Monday, April 30, 2012

விஜய் டிவியில் ஒரு கொள்ளை கும்பல்

விஜய் டிவியில்  ஒரு கொள்ளை கும்பல் ….
மக்களை ஏமாற்றுவது எப்படி ?

ஒரு கோடி  பணம் தருவதாக சொல்லி ஒரு
புரோகிராம் பண்ணி நம்மிடமிருந்தே
கோடி கோடியாகக் கொள்ளை
அடிக்கிறது ஒரு கும்பல்.

எப்படி ?
ரொம்ப சிம்பிள் -
மக்களை ஏமாற்ற வழிகள் எத்தனையோ -
ஆனால்   பார்முலா ஒன்று  தான். தாம்  
ஏமாற்றப் படுகிறோம் என்பது மக்களுக்குத்
தெரியாமலே அவர்களை
ஏமாற்றிப் பிடுங்க வேண்டும்.
அதில் தான் சாமர்த்தியம்.
அதுவும் கேரளத்தவருக்கு சொல்லிக்
கொடுக்கவும் வேண்டுமா ? (விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்

-
அவர்களே !)

டிவியில் – பத்திரிகைகளில் -
பரபரப்பாக ஏகப்பட்ட  விளம்பரங்கள்.

“உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய
ஒரு கேள்வி – பதில் சொல்லி -ஒரு கோடியை வெல்ல  வாருங்கள் “- என்று
கவர்ச்சிகரமான  அழைப்பு !

மிக  மிக சுலபமான (அபத்தமான என்று கூட
சொல்லலாம்!) ஒரு கேள்வி -
உதாரணம் -
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள,-
அணுமின் நிலையத்துடன் தொடர்பு கொண்ட இடம் -
கீழ்க்கண்ட 4 பதில்களில் எது சரி ? -

1) காங்கேயம்     2) கூடங்குளம்
3) கோயம்புத்தூர்    4) கோவில்பட்டி

இன்றைய தேதியில், தினந்தோறும் செய்தியில்
அடிபடும் கூடங்குளம் அணுமின் நிலையம்
பற்றி அறியாதோர் எத்தனை பேர்
தமிழ் நாட்டில் இருப்பார்கள் ?

ஆஹா -இவ்வளவு சுலபமான கேள்விகளா –
என்று  கவர்ந்து இழுக்கப்பட்டு, உடனடியாக
பதில் அனுப்ப வேண்டும் என்கிற அவா –
டெம்ப்டேஷன் -ஏற்படாதவர்களே இருக்க
முடியாது.
பதில் அனுப்பும் முறையோ – படு சுலபம்.

அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணுக்கு -
செல்போனில் குறுஞ்செய்தி (sms ) அனுப்பலாம்.
அல்லது அவர்கள் கொடுத்திருக்கும்
4 எண்களில் எதாவது
ஒன்றிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பதிலை பதிவு செய்யலாம்.

சரி -  இதில்  மக்கள் எந்த விதத்தில்
ஏமாற்றப்படுகிறார்கள் ?

ஒன்று -  அநேகமாக அத்தனை பேருமே
சரியான விடை அனுப்பி இருக்கக்கூடிய நிலையில், அடுத்த நிலைக்கு
(next stage ) போட்டியாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது
எங்கும் விளம்பரப்படுத்தப்படவில்லை.
சரியான விடை அளிக்கும் அத்தனை பேரும்
அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்
என்பது எங்குமே சொல்லப்படவில்லை.  
போட்டியின் முக்கியமான விதிமுறை எங்குமே
சொல்லப்படாமலே போட்டிக்கு வலை வீசப்படுகிறது.

இரண்டு – இது மிக பயங்கரமான ஒரு மோசடி.
கோடிக்கணக்கான  நபர்கள் தொலைபேசி
அல்லது sms மூலம்
தொடர்பு கொள்வார்கள் என்கிற நிலையில்,
தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
செய்துகொண்டு,  இந்த விளம்பரம் வாயிலாக வரும் அழைப்புகளுக்கு
ஒரு அழைப்புக்கு இவ்வளவு ரூபாய்
நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு
தரப்பட வேண்டும் என்கிற வகையில்
ஒரு ஏற்பாடு.

இந்த பணத்தை தொலைபேசி நிறுவனங்கள்
தங்கள் பங்கிலிருந்துகொடுக்க வேண்டாம்.
அதை உபயோகிப்பாளர்களிடமிருந்து
வசூலித்து  கொடுக்க வேண்டும் – அவ்வளவு தான்.

அதெப்படி – உபயோகிப்பாளர்கள் அவ்வளவு
சுலபமாகக் கொடுத்து விடுவார்களா ?

இங்கு தான் இருக்கிறது ட்ரிக்.
சாதாரணமாக  ஒரு  sms க்கு 50 காசுகள் என்றால்,
இந்த அழைப்பிற்கு மட்டும்
சில கம்பெனிகளுக்கு 5 ரூ.,    சிலதுக்கு 6 ரூ., ஒரு கம்பெனிக்கு ரூபாய் 6.99 . …
என்று பில்லில் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கு ஒத்துக்கொண்டு தான் நீங்கள் இந்த
வசதியை பயன்படுத்துகிறீர்கள் !

நாங்கள் எப்போது ஒத்துக்கொண்டோம்
என்கிறீர்களா ?
அந்த விளம்பரங்களுக்கு கீழேயே கண்களுக்குப்
புலப்படாத எழுத்துக்களில் இந்த கண்டிஷன் கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தொலைபேசி வசதிகளை  நாம் உபயோகித்து
பதிலை அனுப்புவதன் மூலம், அதை  படித்து,
ஏற்றுக்கொண்டு தான்
பயன்படுத்துகிறோம் என்பதை  நாம் உறுதி
செய்கிறோம்.(நமக்கு தெரியாமலே!)

உங்கள் வீட்டில் இந்த விளம்பரங்கள் கொண்ட
பத்திரிகைகள் இருந்தால் மீண்டும் எடுத்துப்
பாருங்கள். நாம் ஏமாந்திருப்பது புரியும்.

சில சிறுவர்களிடம் நான் பேசிப் பார்த்தபோது
இதன் விபரீதம் புரிந்தது.  சிலர் 4, 5 பதில்கள்
கூட அனுப்பி இருக்கிறார்கள்.  சிலர் வெவ்வெறு தொலைபேசிகளை

பயன்படுத்தி பல பதில்களை
அனுப்பி இருக்கிறார்கள்.
ஆசை  !! டிவியில் தோன்ற ஆசை –
போட்டியில் வெல்ல ஆசை !!

இந்த தொலைபேசி அழைப்புகளின் மூலம்,  
sms களின் மூலம் – தொலைபேசி நிறுவனங்கள்
மூலமாக பல கோடி ரூபாயை
நம்மிடமிருந்து – நமக்குத் தெரியாமலே -
அபகரித்துக்கொண்டு,
அதிலிருந்து , அப்படி கொள்ளை அடித்த
பணத்திலிருந்து ஒரு பகுதியை பரிசாக
கொடுக்கப் போகிறார்கள் !

இப்பேற்பட்ட ஒரு மெகா மோசடியை எப்படி
யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்
என்பது தான் புரியவில்லை.  காவல்துறை
இத்தகைய மெகா திட்டங்கள், போட்டிகளை
கண்காணித்து உரிய  எச்சரிக்கைகளை
கொடுத்திருக்க வேண்டும்.
போட்டி தொலைக்காட்சிகள் பல  இருக்கின்றன -
அவையும் காட்டிக் கொடுக்கவில்லை.
(ஒரு வேளை பின்னால் அவர்களும் இதே
வழியில் இறங்கத் தீர்மானித்திருக்கலாம் ).
பத்திரிகைகளாவது விழிப்புணர்வுடன் இவற்றை
எல்லாம் கவனித்து  மக்களுக்கு
எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா ?
(ofcourse – ஒரு பத்திரிகை விடாமல், அத்தனை
பத்திரிகைகளையும்
“கவனித்து” கொண்டிருக்கிறார்கள் -)
எல்லாவற்றிற்கும் அரை அரை  பக்கங்களில்
ஏகப்பட்ட விளம்பரங்கள் -
அதுவும் காரணமாக இருக்கலாம் !

பண்டிகை காலங்களில் அனுப்பப்படும்
வாழ்த்துச்செய்திகள் அடங்கிய sms களுக்கு
அதிக தொகை வசூலிப்பதை கூட
ஆட்சேபித்திருக்கும் தொலை தொடர்பு
ஒழுங்குமுறைஆணையம்  இதை,
இந்த முறைகேட்டை, மோசடியை கவனிக்க
வேண்டும்.  உடனடியாக நடவடிக்கை எடுத்து
மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை
தவிர்க்க வேண்டும்.

மக்களும்  தங்களது கடுமையான எதிர்ப்பை
விஜய் டிவி க்கு தெரிவிக்க வேண்டும்.

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை
ஏமாற்றுபவர்கள்  இருக்கத்தான் செய்வார்கள்.
நாம்  தான் ஏமாறுவதிலேயே -
பெருமை கொள்பவர்கள் ஆயிற்றே !


கார்த்தி ப.சி. – டாக்டர் சுவாமி

கார்த்தி ப.சி.  -  டாக்டர் சுவாமி சொல்வதில் எது  எது பொய் என்று மட்டும் சொன்னால்   போதும் – எது எது நிஜம  என்பதை நாமே  புரிந்து கொள்ளலாமே !!
டாக்டர் சுவாமி அடுத்து சில  கணைகளை வீசி இருக்கிறார் ! இந்த முறை எதிரில் இருப்பது கார்த்தி ப.சி. யும் அவரது தந்தையும் !

சம்பந்தப்பட்ட கம்பெனிகள் பெயர் ஒன்றைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாது – யாரும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடாது என்றே இப்படி பெயர்  வைத்திருப்பார்கள் போலிருக்கிறது !
டாக்டர் சுவாமி சொன்னதிலிருந்து சில விஷயங்கள் – மிகச்சுருக்கமாக -
1)   ஆஸ்ப்ரிட்ஜ் ஹோல்டிங்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் – 2) கைசர் சூர்யா சமுத்திர ரிசார்ட்  ப்ரைவேட் லிமிடெட்- 3) அட்வான்டேஜ் ஸ்ட்ராடேஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் 4) ஏர்செல் டெலிவேன்சர்ஸ்
முதல் கம்பெனியில் 94% பங்கு வைத்திருப்பதன் காரணமாக அதன் முதலாளியாகிறார் கார்த்தி ப.சி.
முதல் கம்பெனி அதிக அளவில் இரண்டாவது கம்பெனியில் முதலீடு செய்திருப்பதால் இரண்டாவது கம்பெனியும் முதல் கம்பெனியின் கட்டுப்பாட்டில் வருகிறது. இரண்டாவது கம்பெனி சென்னையை அடுத்த முத்துக்காட்டை ஒட்டிய கடற்கரை ஓரத்தில், நூறு கோடி ரூபாய்  பட்ஜெட்டில் -  100 ரூம்கள் கொண்ட ஒரு சூப்பர் விடுமுறை வாசஸ்தலம் ( luxury holiday resorts ) அமைக்க 4.62 ஹெக்டேர் நிலத்தை திமுக ஆட்சியின் போது கையகப்படுத்துகிறது. கடற்கரை ஓரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தான சகலவித அனுமதிகளையும்  அதற்கு  மிதமிஞ்சிய வேகத்தில் திமுக அரசு  அளிக்கிறது.
இது குறித்து உரிய விசாரணம் நடத்துமாறு தமிழக முதலமைச்சருக்கு டாக்டர் சுவாமி  ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார். ஆறு நாட்களுக்குள்ளாக, கார்த்தி இரண்டாவது கம்பெனியின் டைரக்டர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார். இத்தனையும் நடந்திருப்பது ஏப்ரல் மாதத்தில் !
- எனக்குத் தெரிந்து இந்த செய்தி இதுவரை எந்த தமிழ் பத்திரிகைகளிலும் (ஜூனியர் விகடனில் கூட ) வரவில்லை – ஏனோ தெரியவில்லை !
———————————-
அடுத்து -
முதல் கம்பெனி  அதிக அளவு பங்கை வைத்திருப்பதால் – மூன்றாவது கம்பெனியும் முதல் கம்பெனி கட்டுப்பாட்டின்  கீழ வருகிறது !
மூன்றாவது கம்பெனி – நான்காவது கம்பெனிக்கு கன்சல்டேஷன் (?) கொடுத்த வகையில் நான்காவது கம்பெனி – மூன்றாவது கம்பெனிக்கு 2006-ம் வருடத்தில்  ரூபாய்  26,00,444/- பணம் கொடுக்க முன்வருகிறது. மூன்றாவது கம்பெனி பணத்திற்கு பதிலாக அதே  கம்பெனியில் (இதே கம்பெனி தான் பிற்காலத்தில் ஏர்செல் என்று மாறுகிறது ) ஷேர் ஆக கொடுத்து விடச்சொல்கிறது. ( அந்த நான்காவது கம்பெனியைத்தான் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் நிறுவனம் பின்னர் விலைக்கு வாங்கிக்கொள்கிறது. )
மூன்றாவது   கம்பெனிக்கு, நான்காவது கம்பெனி  பணத்திற்கு பதிலாக ஷேர் கொடுக்கும் விஷயம் இழுத்தடிக்கிறது.  ஆனால்  ஷேர் விஷயம் செட்டில் ஆகும் வரை மலேசிய கம்பெனிக்கு  ஏர்செல் கம்பெனியை வாங்குவதற்காக நிதி அமைச்சகம் கொடுக்க வேண்டிய  அனுமதி  கிடைப்பதில்லை. ஷேர்விஷயம் சரியானவுடன் அனுமதி கிடைத்து விடுகிறது !
இது தந்தை மகனுக்கு ஆற்றிய  உதவி என்று சொல்கிறார் சுவாமி  !    ——————————-
அடுத்து -
டாக்டர் சுவாமி இந்த விவரங்களை  டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படுத்திய பிறகு,  மூன்றாவது  கம்பெனி – டாக்டர் சுவாமி மீது பொய்யான புகார்களை கூறியதற்காக தங்கள் கம்பெனி   மானநஷ்ட வழக்கு போடப்போவதாக  ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. இந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சக பத்திரிகைத் தொடர்பு பிரிவைச்சேர்ந்த  அலுவலர்களால் விநியோகம் செய்யப்பட்டதாக செய்தி வெளிவருகிறது. ஒரு தனியார் கம்பெனி அறிக்கை உள்துறை அமைச்சகப் பிரிவால் விநியோகம் செய்யபடுவானேன் என்று  கேட்கிறார் டாக்டர் சுவாமி ! .
இதென்னையா கேள்வி -  தந்தை மகனுக்கு இதைக்கூட ஆற்றக்கூடாதா ? என்கிறார்கள் வேண்டப்பட்டவர்கள்  !
————————-
அடுத்து -
- கம்பெனிக்கு வழக்கு போடும் உரிமை எப்படி வரும் ? நான் கார்த்தியைப் பற்றி தானே கூறினேன் – அவர் தான் வழக்கு போட முடியும் ! கார்த்தி என்மீது வழக்கு போட்டால் மகிழ்ச்சியாக சந்திப்பேன் – குறுக்கு விசாரணை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும் அல்லவா என்கிறார் டாக்டர் சுவாமி.
————————————
அடுத்து -
காங்கிரஸ் கட்சி டாக்டர் சுப்ரமணியன்சுவாமி சொன்னதை வன்மையாக மறுக்கிறது. மத்திய அரசும் – சுவாமி பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்  என்று  கூறுகிறது. தனிப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை – கட்சியோ அரசோ மறுப்பது வியப்பாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் அல்லவா இதை செய்ய வேண்டும் ?
—————————————-
ஆனால் – இத்தனைக்கு  பிறகும்  இதுவரை  – தனயனோ, தந்தையோ எந்தவித கருத்துக்களையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை !
டாக்டர் சுவாமி சொல்வது முழுவதும் பொய்யோ – அல்லது பாதி நிஜம பாதி பொய்யோ  – நமக்குத் தெரியாது. எந்தப் பகுதி  பொய் என்பதை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் சொல்லி விட்டால் போதும் – எல்லாவற்றையும் விளக்கியாக வேண்டும் என்று அவர்களை அனாவசியமாக கஷ்டப்படுத்த வேண்டாம் – மீதியை  நாமே புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே ! !

நன்றியில் கூட நஞ்சைக் கலக்கிறார் கருணாநிதி


பழ.கருப்பையா அதிரடி தகவல்.

கருணாநிதி முதல்வர் பதவி பெற நடந்த சம்பவங்களில் மறக்கப்பட்ட தகவல்களை 
பழ. கருப்பையா எழுதியுள்ள கருணாநிதி என்ன கடவுளா?” எனும் புத்தகத்தில் எழுதியது.


என்னை முதலமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்என்று சட்டப்பேரவையில் கருணாநிதி பேசியிருப்பதாகச் செய்தித்தாளில் பார்த்தவுடன் நம்ப முடியவில்லை! ஒருமுறைக்கு இருமுறை படித்தபோதும் நம்ப முடியவில்லை. அப்புறம் ஒன்றுக்கு மூன்று செய்தித் தாள்களும் அந்தப் பேச்சை உறுதிப் படுத்தியவுடன் தான் அப்படி அவர் பேசியிறுப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆராய வேண்டியதாயிற்று! சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழியாயிற்று

நன்றி கொன்ற குற்றத்திற்கு ஆளாக வேண்டாம் என்று மனச்சாட்சி சுட்ட காரணத்தால், வாழ்வின் மாலைப் பொழுதிலாவது இந்த அரிய வரலாற்று உண்மையை ஏற்றுக் கொண்டு, அலைபாயும் மனத்திற்கு அமைதி தேடிக் கொள்ளலாம் என்றெல்லாம் கருதுபவரில்லை கருணாநிதி!

மேலும் னச்சாட்சி என்பது ஒருவகை மன ஒழுங்கு! ஒரு பெண் கற்பைப் போற்றுவதும், அதன்படி ஒழுகுவதும் எப்படி அறிவும் உறுதியும் சார்ந்ததோ, அப்படி மனச்சாட்சியை முன்னிறுத்தி ஒழுகுவதற்கும் அறிவும் உறுதிப்பாடும் வேண்டும்! மனச்சாட்சி இட்லருக்கு இருந்ததா? முசோலினிக்கு இருந்ததா? செங்கிஸ்கானுக்கு இருந்ததா? தைமூருக்கு இருந்ததா?


ஆட்சிக் கட்டிலில் அமர்வது எளிதான ஒன்றில்லை! அதற்குச் சாம, பேத, தான, தண்டங்களைக் கடைப்பிடிப்பதென்பது வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கின்ற ஒன்றுதான்! கருணாநிதி இவற்றையெல்லாம் கடைப்பிடித்துத்தான் அந்த இடத்தைப் பிடித்தார் என்பதும் நாடறிந்த ஒன்றுதான்.

கருணாநிதி முதல்வரான பிறகு நெஞ்சுக்கு நீதிஎன்னும் பெயரில் தன்வரலாறு எழுதத் தொடங்கி, இப்போது ஐந்தாவது பாகம் வந்து விட்டது! வேறு யாரும் தன்னுடைய வரலாற்றை எழுதி விடாமல், தானே பாகம் பாகமாய்க் கருணாநிதி எழுதக் காரணம், தன்னுடைய வசதிக்கு உண்மைகளை வளைத்துக் கொள்ளத்தான்! எல்லாவற்றையும் ஆக்குவதும் அழிப்பதும் தான் தான் என்பது அவருடைய நம்பிக்கை! ஊத வேண்டியதை ஊதிப் பெரிதாக்கி, அழிக்க வேண்டிய அசிங்கங்களைத் தடம் தெரியாமல் அழித்து விட்டால், வரலாறு தன் விருப்பப்படி அமைத்து விடும் என்பது கருணாநிதியின் நினைப்பு!

அதனால் நெஞ்சுக்கு நீதி முதலாம் பாகத்தில் தான் முதல்வராவதற்கு என்னென்ன பேரங்கள் பேச வேண்டியிருந்தது என்பதையெல்லாம் மறைப்பதற்காக, அவருடைய பிறப்பிலேயே மிகப்பெரிதான முதல்வர் பதவியை அடைந்ததைக்கூட மிகவும் சுருக்கிக் கொண்டு, நான்கே வரிகளில் முடித்துக்கொண்டு விட்டார்!

அவர் பிறந்தது, வளர்ந்தது, ‘ஓடி வந்த இந்திப் பெண்ணேஎன்று திருவாரூர்த் தேரோடும் வீதியில் ஓலமிட்டது, கல்லக்குடியில் ஓடாத ரயிலுக்கு முன்னே தண்டாவளத்தில் தலைவைத்துப் படுத்தது என்று பக்கம் பக்கமாக எழுதும் கருணாநிதி முடியாமல் சுருக்கி கொள்ள வேண்டியதாயிற்று!

10-02-1969ல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஏ.கோவிந்தசாமி தலைமையில் கூடியது. அதன்பின் காத்துக் கொண்டிருந்த செய்தியாளர்களிடம் தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் மு. கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நாவலர்கள் அவர்கள் தெரிவித்தார்கள். (நெஞ்சுக்கு நீதி 1: பக் 752)

நாவலரே ஒருமனதாகக் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்என்று சொல்லி விட்டதாகக் கருணாநிதி ஒரு வரியில் சுருக்கி விட்டதன் மூலம், நாவலர் களத்தில் இருந்தார் என்பதையும், அவர் பெயரும் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது என்பதையும், ஏற்கனவே கருணாநிதி நாவலர் வீட்டுக்கு நேரடியாகச் சென்று, ‘என்னை முதல்வராகும்படி சொல்கிறார்கள்; நாவலர் இருக்கையில் நான் எப்படி ஆக முடியும் என்று ஒரே வரியில் சொல்லிவிட்டேன்என்று நாவலரைச் செயல்படத் தேவையில்லை என்பதுபோல் நம்ப வைத்து முடக்கி விட்டுக் கடைசியில் கழுத்தறுத்து விட்டதையும் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு, மனக் கசப்போடு நாவலர் வெளியேறி விட்டார் என்பன போன்ற அசிங்கங்களை எல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் முதல்வரான களிப்பைக்கூட வெளிப்படுத்தாமல் சுருக்கிக் கொள்கிறார் கருணாநிதி!

இதயக் கோயிலில் இறைவனாகவே கொலுவேறி விட்ட அண்ணனின் சிலைக்கு மாலை அணிவித்த கதையையும், கடற்கரையில் உள்ள கல்லறையில் மலர் வளையம் வைத்து வணங்கி நின்ற கதையையும், அண்ணா அமர்ந்த நாற்காலியைப் பார்த்து உருகிவிட்ட கதையையும்’ (மேற்படி ப.752) கருணாநிதி பேசும்போது, பக்தியின் முதிர்வால் பரவசநிலை எய்தி விடுகிறார்!

இறந்தவர்களை இறைவனாக்குவது பழந்தமிழர் மரபுதான்; ஆனால் பகுத்தறிவாளர்களின் மரபில்லை! இறந்தவர்களுக்குக் கல்லெடுத்துவணங்குவது பழந்தமிழர் மரபுதான்; ஆனால், கல்லறையை வணங்குவது பகுத்தறிவாளர்களின் மரபில்லை! பெரியார் எந்தச் சமாதியிலும் மலர்வளையம் வைத்து வணங்கியதாகவோ, இறந்தவர்களை இறைவனாக அறிவித்ததாகவோ செய்தி இல்லை! பெரியாருடைய கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றிய ஒரே ஆள் பெரியார்தான் போலிருக்கிறது!

கருணாநிதி தன்னுடைய வரலாற்று நூலுக்கு, ‘நெஞ்சுக்கு நீதிஎன்று பெயரிட்ட்து இன்னொரு கொடுமை! போலி மருந்துகளின் வெற்றி அசல் மருந்துகளாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில்தானே இருக்கிறது!

அண்ணா இனித் தேற மாட்டார் என்னும் முடிவை மருத்துவர் மில்லருக்கு முன்பாகவே எடுத்து விட்டார் கருணாநிதி! காலியாகப் போகும் நாற்காலியில் அமரத் துடிக்கும் ஒருவர் எல்லாவற்றையும் முன்கூட்டியே சிந்திப்பது ஒரு அரசியல் வாதிக்குள்ள இயற்கையான உந்துதல்தானே!

அதற்கான வேலைகளை அண்ணா உயிரோடிருக்கும்போதே கருணாநிதி தொடங்கி விட்டார்’ (ப.476) என்று நெடுஞ்செழியன் எழுதுகிறார். நெடுஞ்செழியனின் தன்வரலாற்று நூலுக்குக்கண்டதும் கேட்டதும்என்று பெயர்!

இருந்தாலும் அண்ணாவுக்கு அடுத்தபடியாகக் கழக்கத்தில் மூத்த தலைவராகவும், மூத்த அமைச்சராகவும் இருந்து வந்த நான்தான் முதலமைச்சராக வருவேன் என்று நல்லவர்களும் பொது மக்களும் எதிர்பார்த்திருந்தனர்’ (ப.477) என்று நெடுஞ்செழியன் எழுதுவதிலிருந்து, எல்லாரும் தன்னிடம் வந்து, ‘தாங்கள்தான் இந்த மணிமுடியை ஏற்றருள வேண்டும்என்று சொல்லுவதை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது!

நெடுஞ்செழியனைப் பொதுச் செயலாளராக்கி, ‘தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம் வா!என்று அண்ணா தன்னுடைய பெருந்தன்மை காரணமாகக் கூறிய சொற்களின் மயக்கத்திலிருந்து நெடுஞ்செழியன் இன்னும் விடுபடவில்லை என்று தெரிகிறது! அதனால்தான் தி.மு.க. வளர அண்ணாவுக்கு அடுத்தபடி காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்-ஐப் பார்த்து அவருடைய ஆதரவைக் கேட்பதைக்கூட இன்றியமையாததாக நெடுஞ்செழியன் நினைக்கவில்லை!

எம்.ஜி.ஆர். கழக எம்.எல்.ஏக்கள் பலரையும் இராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் ஆதரவைக் கருணாநிதிக்குத் திரட்டித் தரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்’ (ப.477) என்று வேறு சொல்லுகின்ற நெடுஞ்செழியன், தன் பங்குக்குச் செய்ய வேண்டியது என்ன என்று கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை!

ஆளுக்கொரு கட்சியில் இரண்டாம் இடத்தில் வாழ்க்கை முழுவதும் அடை காப்பதற்கென்றே பிறந்தவர்கள் நெடுஞ்செழியனும் அன்பழகனும்! ஆனால் கருணாநிதியோ நிமிர்ந்தவனைக் காலைப் பிடிப்பார்; குனிந்தவனைக் குடும்பியைப் பிடிப்பார்!

எம்.ஜி.ஆர் தான் பெரிய கடவுள் என்று கும்பிட்டு விழுந்துதன் பக்கம் சேர்த்துக் கொண்டு விட்ட ஒரே காரணத்தால், கருணாநிதி வெற்றிக் குதிரையாகி விட்டார்!

இருந்தாலும் ப.உ. சண்முகம், மன்னை நாராயணசாமி, அன்பில் தருமலிங்கம், மதியழகன், சத்தியவாணி முத்து ஆகியோரிடமும் தரவேண்டியதைத் தந்து, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள்என்று சொல்லி எல்லாப் பேரங்களையும் முன் கூட்டியே முடித்து வைத்திருந்தார் கருணாநிதி! அந்தப் பேரப் பட்டியலில் சி.பா. ஆதித்தனாரும் ஒருவர்!

ஆதித்தனார் ஏராளமான பணத்தைச் செலவழித்து, எம்.எல்.ஏக்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து அவர்களின் ஆதரவைக் கருணாநிதிக்குப் பெற்றுத் தந்தார்’ (ப. 477) என்றும் நெடுஞ்செழியன் எழுதியிருக்கிறார்! ஆகக் குதிரை வாணிபமும் நடந்தேறியிருக்கிறது!

ஆதித்தனாரைக் கருணாநிதி மந்திரியாக்கியது அவர் ராபின்சன் பூங்காவில் தி.மு.க. வைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர் என்று கருதியா? இல்லையே! அவருடைய பணம் செய்த அளப்பரிய காரியங்களும் தன்னை முதல்வராக்க உதவியது என்பதால் தானே!

இவ்வளவுக்கும் பிறகும் எம்.ஜி.ஆர் அருள் சுரந்திருக்காவிட்டால், தான் வசனகர்த்தாவாகவே வாழ்க்கையைக் கழிக்க நேரிட்டிருக்கும் என்று வாய் தவறியும் கூடக் கருணாநிதி எங்கும் கூறியதில்லை. அவ்வளவு நன்றியுணர்ச்சி அவருக்கு! தான் சொல்லா விட்டாலும், நாடு அதை மறக்காமல் வைத்திருக்கிறது என்பதுதான் கருணாநிதிக்குள்ள அளப்பரிய கவலை! ஒரு பெருந்தலைவனாக வரலாற்றில் பரிணமிப்பதற்கு எம்.ஜி.ஆர் போட்ட பிச்சையால் ஏற்றம் பெற்றவர்என்னும் சொல் உகந்ததாகாது! நாற்பது ஆண்டுகளாக அந்த உண்மையைத் தான் அங்கீகரிக்க மறுத்தாலும், அந்த உண்மை மறைய மறுக்கிறதே என்னும் கவலை கருணாநிதியை அரித்துக் கொண்டிருந்தது!

அதனுடைய விளைவாகக் கருணாநிதி எம்.ஜி.ஆர் தான் தன்னை முதல்வராக்கினார் என்னும் உண்மையில் ஒரு பாதியை மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டு விட்டு, அதற்காகத் தான் இராமாவரம் தோட்டத்திற்கு அலையாய் அலைந்த மீதி உண்மையை முற்றாக மறைத்து விட்டு, எம்.ஜி.ஆர் தான் தன்னை முதல்வராக்கத் தன்னுடைய வீட்டுக்குத் தொடந்து இரண்டு மூன்று நாட்கள் அலையாய் அலைந்தார் என்று புதுக் கதை சேர்த்துச் சட்டப் பேரவையில் அவிழ்த்தார் கருணாநிதி!

கருணாநிதி முதல்வராக வேண்டாம் என்று குறுக்கே விழுந்து தடுத்தது அவருடைய குடும்பம்தானாம்!

எம்.ஜி.ஆர் என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார்; என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்; குறிப்பாக முரசொலிமாறன் நாவலர்தான் ஏற்றவர் என்று சொல்லியதையும், மாறன் வழியிலேயே நானும் நாவலர் பற்றிச் சொன்னதையும் ஏற்க மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்!

இவர்தான் முதலமைச்சராக ஆக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலுள்ளவர்களைச் சமாதானப்படுத்த இரண்டு மூன்று நாட்கள் வந்தார்!’ (கருணாநிதியின் சட்டமன்ற பேச்சு - தினத்தந்தி 14-10-2010)

கருணாநிதியின் இந்தச் சட்டமன்றப் பேச்சின் நோக்கம், மருமகன் ஆசைப்படவில்லை; மனைவி ஆசைப்படவில்லை; சகோதரிகளும் ஆசைப்படவில்லை; நானும் ஆசைப்படவில்லை; எம்.ஜி.ஆர் தான் ஆசைப்பட்டார் என்று சொல்லுவதுதான்! எம்.ஜி.ஆர் ஏன் ஆசைப் பட வேண்டும் என்பதற்கான விளக்கம் கருணாநிதி பேச்சில் காணப்படவில்லை. அதற்குள் நுழைந்தால் தொலைந்தார்!

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா கருணாநிதி? அதுவும் சட்டமன்றத்தில்!

நாடே தன்னை முதல்வராக்க்கத் தவமிருந்தது போலவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தன்னை முதல்வராகும்படி தொழுது கேட்டுக் கொண்டது போலவும், தன்னுடைய குடும்பம்தான் அதற்குத் தடையாக இருந்தது போலவும், தன் குடும்பத்தைச் சமாதானப்படுத்தாமல் தன்னை முதலமைச்சராக்க முடியாது என்பதால், எம்.ஜி.ஆர் இரண்டு மூன்று நாட்கள் கோபாலபுரத்திற்குப் புனிதப் பயணம் வந்ததாகவும் கருணாநிதி சொல்லியிருப்பது, இராமாவரம் தோட்டத்திற்குத் தான் அலகு குத்திக் கொண்டு பால் காவடியும், பன்னீர்க் காவடியும் எடுத்த அசிங்கத்தை மறைப்பதற்காகத்தான்! 

நன்றியில் கூட நஞ்சைக் கலக்கிறாரே கருணாநிதி!

எம்.ஜி.ஆர் தன்னை முதல்வராக்கினார் என்னும் தவிர்க்க இயலாத உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு, அதற்கொரு துணைக் கதையைக் கருணாநிதி சேர்ந்திருப்பது, வரலாற்றைத் தன் வசதிக்குத் திருப்பிக் கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையால்தான்!

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

தனி ஈழம் கோரி கருணாநிதி டெல்லியில் உண்ணாவிரதமிருப்பாரா? : ராமதாஸ் சவால்

தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என  பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும், கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழ் ஈழத்தை பற்றி பேசுவார். 18 எம்.பிக்களை வைத்துள்ள கருணாநிதி துணிச்சல் இருந்தால் டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கட்டும் என தெரிவித்தார்.
"டெசோ' அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் கருணாநிதி
இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், 1983ம் ஆண்டு, "டெசோ' (தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கழகம்) அமைப்பை கருணாநிதி துவங்கினார். சிறிது காலம் செயல்பட்ட இந்த அமைப்பு, பின் முடங்கிப் போனது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னைபொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் மீண்டும் தமிழ் ஈழம் அமைய மீண்டும், "டெசோ' அமைப்பை துவக்குவதாகவும் அறிவித்தார்.

தி.மு.க., தலைவரின், "திடீர்' தமிழ் ஈழ கோஷம் மற்றும் "டெசோ' அமைப்பு துவக்கத்தை நாடகம் என்று விமர்சித்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், அவற்றிற்கு ஆதரவளிக்கவோ, அதில் இணையவோ விரும்பவில்லை எனத் தெரிவித்தன.

முதல் கூட்டம் :இந்நிலையில், "டெசோ' அமைப்பின் முதல் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழ் ஈழம் அமைவதைத் தவிர, வேறு தீர்வு இல்லை என்ற நிலையை, உலக நாடுகள் உணரச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ் ஈழம் விரைவில் அமைய, ஐக்கிய நாடுகள் சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்; அதற்கு, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவு பெற முயற்சி:கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய கருணாநிதி, ""ஆட்சியில் இருந்த போதும், இலங்கைத் தமிழர்களுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களைக் கொன்றதால், இந்திய அமைதிப் படையை நான் முதல்வராக இருந்தபோது வரவேற்கச் செல்லவில்லை. ஜனநாயக ரீதியில், அறவழியில் இந்த போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. எங்களது முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவு பெற முயற்சிக்கிறோம்.

வித்தை காட்டுகிறார் கருணாநிதி - பழ.நெடுமாறன் தாக்கு
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது தடுக்காத கருணாநிதி, தற்போது உலகத்தமிழர்களை கவர தனக்கு தெரிந்த வித்தைகளை செய்து வருகிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த நெடுமாறன், இலங்கையில் 1977-ம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களித்துள்ளனர்.
அங்கு 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் ஈழத்தை முன்வைத்து போட்டியிட்டபோது ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் தமிழர்கள்தான் வெற்றி பெற்றனர்.

தமிழ் ஈழத்துக்கு 35 ஆண்டுகளாக அங்குள்ள தமிழர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை நான் எதிர்க்கவில்லை.

வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியேற்றிவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983-ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால், எங்கள் யாரிடமும் ஆலோசிக்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார்.

அதேபோல, இப்போதும் யாரிடமும் கேட்காமல் டெசோ மீண்டும் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

2009-ம் ஆண்டு ஒரு லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது, அதைத் தடுக்க எதையும் செய்யாததால் கருணாநிதி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர்.

அதை மாற்ற செம்மொழி மாநாடு தொடங்கி டெசோ வரை அவருக்குத் தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார்.


காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கருணாநிதி விலக விரும்புவதால் தமிழ் ஈழக் கோரிக்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
கலைஞர் ஐயா அறிவுரை மட்டும்தா சொல்வார்,ஆனால் அவர் பின்பற்றமாட்டார்.."ஒருவனுக்கு ஒருத்தி"என்று பூம்புகார் படத்தில் நமக்கு அறிவுரை சொல்லிவிட்டு அவர்மட்டும் மனைவி,துணைவி,மதுரை,என்றெல்லாம் வைத்து தொகுதிகளும் கொடுத்துள்ளார்.தமிழ்நாட்ட பங்கு போட்டுக்கிட்டாங்க, தமிழீனம் வந்தா அத கனிக்காவுக்கு பரிசா கொடுப்பாருனு நெனைக்கிறோம்.

சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இலங்கை தமிழர்கள் தனி ஈழம் பெற 'டெசோ' பாடுபடும்: கருணாநிதி பேட்டி
கேள்வி:- நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே? பதில் : நோ கமெண்ட்ஸ் கே:- இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே? பதில் ; நோ ........ கமெண்ட்ஸ் கே:- போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும். பதில் : கமெண்ட்ஸ் .......... நோ கமெண்ட்ஸ் கே:- பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? பதில் : ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் நோ கமெண்ட்ஸ் (பயத்துடன் ) மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா பதில் : நோ நோ ...... சாரி நோ கமெண்ட்ஸ் புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா? பதில் : நோ ...சாரி ... எஸ் சாரி .....நோ .....சாரி பாஸ் இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் : கமெண்ட்ஸ் ......... நோ கமெண்ட்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய மந்திரி அந்தோணி சொன்னாரா? பதில் : நோ .... கமெண்ட்ஸ் சாரி அப்பால சொல்வோம் நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் பதில் : நான் இல்ல எம் மவ ..... நோ கமெண்ட்ஸ் . நீங்க சாப்டீங்கள் பதில் : நோ .... இல்ல எஸ் ...... சாரி நோ கமெண்ட்ஸ் .
கே:- இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ப:- இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. இப்படியே இந்த அமைப்பை பயன்படுத்தி கட்சியை வளர்ப்பது அதன் மூலமாக கோடி கோடியா கொள்ளை அடிப்பது, தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனை படுகொலை செய்தவர்களோடு கூட்டு வைப்பது, கேவலம் இந்த ஆளு பேச்சை இனிமேல் கேட்டால் சத்தியமா தமிழ் ஈழம் மட்டுமல்ல தமிழ் நாடு சுடுகாடாகிவிடும் , ஜெயலலிதா கருணாநிதி, விஜயகாந்த் , சினிமா மோகம் இல்லாத தலைவர்கள் அட்சிவேண்டும் அது முழுக்க முழுக்க தமிழனால் நடத்தப்படவேண்டும் ஓட்டுவாங்கி அரசியல் இல்லாமல் ஒவொரு தமிழனும் பிறமொழிகளை கற்றுக்கொள்ளவேண்டும் அதே போல தமிழ் மொழியில் நல்ல இலக்கண அறிவும் இலக்கிய அறிவும் பெறவேண்டும் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மொழியில் கொண்டுவரவேண்டும் யார் வருவார் ? எமது துயர் துடைப்பார் இந்த தொடப்பை கட்டை அரசியல் புரோக்கர்களிடம் இருந்து விடுதலை பெற ?
எனது   கருத்து
அயோ...... சாமி உலக மகா நடிப்புடா. இப்படி ஒரு சுயநல வாத்திய, இப்படி ஒரு தமிழ் இன துரோகிய இதுவரைக்கு நான் பார்த்ததே இல்ல. உண்மைலேயே நீ தமிழனுக்கு நல்லது செய்யணும்னு நெனச்சனா தயவு செஞ்சு அமைப்ப கலைச்சுட்டு போயிரு. உன் கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்கறேன்.
இப்ப ஈழ தமிழர் மேல் திடீர் பாசம் எதற்கு ? மறுபடியும் ஒரு கொலை வெறிக்கா ?????
அய்யா உங்கள் அரசியலுக்கும் விளம்பரத்துக்கும் அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தான் இப்போதும் கிடைத்தார்களா? பிணங்கள் மீது அரசியல் நடத்தும் உங்கள் கீழ்த்தரமான எண்ணம் இன்னும் மாறவில்லையா? உங்களுக்கு எல்லாம் நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரம் இல்லையா? நல்ல பக்கவாத்தியம் வீரமணி. அரசியல் பிழைப்பு.
இப்படியே சொல்லி சொல்லியே 30 வருடமாக ஏமாற்றிக்கொண்டு வருகிறார் இந்த கருணாநிதி.
அய்யா நீங்கள் இதுவரை செய்த செயலுக்கு நன்றி . உமது சகுனி வாய மூடும் .
ஏம்பா, விவேக், வடிவேலு, சந்தானம் க்கு பதிலா ஏதாவது படத்தில வாய்ப்பு இருந்த இந்த மொக்க பீசுக்கு ஒரு சான்ஸ் குடுங்கப்பா. இம்ச தாங்க முடியல.

Saturday, April 28, 2012

இத்துப் போன திமுக!

சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக! 

ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.
ஆனா இம்முறைத் தேர்தல் நெருங்கி வரும் முன்பதாக இத்துப் போன கட்சியை எப்படியாச்சும் எதிர்க்கட்சி வரிசைல உட்காரச் செய்து சொத்துக்கு ஆசை கொண்ட சுய நல அரசியல் நடத்தாலாம்னு கெளம்பியிருக்காங்க கலைஞர் அண்ட் கோ மற்றும் கட்சி அடிப் பொடிகள். கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து ஈழ அரசியலை தொட்டு நக்கி தமிழக உள்ளங்களை ஏமாற்றி தறி கெட்ட அரசியல் நடத்தலாம்னு நெனைச்ச கழக தலமைகள் மறை கழண்ட கருநாய்நிதி மூலம் ஈழப் பிரச்சினைக்கு இலவச தீர்வு கொடுப்போம் என கெளம்பியிருக்காங்கோ! இனியும் ஏமாற உலகெல்லாம் பரந்து வாழும் பத்து கோடி தமிழர்கள் தயாரில்லை என்பதனை கலைஞர் கூட்டணி அண்மைக் காலத்தில் இக் கருத்து தொடர்பில் இடம் பெறும் சாட்டை அடி மூலம் உணர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்போது இத்துப் போன கட்சியை தக்க வைக்கும் இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்யும் நோக்கில் திமுக கட்சி தன் அல்லக் கைகளை ஆசை வார்த்தை காட்டி களமிறக்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக தான் கலைஞர் எனும் புளியங் கொம்பை பற்றி கொள்ளச் சொல்லி புத்தி சுவாதீனமற்ற சிலர் உளறியிருக்கிறார்கள். இப்படி ஓர் கட்டுரையை எழுதி விட்டு கலைஞரைச் சந்திக்க கோபாலபுரத்திற்கு நம்ம கட்டுரையாளர் செல்கிறார். அங்கே என்ன நடக்கிறது என்று அறிய ஆவலா? இதோ வாருங்கள்!
கோபாலபுரம் - கோபுரத்திலிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்ட இடம்!

கலைஞர், ஸ்டாலின், பிரச்சார பீரங்கி, மற்றும் சில கழக கண்மணிகள், கவிஞர் டாப்பு குத்து ஆகியோர் அபையில் இருக்காங்க.


கலைஞர்: இப்போ நம்ம கட்சி பத்தி வெளி உலகத்துல என்னல்லாம் பேசிக்கிறாங்கோ? 

ஸ்டாலின்: டீ.ராஜேந்தர் கட்சி கூட நம்ம கட்சியை முந்திட்டுதாம். நாம ரொம்ப அதள பாதாளத்தில இருக்கோம்னு பேசிக்கிறாங்க. அது மட்டுமா சொல்றாங்கோ! திமுக இனிமே ஆட்சியை புடிக்கவே முடியாதாம் அப்படீன்னு பேசிக்கிறாங்க. நம்ம ஆளுங்களை எல்லாம் திருத்த முடியாத கழுதைங்க அப்படீன்னு பேசி நாறடிக்கிறாங்க. நீங்க என்னைக்கு கட்சியை விட்டு ஓய்வு எடுக்கிறீங்களோ! அன்னைக்கு தான் தமிழகத்திற்கும், உலக தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும் என்று பேசிக்கிறாங்க.

கலைஞர்: இதுக்கெல்லாம் ஒரே வழி! சுவிஸ் பேங்ல இருக்கும் பணத்தை எடுத்து இலவச ரவுண்டை ஓப்பன் செய்வது தான். கட்சியை விட்டு நான் போவதா? ஓய்வு எடுப்பதா? தம்பிகளா அது இன்னும் 20 வருசத்திற்கு நடக்கவே நடக்காது.

அல்லக்கை அப்பா: அப்படீன்னா என் பொள்ளயோட எதிர்காலம் என்னாவது?

ஸ்டாலின்: சீ! போ கழுதை! நீயே ஒரு அல்லக்கை! ஒன் புள்ளைக்கு மட்டும் எதிர்காலம் தேவையா? 

கலைஞர்: சுவிஸ் பேங்ல இருக்கும் என் பணத்த்தை எடுத்து இலவச டீவி போல.. இனிமே இலவச நடிகை நடனம் காட்டுவோமா? 

கவிஞர் டாப்பு குத்து: அது முடியாது மன்னா! ஏனெனில் நம்ம பணம் இப்போது கனியிடமும், ராசாவிடமும் இழுபறி நிலையில் இருக்கு, நாம பணத்தில கை வைச்சா மறுபடியும் உள்ளே போக வேண்டி வரலாம்! 

கலைஞர்: இப்போது இதற்கு என்ன தீர்வு? எம் இழி நிலையை போக்க என்ன வழி?

கழக கண்மணிகள்: கட்சியை விட்டு நீங்க கதறி ஓடனும். கட்சியோட எதிர்காலத்தை இளைஞர்கள் கையில் கொடுக்கனும். இளைஞர் அணியில் இருக்கும் 50 வயசு முதியவர்களை உடனடியாக விரட்டி அடிக்கனும். 

கலைஞர்: அது தான் முடியவே முடியாதே! ஏன்னா உலகத்தில மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்த மூன்றும் தான் தீராத ஆசைன்னு சொல்லுவாங்க. இதில மண்ணாசை தீரலை என்பதால தான் நானே கட்சியோட கோவண துணியில தொங்கிட்டு இருக்கேன். பெண்ணாசை தீரலை என்பதால தான் அவ்வப்போது மானாட மயிலாட,பாசத் தலைவனுக்கு பாராட்டு விழான்னு வைச்சு மகிழ்ந்திட்டிருக்கேன்! இனிமே இப்படி பேசினீங்க? கட்சியை காங்கிரஸிற்கு தாரை வார்த்து கொடுத்திடுவேன்! 

கலைஞரின் பேச்சை கேட்டு கழக கண் மணிகள் அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள்!திரை மூடப்படுகின்றது. 

Friday, April 27, 2012

எப்படித்தான் இப்படி மாறி மாறி பேச முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால்.


தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில், வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்பதை வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுவதை நாம் காண்கிறோம்என்றும் பேசி புல்லரிக்க வைத்துவிட்டார்  கருணாநிதி.

வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுகிறார்களாம். உண்மையில் வெட்கப்பட வேண்டியவர் யார்? தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. அதை குறித்து கருணாநிதி என்றாவது சிந்தித்திருந்தால், வெட்கப்பட்டிருக்க மாட்டார். பல பேரை வெட்டி சாய்த்திருப்பார். நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஆற்காட்டாரே மின் துறைக்கு மந்திரியாக நீட்டிக்க விட்டது ஏன்?

நாடே காறி துப்பிய ஸ்பெக்ட்ரம் ராசாவை தூக்கி தூக்கி கொஞ்சியது ஏன்?


40 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை குப்பையில் தூக்கி வீசி, அந்த நிலத்தை ஆக்கிரமித்த வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து பம்மியது ஏன்?

ஆள் கடத்தல், அடிதடி என்று குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த ஈரோடு ராஜாவை மீண்டும் கட்டியணைத்தது ஏன்?

தென் மண்டலத்தில் பொட்டு சுரேஷ் போட்ட ஆட்டத்தை விட, அவருக்கு கால் அமுக்கி விட்ட அமைச்சர்களை பற்றி சொல்லும் போது, மெளனகுருவாக இருந்தது யார்?

தனக்கே தெரியாமல், தனது துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழிக்காக மந்திரி பதவி கேட்டு பேரம் பேசியதும், வோல்டாஸ் நிலத்தை அபகரித்ததையும் கண்டும் காணாமலும் இருந்தது யார்?

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் வந்த விவகாரத்தை இன்று வரை சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்? அந்த கடன் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது என்றதுமே, அக்கடன் தொகை எப்படி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை சொல்ல முடியவில்லையே ஏன்?

சாராய வியாபாரியும் லாட்டரி வியாபாரியும் கொடுத்த பணத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டு, நாட்டு மக்களை கண்டும் காணாமாலும் இருந்தது யார்?

சினிமா துறையையே தனது குடும்பம் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்ததை கண்டு, அகமகிழ்ந்தவர் யார்?

இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது, 300 கோடியில் செம்மொழி மாநாடு நடத்தியது யார்?

இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் உதவ முடியவில்லை என்று கேட்டால், “ஒரு அடிமை... இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்என்று கேட்டது யார்?

-இப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்ததே என்று ஒரு நாளாவது வெட்கப்பட்டிருந்தால்.... இந்த ஆட்சி போயிருக்குமா? அட... எப்படித்தான் இப்படி மாறி மாறி பேச முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...