வட இந்திய பத்திரிகைகள், ராஜஸ்தான் மாநிலத்தில்
108 ஆம்புலன்ஸ் சேவை புரியும் “சிகிட்சா” என்கிற
நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள்
பற்றி பெரிய அளவில் எழுதுகின்றன.
இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் -
கார்த்தி ப.சிதம்பரம்,
சச்சின் பைலட்,
ரவிகிருஷ்ணா (மத்திய அமைச்சர் வயலார் ரவி
அவர்களின் மகன் ),
ரவிகிருஷ்ணாவின் மனைவி,
ராகுலின் முன்னாள் செயலர் ஷபிமாதர்
இந்த நிறுவனம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள
சில மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை நடத்த
உரிமை பெற்றுள்ளது. தாங்கள் செய்யும் “சேவை”க்கு,
பில் போட்டு மாநில அரசுகளிடம் பணம் பெற்று
வருகிறது. இது மத்திய அரசின் நிதியுதவியைப்
பெறும் திட்டம் என்பதால், மத்திய அரசில்
செல்வாக்குள்ளவர்கள் மூலம், இந்த நிறுவனம் -
காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் 8 மாநிலங்களில்
இந்த சேவையை நடத்த உரிமம் பெற்றுள்ளது
என்பதும் ஒரு குற்றச்சாட்டு.
அந்த சேவையில் பல குறைபாடுகள் உள்ளன என்றும்,
அரசை ஏமாற்றி பல விதங்களில் போலியான
ரசீதுகளைக் கொடுத்தும்,
ஒரே நோயாளியை பல இடங்களில் கணக்கு காட்டியும்,
ஓடாத ஆம்புலன்ஸ் களுக்கு பணம் பெற்றதாகவும்,
ஒரு நாள் – ஒரே ஆம்புலன்ஸில் 243 நோயாளிகளை
மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறி
கணக்கு காட்டியதாகவும் -
செப்டம்பர் 2011ல் 37,000 ஆம்புலன்ஸ் ட்ரிப்புகள்
நடத்திவிட்டு, 55,000 ட்ரிப்புகள் நடந்ததாக
பில் போட்டிருப்பதாகவும் - பலவித குற்றச்சாட்டுகள்
கூறப்பட்டுள்ளன. பாஜக செயலாளர் கிரத் சோமய்யா
இது பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்
என்று, ராஜஸ்தான் கவர்னர் சிவராஜ் பாடீலிடமும்,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
தமிழ் செய்தித்தாள் ஒன்றில் இது குறித்து
நேற்றைய தினம் வெளிவந்த செய்தி கீழே -

No comments:
Post a Comment