Thursday, April 26, 2012

கருணாநிதி வார்த்தை ஜாலம்

கருணாநிதி - வேஷம்

தமிழர்களின் ஞாபக மறதியின் பலனை பெரிதும் அனுபவித்தவர்
கலைஞராகவே இருக்க முடியும்.ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள
அவர் நடத்திய நாடங்களும்,ஒரு இனப் போராட்டத்திற்கு
காங்கிரசோடு துணை போனதும் தமிழன் எளிதில் மறந்து விடுவான்
என்பதே இப்படி துணிச்சலாய் அறிக்கை விட காரணம்.
இப்போது இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும்
சூழ்நிலையில் தன்னை  ஒரு தமிழ் காப்பாளனாக காட்டிகொள்கிறார்.

 தன்னை ஒரு தனித்தமிழ்த் தலைவனாகக் காட்டிக்கொள்ள ,தமிழினத்தை
காத்திட கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தனது சொந்த ,அரசியல்
லாபத்துக்காக தட்டிக் கழித்த இவர் இன்னும் எத்தனை காலம் வார்த்தை
ஜாலம் காட்டப் போகிறாரோ ?
வார்த்தைக்கு வார்த்தை அண்ணா பெரியார் என முழங்கும்
கருணாநிதிக்கு தெரியுமா? அண்ணா பெரியார் தவிர அவர்களது
குடும்பத்தினர் எவரொருவர் பெயரும் தமிழகம் அறியாதென்று.

தமிழ் ஈழம் தொடர்புடைய அனைத்து விசயங்களிலும் தனக்கு பாதகம் ஏற்படாத வகையில் முடிவுகள் எடுத்து வரும் அவரது வரலாறு அனைவரும் அறிந்தது.

தமிழ் ஈழம் தொடர்பான ஆதரவு  நிலை எடுப்பதற்கான எந்தவித அடிப்படை தகுதியும் அவருக்கும் அவர் சார்ந்த இயக்கத்திக்கும்இல்லை என்பதே உண்மை .

ஈழம் குறித்துப் பேச முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தகுதியில்லை: வைகோ

தனி ஈழம் குறித்துப் பேச திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.

இது தொடர்பில் அவர் பேசியதாவது:

ஈழத்தில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது.

மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயின.

இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறிய போதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி.

ஆனால், இப்போது தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்.

தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. என்றார் வைகோ.


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...