Friday, March 25, 2011

தமிழகம்...கருத்து கணிப்பு முடிவுகள் - Part-1

தமிழகம்...கருத்து கணிப்பு முடிவுகள் - Part-1

ளிதில் கணிக்க முடியாத தேர்தல் களத்தை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் திடீர் திருப்பங்கள் ஏற்படும் அரசியல் சூழலை கடைசி வாக்காளரும் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக் கின்றன. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.- .தி.மு. இரண்டுமே  இந்தத் தேர்தல் களத்தைத் தங்களுக்கு வாழ்வா-சாவா என்றே பார்க் கின்றன.


பெரிய கட்சிகளுடன் கூட்டணி கண்டுள்ள மற்ற கட்சிகளும் இத்தேர்தலை தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கான அளவுகோலாகவே கருதுகின் றன. அதனால் அதிகத் தொகுதி கள், அதிலும் விரும்பும் தொகுதி கள், ஆட்சியில் பங்கு என்பது உள்ளிட்ட பல நெருக்கடிகளைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி களுக்கு கொடுத் தன. இரண்டு கூட் டணிகளிலும் அதிருப்தி.. ஆவேசம்.. சமாதானம்.. சரண்  போன்ற நிலைமைகள் உருவாகின. அதனால் எந்த அணிக்கு ஆதரவு என்பது ஒவ்வொரு நாளும் திசைமாறி வாக்காளர்களைக் கடுமையாகக் குழப்பிவருகிறது இந்தத் தேர்தல் களம்.

எந்த அணிக்கும் ஆதரவு அலையும் இல்லை. எதிர்ப்பு அலையும் இல்லை. விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், மின்வெட்டு, ஊழல் ஆகிய நான்கும் ஆட்சி மீதான அதிருப்திகளாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எதிர்க்கட்சிக்கு சாதகமாக  மாறுவதைப் பார்க்க முடியவில்லை. 2ஜி உள்ளிட்ட விவகாரங்கள் அறிவுஜீவிகளின் மட்டத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு பாமர வாக்காளர்களிடம்  தாக்கத்தை உருவாக்கவில்லை. அதேநேரத்தில் தனிப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடைந்த திட்டங்களும் பாதித்த விஷயங்களும் தேர்தல் களத்தில் முக்கிய வினை ஊக்கியாக செயல்படும் வாய்ப்பு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், அரசியல் கட்சிகளின் வாக்கு சேகரிக்கும் கணக்கிற்கு கடுமையான கடிவாளத்தைப் போட்டுள்ளது. இதனால் கட்சிகளின் வியூகமும் வாக்காளர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறுவது கடினமாகவே இருக்கும்எனவே, எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், அதனைத் தொடர்ந்துவரும் அடுத்த 5 ஆண்டுகாலமும் தமிழகத்தால் மட்டுமின்றி, இந்தியா முழுமையும் எதிர்பார்ப்பிற்குரியதாக இருக்கிறது.
பழிவாங்கும் வெறியோடு பயங்கரமான முகத்தைக் காட்டும் மத்திய அதிகார வர்க்கத்தின் பார்வை தமிழகத்தின் மீது நிலை குத்தியிருக்கிறது.
தமிழகத்தில் 42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திராவிட இயக்க ஆட்சியை உடனடியாக அகற்றமுடியாவிட்டாலும், திராவிட இயக்க சித்தாந்தங்களின் மீது கறை படியவைத்து, அதனை நிர்மூலமாக்கும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
புதிய கட்சிகள், சிறிய கட்சிகள், சாதிய கட்சிகள், மதரீதியான கட்சிகள் இவைகளின் பேரத் திறன் கூடியிருப்பதால் பெரிய கட்சிகள் தங்கள் சொந்த பலம் மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமையைக் காண முடிகிறது.

பழைய தலைமுறை வாக்காளர்கள் தங்களுக்குப் பிடித்த-பழக்கமான கட்சிக்கு வாக்களிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் இளையதலை முறையினரும் புதிய வாக்காளர்களும் பெரியளவில் எந்தக் கட்சியுடனும் தங்கள் மனதை இணைத்துக் கொள்ளாமல் உடனடித் தீர்வு என்ற அடிப்படையில், சூழலுக்கேற்ப ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் தன்மையினராய் இருக்கிறார்கள்.


இருபது ஆண்டுகளுக்கு முன் நிலவிய அரசியலும், கட்சிகளுக்கான ஆதரவும் இன்று கிராமங்களிலும் நகரங்களிலும் பெரும் மாறுதலைக் கண்டிருக்கின்றன. பெண்களின் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவத்தை எட்டியுள்ள தருணம் இது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளை பல மாவட்டங்களிலும் காண முடிகிறது.
நுட்பமான எந்த அம்சத்தையும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம். இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிப்பது சவாலான பணி. எனினும், உங்கள் நக்கீரன் எப்போதுமே சவால்களை சந்தோஷத்தோடு எதிர்கொள்வது வழக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் நக்கீரனின் சர்வே முடிவுகள் தமிழக மக்களின் நாடித் துடிப்பைத் துல்லியமாக வெளிப் படுத்தக்கூடியவை என்பதை வாசகர்களும் பொதுமக்களும் மட்டுமின்றி, அரசியல் பிரபலங்களும் அறிந்தே இருக்கிறார்கள்
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் சர்வே எடுக்கப்பட்டது.
நக்கீரன் நிருபர்களின் ஒருங்கிணைப்பில் தன்னார் வலர்கள், ஊடகவியல் பயிலும் கல்லூரி மாணவ-மாணவியர், சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் என  ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை மேற்கொண்டனர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப் படையில் ஆண், பெண், படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர் என பல தரப்பிலான வாக்கா ளர்களையும் சந்தித்து மிக கவனமாக இந்த சர்வேயை எடுத்துள்ளனர். எந்த வாக்காளரையும் அவசரப்படுத்தாமல் அவர்களின் சிந்தனையோட்டம் தெளிவாகப் பதிவாகும் விதத்தில் 20 கேள்விகள் அடங் கிய  படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.  234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் சந்தித்திருக் கும் வாக்காளர்களின் எண் ணிக்கை 93 ஆயிரத்து 600 பேர்.
தேசிய அளவிலான கருத்து கணிப்பு என்றால் அதிகபட்சம் 10ஆயிரம் பேர் என்றும் மாநில அளவிலான கருத்து கணிப்பு என்றால் 2000 பேர் என்றும் பல ஊடகங்கள் கருத்து கணிப்புகளை நடத்தும் நிலையில், உங்கள் நக்கீரன், கள நிலவரத்தை துல்லியமாகத் தருவதற்காக சுமார் 1 லட்சத்துக்கு நெருக்கமான வாக்காளர்களை சந்தித்துள்ளது. ஒற்றையா, இரட்டையா போடுவதுபோல ஒரு சில கருத்து கணிப்புகள் வெளியாகும் நிலையில், 234 தொகுதிகளில் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை மிக அதிக சாம்பிள்கள் மூலம்  விஞ்ஞானபூர்வமான ஆய்வு முறையில், சர்வே முடிவுகளை வெளியிடுகிறது.
.தி.மு.. கூட்டணியில் .தி.மு.. இருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த சர்வே முடிவில் .தி.மு.. தேர்தலை புறக்கணித்துள்ள இந்த சூழலில் நாம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பிற என்பது வாக்களிக்க விரும்பாதவர்கள், இன்னும் முடிவு செய்யாதவர்கள், சுயேச்சை, பாரதிய ஜனதா உள்ளிட்ட சில உதிரி கட்சி களின் ஆதரவு நிலையாகும். தேர்தல் முடிவுகள் வெளி யாகும்போது, நக்கீரன் சர்வேயின் துல்லிய தன்மையை தமிழகம் மீண்டும் உணரும் என்ற நம்பிக்கையுடன் இதனை வெளியிடுகிறோம்.




அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி-ஆனந்த விகடன் கருத்து கணிப்பு முடிவுகள்
தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சுமார் 2081 வாக்காளர்களிடம் ஆனந்தவிகடன் தனது மாணவ பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது...இன்றைய ஆனந்த விகடனில் அதன் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது.....

அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள்;

ஜெயலலிதாவின் ஆணவ போக்கால் வெற்றியின் சதவீதம் குறைந்திருக்கிறது..ஆனால் தோல்வி அடையும் அளவு இல்லை.

ஜெயலலிதா கூட்டணி கட்சியினரிடம் நடந்து கொண்ட விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது...

தலை நகரை விட்டு தலை தப்பிச்சா போதும் னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுகிறார்...அவருக்கே எலெக்சன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு அதை பயன்படுத்திக்காம வெற்றி பெறுவோம் என்கிற மமதையில ஜெயலலிதா தப்பான முடிவுகளை எடுத்திட்டார்..அவரை பார்த்து இப்போ பரிதாபப்படக்கூட முடியலை என்றாராம் ஸ்ரீரங்கத்துகாரர்....

ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த தேர்தலில் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தும்...ஸ்பெக்ட்ரம் விவாகாரத்தை நினைத்து சுமார் 46 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்றார்களாம்...

உசிலம்பட்டியில்,அந்தம்மா வந்தா சட்டம் ஒழுங்கு சரியா இருக்கும்,அதிகாரிங்க பயப்படுவாங்க...நிர்வாகம் சரியாக இருக்கும் அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்..கலைஞர் வந்தா மிக்ஸி கிரைண்டர் கிடைக்கும் அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்றார்களாம்

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு கலைஞரை விட ஜெயலலிதாவே அதிக மதிப்பெண் பெறுகிறார்....
சர்வே ரிசல்ட்

ஐந்து ஆண்டு கால தி.மு.க அர்சின் இலவச திட்டங்கள்..சாதனைகள்..?

1.எல்லாமே மக்கள் வரிப்பணம்தானே..?-47.09 சதவீதம் மக்கள்
2.பயனுள்ள திட்டங்கள்-27 சதவீதம் மக்கள்


அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்திருப்பது..?

கூட்டணிக்கு பலம்..-70.78 சதவீதம் மக்கள்

எந்த மாற்றமும் நடக்காது -20 சதவீதம் மக்கள்


யார் நல்லாட்சி தருவார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

கருணாநிதி-28.54 சதவீதம் மக்கள்

ஜெயலலிதா-33.25 சதவீதம்

இருவருமே இல்லை-38.25

யாருக்கு வாக்களிப்பீர்கள்..?

தி.மு.க கூட்டணி-34.60 சதவீதம் மக்கள்

அ.தி.மு.க கூட்டணி-44.26 சதவீதம் மக்கள்.

வைகோ .தி.மு. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களிடையே பெரிய
அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது..பலர்,இது வைகோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றே கருத்து தெரிவித்துள்ளனர்

இப்படி எல்லாம் கருத்துக்கணிப்பு எடுத்து தங்களுக்கு வேண்டிய கழகங்கலின் எண்ணத்தை மக்களுக்கு பத்திரிக்கைகள் திணிக்கிறார்கள். இந்த ஈனப்பிழைப்பு தேவையா... காசு சம்பாரிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

மக்களின் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என இவர்கள் தீர்மானிக்க முடியுமா.. ஏன் இப்படி ஒரு பிழைப்பு. தினமலர், விகடன். மற்றும் இந்து மதவாத பத்திரிக்கைகள் அ.தி.மு.க.வையும். நக்கீரன், குமுதம் போன்றவை தி.மு.க.வையும் முன்வைக்கின்றன. ஆனால் மக்களாகிய உஙகல் தீர்ப்பு எல்லோருக்கும் பாடமாக அமைய வெண்டும்

உங்களுடைய கருத்து எண்ணங்க....? கருத்த பதிவு செய்யலாமே....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...