Tuesday, November 8, 2011

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஆவணங்களை சுப்பிரமணிய சாமிக்கு வழங்க வேண்டும்:சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவு


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஆவணங்களை சுப்பிரமணிய சாமிக்கு வழங்க வேண்டும்:சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவு
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் இன்று நடந்தது.அப்போது, சுப்பிரமணிய சாமி நேரில் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில்,
 
"2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்கள் வழங்கும் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆவணங்களை 2009-ம் ஆண்டு சி.பி.ஐ. பறிமுதல் செய்தது. அவற்றில், ப.சிதம்பரத்தின் கையெழுத்துடன் கூடிய தஸ்தாவேஜுகள் உள்ளன. இதையொட்டி ப.சிதம்பரத்துக்கும், ஆ.ராசாவுக்கும் இடையே கடித போக்குவரத்து நடந்துள்ளது.
 
அவை, இந்த ஊழலில் அவருக்கு உள்ள தொடர்பை நிரூபிப்பவை. அந்த ஆவணங்கள் அனைத்தும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குக்கு அவசியமானவை என்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டேன். ஆனால், வழக்கு விசாரணை நடைபெறுவதால் கோர்ட்டை அணுகுமாறு கூறிவிட்டனர். எனவே, சி.பி.ஐ. பதிவேட்டில் இருந்து அந்த ஆவணங்களை பிரதி எடுக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
 
அவருடைய கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை சுப்பிரமணிய சாமிக்கு அளிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...