Sunday, April 15, 2012

இலங்கை சென்ற கனிமொழி, டி.ஆர்.பாலு, திருமாவளவன்

“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இலங்கைக்கு பயணம் செய்து, ராஜபக்ஷேயுடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்களை பெற்று வந்ததுபோல, எமது கட்சி எம்.பி.-யை இலங்கைக்கு அனுப்பிவைக்க நான் தயாரில்லை” இவ்வாறு கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
அடுத்த வாரம் கொழும்பு செல்லவுள்ள எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. கலந்துகொள்ள மாட்டார் என்பதற்கு தமிழக முதல்வர் கூறியுள்ள காரணங்களில் அதுவும் ஒன்று. அது தெளிவான ஒரு மெசேஜை கூறுகிறது.
கடந்த தடவை இலங்கை சென்ற கனிமொழி, டி.ஆர்.பாலு, திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர் திரும்பிவந்து வெளியிட்ட போட்டோக்கள், அவர்களுக்கு எதிரான விமர்சனங்களையே தமிழகத்தில் ஏற்படுத்தின. அப்படியொரு நிலையை அ.தி.மு.க.-வுக்கும் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்பது அவரது கூற்றில் இருந்து தெரியும் மெசேஜ்.
இந்தக் குழுவில் தமது கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் ரபி பெர்னார்டுவை அனுப்ப முடிவு செய்திருந்ததாக கூறியுள்ள ஜெயலலிதா, தாம் அந்த முடிவை மாற்றிக் கொண்டதற்கும் காரணம் உண்டு என்கிறார்.
“மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல், தற்போது பார்லிமென்ட் கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சி நிரலின்படி, இங்கிருந்து செல்லும் எம்.பி.க்கள் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாட வாய்ப்பு கிடையாது.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வதற்கே நிகழ்ச்சி நிரலில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் கிடையாது” என்பதே, ஜெயலலிதா கூறியுள்ள காரணம்.
“இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திர கண்காணிப்பாளர்கள் யாரும் இடம்பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது” என்றும் முதல்வர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு, இரண்டு விதமான விஷயங்களை ஊகிக்க வைக்கிறது.
முதலாவது, சமீப காலமாக இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ள கருணாநிதிக்கு, ஜெயலலிதா செக் வைக்கிறார். தி.மு.க., மத்திய அரசு, இலங்கை அரசு ஆகிய மூன்று தரப்பும் ஒரு கூட்டணியாக செயல்படுவது போன்ற தோற்றத்தை இந்த அறிக்கையின் மூலம் சுலபமாக அவரால் ஏற்படுத்த முடியும்.
இரண்டாவது?
கருணாநிதி, “கொழும்பு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் எமது கட்சியின் சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்” என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  (அப்படி அறிவிக்காவிட்டால், தமிழக அரசியலில் இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து அவர் அரசியல் செய்வது சிரமம்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...