கருணையின்றி கலங்கும் கனிமொழி!
நிரூபனின் நாற்று வலை
நிரூபனின் நாற்று வலை
ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்
முற்பணக் கேள்வியின்றி
அலைக் கற்றையினை
அரை விலையில் கொடுத்தேன் - அப்பன்
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது
ஏல அடிப்படையில்
எல்லோருக்கும் பங்குகளை கொடுத்திருந்தால்
இன்று எனக்கிந்த நிலை வருமா?
தப்புச் செய்தவன் தண்ணி குடிக்கனுமாம்
யாரோ ஒரு ஆன்றோன் தமிழில்
எழுதி வைத்து விட்டு போய் விட்டான்,
அப்பன் சொற் கேட்டு ஆட்டையை போட நினைத்து
வெப்பம் மிகுந்த திஹாரில் வெதுமி வாடுறேன் நான்!
ஜாமீன் கேட்டும் நிராகரித்த பின்னர்
கருணை கிடைக்காதா என ஏங்குகிறேன் ஏன்?
உணர்வும் பாசமும் எனக்குள் இருக்கெனநினைவுபடுத்தி நிற்கிறான் என் மகன்,
மனதில் பிள்ளைப் பாசம் வாட்ட
உடலை திஹார் வெப்பம் சுட்டெரிக்க
வெளியே போய் வாழ(க்) www.thamilnattu.com
கருணை ஜாமீன் கேட்டேன்
காரி என் முகத்தில் உமிழாத குறையாக
என் முகம் வாடிப் போகும் வண்ணம்
தில்லி நீதிமன்றம் தீர்ப்புத் தருகிறது! www.thamilnattu.com
வில்லியாய் நான் இருந்து பல
அரசியற் கொலைகளா செய்தேன்? - இல்லையே!
கலைஞரின் நேசமிகு தமிழ்(ப்)
பிள்ளையாய் அல்லவா
பிறந்து தொலைத்து விட்டேன்!
துன்பத்தில் உழன்று வாடித் துடிக்கும் எனை
பார்த்த பின்னுமா சிபிஐ குற்றவாளி
மன்றத்தில் ஏற்றிப் பார்த்து மகிழ நினைக்கிறது?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
கதிரையின்றி கவலையுறும் கலைஞர்!
தூக்கமில்லை!
கொஞ்ச நாளாய்
என் கற்பனையில்
ஏதும் தோன்றவில்லை!
ஆட்சிக் கதிரை மட்டும்
அடியேனின் நினைப்பை விட்டு
இன்னும் அகலவில்லை!
உயிர் போகும் நிலை வரின்
பதவியிலே உட்கார்ந்திருக்கையில்
சட்டமன்றக் கதிரையிலே
போக வேண்டுமென எண்ணியிருந்தேன்!
ஆனால் என் கட்சியின் பெயரால்
கரன்சியில் கொள்ளை செய்து
கதிரைக்கும் வைத்து விட்டார்களே ஆப்பு!
ஊழலிலே உலகளாவிய ரீதியில் நாம
தான் டாப்பு என இப்போது பேச்சு!
மகளைப் பிரிந்த துயர் ஒரு புறம்
ஈழம் பற்றி நான் ஈனப் பிழைப்பு செய்திருக்க
என் பேரன் உதயநிதியோ
ஆளும் தமிழினம் ஏழாம் அறிவில்
அறிக்கை வேறு விட்டிருக்கானே!
முடியலையே! தமிழ்த் தாயே!
நான் வாடுகிறேன்!
முந்த நாள் பதவி வந்த ஜே செய்யும்
செயல்களால் நொந்து அறிக்கை விட
வார்த்தைகளைத் தேடுகிறேன்!
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
பாட நோட்டுப் புக்கில்
என் பெயரை புகுத்தி
தமிழ்க் கூட்டிதென
சுவைக்கச் சொன்னேன்
அம்மா ஜெயலலிதா இப்போது
என் பெயரைத் தேடி வைக்கும்
வேட்டினை எதிர்க்க வழியின்றி
வெம்பி வாடுகின்றேன்!
No comments:
Post a Comment