Sunday, April 15, 2012

எதுவும் சுலபம் அல்ல .... ஆனால் எல்லாம் சாத்தியம் தான்.

ஒரு வழியாய் புத்தாண்டு பிறந்துவிட்டது.நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் அது பிறந்தே இருக்கும்.எத்தனை விதமான வாழ்த்துக்கள்.நேரில்,தொலைபேசியில்,குறுஞ்செய்திகளில்,மின்னஞ்சலில் இப்படி மட்டும் அல்லது முகம் அறியா நண்பர்களும் சந்திக்கும் போது வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டார்கள்,கொண்டேன்.பதிவுலகமும் மிக சிறப்பாக இருந்தது.சிறப்புப் பதிவு,கடந்த ஆண்டின் அரசியல்,சமூக,கலாச்சார,இயல்,இசை,திரை என அலசி ஆராய்ந்த பதிவுகள்.இனி இப்படி எல்லாம் நடக்க வேண்டாம்,இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற ரீதியில் பதிவுகள் , மகிழ்ச்சி.

                   ஒவ்வொரு நல்ல நாட்களில் நல்ல நாள் என்பது பலருக்கு பலவகைப் படலாம்.ஆங்கிலப் புத்தாண்டு,தமிழ்ப் புத்தாண்டு,தெலுகு வருடப் பிறப்பு,அவரவர் மதங்களின் அடிப்படையில் வரும் பண்டிகை நாட்கள் ,சமூக மாற்றங்கள் ஏற்ப்படுத்திய நாட்கள்,நாட்டின் முக்கிய விசேச நாட்கள்,நம்முடைய பிறந்த நாள்,திருமண நாள்,குழைந்தைகளின் பிறந்த நாட்கள்,நம்முடைய துணையின் பிறந்த நாள் இப்படி ஏராளமாய் .அந்த ஒவ்வொரு நாட்களிலும் நாம் செய்த தவறை திருத்திக் கொள்ளவும் ,சரி செய்யவும் என நினைத்து எதவாது ஒரு வகையில் ஒரு சபதம் ,லட்சியம்,எண்ணம் தோன்றும்.அப்படி நடந்துருக்குமாயின் இப்படி ஒரு எண்ணம் தோன்றாது என நினைக்கிறேன்.தவறு செய்வது மனித மனம் தான்.குறிப்பாக மனித இனம்.தவறின் அளவு கோள் சிறிது குறைந்தாலே மனிதனுக்கும்,சமூகத்திற்கும்,குடும்பத்திற்கும் நல்லது நடக்கும்.

                  அதே வேளையில் எந்த எண்ணம் ஏற்ப்பட்டாலும் அதில் எதிர் மறை எண்ணங்களை தவிர்த்தாலே சிறப்பு உடையதாய் இருக்கும்.பல கதைகளும்,சம்பவங்களும் ,கட்டுரைகளும் நம்மை மெருகேற்றவே செய்கின்றன.எத்தனையோ உதாரணங்கள் உண்டு.அதில் ஒன்றை நினவு படுத்திக் கொள்வோம். 
                      வெற்றியின் சின்னமாக நாம் கருதுவது ,நான்கு விரல்களை மடக்கி,கட்டை விரலை உயர்த்திக் காட்டுவது.அதனின் விளக்கங்களை பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது.
நம் கை விரல்களில் இருக்கும் ஐந்து விரல்களில் சுண்டு விரல் என்பது ,நாம் எதாவது என்னை எண்ணினாலோ அல்லது வரிசைப் படி யாரையாவது குறிப்பட செய்தாலோ முந்திக்கொண்டு வருவது இந்த விரல் தான்.இப்படி முந்திரித் தனமாய் எல்லாம் செய்யாமல் யோசித்து செய்தோம் எனில் சிறந்ததாக இருக்கும்.அடுத்து சுண்டு விரலுக்கு அருகில் இருக்கும் விரலின் பெயர் மோதிர விரல்.இது நம்முடைய பகட்டை காட்டும். பகட்டை காட்டாமலும் இருந்தால் மிகவும் நன்று . அடுத்த விரல் இருக்கும் விரல்களில் மிகப் பெரியது இதைப் போலவே நான் தான்பெரியவன் என எண்ணம் கொண்டால் நிலைமை அதோ கதிதான். பெரிய விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் இருப்பதின் பெயர் ஆட் காட்டி விரல் .நாம் செய்யும் தவறுகளை அடுத்தவர் மேல் திணிப்பதே இதன் பொருளாக எடுத்துக் கொள்வோம்.

இப்படி முந்திக்கொண்டு,நான் தான் மிக பொருள் படைத்தவன் ,நான் தான் மேலாவனவன்,எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என அடுத்தவரை கை காட்டுவதும் ,இதை எல்லாம் மடக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டினால் வெற்றி நம் வசமே..

கல்வியில் , தொழிலில்,பணியில்,சமூகத்தில்,குடும்பத்தில்,உறவுகளில் இப்படி எந்த வகையுலும் பல வித நிலை இருந்தாலும் எதுவும் சுலபம் அல்ல ...ஆனால் எல்லாம் சாத்தியம் தான்.

பின் குறிப்பு :இது உங்களுக்கு உபயோகமாக இருக்குமோ இல்லையோ ,நான் கண்டிப்பாய் பின் பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...