Saturday, November 5, 2011

ஆ.ராசா ஜாமீனில் வெளிவராமல் இருக்கும் காரணம்....!

னிமொழி மட்டுமல்ல தி.மு.க-வினரே பெரிதும் நம்பி இருந்தது நவம்பர் 3-ம் தேதியைத்தான்!

கருணாநிதி டெல்லி வந்து சோனியா காந்தியை சந்தித்துப் பேசியதும், 'கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர்களின் ஜாமீனுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் எண்ணம் இல்லைஎன சி.பி.ஐ. அறிவித்ததும் கனிமொழிக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. 

தி.மு.க-வின் சட்ட ஆலோசகர்களும் 'ஜாமீன் உறுதிஎன்றே, கனி மொழிக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.அதனால், வழக்கத்திற்கு மீறி புன்னகையுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார், கனிமொழி. 

திரண்​டிருந்த கட்சிக்காரர்களைப் பார்த்து வணக்​கம் சொன்னபடியே வந்தார். அடுத்த சில நிமிடங்களில் நீதிபதி ஷைனியும்  அறைக்குள் நுழைந்தார். அடுத்த இரண்டாவது நிமிடம்...  'ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்என்று  நீதிபதி ஷைனி அறிவிக்க, அந்த அறையே கண்ணீர் மயமானது.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத கனிமொழி, தனது வழக்கறிஞர்களிடம் ஷைனியின் உத்தரவு குறித்து தெளிவாகக் கேட்டார். அடுத்த சில நிமிடங்​களிலேயே தன்னை சகஜமாக்கிக் கொண்டார். மகளிரணி நிர்வாகி ஒருவர் கனிமொழியின் கைகளைப் பற்றியபடி கதற, ''இது கோர்ட். இங்கே அழக் கூடாது'' என்றார் கனிமொழி. அப்போது தாங்கமாட்டாத கண்ணீருடன் ராஜாத்தி அம்மாள் அவரது அருகில் வர, கனிமொழிக்கே ஒரு மாதிரியாகி விட்டது.

''நீங்க அழுவுறதால என்னம்மா நடக்கப்​போகுது... தைரியம் சொல்ல வேண்டிய இடத்துல இருந்துகிட்டு நீங்களே அழலாமா?'' என கனி மொழி  தேற்றினாலும் ராஜாத்தியின் கண்ணீர் குறையவில்லை. ஒரு கட்டத்தில் சிறுபிள்ளை போல் தேம்பத் தொடங்கிவிட்ட ராஜாத்தியை  தோளோடு சாய்த்து கனிமொழி தேற்ற... அங்கே இருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் கலங்கிப் போனார்கள்.

அந்த துயரச் சூழலிலும் டெல்லி நிருபர்கள் சிலர் கனிமொழியிடம் சில கேள்விகளைக் கேட்க, ''நான் எதுவும் பேசக்கூடாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க!'' என்றார் கனிமொழி.

அதை சட்டை செய்து கொள்ளாமல் சில பெண் நிருபர்கள் கனிமொழியை சூழ்ந்து கொள்ள, ''குடும்ப ரீதியாக நான் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. இங்கே வந்தும் தொந்தரவு பண்றீங்களே...'' என கனிமொழி டென்ஷனாக, அடுத்த கணமே நிருபர்களை அப்புறப்படுத்தும் படலம் அரங்கேறியது.

குடும்ப உறவுகளும் முக்கிய கட்சிக்காரர்களும் மட்டுமே இருந்த அந்த அறையில் கனிமொழி பேசிய விஷயங்கள் ரொம்பவே உருக்கமானவை. முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ், ''இப்படி ஆயிடிச்சேம்மா...'' எனக் கண்ணீரோடு சொல்ல ''ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தானே ஆகுது. எல்லா கஷ்டமும் எனக்குப் பழகிப் போயிடுச்சு. நீங்க கவலைப்படாதீங்க!'' என்றார் கனிமொழி.

''ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் என் பெயர் அடிபட ஆரம்பிச்சப்போ எனக்கு ஆச்சர்யமா இருந்தது. காரணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்போ நான் தீவிர அரசியலுக்கே வரலை. எம்.பி-யாகவும் ஆகலை. எதுக்கு இதில நம்ம பேரை இழுக்கிறாங்கன்னு கோபப்பட்டேன். அதிகாரி​களுக்கும் இதுபற்றி புரியும்னு நினைச்சேன். ஆனா, சாதாரண சர்ச்சையில் தொடங்கிய விஷயம் கைது, விசாரணை, ஜெயில்னு நீண்டுக்கிட்டே இருக்குது. சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவிக்காத நிலையிலும் ஜாமீன் மறுக்கப்படுது. இதுக்காக யார் மேல நான் வருத்தப்பட முடியும்? என் வாழ்க்கையில நல்லது ஏதும் நடந்தாத்தான் ஆச்சர்யம். கெட்டதுதான் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கே!'' எனச் சொல்லி கனிமொழி வழக்கம் போல் சிரிக்க, அங்கிருந்த பலருக்கு கண்ணில் நீர் கோத்துக் கொண்டது.

உளைச்சலும் உருக்கமுமாக நகர்ந்த அந்த நிமிடங்களில் நாமும் கலந்திருந்தோம். நம்மை அடையாளம் கண்டு வணக்கம் தெரிவித்தவரிடம் '''ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி உயர் நீதிமன்றத்தை அணுகச் சொல்லி இருக்கிறார். ஆனால், அது சாத்தியப்படாத விஷயம் என வழக்கறிஞர்கள் சிலர் சொல்கிறார்களே?'' என நாம் வருத்தம் காட்ட, ''வழக்கு சம்பந்தமா நான் எதும் பேசக் கூடாது. அதெல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும். நான் ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை வரும்னு கற்பனை கூட பண்ணிப் பார்த்தது இல்லை. ஆனா, இன்னிக்கு அந்த ஜெயிலே உலகமாயிடுச்சு. எனக்குச் சாதகமாவோ பாதகமாவோ  என்ன நடந்தாலும் நான் அதைச் சட்டை பண்ற நிலையில் இல்லை. இன்னிக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதற்காக நான் கவலைப்படவில்லை. இப்படி எல்லாம் ஆகலாம்னு மனசை அதுக்குத் தயாராத்தான் வைச்சிருந்தேன். ஆனால், எனக்கு ஜாமீன் கிடைக்கும்னு இத்தனைபேர் தமிழ்நாட்டுல இருந்து இங்க வந்திருக்காங்க. அவங்களோட எதிர்பார்ப்பு பொய்யாப் போனதை நினைச்சுதான் வருத்தமா இருக்கு. ஜாமீனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் என் மொத்த வாழ்க்கையும் திகாரிலேயே முடிஞ்சாலும், அதை இன் முகத்தோட ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். இத்தனை வருஷ வாழ்க்கையில இந்தக் கடைசி அஞ்சாறு மாதங்களை என்னால மறக்கவே முடியாது."

"படவேண்டிய அடி எல்லாத்தையும் பட்டாச்சு. இனி எந்தக் கஷ்டத்தாலும் என்னை வருத்தப்படுத்த முடியாது. பரபரப்பு, குற்றச்சாட்டு, கைது, விமர்சனம், அவமானம், துரோகம், துயரம், எதிர்ப்பு, ஏமாற்றம்னு எல்லாத்தையும் கடந்தாச்சு. சாவைத் தவிர சகலத்தையும் பார்த்தாச்சு. எதையும் எதிர்கொள்கிற பக்குவத்தை ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு நான் கொடுத்த விலைதான் ரொம்பப் பெருசு!'' - விரக்தியாய் சிரிக்கிறார் கனிமொழி.


அம்மாவை ஆறுதல் படுத்தி, மகனுக்கு தைரியம் சொல்லி, கட்சிக் காரர்களை நம்பிக்கையூட்டி, வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி நிமிர்கிற கனிமொழியை ஆச்சரியமாகப் பார்க்கிறோம். வாட்சைக் காட்டி போலீஸ் அதிகாரிகள் ஏதோ சொல்ல, ''ஓ... தாராளமாகக் கிளம்பலாமே...'' என்றபடி கோர்ட்டுக்கு அருகே நிற்கும் வேனில் ஏறச் சென்றார். குழுமி இருந்த கட்சிக்காரர்களை வணங்கியபடி, மாறாத புன்னகையோடு திகாருக்கு கிளம்பினார் நாளைய தி.மு.க-வின் தவிர்க்க முடியாத, அந்த சக்தி!

- டெல்லியில் இருந்து இரா.சரவணன்

 ஜூவி வாசகர்கள் வேறெந்த செய்தி ஊடகங்களையும் பார்க்க மாட்டார்கள் என்று அசட்டுத் துணிச்சலா? ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அதுவே உண்மை போலாகிவிடும் என்ற கோயபல்ஸ் காலத்து நம்பிக்கையா? அல்லது அதையும் தாண்டி யாருக்கோ எச்சரிக்கை, சங்கேதமா?

இருபதை மாட்டிவிட்டு அறுபது தப்பித்துக் கொண்டது என்ற புகைச்சல் ஏற்கெனெவே இருக்கிறது.அறுபது கூட எண்பது + உம் சேர்ந்தே உள்ளே போக வேண்டியிருக்குமோ என்ற கலக்கம் கூட முன்னர் இருந்தது.இருபதை உள்ளே வைத்தால் அறுபதை சும்மா விடுவேனா என்ற மிரட்டல் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது! கேடிகளில் பெரும் கேடிகளான பேரன்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கலாகி ஒன்றரை மாதங்களாகிறது. பேரன்கள் இருக்குமிடமே தெரியாமல், அவ்வளவு அமைதி!பேரன்களுக்கு உதவி செய்கிற மேலிடத்துப் புள்ளி யார் என்பதை ஊகிக்க சிரமப்படவே வேண்டாம்! அஹமதான படேல் இருக்கக் கவலை எதற்கு?

******

கனிமொழிக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்ட பிறகுதான், இங்கே நிறையப்பேருக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்ற வாளிகளாகக் கைது செய்யப்பட்டிருப்பவர்களில் இதுவரை ஆ.ராசா ஒருவர்தான் ஜாமீனுக்கு விண்ணப்பிக்காதவர் என்ற தகவலே கொஞ்சம் விநோதமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது!

மூன்று நான்கு விளக்கங்களைக் கண்டு பிடித்துச் சொல்லி
ருக்கிறார்கள்! முதலாவதாக, திமுக தலைமையிடமிருந்து கனிமொழி  வெளியே வருவதற்கு முன்னால் முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக! 
அடுத்து, நான் குற்றமற்றவன் என்று நிரூபித்துவிட்டுத் தான் வெளியே வருவேன் என்று ஆ.ராசா சூளுரைத்திருப்பதாக!
அப்புறம், திஹார் சிறைக்குள் இருப்பதுதான் தனக்கும் தனது உயிருக்கும் பாதுகாப்பு என்று ஆ.ராசாவே கருதுவதாக!

இதில் எது உண்மையாக இருக்கும்? கண்டுபிடிக்க முடிந்தால், அதை உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்! பின்னூட்டத்தில் யுரேகா என்று கண்டுபிடிப்பைச் சொல்ல வேண்டாம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...