Monday, November 7, 2011

தி.மு.க. ‘முதல்’ குடும்பத்தின், ‘பரிதி டீல்’ என்ன என்று தெரியுமா?


 தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதி தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக திட்டங்களை ஒருபக்கமாக தீட்டிக் கொண்டிருக்க, அவர் மூலமாக ‘தி.மு.க. முதல் குடும்பத்தை’ சிக்கலுக்கு உள்ளாக்கும் முயற்சிகள் மற்றொரு புறமாக நடப்பதாகத் தெரியவருகின்றது.


பரிதி நினைத்தால் தி.மு.க. முதல் குடும்பத்தின் தூண் ஒன்று, துவண்டு விழும் என்பதே இந்த முயற்சிகளின் மெயின் தீம்.
விஷயமறிந்தவர்கள், “தி.மு.க. முதல் குடும்பத்துக்கு எதிரான பெறுமதி வாய்ந்த சில தகவல்களை பரிதியால் கொடுக்க முடியும்” என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். “அவருக்கு தெரிந்துதான் பல விஷயங்களை நடத்தி முடித்துக் கொண்டார்கள். ஒரு வகையில் சொல்லப்போனால், அவற்றை முடித்துக் கொடுத்ததே இவர்தான்” என்கிறார்கள்.
இவர்கள் குறிப்பிடும் விவகாரம், சென்னையின் மதிப்பு மிக்க பகுதிகளில், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுடன் தொடர்புடையவை. சென்னை மாநகர் அபிவிருத்தி அதிகாரசபையால் (Chennai Metropolitan Development Authority – CMDA) சட்ட விரோதமாக வழங்கப்பட்ட அனுமதிகளின் உதவியுடன் கட்டப்பட்ட பல சொத்துக்கள் இவை.
முதல் குடும்பத்துடன் தொடர்புடைய யார், பரிதியை தொடர்பு கொண்டு காரியங்களைச் செய்து கொண்டார்கள் என்ற விஷயம் லீக்காகி விட்டது.  பெயர்கள் உள்ளன.  ஆனால்,  ஆதாரம் கிடையாது.
பரிதி நினைத்தால் ஆதாரங்களைக் கொடுக்க முடியும். ஆனால், கூடவே அவரும் மாட்டிக் கொள்வார்.  இதெல்லாம் ஒருவிதமான  வலைப்பின்னல் டீல்கள்.
இந்த விவகாரத்தில் நல்ல பரிச்சயம் உடைய ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தோம். “தமிழக அரசின் ஒரு துறை, இந்த விவகாரங்கள் பற்றி கடந்த மூன்று மாதங்களாகவே தகவல் திரட்டி வருகின்றது. அவர்கள் தகவல் திரட்டும் விஷயம் லீக் ஆகிய பின்னரே, பரிதி விவகாரம் அரங்கேறியது” என்றார் கண்களைச் சிமிட்டியபடி.
“பரிதி விவகாரத்தில், உண்மைக் கதை வெளியே தெரிய வராது. கலைஞர் குடும்பத்துக்கும் அவருக்கும் இடையேயுள்ள விவகாரம், நிச்சயமாக கட்சி விவகாரமல்ல. விவகாரம் நிஜமானதா, அல்லது அதுவே ஒரு செட்டப்பா என்பதுகூட மர்மம்தான். பரிதியை வைத்து சில விஷயங்களை வெளியே கொண்டுவரும் முயற்சிகள் நடப்பது உண்மைதான். அது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது” என்றார் அவர்.
அதற்குமேல் விபரம் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
“ஒரேயொரு விஷயத்தை மாத்திரமாவது சொல்லுங்கள். இதில் நிஜமாகவே பெரிய விஷயம் ஏதாவது உள்ளதா? அல்லது சும்மா எக்ஸாகரேட் பண்ணுகிறார்களா?” என்று கேட்டோம்.
ஒரு கணம் யோசித்த அவர், “இந்த அனுமதிகள் யாரால் வழங்கப்பட்டன? லைசென்ஸ்கள் யாருடைய பெயர்களில் உள்ளன? சொத்துக்கள் யாருடைய பெயர்களில் உள்ளன? இந்த 3 கேள்விகளுக்கும்தான் தமிழக அரசு பதில்களை தேடுகிறது.
இருந்து பாருங்கள், அதில் எதுவும் சிக்காது.
அனுமதி பெறப்படுவதற்குமுன், இந்தச் சொத்துக்கள் கடைசியாக யாருடைய பெயரில் இருந்து, யாருடைய பெயருக்கு மாறின என்ற பழைய ஹிஸ்டரியில்தான் இருக்கிறது சூட்சுமம்.  யாராவது இன்பர்மேஷன் கொடுக்காமல் அதைப் பிடிப்பது கஷ்டம்தான். காரணம், கைதேர்ந்த முறையில் ஒருவித ‘மழுப்பலான’  ரிஜிஸ்ட்ரேஷன் செய்திருப்பார்கள்” என்றார்.
புரிந்து கொண்டோம்.. புரிந்து கொண்டோம்.. அட்ரா சக்கை, ‘Virtual Ownership’ விவகாரம்தானே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...