Tuesday, March 8, 2011

பெண் எப்படிப்பட்டவள்.....பப்புக்கு போவது சிகரட்...

 

பெண் - இந்த வார்த்தை இல்லாமல் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை.  ஆதி மனிதனுக்காக படைக்கப்பட்ட முதல் சந்தோசப்படைப்பு. 'இவள் சந்தோசமே இவன் சந்தோசம்' என உருவாக்கப்பட்டவள். இன்று இந்திய மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிரதேன்றால் அதற்கு காரணம் இந்த கூட்டுக்குடும்பம்தான். ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் ஆணுக்கு வினை வைக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. 

கேட்டால் நாங்கள் ஆண்கள் சமுகத்தால் அதிகமாக பாதிக்கப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆண்கள் பெண்களை என்றும் போஹைப்பொருளாக பார்ப்பதில்லை. தனக்கு சந்தோசம் கொடுக்கும் எதையும் ஆண்கள் இந்த சமுகத்தில் மடிப்பு கொடுத்துத்தான் வைத்து இருக்கிறார்கள். இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்தியாவில். ஆனால் வெளிநாட்டு கலாச்சாரம் எப்படி...மகளிர்களின் கொடுமைகள் ஆண்களுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கேன்றன. மேலும்..பப்புக்கு போவது சிகரட் குடிப்பதுன்னு..பாலியலும் 


மகளிர்தினம் வந்தது எப்படி. 
மகளிர் தினம் எப்படி வந்தது. அதுவும் மார்ச்  8 ல் ? 

1789ம் ஆண்டு ஜூன் 14-ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன் வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரை புரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! 
 அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென பாய்ந்து தாக்கி கொன்றனர். இதைக் கேட்ட அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன், என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போக அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான்  

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட.. ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் துவங்கியது. அடிக்கிறபடி அடித்தால்தானே அம்மியும் நகரும்; இத்தாலியிலும் பெண்கள் வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் (Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம் பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்! அந்த மார்ச் 8ம் நாள் தான் சர்வதேச பெண்கள் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்பட வித்தாக அமைந்தது. 

நியூயார்க்...

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகன்றிட உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து பெண்களின் மேம்பாட்டிற்கான சில பொது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை உதயமான இடம்... அமெரிக்கா. அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க். இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணி நேரம் வேலை செய்து குறைவான ஊதியத்தையே பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின்உடற்பசிக்குஇணங்கினால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடிக் குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் துவங்கிய பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் எங்களுக்கு வாக்குரிமை கிடையாதா? என்று கிளர்ந்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் கோபன்ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

மார்ச் 8....!

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில்தான், அரசன் லூயிச் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்! இந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் வினியோகித்தனர்.

ஜெர்மனியில் மகளிர் துவங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும்; போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் துவங்கினர்! அன்று துவங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!
 
 பெண்களுக்கு எதிரி பெண்களேவா?

"சிசு பிறந்ததும், பெண் எனத் தெரிந்ததும் நெல்லோ எருக்கம்பாலோ கொடுத்துக் கொன்று விடும் உசிலம்பட்டிக் கொடுமை; கணவன், மாமனார், மாமியார் சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பெண்ணை சமையலறையில் எரித்து விட்டு, ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று காவல் துறைப் பதிவேடுகளில் மாறும் அவலம்; சமூகத்திற்கு அரணாக, வேலியாக இருக்க வேண்டிய காவல் நிலையங்களே கற்பழிப்பு மையங்களாகின்ற கொடூரம்- இவைகளெல்லாம் குக்கிராமத்திலிருந்து பெரு நகரம் வரை அன்றாடம் நடைபெறும் செய்திகளாகிப் போய்விட்டன.

இன்று இந்தியாவில் ....
மாறி வரும் சமூக, பொருளாதாரச் சூழல்; தனி மனித ஒழுங்குணர்வு குறைவு; எல்லை மீறும் காமம் உள்ளிட்ட காரணங்களால் "குடும்ப அமைப்பின்' ஆணிவேர் மெல்ல, மெல்ல ஆட்டம் கண்டுவருகிறது. கணவன் - மனைவி என்ற புனித உறவைத் தாண்டிய கள்ள உறவுகள் பெரும்பாலும் கொலை, தற்கொலையில் முடிகின்றன. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 371 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில், கள்ள உறவால் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 81.


மாற்றானுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவங்களும், தனது கள்ள உறவை கணவன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலுடன் சேர்ந்து கணவனையே தீர்த்துக்கட்டிய சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்துள்ளன; சில கொலைகள், சந்தேகம் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்படுத்துகின்றன. கொலைக்குப்பின் தலைமறைவாகும் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் பணி நேரத்தை அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆதாயக்கொலை வழக்குகளில் புலன்விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து, திருட்டுச் சொத்துக்களை கைப்பற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டிய நிர்பந்தத்திலுள்ள போலீசார், கள்ள உறவு கொலைகள் அதிகரிப்பால் பணி நெருக்கடிக்கு உள்ளாகி விழிபிதுங்கி நிற்கின்றனர். திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைக்கூட, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி போலீசாரால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், கள்ள உறவு கொலைகள் தனி நபர்களின் ஒழுங்குணர்வு சார்ந்தது என்பதால், கட்டுப்படுத்துவது எப்படி? எனத்தெரியாமல் திணறுகின்றனர்.

கொலை அதிகரிக்க காரணம் என்ன: கள்ள உறவு தொடர்பான பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. எனினும், இப்பிரச்னையை சரியானபடி எதிர்கொள்வது அல்லது சமாளிப்பது எப்படி? என்பது தொடர்பான விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கும் குடும்பங்களிலேயே ஆவேச கொலைகள் அதிகளவில் நிகழ்கின்றன. குறிப்பாக கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் கள்ள உறவு கொலைகள் அதிகம் நடப்பதாக தமிழக மேற்கு மண்டல போலீசாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கணவனோ அல்லது மனைவியோ பிறருடன் கள்ள உறவு வைத்திருப்பது தெரியவந்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் துணைக்கு மனோ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அப்பிரச்னையை எதிர்கொள்ள தெரிவதில்லை. ஆக்ரோஷத்தில் வாக்குவாதம் முற்றி துணையை கொலை செய்து விடுகின்றனர்.இவ்வாறான துயர சம்பவங்களில் மனைவியை கொலை செய்த கணவனோ அல்லது கணவனை கொலை செய்த மனைவியோ கைதாகி சிறையில் அடைபட நேரிடும்போது, பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடுகிறது. பெற்றோரை இழந்த பிள்ளைகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்து தவறான நபர்களின் சேர்க்கையினால் சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதுவே, பெண் பிள்ளைகளாக இருப்பின், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி வாழ்க்கை பாழாகிவிடுகிறது.எனவே, கள்ள உறவு கொலைகளை தடுப்பது அல்லது தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,அலுவலகம், டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்களின் கருத்துக்களை கேட்டது. பலரும், இவ்விவகாரம், தனி நபர் ஒழுக்கம் சார்ந்தது என்பதால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே சிறந்த வழி என தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கை சீரழியும்!கோவை பெண் வக்கீல்கள் சங்க தலைவி தேன்மொழி கூறியதாவது: திருமண வாழ்க்கை பந்தம் முழுக்க, முழுக்க நம்பிக்கை அடிப்படையிலானது. தம்பதியர் தங்களது துணை மீது முழு நம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இல்லற வாழ்வை இனிமையாக தொடர முடியும். கணவனோ அல்லது மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்ததும், அமைதியான வாழ்வில் புயல் ஆரம்பிக்கும்; ஆவேசத்தில் கொலையும் நிகழும். இதுபோன்ற சமயங்களில் உணர்ச்சிக்கு ஆட்பட்டு எவ்வித குற்றத்திலும் ஈடுபடத் தேவையில்லை. கள்ள உறவை காரணமாக கூறி கோர்ட்டில் விவகாரத்து பெற முடியும். சட்ட ரீதியான நிவாரணத்தை தேடும் போது, குழந்தைகளின் எதிர்காலம் இருண்டுவிடாமல் தடுக்க முடியும். "ஒருவனுக்கு ஒருத்தி' என்ற "மந்திரம்' மட்டுமே வாழ்க்கையை வளமுள்ளதாக்கும். ரகசியமான கள்ள உறவுகள் என்றேனும் ஓர்நாள் அம்பலமாகும் போது, வாழ்க்கை நிச்சயம் சீரழிந்துவிடும்.இவ்வாறு, தேன்மொழி தெரிவித்தார்.

கோவை நகரில் 5 பேர் கொலை! கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் 20 கொலைகள் நிகழ்ந் துள்ளன; இவற்றில் ஐந்து கொலைகள் கள்ள உறவு மற்றும் பாலியல் தொடர்பானவை. செல்வபுரம் போலீஸ் எல்லைக்குள் நடந்த ஒரு கொலைச் சம்பவம், போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. மனைவியை இழந்த கூலித்தொழிலாளி, தனது மகனுடன் வசித்து வந்தார்.பின்னாளில், இரண்டாம் திருமணம் செய்து அப்பெண்ணுடன் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில், "சித்தி' உறவு முறையிலான அந்த பெண்ணுடன், கூலித்தொழிலாளியின் மகன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தை, தனது மகனை கொலை செய்தார். இதேபோன்று, கள்ள உறவு தொடர்பான மேலும் நான்கு கொலைகளும் நகர எல்லைக்குள் நடந்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் நிகழ்ந்த 20 கொலைகளில், ஐந்து கொலைகள் கள்ள உறவால் நிகழ்ந்துள்ளன.

"ஒழுக்கம் சார்ந்த வாழ்வு குறித்த விழிப்புணர்வு அவசியம்' கோவை மாநகர போலீஸ் தெற்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் பாலாஜிசரவணன் கூறியதாவது:கள்ள உறவு கொலைகள் அதிகரிக்க சமூகத்தில் பல்வேறு காரணிகள் உள்ளன. சினிமா, "டிவி', இன்டர்நெட் மற்றும் ஊடகங்களும் ஒரு காரணம். வெகுஜன தொடர்பு சாதனங்கள் நல்ல பல விஷயங் களை மக்களுக்கு காட் சிப்படுத்தும் போதிலும், பாலுணர்வை தூண்டக்கூடிய ஆபாச காட்சிகளையும் முன்னிலைப்படுத்துகின்றன. சினிமா, இன்டர்நெட் போன்றவற்றில் ஆபாச காட்சிகளை ரசிப்போர், அதற்கான வடிகாலை தேட துவங்குகின்றனர்.காட்சியை ரசிப்பவர் மணமானவராக இருப்பின் தமது துணையுடன், உணர்வை பகிர்ந்துகொள்கிறார். மணமாகாதவராக இருப்பின் கள்ள உறவு போன்ற ஒழுக்கம் தவறிய செயல்களில் ஈடுபட துணிகின்றனர். ஒருவர், தமது விருப்பம், ஆசையை நிறைவேற்றிக்கொள்வதும் கூட சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறும்போது கள்ள உறவு ஏற்படுகிறது; அது அம்பலமாகும் போது கொலை நிகழ்கிறது. நவீன காட்சி ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் பாலுணர்வு தூண்டலுக்கான வாய்ப்புகள் பரவிக்கிடக்கின்றன. இதனால், இளைய தலைமுறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெற்றோர், தங்களது பிள்ளைகள் மீதான கவனத்தையும், கண்காணிப்பையும் இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம், சமூக பொறுப்பு, கடமைகள் குறித்து இன்றைய இளைய தலைமுறையினருக்கு குடும்பங்களில் எடுத்துரைப்பது வெகுவாக குறைந்துவிட்டது; இந்நிலை அடியோடு மாற வேண்டும். இளைய தலைமுறையினர் மத்தியில் ஒழுக்க வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், எதிர்காலங்களில் இதுபோன்ற கள்ள உறவு சார்ந்த குற்றங்களை வெகுவாக குறைத்துவிட முடியும். இவ்வாறு, பாலாஜிசரவணன் தெரிவித்தார். (நன்றி - தினமலர். )

அதேபோல் தன குடும்பம் சந்தோசமாக வாழ்வதற்காக தன்னை தியாகம் செய்து பணம் அனுப்பும் ஆண்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள். எப்படி அவன் வெளிநாட்டில் கஷ்டப்படுகிறான் என்பதை 1% கூட நினைக்காமல் தான் மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும்  என்று தவறான வழியை  தேர்ந்து எடுக்கிறார்கள்.

ஐ.ஜி.,சிவனாண்டி கூறியதாவது: கள்ள உறவு கொலைகள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இது, முற்றிலும் தனி மனித ஒழுக்க குறைபாட்டால் நிகழ்கிறது. கள்ள உறவு பிரச்னைகள் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளன. போதிய கல்வியறிவு உடையோர், இப்பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்கின்றனர். தமக்கு துரோகமிழைத்த துணையை கொலை செய்யும் அளவுக்கு உணர்ச்சி வசப்படுவதில்லை. அவ்வாறு செய்தால், தங்களது குழந்தைகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கை அவர்களிடம் மேலிடுகிறது. இதனால், தங்களது மணவாழ்க்கையை சட்டரீதியாக முறித்துக்கொள்கின்றனர். அதேவேளையில், போதிய கல்வியறிவு பெற்றிராத குடும்பங்களில் கள்ள உறவு பிரச்னை எழும்போது, எதிர்விளைவுகளை உணர்ந்து சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் விழிப்புணர்வு பெற்றிருப்பதில்லை. துணையை கொன்றுவிடும் அளவுக்கு ஆத்திரம் மேலோங்குகிறது. சில நேரங்களில், ஏதுமறியா குழந்தைகளையும் ஈவு, இரக்கமின்றி கொன்று விடுகின்றனர். தங்களது வாழ்க்கை துணை தாம்பத்ய உறவுக்கு துரோகம் செய்துவிட்டதாக தெரிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ கொலை செய்யும் அளவுக்கு துணிய வேண்டியதில்லை. இப்பிரச்னையை முன்னெச்சரிக்கையுடன் கையாண்டால் மட்டுமே, பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகாமல் தவிர்க்க முடியும். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் செயல்படும் தற்கொலை தடுப்பு மையத்தை 99440 95555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; தகுந்த ஆலோசனை வழங்கப்படும். சட்ட உதவி தேவைப்பட்டால் அதற்கும் உதவ தயாராக உள்ளோம்.இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில், ""கள்ள உறவு தொடர்பான கொலைகள் திட்டமிட்டும், சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசத்திலும் நடக்கின்றன. கொலையால் ஏற்படப்போகும் சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே பெரும்பாலான கொலைகள் நடக்கின்றன,'' என்றார்.

45 பேர் தற்கொலை : கள்ள உறவால் கொலைகள் மட்டுமல்ல; தற்கொலைகளும் அதிகம் நிகழ்கின்றன. கடந்த 2010ம் ஆண்டில், தமிழக மேற்கு மண்டத்தில் கள்ள உறவு காரணமாக 45 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பெரும்பாலான வழக்குகளில் தற்கொலைக்கான காரணத்தை குடும்ப உறுப்பினர்கள் வெளிப்படையாக தெரிவிக்காததால், உண்மை நிலவரம் போலீசாருக்கு தெரிவதில்லை. வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக பலரும் தெரிவித்து விடுகின்றனர்; இவ்வாறாக, தமிழக மேற்கு மண்டலத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 293 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

எல்லாமே சினிமா மற்றும் மீடியா தான் காரணம். மற்ற நாட்டில் பாருங்க அவங்க கலாச்சாரம் என்னோமோ அது பின்பற்றார்கள் . அனால் நமது நாட்டில் அப்படி இல்ல எல்லாமே மாரி போச்சு . நமது நாகரிகம் சேலைக்கட்டுவது அனால் பெண்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டால் தான் மதிப்புன்னு போடறக்க. அப்படி நாகரிகம் மாறும் போது எல்லாமே மாறாமல் இருக்குமா ?. மற்ற நாட்டில் பாருங்க அவங்க கலாச்சாரம் என்னோமோ அது பின்பற்றார்கள் . அனால் நமது நாட்டில் அப்படி இல்ல எல்லாமே மாரி போச்சு . நமது நாகரிகம் சேலைக்கட்டுவது ஆனால்  பெண்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டால் தான் மதிப்புன்னு போடறக்க. ஜீன்சும், டி-ஷர்ட் போடுறது குற்றமல்ல. ஆனால் அந்த ஷர்டில் இங்கே தோடு அங்கே தோடு அப்படின்னு வாசகம் இருக்கும்போது அங்கேதான் நாகரிகம் மாறும். சீரியல் வந்த அப்புறம் தான் இந்த கள்ள காதல் மிக அதிகம் ஆனது கலாச்சார சீரழிவுக்கு , t v சீரியல் மிக முக்கிய காரணம்... விபச்சாரத்தின் ஆணிவேராகிய சினிமாவையும், சின்னத்திரையையும் இந்த நாட்டை விட்டே அறவே ஒழித்தால்தான் இப்படிப்பட்ட கள்ள உறவுகள் மூலம் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியும்தங்கள் குடும்பம் நல்லா இருக்கனும்ன , கேபிள் டிவிய கட் பண்ணிடுங்க பின்ன பாருங்க எவ்வளவு குற்றங்கள் குறையுதுன்னு.
  
கடைசியா... பப்புக்கு போவது சிகரட் குடிப்பதுன்னு மேலை நாடு கலாச்சாரம் வெகு வேகமாக இந்தியாவில் பரவுகிறது. இதை தடுப்பதும் நம் கடமைதான். நம் குடும்பங்களை நாம் பாதுகாத்தால் மகளிர் தினம் என்ன மக்களின் மானம் காத்த தினம்னுகூட கொண்டாடலாம். 

சந்தோசத்திலேயே மிகப்பெரிய சந்தோசம் மற்றவர்களை  சந்தொசப்படுத்துவதுதான் எனவே எனக்குன்னு இல்லாததாலும் உங்களுக்காக... 'மகிழ்ச்சியாக மகளிர் தினம் கொண்டாடுங்கள் உங்களுக்கு என் சார்பாகவும், என் டீம் சார்பாகவும் வாழ்த்துக்கள்' 


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...