிலவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1800-180-1947 என்ற இலவச தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில்.... அஞ்சல் துறை மூலம் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 25ம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல்  ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர், பூங்காநகர், தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டது. மேலும் 21ம் தேதி முதல் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகங்களில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இப்பணிகள் விரிவுபடுத்தப்படும். விண்ணப்பித்த 45 முதல் 60 நாட்களுக்குள் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பதாரருக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்க முடியும். 

ஆனால், அதற்கு முன்பே சென்னையில் இந்திய வங்கி கிளைகள் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.  அதையடுத்துதான் அஞ்சல் துறை மூலம் தொடங்கியுள்ளனர். அங்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விரல் ரேகை பதிவு, கருவிழிப்பதிவு, புகைப்படம் எடுத்தல் ஆவணங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளாலும், அஞ்சலக ஊழியர்களே கூடுதலாக இப்பணியை கவனிக்க வேண்டி உள்ளதால் இந்த நிலைமை.  

இப்படி குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெற வேண்டிய நிலை, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் முழுமையாக அடையாள அட்டையை வழங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதிலும் பல இடங்களில் அஞ்சலகங்களை மூடிவிட்டனர். இந்நிலையில், மார்ச் 2012க்கும் தமிழகத்தில் 2 லட்சம் விண்ணப்பங்களை பெற  அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.இதை சரி செய்ய தனியார் நிறுவனங்களையும், 
வேலையில்லா பட்டதாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக  சென்னையின் பல்வேறு இடங்களில் இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு  பயிற்சி அளிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் முதல் கட்டமாக 250 பேர் பயிற்சி பெற்று வருகினறனர். அப்பணிகள் முடிந்ததும் முழு அளவில் அடையாள அட்டை வழங்கும் பணி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை அட்டை
நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற  விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும். 

அதுமட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும்போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள்.  ரயில்வே டிக்கெட்டுக்கும் தேவைப்படும்! ஆன்லைனில், தட்கலில் ரயில்வே முன்பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு வழங்கும் அடையாள அட்டை, பாஸ்போர்ட்,  வருமானவரி நிரந்தர கணக்கு எண்,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம் என ஏதாவது ஒரு ஆவணத்தை ரயில்வே கேட்கிறது. தேசிய அடையாள அட்டை வந்தபிறகு ஓரே ஒரு ஆவணமாக பயன்படுத்தப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்திய பிறகு இந்த முடிவு அமலுக்கு வரும்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும்

தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.  

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை, 

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது,  கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி , இருப்பிடச் சான்றிதழ். சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம்.



http://tamilnadupost.nic.in/


http://uidai.gov.in/

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...