Monday, April 30, 2012

கலைஞரும் ஈழமும்



கடந்த சில நாட்களாக  செய்திதாள்களில் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  ஈழம் பற்றிய அறிக்கைகள் தினசரி வந்த கொண்டேயிருக்கிறது.

இவரது அறிக்கைகளை  படிக்கையில் ஏதோ மனது குறுகுறுக்கிறது.

தன்னுடைய சொந்த லாபத்துக்காக அன்று பேசாதவர் இன்று எவ்வாறு பேசலாம்?   என்று எதிர்ப்பு அறிக்கைகள் கொடுத்தும் இருக்கிறார்கள்.

இன்றைக்கும் அவருடைய சொந்தகணக்குகளின் பின்னணியில் தான் இத்தகைய அறிக்கைகள் அல்லது தமிழகம் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக வாய் திறக்கிறாரா தெரியவில்லை.

நம்ஈழதமிழ் மக்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள் இனியும் என்ன இருக்கிறது அனுபவிக்க???

கருணாநிதி அரசியல் செய்கிறார் ஏனென்றால் அவரது தொழில் அது?  தொழிலில் லாபம் மட்டுமே பார்க்ககூடியவர் அவர்.

தனி ஈழம் கோரி கருணாநிதி டெல்லியில் உண்ணாவிரதமிருப்பாரா? : ராமதாஸ் சவால்

தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என  பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும், கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழ் ஈழத்தை பற்றி பேசுவார். 18 எம்.பிக்களை வைத்துள்ள கருணாநிதி துணிச்சல் இருந்தால் டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கட்டும் என தெரிவித்தார்.
"டெசோ' அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் கருணாநிதி
இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், 1983ம் ஆண்டு, "டெசோ' (தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கழகம்) அமைப்பை கருணாநிதி துவங்கினார். சிறிது காலம் செயல்பட்ட இந்த அமைப்பு, பின் முடங்கிப் போனது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னைபொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் மீண்டும் தமிழ் ஈழம் அமைய மீண்டும், "டெசோ' அமைப்பை துவக்குவதாகவும் அறிவித்தார்.

தி.மு.க., தலைவரின், "திடீர்' தமிழ் ஈழ கோஷம் மற்றும் "டெசோ' அமைப்பு துவக்கத்தை நாடகம் என்று விமர்சித்த அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், அவற்றிற்கு ஆதரவளிக்கவோ, அதில் இணையவோ விரும்பவில்லை எனத் தெரிவித்தன.

முதல் கூட்டம் :இந்நிலையில், "டெசோ' அமைப்பின் முதல் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தமிழ் ஈழம் அமைவதைத் தவிர, வேறு தீர்வு இல்லை என்ற நிலையை, உலக நாடுகள் உணரச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழ் ஈழம் விரைவில் அமைய, ஐக்கிய நாடுகள் சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்; அதற்கு, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவு பெற முயற்சி:கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய கருணாநிதி, ""ஆட்சியில் இருந்த போதும், இலங்கைத் தமிழர்களுக்காக போராடியிருக்கிறோம். தமிழர்களைக் கொன்றதால், இந்திய அமைதிப் படையை நான் முதல்வராக இருந்தபோது வரவேற்கச் செல்லவில்லை. ஜனநாயக ரீதியில், அறவழியில் இந்த போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. எங்களது முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவு பெற முயற்சிக்கிறோம்.

வித்தை காட்டுகிறார் கருணாநிதி - பழ.நெடுமாறன் தாக்கு
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது தடுக்காத கருணாநிதி, தற்போது உலகத்தமிழர்களை கவர தனக்கு தெரிந்த வித்தைகளை செய்து வருகிறார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த நெடுமாறன், இலங்கையில் 1977-ம் ஆண்டு முதல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்களுக்கே தமிழர்கள் வாக்களித்துள்ளனர்.
அங்கு 1997-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் ஈழத்தை முன்வைத்து போட்டியிட்டபோது ஒரு தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் தமிழர்கள்தான் வெற்றி பெற்றனர்.

தமிழ் ஈழத்துக்கு 35 ஆண்டுகளாக அங்குள்ள தமிழர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

தமிழ் ஈழத்துக்காக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதை நான் எதிர்க்கவில்லை.

வெளிநாடுகளில் அகதிகளாக உள்ள தமிழர்களை மீண்டும் தாயகத்தில் குடியேற்றிவிட்டு சுதந்திரமான முறையில் ஐ.நா. பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அப்போதுதான் மக்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்படும்.

1983-ல் கருணாநிதி, வீரமணி மற்றும் நானும் சேர்ந்துதான் டெசோ அமைப்பை உருவாக்கினோம். ஆனால், எங்கள் யாரிடமும் ஆலோசிக்காமல் டெசோ இனி இயங்காது என்று கருணாநிதி அறிவித்தார்.

அதேபோல, இப்போதும் யாரிடமும் கேட்காமல் டெசோ மீண்டும் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

2009-ம் ஆண்டு ஒரு லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது, அதைத் தடுக்க எதையும் செய்யாததால் கருணாநிதி மீது உலகத் தமிழர்கள் கோபத்தில் உள்ளனர்.

அதை மாற்ற செம்மொழி மாநாடு தொடங்கி டெசோ வரை அவருக்குத் தெரிந்த வித்தைகளை செய்து பார்க்கிறார்.


காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கருணாநிதி விலக விரும்புவதால் தமிழ் ஈழக் கோரிக்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.
கலைஞர் ஐயா அறிவுரை மட்டும்தா சொல்வார்,ஆனால் அவர் பின்பற்றமாட்டார்.."ஒருவனுக்கு ஒருத்தி"என்று பூம்புகார் படத்தில் நமக்கு அறிவுரை சொல்லிவிட்டு அவர்மட்டும் மனைவி,துணைவி,மதுரை,என்றெல்லாம் வைத்து தொகுதிகளும் கொடுத்துள்ளார்.தமிழ்நாட்ட பங்கு போட்டுக்கிட்டாங்க, தமிழீனம் வந்தா அத கனிக்காவுக்கு பரிசா கொடுப்பாருனு நெனைக்கிறோம்.

சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இலங்கை தமிழர்கள் தனி ஈழம் பெற 'டெசோ' பாடுபடும்: கருணாநிதி பேட்டி
கேள்வி:- நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே? பதில் : நோ கமெண்ட்ஸ் கே:- இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே? பதில் ; நோ ........ கமெண்ட்ஸ் கே:- போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும். பதில் : கமெண்ட்ஸ் .......... நோ கமெண்ட்ஸ் கே:- பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? பதில் : ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் நோ கமெண்ட்ஸ் (பயத்துடன் ) மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா பதில் : நோ நோ ...... சாரி நோ கமெண்ட்ஸ் புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா? பதில் : நோ ...சாரி ... எஸ் சாரி .....நோ .....சாரி பாஸ் இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் : கமெண்ட்ஸ் ......... நோ கமெண்ட்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய மந்திரி அந்தோணி சொன்னாரா? பதில் : நோ .... கமெண்ட்ஸ் சாரி அப்பால சொல்வோம் நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் பதில் : நான் இல்ல எம் மவ ..... நோ கமெண்ட்ஸ் . நீங்க சாப்டீங்கள் பதில் : நோ .... இல்ல எஸ் ...... சாரி நோ கமெண்ட்ஸ் .
கே:- இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? ப:- இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது. இப்படியே இந்த அமைப்பை பயன்படுத்தி கட்சியை வளர்ப்பது அதன் மூலமாக கோடி கோடியா கொள்ளை அடிப்பது, தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழனை படுகொலை செய்தவர்களோடு கூட்டு வைப்பது, கேவலம் இந்த ஆளு பேச்சை இனிமேல் கேட்டால் சத்தியமா தமிழ் ஈழம் மட்டுமல்ல தமிழ் நாடு சுடுகாடாகிவிடும் , ஜெயலலிதா கருணாநிதி, விஜயகாந்த் , சினிமா மோகம் இல்லாத தலைவர்கள் அட்சிவேண்டும் அது முழுக்க முழுக்க தமிழனால் நடத்தப்படவேண்டும் ஓட்டுவாங்கி அரசியல் இல்லாமல் ஒவொரு தமிழனும் பிறமொழிகளை கற்றுக்கொள்ளவேண்டும் அதே போல தமிழ் மொழியில் நல்ல இலக்கண அறிவும் இலக்கிய அறிவும் பெறவேண்டும் ஆட்சி அதிகாரத்தை தமிழ் மொழியில் கொண்டுவரவேண்டும் யார் வருவார் ? எமது துயர் துடைப்பார் இந்த தொடப்பை கட்டை அரசியல் புரோக்கர்களிடம் இருந்து விடுதலை பெற ?
எனது   கருத்து
அயோ...... சாமி உலக மகா நடிப்புடா. இப்படி ஒரு சுயநல வாத்திய, இப்படி ஒரு தமிழ் இன துரோகிய இதுவரைக்கு நான் பார்த்ததே இல்ல. உண்மைலேயே நீ தமிழனுக்கு நல்லது செய்யணும்னு நெனச்சனா தயவு செஞ்சு அமைப்ப கலைச்சுட்டு போயிரு. உன் கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்கறேன்.
இப்ப ஈழ தமிழர் மேல் திடீர் பாசம் எதற்கு ? மறுபடியும் ஒரு கொலை வெறிக்கா ?????
அய்யா உங்கள் அரசியலுக்கும் விளம்பரத்துக்கும் அந்த அப்பாவி ஈழத்தமிழர்கள் தான் இப்போதும் கிடைத்தார்களா? பிணங்கள் மீது அரசியல் நடத்தும் உங்கள் கீழ்த்தரமான எண்ணம் இன்னும் மாறவில்லையா? உங்களுக்கு எல்லாம் நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரம் இல்லையா? நல்ல பக்கவாத்தியம் வீரமணி. அரசியல் பிழைப்பு.
இப்படியே சொல்லி சொல்லியே 30 வருடமாக ஏமாற்றிக்கொண்டு வருகிறார் இந்த கருணாநிதி.
அய்யா நீங்கள் இதுவரை செய்த செயலுக்கு நன்றி . உமது சகுனி வாய மூடும் .
ஏம்பா, விவேக், வடிவேலு, சந்தானம் க்கு பதிலா ஏதாவது படத்தில வாய்ப்பு இருந்த இந்த மொக்க பீசுக்கு ஒரு சான்ஸ் குடுங்கப்பா. இம்ச தாங்க முடியல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...