2ஜி ஊழலில், கனிமொழி மற்றும் தயாளு மீது குற்றப் பத்திரிக்கை
2ஜி விவகாரத்தில் வருகின்ற மார்ச் 31ம் தேதிக்குள், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், ஆ.ராசா, ஷாகீத் பல்வா, மற்றும் உயர் அதிகாரிகள் கைது செய்யப் பட்டு திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
2 ஜி லைசென்ஸ் ஒதுக்கிய விவகாரத்தில், லைசென்ஸுக்கு கைமாறாக, ராசாத்தி அம்மாளுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள டாடா நிறுவனத்துக்கு சொந்தமான, வோல்டாஸ் கட்டிடத்தை டாடா நிறுவனம் வழங்கியுள்ள தகவல் வெளியானது. இதையடுத்து, கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாமின் துணை நிறுவனத்தால் கொடுக்கப் பட்ட 216 கோடி ரூபாயை சிபிஐ லஞ்சப் பணமாகவே கருதியுள்ளது.
உன் குத்தமா.... ? எங் குத்தமா.... ? யாரை நான் குத்தம் சொல்ல ?
இந்த இரண்டு கைமாறுகளையும் வைத்து, 2ஜி விவகாரத்தில் நேரடியாக ஆதாயம் பெற்றதாக, சிபிஐ ஆல், இந்த இருவரும் குற்றம் சாட்டப் பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, கூட்டுச் சதி, ஏமாற்றுதல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக, இவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இப்படி மாட்டி விட்டுட்டியே படுபாவி.... நல்லா இருப்பியா........ நீயும் திஹாருக்கு வா.......
மார்ச் 31 அன்று சிபிஐ தயாளு அம்மாள் மீதும், கனிமொழி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தால், ஏப்ரல் 13 அன்று நடக்கவுள்ள தேர்தலில், திமுகவுக்கு பலத்த அடியாக இது அமையும் என்று கருதப் படுகிறது.
ராசாத்தி அம்மாள் வோல்டாஸ் கட்டிடத்தை வாங்கிய விவகாரத்தை, சவுக்குதான் முதன் முதலாக தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள் என்ற கட்டுரையில் வெளிப்படுத்தியது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment