உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாமல், உலக பணக்காரர்களையும் கவர்ந்த நாடு சுவிட்சர்லாந்து. உலக நாடுகளின் கருப்பு பண முதலைகள் பலர், சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கை துவக்கி,ஏராளமான பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி உள்ளதாக, அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர் களும் அலறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை, கூட்டுறவு வங்கி எங்கிருக்கிறது என்பதை அறியாத, நம் பாமர ஜனங்கள் கூட, சுவிஸ் வங்கிகளையும், அதில் காட்டப்பட்டிருக்கும் இந்திய பணத்தையும் அறிந்து, டீக்கடைகளில் சூடாக விவாதிக்கின்றனர்.
அரசியல்வாதிகளும்,பணமுதலைகளும் ......
சுவிஸ் வங்கிகளை நாட காரணம், "வெரி சிம்பிள்... ரகசியம் காப்போம்!' என்ற அவர்களின் தாரக மந்திரமே. சுவிஸ் வங்கிகளில் கணக்குத் துவக்க, நம்மூர் வங்கிகளில் கேட்கப்படும், பான் கார்டு, ரேஷன் கார்டு, லொட்டு, லொசுக்கு என, எவ்வித ஆதாரமும் தேவையில்லை; குண்டக்க, மண்டக்க கேள்விகளுக்கும் பதில் கூற அவசியமில்லை. பணம் இருந்தால் மட்டும் போதும்; கணக்கு, "ரெடி!' ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழைகள் அதிகம் வசிக்கும் நாடு என்ற பெயர் பெற்ற நம் பாரத தேசம், சுவிஸ் வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தான். அரசியல்வாதிகளையும், கருப்பு பண முதலைகளையும் கவர்ந்த சுவிஸ் வங்கி, 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. அப்போதே, வங்கி உரிமையாளர்கள், தங்களது வாடிக்கையாளர்களின் விவரத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள, ரகசிய குறியீட்டை பயன்படுத்தினர்.
வாடிக்கையாளர் விவரங்களை முறையாக பதிந்து, ரகசியமாக வைத்து கொள்ள, 1713ல், "கிரேட் கவுன்சில் ஆப் ஜெனீவா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் பணத்தை பாதுகாப்பதில் சிறந்த வங்கி என்ற பெயர், சுவிஸ் வங்கிக்கு ஏற்பட்டது. சுவிஸ் வங்கிகளில் பிரதானமானது, "சுவிஸ் பாங்க் கார்ப்பரேஷன்!' 1854ல், ஆறு வங்கிகள் ஒன்றிணைந்து, "பேஸ்லர் பேங்க்வேரின்' என்ற பெயரில் இயங்கி வந்தன. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பல வங்கிகள் இணைந்தன. பின்னர், 1917ம் ஆண்டு தற்போதைய பெயரான, "சுவிஸ் பாங்க் ஆப் கார்ப்பரேஷன்' என பெயர் மாற்றப்பட்டது. இது தவிர, யூனியன் பாங்க் ஆப் சுவிஸ், கிரடிட் ஸ்யூஸே, சுவிஸ் நேஷனல் பாங்க் போன்ற பல வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நாட்டில் உள்ள வங்கி செயல்பாடுகளை வரையறுக்க, "சுவிஸ் பாங்க் அசோசியேஷன்' 1995ல் ஏற்படுத்தப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் சுவிஸ் நாட்டில், 327க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.
வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காப்பதில், சுவிஸ் நாடு உறுதியாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரத்தை யாராவது வெளியிட்டால், அவருக்கு, ஆறு மாதம் சிறை, 50 ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதம் என்கிறது சுவிஸ் நாட்டு சட்டம். கடந்தாண்டு, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்திற்கு, சுவிஸ் வங்கி வாடிக்கையாளர் ரகசியத்தை வெளி யிட்ட முன்னாள் வங்கி ஊழியருக்கு, ஆறு மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவிஸ் வங்கி அசோசியேஷன், 2004ல் கொண்டு வந்த டெபாசிட்டர் பாதுகாப்பு ஒப்பந்தப்படி, வங்கி மீது வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்து, ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாக பெற முடியும். அதே சமயம், ஒருவர் வங்கி கணக்கு துவக்க கெடுபிடி காட்டும் ஷரத்துக்களும், சுவிஸ் நாட்டு சட்டத்தில் உண்டு. ஒருவர் வங்கியில் செலுத்தும் பணம், எந்த வழியில் வந்தது என்பதையும், சட்ட விரோதமாக வந்ததல்ல என்பதற்கான உறுதியும் அளிக்க வேண்டும். சுவிஸ் வங்கி, பணக்காரர்களுக்கோ, கிரிமினல்கள், பதுக்கல்காரர்களின் புகலிடமாக இருப்பதாக கூறுவது தவறு.5,000சுவிஸ் பிராங்க் இருந்தாலேகணக்கு துவக்கிக் கொள்ளலாம்.கணக்குதுவக்கஏஜென்டுகளைநாடவேண்டியதில்லை.நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ துவக்கிக் கொள்ளலாம். வெளிநாட்டுக்காரர் கள் என்றால்,பாஸ்போர்ட் அவசியம் என சுவிஸ் வங்கி கூட்டமைப்பு கூறுகிறது. இருப்பினும், சுவிஸ் வங்கிகள் இவற்றை கண்டு கொள்ளாமல், டெபாசிட் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. இதனால், பலரும், கோடிக்கணக்கான ரூபாய்களை சுவிஸ் வங்கிகளில் குவித்து வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில், பணத்தை பாதுகாக்கும் சொர்க்கமாக திகழ்வது சுவிஸ் வங்கிகள் தான்.
* இரண்டாம் உலகப் போர் சமயத்தில், (1939-1945) ஜெர்மன், 400 மில்லியன் டாலர் தங்கத்தை (இன்றைய மதிப்பில் நான்கு பில்லியன் டாலர்) பெர்னில் உள்ள தேசிய சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
* இங்குள்ள வங்கிகளில் பல, 200 ஆண்டு கள் பழமை வாய்ந்தவை.
* மற்ற வங்கிகளைப் போலவே, சுவிஸ் வங்கிகளும், கிரடிட், டெபிட் கார்டுகளை வழங்குகிறது.
*"யு.பி.எஸ்.,' வங்கி, தங்களது முக்கிய வாடிக்கையாளர்களுக்கு, தங்க பிஸ்கெட் டாலான சாவி வழங்குகிறது; இதன் எடை ஒரு கிலோ.
* அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இங்கு உள்ளன. தனியார் வங்கி துவங்க, அவர்களிடம், 7.15 பில்லியன் டாலர் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment